Twitter விதிகள்

பொது மக்களிடையே உரையாடல்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே Twitter-இன் நோக்கமாகும். வன்முறை, துன்புறுத்தல் மற்றும் பிற ஒத்த வகை நடத்தைகளால் பொதுமக்கள் தங்களை வெளிப்படுத்துவது தடைபட்டு, உலகளவில் பொதுவான உரையாடல்களில் ஈடுபடுவதும் குறையும். பொதுவான உரையாடல்களில் அனைவரும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்பதை எங்கள் விதிகள் உறுதிசெய்கின்றன.

பாதுகாப்பு

வன்முறை: தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராக அச்சுறுத்தும் வன்முறையில் ஈடுபடக்கூடாது. வன்முறையைப் புகழ்ந்து பேசுவதையும் தடை செய்துள்ளோம். எங்கள் வன்முறை அச்சுறுத்தல் மற்றும் வன்முறைப் புகழ்ச்சி கொள்கைகளைப் பற்றி மேலும் அறிக. 

தீவிரவாதம்/வன்முறைத் தாக்குதல்கள்: நீங்கள் அச்சுறுத்தவோ அல்லது தீவிரவாதம் அல்லது வன்முறைத் தாக்குதல்களைப் புகழ்ந்து பேசவோ கூடாது. மேலும் அறிக.

குழந்தைசார் பாலியல் துஷ்பிரயோகம்: We have zero tolerance for குழந்தைசார் பாலியல் துஷ்பிரயோகம் on Twitter. மேலும் அறிய.

முறைகேடுதொந்தரவு: நீங்கள் யாரேனும் ஒருவரை இலக்காகக் கொண்ட தொந்தரவில் ஈடுபடக் கூடாது அல்லது அவ்வாறு செய்யுமாறு பிறரைத் தூண்டக் கூடாது. இதில் ஒருவருக்கு உடல் காயங்கள் ஏற்பட வாழ்த்து கூறுவதும் அல்லது நம்பிக்கை தெரிவிப்பதும் அடங்கும். மேலும் அறிய.

வெறுக்கத்தக்க நடத்தை: இனம், மனித குலம், தேசியப் பூர்வீகம், சாதி, பாலியல் நாட்டம், பாலினம், பாலின அடையாளம், மத இணைப்பு, வயது, இயலாமை அல்லது கடுமையான நோய் ஆகியவற்றின் அடிப்படையில் மற்றவர்களுக்கு எதிரான, அச்சுறுத்தும் அல்லது தொந்தரவு செய்யும் வன்முறையைத் தூண்டக் கூடாது. மேலும் அறிய

தற்கொலை அல்லது சுய தீங்கு: தற்கொலை அல்லது சுய தீங்கை நீங்கள் விளம்பரப்படுத்த அல்லது ஊக்குவிக்கக் கூடாது. மேலும் அறிய.

கிராஃபிக் மீறல் மற்றும் வயதுவந்தோர் உள்ளடக்கம் உள்ளிட்ட உணர்வுப்பூர்வ மீடியா: அதீத கோரமான மீடியாவை நீங்கள் இடுகையிடக்கூடாது அல்லது நேரலை வீடியோ அலல்து சுயவிவரம் அல்லது தலைப்பு படங்களில் வன்முறை அல்லது ஆபாச உள்ளடக்கத்தைப் பகிரக்கூடாது. ஒருவரின் அனுமதியின்றித் தயாரிக்கப்பட்ட அல்லது விநியோகிக்கப்பட்ட அவரின் நெருக்கமான புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை நீங்கள் பதிவிடவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ கூடாது.பாலியல் வன்முறை மற்றும்/அல்லது தாக்குதலைச் சித்தரிக்கும் ஊடகமும் அனுமதிக்கப்படாது. மேலும் அறிய

சட்டவிரோத அல்லது குறிப்பிட்ட ஒழுங்குமுறைபடுத்தப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகள்: எந்தவொரு சட்டவிரோத நோக்கத்திற்காகவோ சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ எங்கள் சேவையை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. இதில் குறிப்பிட்ட வகை ஒழுங்குமுறைபடுத்தப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்வது, வாங்குவது அல்லது பரிவர்த்தனைகளை மேற்கொள்வது ஆகியவை அடங்கும். மேலும் அறிய.

தனியுரிமை

தனிப்பட்ட தகவல்: பிறரின் தனிப்பட்ட தகவலை (வீட்டு தொலைபேசி எண் மற்றும் முகவரி போன்றவை) அவர்களின் வெளிப்படையான அங்கீகாரம் மற்றும் அனுமதியின்றி வெளியிடவோ இடுகையிடவோ கூடாது. தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதாக மிரட்டுவதையும் பிறரை அவ்வாறு செய்யத் தூண்டுவதையும் நாங்கள் தடைசெய்துள்ளோம். மேலும் அறிய.

சட்டத்திற்குப் புறம்பான நிர்வாணம்: ஒருவரின் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட அல்லது விநியோகிக்கப்பட்ட அவரின் உள்ளார்ந்த புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை நீங்கள் பதிவிடவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ கூடாது. மேலும் அறிய

உண்மைத்தன்மை

தளத்தை ஏமாற்றுதல் மற்றும் ஸ்பேம்: Twitter-இல் பொது மக்களின் அனுபவத்தை ஏமாற்றும் அல்லது குறுக்கிடும் வகையில் தகவல்களைச் செயற்கையாக அதிகரிக்கவோ அல்லது சுருக்கவோ அல்லது அத்தகைய நடத்தையில் ஈடுபடும் வகையில் Twitter சேவைகளை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும் அறிய.

குடிமை நேர்மை: தேர்தல்கள் அல்லது பிற குடிமை செயல்முறைகளில் கையாளுதல் அல்லது தலையிடுவதற்கான நோக்கத்திற்காக நீங்கள் Twitter-இன் சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது. இதில் குடிமை செயல்பாட்டில் எப்போது, எங்கே, அல்லது எப்படிப் பங்கேற்க வேண்டும் என்பது பற்றிப் பங்கேற்பை அடக்கக்கூடிய அல்லது மக்களைத் தவறாக வழிநடத்தக்கூடிய உள்ளடக்கத்தை இடுகையிடுவதும் பகிர்வதும் அடங்கும். மேலும் அறிய.

ஆள் மாறாட்டம் தனிநபர்கள், குழுக்கள் அல்லது அமைப்புகளை தவறாக வழிநடத்துதல், குழப்பம் செய்தல் அல்லது மற்றவர்களை ஏமாற்றுதல் போன்ற நோக்கத்தில் அல்லது அவ்வாறு செய்யும் வகையில் நீங்கள் ஆள்மாறாட்டம் செய்யக்கூடாது. மேலும் அறிய.

போலியான மற்றும் கையாளப்பட்ட மீடியா: தீங்கு விளைவிக்கக் கூடிய போலியான அல்லது கையாளப்பட்ட மீடியாவை நீங்கள் ஏமாற்றும் விதமாகப் பகிரக்கூடாது. கூடுதலாக, போலியான மற்றும் கையாளப்பட்ட மீடியாக்களைக் கொண்ட கீச்சுகளை நாங்கள் பெயரிடலாம், இது பயனர்களுக்கு அவர்களின் நம்பகத்தன்மையைப் புரிந்துகொள்ளவும் கூடுதல் சூழலை வழங்கவும் உதவும். மேலும் அறிய.

பதிப்புரிமை மற்றும் வணிகமுத்திரை: பதிப்புரிமை மற்றும் வணிகமுத்திரை உள்ளிட்ட மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை நீங்கள் மீறக்கூடாது. எங்கள் வணிகமுத்திரைக் கொள்கை மற்றும் பதிப்புரிமை கொள்கை பற்றி மேலும் படிக்கவும்.

அமலாக்கம் மற்றும் மேல்முறையீடுகள்

இந்த விதிகளை மீறுவதால் அல்லது அமலாக்கத்தை மீற முயற்சிப்பதால் ஏற்படும் சாத்தியமான தொடர் விளைவுகள், எவ்வாறு மேல் முறையீடு செய்வது உள்ளிட்டவற்றை எங்கள் அமலாக்க நடைமுறையைப் பற்றி மேலும் அறியவும்.

வீடியோ உள்ளடக்கத்தில் மூன்றாம் தரப்பு விளம்பரம்

எங்கள் முன்னனுமதி இல்லாமல், ப்ரீ-ரோல் வீடியோ விளம்பரங்கள் அல்லது ஸ்பான்ஸர்ஷிப் கிராபிக்ஸ் போன்ற மூன்றாம் தரப்பு விளம்பரங்களைக் கொண்டிருக்கும் எந்தவொரு வீடியோ உள்ளடக்கத்தையும் எங்கள் சேவைகளிலோ அல்லது அவற்றின் மூலமாகவோ நீங்கள் சமர்ப்பிக்க, பதிவிட அல்லது காண்பிக்கக்கூடாது.

Note: ஆரோக்கியமான பொது உரையாடலை ஊக்குவிக்கும் எங்கள் நோக்கத்தை ஆதரிக்கும் பொருட்டு அவ்வப்போது இந்த விதிகளை நாங்கள் மாற்ற வேண்டியிருக்கலாம். மிகச் சமீபத்திய பதிப்பு எப்போதும் இந்தத் தளத்தில் கிடைக்கும்: https://twitter.com/rules.

Bookmark or share this article