பூட்டப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட கணக்கிற்கான உதவி

ஒரு கணக்குத் திருடப்பட்டதாகத் தோன்றினால் அல்லது Twitter விதிகளையோ சேவை விதிமுறைகளையோ மீறுவதாகத் தோன்றினால், நாங்கள் கணக்கைப் பூட்டலாம் அல்லது குறிப்பிட்ட கணக்கு அம்சங்களுக்குத் தற்காலிக வரையறைகளை அமைக்கலாம். நீங்கள் உள்நுழையும் போது அல்லது உங்கள் பயன்பாட்டைத் திறக்கும் போது, உங்கள் கணக்கு பூட்டப்பட்டதாக அல்லது உங்கள் கணக்கு அம்சங்கள் சில வரையறுக்கப்பட்டதாக ஒரு செய்தியைக் கண்டால், அதை மீட்டமைக்க வழிமுறைகளைப் பின்பற்றவும் அல்லது மேலும் தகவலுக்குத் தொடர்ந்து படிக்கவும்.


பாதுகாப்புக் காரணங்களுக்காக உங்கள் கணக்கு பூட்டப்பட்டுள்ளது


உங்கள் கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருக்கும் போது, பாதுகாப்புக் காரணங்களுக்காக உங்கள் கணக்கு பூட்டப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கண்டால், இதன் பொருள், சந்தேகத்திற்குரிய நடத்தையை நாங்கள் கண்டறிந்துள்ளோம், மேலும் உங்கள் கணக்குத் திருடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது என்பதாகும். உங்கள் கணக்கைத் திறக்க, இப்போதே உங்கள் கடவுச்சொல்லை மாற்றி கணக்கைப் பாதுகாக்கவும்.

உங்கள் கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரி இருந்தால், அந்த முகவரிக்கும் நாங்கள் வழிமுறைகளை அனுப்பியுள்ளோம். எங்களிடமிருந்து மின்னஞ்சலை நீங்கள் பெறவில்லை என்றால், உங்கள் ஸ்பேம், குப்பை மற்றும் சமூகம் கோப்புறைகளைச் சரிபார்க்கவும்.

உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எவ்வாறு என்பதைப் பற்றிய உதவிக்குறிப்புகளைப் படிக்கவும்.

உங்கள் கணக்கைத் திறப்பதற்காகக் கூடுதல் உதவி தேவைப்பட்டால், எங்கள் ஆதரவுக் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
 

உங்கள் கணக்கு பூட்டப்பட்டுள்ளது, நீங்கள்தான் சரியான உரிமையாளர் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும்

உங்கள் கணக்கு, Twitter விதிகளை மீறும் தானியங்கு நடத்தையை வெளிப்படுத்தியதாகத் தோன்றினால், நாங்கள் அதைப் பூட்டி, கணக்கின் சரியான உரிமையாளர் நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்துமாறு கோரலாம்.

கணக்கைத் திறக்க:

  1. உங்கள் கணக்கில் உள்நுழைக.
  2. உங்கள் கணக்கு பூட்டப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும் செய்தியைப் பார்ப்பீர்கள்.
  3. தொடங்குக என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
  4. உங்கள் ஃபோன் எண்ணை உள்ளிடுக. இந்த ஃபோன் எண்ணை உங்கள் கணக்குடன் இணைப்போம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  5. சரிபார்ப்புக் குறியீட்டுடன், உங்களுக்கு உரைச் செய்தியை அனுப்புவோம் அல்லது ஃபோன் அழைப்பைப் பெறுவீர்கள். உங்கள் ஃபோனில் குறியீடு டெலிவரி செய்யப்பட சில நிமிடங்கள் ஆகலாம்.
  6. உங்கள் கணக்கைத் திறக்க, சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிட்டதும், சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.

உங்கள் கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரி இருந்தால், அந்த முகவரிக்கும் நாங்கள் வழிமுறைகளை அனுப்பியுள்ளோம். எங்களிடமிருந்து மின்னஞ்சலை நீங்கள் பெறவில்லை என்றால், உங்கள் ஸ்பேம், குப்பை மற்றும் சமூகம் கோப்புறைகளைச் சரிபார்க்கவும்.

உங்கள் கணக்கைத் திறப்பதற்காகக் கூடுதல் உதவி தேவைப்பட்டால், எங்கள் ஆதரவுக் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் கணக்கு இந்த நிலையிலிருந்தால், உங்கள் சுயவிவரத்தைப் பார்வையிடுபவர்கள், கணக்கு வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டைக் காட்டியுள்ளதைத் தெரிவிக்கும் ஒரு செய்தியைக் காணலாம், மேலும் அவர்கள் இன்னும் அந்தக் கணக்கைப் பார்க்க விரும்புவதை உறுதிப்படுத்தும்படி கேட்கப்படலாம்.


உங்கள் கணக்கு Twitter விதிகளை மீறியிருக்கலாம் என்பதால் வரையறுக்கப்பட்டுள்ளது
 

 

உங்கள் கணக்கு Twitter விதிகளை மீறியிருக்கலாம் என்பதால் வரையறுக்கப்பட்டிருந்தால், நீங்கள் இன்னும் Twitter -இல் உலாவலாம், ஆனால் இந்த நிலையில் இருக்கும்போது, உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு நேரடிச்செய்திகளை மட்டுமே அனுப்ப முடியும். ட்விட் செய்தல், மறுட்விட் செய்தல் அல்லது லைக் செய்தல் போன்ற செயல்களில் நீங்கள் ஈடுபட முடியாது, மேலும் உங்களைப் பின்தொடர்பவர்கள் மட்டுமே உங்களின் முந்தைய கீச்சுகளைப் பார்க்க முடியும்.

உங்கள் கணக்கின் வரையறுக்கப்பட்ட நிலையில் கவுண்ட்டவுனைத் தொடங்கும் முன், சில செயல்களை முடிக்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்கலாம். இந்தச் செயல்களில் உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்ப்பது, உங்கள் கணக்கில் ஃபோன் எண்ணைச் சேர்ப்பது அல்லது எங்கள் விதிகளை மீறும் கீச்சுகளை நீக்குவது ஆகியவை அடங்கும்.

உங்கள் கணக்கை மீட்டெடுக்க, உள்நுழைந்து, உங்களின் சில கணக்கு அம்சங்களைத் தற்காலிகமாக வரையறுத்துள்ளோம் என்பதைத் தெரிவிக்கும் செய்தியைக் காணவும். கோரப்பட்ட செயல்களை முடிக்க, தொடங்குக என்பதைக் கிளிக் செய்து அல்லது தொட்டு வழிமுறைகளைப் பின்பற்றவும்.

குறிப்பு: Twitter விதிகளின் தொடர்ச்சியான மீறலானது நிரந்தர இடைநீக்கத்திற்கு வழிவகுக்கும்.

உங்கள் கணக்கு தவறுதலாக வரையறுக்கப்பட்டிருப்பதாக நினைத்தால், எங்களின் ஆதரவு குழுவைத் தொடர்புகொண்டு முறையிடலாம்.

உங்கள் கணக்கு தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டிருந்தால், உங்கள் சுயவிவரத்தைப் பார்வையிடுபவர்கள், கணக்கு Twitter விதிகளை மீறியிருக்கலாம் என்பதைத் தெரிவிக்கும் ஒரு செய்தியைக் காணலாம், மேலும் அவர்கள் இன்னும் அந்தக் கணக்கைப் பார்க்க விரும்புவதை உறுதிப்படுத்தும்படி கேட்கப்படலாம்.
 

சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டின் காரணமாக உங்கள் கணக்கு அம்சங்கள் சில வரையறுக்கப்பட்டுள்ளன


உங்கள் கணக்கில் Twitter விதிகளை மீறும் அதிகப்படியான பின்தொடர்வுகள் அல்லது அதிகப்படியான ஈடுபாடுகள் (லைக், மறுகீச்சு மற்றும் மேற்கோள் கீச்சு போன்றவை) இருப்பதாகத் தோன்றினால், உங்கள் கணக்கின் அம்சங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு வரையறுக்கப்பட்டதாக ஒரு செய்தியைப் பார்ப்பீர்கள்.

நீங்கள் தேர்வு செய்ய இரண்டு விருப்பத்தேர்வுகள் இருக்கும்:

  • பட்டியலிடப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்கு Twitter -ஐத் தற்காலிக, வரையறுக்கப்பட்ட நிலையில் பயன்படுத்தவும்.
  • உங்கள் ஃபோன் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்க எங்கள் வழிமுறைகளைப் பூர்த்தி செய்யவும்.
     

Twitter -ஐத் தற்காலிக, வரையறுக்கப்பட்ட நிலையில் பயன்படுத்த, Twitter -இல் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும். உங்களின் வரையறுக்கப்பட்ட நிலையில், உங்கள் கணக்கும் கீச்சுகளும் தேடல் முடிவுகள் மற்றும் அறிவிப்புகள் உட்பட Twitter -இல் சில இடங்களிலிருந்து வடிகட்டப்படலாம். Twitter -இல் தொடரவும் என்பதை நீங்கள் தேர்வுசெய்தால், திரும்பிச் சென்று சரிபார்ப்பு விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்ய முடியாது.

உங்கள் ஃபோன் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்ப்பதன் மூலம் உங்கள் கணக்கை மீட்டெடுக்க, சரிபார் என்பதைக் கிளிக் செய்து அல்லது தொட்டு, நாங்கள் வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் ஃபோன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்ப்பது Twitter -இல் சாத்தியமான தானியங்கு அல்லது ஸ்கிரிப்ட் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது.

குறிப்பு: Twitter விதிகளை உங்கள் கணக்கானது தொடர்ந்து மீறுவதாகத் தோன்றினால் அல்லது மற்ற கணக்குகளுடன் தீவிரமாக ஈடுபட்டிருந்தால், ஃபோன் மூலம் சரிபார்க்கும் என்ற விருப்பத்தேர்வு உங்களுக்கு வழங்கப்படாமல் போகலாம். இந்தச் சந்தர்ப்பத்தில், பட்டியலிடப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்குி நீங்கள் Twitter -ஐ வரையறுக்கப்பட்ட நிலையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

உங்களின் பூட்டப்பட்ட கணக்கை எவ்வாறு செயல்முடக்குவது

உங்களின் பூட்டப்பட்ட கணக்கை செயல்முடக்க, எங்களின் சரிசெய்தல் கட்டுரைகளைப் பாருங்கள் அல்லது கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்இங்கே.  எங்கள் தனியுரிமைக் கொள்கையின் "எங்களை எப்படித் தொடர்புகொள்வது" என்ற பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள தொடர்புகளுக்கும் கோரிக்கைகளை அனுப்பலாம்.
 

உங்கள் தனிப்பட்ட தகவலின் நகலை எவ்வாறு கோருவது

பூட்டப்பட்ட கணக்குகள் தங்கள் தகவலை அணுகுவதற்கான கோரிக்கையை இங்கே சமர்ப்பிக்கலாம். எங்கள் தனியுரிமைக் கொள்கையின் "எங்களை எப்படித் தொடர்புகொள்வது" என்ற பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள தொடர்புகளுக்கும் கோரிக்கைகளை அனுப்பலாம்.

உங்கள் கணக்கு தவறுதலாக பூட்டப்பட்டிருப்பதாக நினைத்தால்,  எங்களின் ஆதரவு குழுவைத் தொடர்புகொண்டு முறையிடலாம்.
 

உங்கள் கணக்கு அம்சங்களில் சில தற்காலிகமாக வரையறுக்கப்பட்டுள்ளன


உரையாடல்கள் Twitter -இன் முக்கிய அம்சமாகும், ஆனால் Twitter விதிகளை மீறும் அல்லது பிறரின் கருத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் திறனைத் தடுக்கும் நடத்தையை நாங்கள் கண்டறிந்தால், அந்தக் கணக்கு அம்சங்கள் சிலவற்றை நாங்கள் தற்காலிகமாக வரையறுக்கலாம். எடுத்துக்காட்டாக, Twitter -இல் கீச்சுகள், லைக்குகள், மறுகீச்சுகள் போன்றவை உள்ளிட்ட உங்கள் செயல்பாட்டை, பின்தொடர்பவர்கள் மட்டுமே பார்க்க முடியும். சாத்தியமான முறைகேடுள்ள உள்ளடக்கத்தின் வரையறையைக் கட்டுப்படுத்துவது பாதுகாப்பான சூழலையும் வலுவான Twitter சமூகத்தையும் உருவாக்குகிறது.

நீங்கள் உள்நுழைந்து இந்தச் செய்தியைப் பார்க்கும்போது, உங்கள் கணக்கு அம்சங்களை மீட்டமைப்பதற்கான கவுண்ட்டவுனைத் தொடங்க, Twitter -இல் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும். Twitter -இன் முறைகேடான நடத்தைக் கொள்கையைப் பற்றி நீங்கள் மேலும் படிக்கலாம் மற்றும் எங்களின் வெறுக்கத்தக்க நடத்தைக் கொள்கைக்கான வழிகாட்டுதல்களைக் கண்டறியலாம்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க