தளத்தை ஏமாற்றுதல் மற்றும் ஸ்பேம் கொள்கை

மேலோட்டப் பார்வை


ஏப்ரல் 2022

தகவலைச் செயற்கையாக அதிகரிக்கும் அல்லது சுருக்கும் நோக்கத்துடன் நீங்கள் Twitter -இன் சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது அல்லது Twitter -இல் பயனர்களின் அனுபவத்தைக் கையாளும் அல்லது சீர்குலைக்கும் நடத்தையில் ஈடுபடக்கூடாது.

பயனர்கள் மனிதத் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய, நம்பகமான தகவல்களைக் கண்டறியக்கூடிய மற்றும் அவர்களைச் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வெளிப்படுத்தக்கூடிய ஓர் இடமாக Twitter இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதைச் சாத்தியமாக்குவதற்கு, ஸ்பேம் அல்லது தளத்தை ஏமாற்றுதலின் பிற வகைகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மற்றவர்களைத் தவறாக வழிநடத்தும் மற்றும்/அல்லது அவர்களின் அனுபவத்தைச் சீர்குலைக்கும் மொத்த, வலிந்து தாக்கும் அல்லது ஏமாற்றும் செயல்பாட்டில் ஈடுபட Twitter-ஐப் பயன்படுத்துவதை தளத்தை ஏமாற்றுதல் என்று வரையறுக்கிறோம்.

தளத்தை ஏமாற்றுதல் ஆனது பல வடிவங்களை எடுக்கக்கூடும், மேலும் பின்வருவன போன்ற பரந்த தடைசெய்யப்பட்ட நடத்தைக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் எங்கள் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன:

 • Twitter -இல் நடக்கும் உரையாடலில் இருந்து கணக்குகள், இணையதளங்கள், தயாரிப்புகள், சேவைகள் அல்லது முன்முயற்சிகளுக்குப் பார்வையாளர்கள் அல்லது கவனத்தைச் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள வர்த்தக ரீதியாக ஊக்கமளிக்கும் ஸ்பேம்;
 • கணக்குகள் அல்லது உள்ளடக்கம் உண்மையில் இருப்பதை விடப் பிரபலமாக அல்லது செயலில் இருப்பதாகத் தோன்ற வைக்கும் முயற்சியான நம்பகத்தன்மையற்ற ஈடுபாடுகள்;
 • பல கணக்குகள், போலியான கணக்குகள், தானியக்கம் மற்றும்/அல்லது ஸ்கிரிப்டிங் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் உரையாடல்களில் செயற்கையான செல்வாக்கைச் செலுத்த முயற்சிக்கின்ற ஒருங்கிணைந்த செயல்பாடு; மற்றும்
 • Twitter விதிகளை மீறும் நடத்தையை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் ஒருங்கிணைந்த தீங்கு விளைவிக்கும் செயல்கள்.
   

இந்தக் கொள்கையை மீறுபவை எவை?


இந்தக் கொள்கையின் கீழ், பின்வரும் பகுதிகளில் பல்வேறு நடத்தைகளைத் தடைசெய்கிறோம்:
 

பல்வேறு கணக்குகள் மற்றும் ஒருங்கிணைப்பு

நீங்கள் Twitter கணக்குகளைப் பெரும்-திரளாகப் பதிவுசெய்ய முடியாது அல்லது Twitter கணக்குகளை தானியங்கு முறையைப் பயன்படுத்தி உருவாக்க முடியாது.

Twitter விதிகளை மீறுவதற்காக, நீங்கள் பல கணக்குகளைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ அல்லது மற்றவர்களுடன் ஒருங்கிணைவதன் மூலமாகவோ உரையாடல்களைச் செயற்கையாகப் பெருக்கவோ அல்லது சீர்குலைக்கவோ முடியாது. இதில் பின்வருவன அடங்கும்:

 • ஒன்றுடன் ஒன்று பொருந்தும் கணக்குகள் - ஒரே மாதிரியான அல்லது ஒத்த நபர்கள் அல்லது கணிசமாக ஒத்த உள்ளடக்கம் போன்ற ஒன்றுடன் ஒன்று பொருந்தும் பயன்பாட்டுச் சந்தர்ப்பங்களுடன் பல கணக்குகளை இயக்குதல்;
 • பரஸ்பரம் இடைத்தொடர்புறும் கணக்குகள் - குறிப்பிட்ட கீச்சுகள் அல்லது கணக்குகளின் முக்கியத்துவத்தை அதிகரிக்க அல்லது கையாள ஒருவர் மற்றொருவருடன் ஊடாடும் பல கணக்குகளை இயக்குதல்; மற்றும்
 • ஒருங்கிணைப்பு - பிரதி உள்ளடக்கத்தைப் பதிவிட அல்லது போலியான ஈடுபாட்டை உருவாக்க பல கணக்குகளை உருவாக்குதல், எடுத்துக்காட்டுகள்:
  • நீங்கள் இயக்கும் பல கணக்குகளிலிருந்து ஒத்த அல்லது கணிசமாக ஒத்த கீச்சுகள் அல்லது ஹேஷ்டேக்குகளைப் பதிவிடுதல்; 
  • நீங்கள் இயக்கும் பல கணக்குகளிலிருந்து கீச்சுகள் அல்லது கணக்குகளுடன் மீண்டும் ஈடுபடுவது (மறுகீச்சுகள், விருப்பங்கள், குறிப்பீடுகள், Twitter வாக்கெடுப்பு வாக்குகள்);
  • சம்பந்தப்பட்டவர்கள் ஒரே ஒரு கணக்கை மட்டுமே பயன்படுத்தினாலும், செயற்கையான ஈடுபாடு அல்லது அதிகரித்துக் காட்டுவதில் ஈடுபட மற்றவர்களுடன் ஒருங்கிணைத்தல் அல்லது அவர்களுக்கு ஈடுசெய்தல்; மற்றும்
  • எங்களின் முறைகேடான நடத்தை கொள்கையின் மீறல்கள் உட்பட Twitter விதிகளின் மீறல்களில் ஈடுபட அல்லது ஊக்குவிக்க மற்றவர்களுடன் ஒருங்கிணைத்தல்.
    

ஈடுபாடு மற்றும் அளவீடுகள்


உங்கள் சொந்த அல்லது பிறரின் பின்தொடர்பவர்களை அல்லது ஈடுபாட்டை நீங்கள் செயற்கையாக அதிகரித்துக் காட்ட முடியாது.
இதில் உள்ளடங்குபவை:

 • கீச்சு அல்லது கணக்கு அளவீடு வீக்கத்தை விற்றல்/வாங்குதல் - பின்தொடர்பவர்கள் அல்லது ஈடுபாடுகளை (மறுகீச்சுகள், விருப்பங்கள், குறிப்பீடுகள், Twitter வாக்கெடுப்பு வாக்குகள்) விற்பனை செய்தல் அல்லது வாங்குதல்;
 • பயன்பாடுகள் - பின்தொடர்பவர்களைச் சேர்ப்பது அல்லது கீச்சுகளில் ஈடுபாடுகளைச் சேர்ப்பதாகக் கூறும் மூன்றாம் தரப்புச் சேவைகள் அல்லது பயன்பாடுகளைப் பயன்படுத்துதல் அல்லது மேம்படுத்துதல்;
 • பரஸ்பர வீக்கம் - பின்தொடர்வுகள் அல்லது கீச்சு ஈடுபாடுகளைப் பரிமாற்ற, வர்த்தகம் செய்தல் அல்லது ஒருங்கிணைத்தல் (“பின்தொடர்தல் ட்ரைன்கள்,” “டெக்குகள்” மற்றும் “மறுகீச்சுக்கான மறுகீச்சு” நடத்தை உட்பட இன்னும் பிறவும்); மற்றும்
 • கணக்கு பரிமாற்றங்கள் அல்லது விற்பனை - Twitter கணக்குகள், பயனர்பெயர்கள் அல்லது Twitter கணக்குகளுக்கான தற்காலிக அணுகல் போன்றவற்றின் விற்பனை, கொள்முதல் அல்லது வர்த்தகம் செய்தல்.
   

Twitter தயாரிப்பு அம்சங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்


மற்றவர்களின் அனுபவத்தைச் சீர்குலைக்க நீங்கள் Twitter தயாரிப்பு அம்சங்களைத் தவறாக பயன்படுத்த முடியாது.
இதில் உள்ளடங்குபவை:
 

கீச்சுகள் மற்றும் நேரடிச்செய்திகள்

 • மொத்த, அதிகப்படியான, அதிக-அளவு கொண்ட கோரப்படாதப் பதில்கள், குறிப்பீடுகள் அல்லது நேரடிச்செய்திகளை அனுப்புதல்;
 • ஒரே உள்ளடக்கத்தை, தொடர்ந்து இடுகையிடுதல் மற்றும் நீக்குதல்;
 • ஒரே மாதிரியான அல்லது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கீச்சுகளை தொடர்ந்து இடுகையிடுவது அல்லது ஒரே மாதிரியான நேரடிச்செய்திகளை தொடர்ந்து அனுப்புதல்;
 • வர்ணனை இல்லாமல் பகிரப்பட்ட இணைப்புகளைக் கொண்ட கீச்சுகளை தொடர்ந்து இடுகையிடுவது அல்லது நேரடிச்செய்திகளை அனுப்புவது, இதனால் இது உங்கள் கீச்சு/நேரடிச்செய்திச் செயல்பாட்டின் பெரும்பகுதியை உள்ளடக்கும்; மற்றும்
 • தனித்தனியாகவோ அல்லது பிற கணக்குகளுடன் இணைந்தோ ஏற்கனவே உள்ள சொற்றொடர் அல்லது உள்ளடக்கத்தை நகல் முறையில் ட்விட் செய்தல். எங்களின் நகலெடுத்து ஒட்டுதல் மற்றும் நகல் உள்ளடக்கக் கொள்கையில் மேலும் அறிக.

நீங்கள் பின்தொடர்வோர்

 • “ஒருவர் பின்தொடர்வதற்காக அவரைப் பின்தொடர்தல்” - ஒருவரின் சொந்த பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான முயற்சியில் ஏராளமான கணக்குகளைப் பின்தொடர்வதும் பிறகு அவற்றைப் பின்தொடராமல் நிறுத்துவதும்;
 • கண்மூடித்தனமான பின்தொடர்தல் - குறுகிய காலத்தில், குறிப்பாக தானியங்கி வழிமுறைகளால், தொடர்பில்லாத ஏராளமான கணக்குகளைப் பின்தொடர்வது மற்றும்/அல்லது பின்தொடர்வதை நிறுத்துவது; மற்றும்
 • குறிப்பாகத் தானியக்கத்தைப் பயன்படுத்தி, மற்றொரு கணக்கைப் பின்தொடர்பவர்களை நகலெடுப்பது.
   

ஈடுபாடு

 • கணக்குகள், வலைத்தளங்கள், தயாரிப்புகள், சேவைகள் அல்லது முன்முயற்சிகளுக்கு பார்வையாளர்கள் அல்லது கவனத்தைச் செலுத்த, கீச்சுகளுடன் தீவிரமாக அல்லது தானாக ஈடுபடுவது.
 • பட்டியல்கள் அல்லது தருணங்களில் பயனர்களை அதிகப்படியாகச் சேர்ப்பது.
   

ஹேஷ்டேக்குகள் 

 • உரையாடலைத் திசைதிருப்ப அல்லது கையாள அல்லது கணக்குகள், இணையதளங்கள், தயாரிப்புகள், சேவைகள் அல்லது முன்முயற்சிகளுக்கு பார்வையாளர்கள் அல்லது கவனத்தைச் செலுத்தும் நோக்கத்துடன் ஒரு பிரபலமடைகின்ற அல்லது பிரபலமான ஹேஸ்டேக்கைப் பயன்படுத்துவது; மற்றும்
 • ஒரே கீச்சில் அல்லது பல கீச்சுகளில் அளவுக்கதிகமான, தொடர்பில்லாத ஹேஷ்டேக்குகளுடன் ட்விட் செய்தல்.
   

URLகள்

 • மற்றொரு நபரின் உலாவி அல்லது கணினியைச் சேதப்படுத்தும் (தீம்பொருள்) அல்லது பாதிக்கும் அல்லது ஒருவரின் தனியுரிமையைச் சமரசம் செய்யும் (மோசடி) நோக்குடன் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை வெளியிடுவது அல்லது இணைப்பது. 
 • தவறான அல்லது ஏமாற்றும் இணைப்புகளை இடுகையிடுதல்; எ.கா., கூட்டு இணைப்புகள் மற்றும் கிளிக் ஜாக்கிங் இணைப்புகள்.
   

எது இந்தக் கொள்கையின் மீறல் அல்ல?


பின்வருபவை இந்தக் கொள்கையின் விதிமீறல் அல்ல:

 • அவ்வப்போது வர்ணனை இல்லாமல் இணைப்புகளைப் இடுகையிடுவது;
 • ஒரு காரணத்திற்காக கருத்துக்கள், பார்வைகள், ஆதரவு அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்த மற்றவர்களுடன் ஒருங்கிணைவது, அத்தகைய நடத்தை Twitter விதிகளை மீறுவதில்லை; மற்றும்
 • தனித்துவமான அடையாளங்கள், நோக்கங்கள் அல்லது பயன்பாட்டு நிகழ்வுகளுடன் பல கணக்குகளை இயக்குவது. இந்தக் கணக்குகள் மற்ற விதிகளை மீறாவிட்டால், அவை ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளலாம். சில எடுத்துக்காட்டுகள்:
  • பல இடங்களைக் கொண்ட வணிகம் போன்ற தொடர்புடைய ஆனால் தனி அத்தியாயங்கள் அல்லது கிளைகளைக் கொண்ட நிறுவனங்கள்;
  • புனைப்பெயரிலுள்ள கணக்குகள் அல்லது உங்கள் பொழுதுபோக்குகள் அல்லது முன்முயற்சிகளுடன் தொடர்புடைய கணக்குகளுக்கும் கூடுதலாக, தனிப்பட்ட கணக்கை இயக்குவது; மற்றும்
  • பொழுதுபோக்கு/கலைநயமான போட்கள்.
    

இந்தக் கொள்கையின் மீறல்களை யார் புகாரளிக்கலாம்?


எங்கள் பிரத்யேக புகாரளித்தல் பாய்வு வழியாக எவரும் கணக்குகள் அல்லது கீச்சுகளைப் புகாரளிக்க முடியும். இந்த அறிக்கைகள் எங்கள் அமலாக்க அமைப்புகளைச் செம்மைப்படுத்தவும் புதிய மற்றும் வளர்ந்து வரும் நடப்புகள் மற்றும் நடத்தை அமைப்புகளை அடையாளம் காணவும் உதவுகின்றன. 
 

இந்தக் கொள்கையின் மீறல்களை நான் எப்படிப் புகாரளிப்பது?


பயன்பாட்டில்

பின்வரும் வகையில் இந்த உள்ளடக்கத்தைப் பற்றி பயன்பாட்டில் புகாரளிக்கலாம்:

 1.  ஐகானிலிருந்து கீச்சைப் புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 2. இது சந்தேகத்திற்கிடமானது அல்லது ஸ்பேம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
 3. கீச்சு எவ்வாறு சந்தேகமானது அல்லது ஸ்பேமைப் பரப்புகிறது என்பதைச் சிறப்பாகக் கூறும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
 4. உங்கள் புகாரைச் சமர்ப்பித்தல்.
   

டெஸ்க்டாப்

பின்வரும் வகையில் இந்த உள்ளடக்கத்தைப் பற்றி டெஸ்க்டாப் வழியாகப் புகாரளிக்கலாம்:

 1.  ஐகானிலிருந்து கீச்சைப் புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 2. இது சந்தேகத்திற்கிடமானது அல்லது ஸ்பேம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. கீச்சு எவ்வாறு சந்தேகமானது அல்லது ஸ்பேமைப் பரப்புகிறது என்பதைச் சிறப்பாகக் கூறும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
 4. உங்கள் புகாரைச் சமர்ப்பித்தல்.

புகார் படிவம்

எங்கள் ஸ்பேம் புகாரளிப்புப் படிவம் வாயிலாக, நான் Twitter -இலுள்ள ஸ்பேமைப் புகாரளிக்க விரும்புகிறேன் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் இந்த உள்ளடக்கத்தைப் பற்றி மதிப்பாய்வு செய்யவும் புகாரளிக்கலாம்.

இந்தக் கொள்கையை மீறினால் என்ன நடக்கும்?


இந்தக் கொள்கையை விதிமீறுவதால் ஏற்படும் விளைவுகள் என்பவை திமீறலின் தீவிரத்தன்மை மற்றும் முந்தைய விதிமீறல்களின் வரலாறு ஆகியவற்றைப் பொறுத்தவை. நாங்கள் அடையாளம் கண்டுள்ள ஸ்பேம் தொடர்பான செயல்பாட்டின் வகை மூலமும் எங்கள் நடவடிக்கை தெரிவிக்கப்படுகிறது. நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் பின்வருவன அடங்கக் கூடும்:
 

ஸ்பேம் எதிர்ப்புச் சவால்கள்

செயல்பாடானது சந்தேகத்திற்கிடமான அளவில் இருப்பதை நாங்கள் கண்டறியும்போது, கணக்குகள் பூட்டப்படக் கூடும் மற்றும் கூடுதல் தகவலை (எ.கா., ஃபோன் எண்) வழங்குமாறு கேட்கப்படலாம் அல்லது ஒரு reCAPTCHA -ஐத் தீர்க்கும்படி கேட்கப்படலாம். 
 

மறுப்புப்பட்டியல் URLகள்

பாதுகாப்பற்றது என்று நாங்கள் நம்பும் URLகளை மறுப்புப்பட்டியலில் வைக்கிறோம் அல்லது அது பற்றிய எச்சரிக்கைகளை வழங்குகிறோம். உங்கள் URL -ஐ நாங்கள் தவறாகப் பாதுகாப்பற்றது என அடையாளப்படுத்திவிட்டோம் என்றால் எவ்வாறு முறையீடு செய்வது என்பது உட்பட, பாதுகாப்பற்ற இணைப்புகள் பற்றி மேலும் படிக்கவும்.
 

கீச்சு நீக்கம் மற்றும் தற்காலிகமாகக் கணக்கைப் பூட்டுதல்கள்

 • தளத்தை ஏமாற்றுதல் அல்லது ஸ்பேம் குற்றமானது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்லது முதல் குற்றமாக இருந்தால், ஒன்று அல்லது அதிக கீச்சுகளை நீக்குவது முதல் தற்காலிகமாகக் கணக்கை(களை)ப் பூட்டுவது வரை பல நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கலாம். எந்தவொரு அடுத்தடுத்த தளத்தை ஏமாற்றுதல் குற்றங்களும் நிரந்தர இடைநீக்கத்திற்கு வழிவகுக்கும்.
 • பல கணக்குகளின் பயன்பாடு சார்ந்த மீறல் வழக்கில், வைத்திருக்க ஒரு கணக்கைத் தேர்வு செய்யுமாறு கேட்கப்படுவீர்கள். மீதமுள்ள கணக்குகள் நிரந்தரமாக இடைநீக்கப்படும்.

நிரந்தர இடைநீக்கம்

கடுமையான மீறல்களுக்கு, முதல் கண்டறிதலில் கணக்குகள் நிரந்தரமாக இடைநீக்கப்படும். கடுமையான மீறல்களுக்கான எடுத்துக்காட்டுகளில் அடங்குபவை:

 • மேலே விவரிக்கப்பட்ட கொள்கைகளை மீறும் பெரும்பான்மையான நடத்தை இருக்கும் கணக்குகளை இயக்குவது;
 • தேர்தல்களின் நேர்மையைக் குறைமதிப்பிடுவதற்கு, இந்தப் பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள தந்திரங்கள் எவற்றையும் பயன்படுத்துவது;
 • கணக்குகளை வாங்குவது/விற்பது;
 • இடைநீக்கப்பட்ட கணக்கை பதிலீடு செய்ய அல்லது போலியாக அமைக்க கணக்குகளை உருவாக்குவது; மற்றும்
 • Twitter விதிகளை மீறுவதாக அறியப்படுபவர்களுக்கு சொந்தமானது என்று Twitter வலுவாகக் காரணம் கூறக்கூடிய கணக்குகளை இயக்குவது.

உங்கள் கணக்கு தவறுதலாகப் பூட்டப்பட்டு அல்லது இடைநீக்கப்பட்டிருப்பதாக நினைத்தால், நீங்கள் ஒரு முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம்.

கூடுதல் ஆதாரங்கள்


நிரலாளர்களுக்கான எங்களின் தானியக்க விதிகள், எங்களின் தேர்தல் நேர்மை முயற்சிகள், எங்களின் நிதி மோசடிக் கொள்கை, எங்களின் ஹேக் செய்யப்பட்ட உள்ளடக்கம் கொள்கை மற்றும் எங்களின் ஒருங்கிணைந்த தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டிற்கான அணுகுமுறை மற்றும் எங்களின விளம்பரங்கள் மற்றும் போட்டிகளுக்கான வழிகாட்டல்கள் பற்றி மேலும் அறிக.

எங்களின் அமலாக்க விருப்பத்தேர்வுகள் மற்றும் கொள்கை மேம்பாடு மற்றும் அமலாக்கம் குறித்த எங்கள் அணுகுமுறை பற்றி மேலும் அறியவும்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க