இரு காரணி அங்கீகாரம் தொடர்பான உதவி

எனது மொபைல் தொலைந்துவிட்டது
 

 • நீங்கள் இரு காரணி அங்கீகாரத்தில் (2FA) பதிவுசெய்து, காப்புப்பிரதிக் குறியீட்டை உருவாக்கியிருந்தால், உங்கள் கணக்கை அணுகி மொபைல் அமைப்புகளைப் புதுப்பிக்க காப்புப்பிரதிக் குறியீட்டை உள்ளிடவும்.
 • உங்கள் கணக்கில் உள்நுழைய முடியவில்லை மற்றும் செயலில் உள்ள காப்புப்பிரதிக் குறியீட்டிற்கான அணுகல் இல்லையெனில், உதவிக்கு எங்கள் ஆதரவுக் குழுவைத் தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு: உங்கள் கணக்கில் SMS உரைச் செய்தி இரு காரணி அங்கீகாரம் ஆன் செய்யப்பட்டிருந்து (மேலும் இது மட்டுமே ஒரே இரு காரணி விருப்பத்தேர்வாக ஆன் செய்யப்பட்டிருக்கும்போது) நீங்கள் இன்னும் உள்நுழைந்துள்ளீர்கள் என்றால், twitter.com -இல் உள்ள உங்கள் மொபைல் அமைப்புகளிலிருந்து உங்கள் ஃபோனை அகற்றலாம். எனது ஃபோனை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் கணக்கிற்கான இரு காரணி அங்கீகாரம் தானாகவே ஆஃப் செய்யப்படும்.

புதிய ஃபோனை வாங்கியுள்ளேன்
 

 • உங்களின் பழைய ஃபோனை மாற்றுவதற்கு முன்னர் அதனைக் காப்புப்பிரதி எடுக்குமாறு பரிந்துரைக்கிறோம். இது உங்கள் புதிய சாதனத்தில் உங்கள் பயன்பாட்டு அமர்வை மீட்டமைக்கவும், இரு காரணி அங்கீகாரத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதைச் செயல்படுத்துவதற்கும் உங்களை அனுமதிக்கிறது. (குறிப்பு: நீங்கள் iOS-க்கான Twitter-ஐப் பயன்படுத்தினால், உங்கள் பயன்பாட்டு விசையைப் பாதுகாக்க, மறைகுறியாக்கப்பட்ட காப்புப்பிரதியைச் செய்யப் பரிந்துரைக்கிறோம். பொதுவாக, iCloud காப்புப்பிரதிகள் மட்டும் விசையைப் பாதுகாக்காது மற்றும் மறைகுறியாக்கப்பட்ட காப்புப்பிரதி இல்லாமல், twitter.com-இல் உருவாக்கப்பட்ட தற்காலிகக் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் பயன்பாட்டில் மீண்டும் உள்நுழைய வேண்டியிருக்கலாம்)
 • நீங்கள் ஏற்கனவே திறக்கப்பட்ட இணைய அமர்வைக் கொண்டிருந்தால், twitter.com-இலிருந்து அல்லது உங்கள் பழைய ஃபோனில் இரு காரணி அங்கீகாரத்திலிருந்தும் பதிவுநீக்கலாம். திறக்கப்பட்ட இணைய அமர்வு மற்றும் பழைய ஃபோன் இரண்டும் இல்லையெனில், உங்கள் காப்புப்பிரதிக் குறியீட்டைப் பயன்படுத்தி twitter.com-இல் மீண்டும் உள்நுழையலாம்.
 • உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எவ்வாறு என்பதைப் பற்றிய உதவிக்குறிப்புகளை அறிக.
   

நான் SMS குறியீட்டைப் பெறவில்லை.
 

 • SMS உரைச் செய்திகள் வந்துசேருவதற்குத் தாமதமாகலாம். மீண்டும் உள்நுழைவதற்கு முன்னர் இரண்டு நிமிடங்கள் காத்திருக்கவும்.
 • நீங்கள் உள்நுழைந்திருந்தால், மொபைல் அமைப்புகளில் உங்கள் ஃபோன் சரியாக ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். 
 • நீங்கள் சமீபத்தில் உங்கள் ஃபோன் எண் அல்லது மொபைல் சேவை வழங்குனரை மாற்றியிருந்தால், நீங்கள் அமைப்புகளைப் புதுப்பிக்க வேண்டும். நீங்கள் இப்போதும் உள்நுழைந்துள்ள வலைத்தளம், iOS அல்லது Android பயன்பாடுகளின் மூலம் இதனைச் செய்யலாம். இல்லையெனில், உள்நுழைவதற்கு காப்புப்பிரதிக் குறியீட்டைப் பயன்படுத்தி அமைப்புகளை மாற்றலாம். காப்புப்பிரதிக் குறியீடுகள் தொடர்பான மேலும் விவரங்கள் கீழேயுள்ளன.
 • உங்கள் மொபைல் சாதனம் ஆப்லைனில் இருந்தால் அல்லது விமான பயன்முறையில் இருந்தால், SMS மூலம் இரு காரணி அங்கீகாரத்தைப் பெற முடியாமல் போகலாம். மாறாக, iOS -க்கான Twitter அல்லது Android -க்கான Twitter பயன்பாட்டின் மூலம் அல்லது twitter.com மூலமாக QR குறியீட்டின் வழியாக குறியீட்டை உருவாக்கலாம் (கீழே வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன).
   
எனது மொபைல் ஆஃப்லைன் அல்லது விமான பயன்முறையில் உள்ளது

iOS -க்கான Twitter மற்றும் Android -க்கான Twitter பயன்பாடுகளில் குறியீட்டை எவ்வாறு உருவாக்குவது:

 1. அமைப்புகள் மற்றும் தனியுரிமைக்குச் செல்லவும்.
  • iOS -க்கான Twitter -இல்: மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.
  • Android -க்கான Twitter-இல்: மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை  அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் எந்த ஐகானையும் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 2. கணக்கு என்பதைத் தொட்டு, பாதுகாப்பு என்பதைத் தொடவும்.
 3. உள்நுழைதல் குறியீடு உருவாக்கி என்பதைத் தொடவும். 
 4. உங்கள் Twitter கணக்கில் உள்நுழைவதற்கு, காட்டப்படும் குறியீட்டைப் பயன்படுத்தவும்.

 


எனது ஃபோனில் உள்நுழைய முடியவில்லை.
 

 • உங்கள் மொபைல் அமைப்புகளைச் சரிசெய்தல் இந்தச் சிக்கலுக்கு உதவலாம். டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கணினியில் இருந்து twitter.coom -இல் உள் நுழைக
 • மாறாக, இரு காரணி அங்கீகாரத்திற்காகப் பதிவுசெய்வதற்கு நீங்கள் பயன்படுத்திய சாதனத்தில் உள்ள உங்கள் கணக்கிலிருந்து வெளியேற முயலவும். இதனால் அது ஆஃப் செய்யப்படும், பின்னர் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் நீங்கள் மீண்டும் உள்நுழையலாம். வெளியேறுவதற்கான வழிமுறைகளுக்கு இந்தக் கட்டுரைகளைப் பார்க்கவும்: iOS -க்கான Twitter அல்லது Android -க்கான Twitter.
   

நான் புஷ் அறிவிப்பை பெறவில்லை
 

 • நீங்கள் மொபைல் அறிவிப்புகளை ஆன் செய்துள்ளீர்களா என்பதைச் சரிபார்க்கவும். உங்கள் சாதனத்திற்கான மொபைல் அறிவிப்புகள் ஆன் செய்யவில்லை எனில், நீங்கள் உள்நுழைவு புஷ் அறிவிப்பைப் பெற மாட்டீர்கள்.
 • அங்கீகரிப்பதற்கு மற்றும் நிராகரிப்பதற்காக கிடைக்கக்கூடிய அனைத்துக் கோரிக்கைகளின் பட்டியலையும் காண்பதற்கு, பயன்பாட்டிலிருந்து சமீபத்திய உள்நுழைவு கோரிக்கைகளை எப்போதும் பார்க்கலாம். மிகவும் சமீபத்திய கோரிக்கையைக் காண்பதற்கு, பக்கத்தைப் புதுப்பிக்க பட்டியலை கீழ்நோக்கி இழுக்கவும்.
   

iOS -க்கான Twitter -ஐப் பயன்படுத்தினால்:

 1. மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.
 2. கணக்கு என்பதைத் தொட்டு, பாதுகாப்பு என்பதைத் தொடவும்.
 3. அனைத்துக் கோரிக்கைகளின் பட்டியலைப் பார்க்க, உள்நுழைவு கோரிக்கைகள் என்பதைத் தொடவும்.
 4. இப்போதும் முடியவில்லை எனில், உரைச் செய்தி மூலமாக உங்கள் ஃபோனுக்கு உள்நுழைவு குறியீட்டை அனுப்புமாறும் கோரலாம். twitter.com -இல் உங்கள் கணக்கில் நீங்கள் உள்நுழையும் போது SMS வழியாக உங்கள் ஃபோனுக்கு அனுப்பப்படும் குறியீட்டைக் கோரு என்னும் இணைப்பில் கிளிக் செய்யவும்.
   

Android -க்கான Twitter -ஐப் பயன்படுத்தினால்:

 1. மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை  அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களிடம் உள்ள எந்த ஐகானையும் தொடவும்.
 2. அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.
 3. கணக்கு என்பதைத் தொட்டு, பாதுகாப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 4. உள்நுழைவு கோரிக்கைகள் என்பதற்கான விருப்பத்தேர்வைத் தொடவும்.
 5. இப்போதும் முடியவில்லை எனில், உரைச் செய்தி மூலமாக உங்கள் ஃபோனுக்கு உள்நுழைவு குறியீட்டை அனுப்புமாறும் கோரலாம். twitter.com -இல் உங்கள் கணக்கில் நீங்கள் உள்நுழையும் போது SMS வழியாக உங்கள் ஃபோனுக்கு அனுப்பப்படும் குறியீட்டைக் கோரு என்னும் இணைப்பில் கிளிக் செய்யவும்.
   

எனது காப்புப்பிரதிக் குறியீடுகளைப் பயன்படுத்த முயலும் போது பிழை ஏற்படுகிறது

 • நீங்கள் செயலில் இல்லாத காப்புப்பிரதிக் குறியீட்டைப் பயன்படுத்தி உள்நுழைய முயற்சி செய்தால் அல்லது ஒழுங்கற்ற காப்புப்பிரதிக் குறியீட்டைப் பயன்படுத்த முயற்சி செய்தால் பிழைச் செய்தியைக் காண்பீர்கள். உள்நுழைவதற்கு, புதிய காப்புப்பிரதிக் குறியீட்டை உருவாக்க வேண்டும்.
 • twitter.com, mobile.twitter.com, iOS அல்லது Android -க்கான Twitter அல்லது வேறொரு Twitter கிளையன்டில் உள்நுழையும் போது மட்டுமே உங்கள் காப்புப்பிரதிக் குறியீடுகள் வேலை செய்யும். உங்கள் Twitter கணக்குடன் தொடர்புடைய மூன்றாம் தரப்புப் பயன்பாட்டை நீங்கள் அணுக முயன்றால், உங்கள் காப்புப்பிரதிக் குறியீட்டிற்குப் பதிலாக தற்காலிகக் கடவுச்சொல் நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
   

காப்புப்பிரதிக் குறியீடுகளைப் பயன்படுத்துதல்
 

உங்கள் iOS அல்லது Android Twitter பயன்பாட்டின் வழியாக இரு காரணி அங்கீகாரத்தை ஆன் செய்யும் போது, உங்களுக்காகப் காப்புப்பிரதிக் குறியீடு தானாக உருவாக்கப்படுகிறது. twitter.com -இல் காப்புப்பிரதிக் குறியீட்டை நீங்களாகவும் உருவாக்கலாம். இந்தக் காப்புப்பிரதிக் குறியீட்டை எழுதி, அச்சிட்டு அல்லது ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொள்ளவும். உங்கள் மொபைல் சாதனத்தைத் தொலைத்துவிட்டால் அல்லது உங்கள் ஃபோன் எண்ணை மாற்றிவிட்டால், உங்கள் கணக்கில் உள்நுழைவதற்கு இந்தக் காப்புப்பிரதிக் குறியீட்டைப் பயன்படுத்தலாம். காப்புப்பிரதிக் குறியீடுகள், தற்காலிகக் கடவுச்சொற்களைப் போன்றவை அல்ல.
 

Twitter பயன்பாட்டின் மூலமாக புதிய காப்புப்பிரதிக் குறியீட்டை உருவாக்குவதற்கு:

 1. அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதற்குச் செல்லவும் (iOS சாதனத்தில், சுயவிவரம் ஐகானைத் தொடவும், Android சாதனத்தில் வழிசெலுத்தல் மெனு ஐகானை  தொடவும் அல்லது சுயவிவரம் ஐகானைத் தொடவும்.)
 2. கணக்கு என்பதைத் தொட்டு, பாதுகாப்பு என்பதைத் தொடவும்.
 3. காப்புப்பிரதிக் குறியீடு என்பதைத் தொடவும்.
 4. காப்புப்பிரதி குறியீட்டைப் பயன்படுத்த, உங்களின் வழக்கமான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி Twitter கணக்கில் உள்நுழையவும்.  இரு காரணி அங்கீகாரக் கோரிக்கை அனுப்பப்பட்டது என்பதைக் காணும் போது, உங்கள் காப்புப்பிரதிக் குறியீட்டை உள்ளிடுவதற்கு இணைப்பில் கிளிக் செய்யவும். இணையதளத்தில் உள்நுழைவதற்கு நீங்கள் உருவாக்கிய காப்புப்பிரதிக் குறியீட்டை உள்ளிடவும்.

குறிப்பு: கொடுக்கப்பட்ட எந்த நேரத்திலும் ஐந்து காப்புப்பிரதிக் குறியீடுகள் வரை நீங்கள் உருவாக்கலாம். குறியீடுகளை நீங்கள் உருவாக்கிய வரிசையின் அடிப்படையில் அவற்றைப் பயன்படுத்தவும்; வரிசையாக இல்லாமல் ஒரு குறியீட்டைப் பயன்படுத்துவதால் அதன் முந்தைய குறியீடுகள் அனைத்தும் செல்லுபடியாகாமல் போகும்.


நான் Verizon வாடிக்கையாளர், என்னால் என் கணக்கினுள் உள்நுழைய முடியவில்லை.

நீங்கள் புதிய அல்லது ஏற்கனவேயுள்ள Verizon வாடிக்கையாளர் எனில், உரைச் செய்திகள் மூலமாக உங்களால் இரு காரணி அங்கீகார PIN-ஐப் பெற முடியாததால், கணக்கினுள் உள்நுழைய முடியாமல் போகலாம். உங்கள் Twitter கணக்கிலிருந்து வெளியேறி மீண்டும் உள்நுழைய முயற்சி செய்யவும். அதன் பின்னர் உங்களால் SMS மூலமாக சரிபார்த்தல் PIN-ஐப் பெற முடியும். இதன் மூலம் சிக்கல் சரிசெய்யப்படவில்லை எனில், உங்கள் சாதனத்திலிருந்து Twitter குறுகிய குறியீடு 40404 என்பதற்கு GO என உரைச் செய்தி அனுப்பவும். இது உங்கள் அறிவிப்பு அமைப்புகளுடன் பொருந்தும், Twitter -இலிருந்து SMS -ஐப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்கும்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க