நிதி மோசடிக் கொள்கை

மேலோட்டப் பார்வை


செப்டம்பர் 2019

Twitter -இல் பொது மக்களின் அனுபவத்தை ஏமாற்றும் அல்லது குறுக்கிடும் வகையில் தகவலைச் செயற்கையாக அதிகரிக்கவோ அல்லது சுருக்கவோ அல்லது அத்தகைய நடத்தையில் ஈடுபடும் வகையில் Twitter சேவைகளை நீங்கள் பயன்படுத்தக்கூடாது.

பயனர்கள் மனித தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நம்பகமான தகவலைக் கண்டறிக்கூடிய ஓர் இடமாக Twitter இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தக் காரணத்திற்காக, மோசடித் தந்திரங்கள், மோசடி அல்லது வேறுவகையில் மோசடியான அல்லது ஏமாற்றும் முறைகள் மூலம் பணம் அல்லது தனிப்பட்ட நிதித் தகவலை உங்களுக்கு அனுப்புவதற்காக மற்றவர்களை ஏமாற்ற நீங்கள் Twitter -இன் சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது.

 

இந்தக் கொள்கையை மீறுபவை எவை?


பணம் அல்லது தனியார் நிதித் தகவல்களைப் பெற Twitter -இல் மோசடித் தந்திரங்களைப் பயன்படுத்துவது இந்தக் கொள்கையின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடியான திட்டங்களில் ஈடுபடுமாறு கேட்கும் கணக்குகளை உருவாக்க, கீச்சுகளை இடுகையிடவோ அல்லது நேரடிச் செய்திகளை அனுப்பவோ உங்களுக்கு அனுமதி இல்லை. தடைசெய்யப்பட்ட, ஏமாற்றும் தந்திரங்களின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

 • உறவு/நம்பிக்கையை வளர்க்கும் மோசடிகள். போலியான கணக்கை இயக்குவதன் மூலம் அல்லது ஒரு பொது நபராக அல்லது ஓர் அமைப்பாகக் காட்டிக்கொள்வதன் மூலம் உங்களுக்குப் பணம் அல்லது தனிப்பட்ட நிதித் தகவல்களை அனுப்புவதற்கு மற்றவர்களை நீங்கள் ஏமாற்றக்கூடாது.
 • பணம் புரட்டும் திட்டங்கள். நீங்கள் “பணம் புரட்டுதல்” திட்டங்களில் ஈடுபடக்கூடாது (எடுத்துக்காட்டாக, வங்கிகளுக்கு இடையில் பரிமாற்றம் அல்லது ப்ரீபெய்ட் டெபிட் கார்டு வழியாக ஒரு சிறிய ஆரம்ப கட்டணத்திற்கு ஈடாக ஒருவருக்கு பெரிய தொகையை அனுப்புவதாக உத்தரவாதம் அளித்தல்).
 • மோசடியான தள்ளுபடிகள். திருடப்பட்ட கிரெடிட் கார்டுகள் மற்றும்/அல்லது திருடப்பட்ட நிதி நற்சான்றுகளைப் பயன்படுத்துவதற்காக சலுகைகளின் நிறைவேற்றம் செலுத்தப்பட்டுள்ள மற்றவர்களுக்கு தள்ளுபடிச் சலுகைகளை வழங்கும் திட்டங்களை நீங்கள் நடத்தக்கூடாது.
 • மோசடி ஸ்கேம்கள். மற்றவர்களின் தனிப்பட்ட நிதித் தகவல்களைப் பெறுவதற்கு நீங்கள் வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்களுடன் இணைந்திருப்பதை முன்வைக்கவோ சுட்டிக்காட்டவோ கூடாது. அத்தகைய தகவலைப் பெறுவதற்கான பிற வகை மோசடி வடிவங்களானவை எங்கள் இயங்குதளத்தில் கையாளுதல் மற்றும் ஸ்பேம் கொள்கையை மீறுவதாகவும் நினைவில் கொள்ளுங்கள்.

 

எது இந்தக் கொள்கையின் மீறல் அல்ல?


மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி, ஏமாற்று ஸ்கேம், மோசடி அல்லது பிற மோசடியான தந்திரங்களில் ஈடுபடும் கணக்குகளில் Twitter நடவடிக்கை எடுக்கிறது. Twitter -ஐப் பயன்படுத்தும் நபர்களுக்கு இடையிலான நிதி மோதல்களில் Twitter தலையிடாது, எடுத்துக்காட்டாக: 

 • Twitter -இல் பொருட்களை விற்பது தொடர்பான உரிமை கோரல்கள்.
 • தனிநபர்கள் அல்லது பிராண்டுகளிடமிருந்து முரண்பாடான பணம் திரும்பப் பெறுதல்கள்.
 • மோசமான தரமான பொருட்களைப் பெற்றதாகப் புகார்கள்.

 

இந்தக் கொள்கையின் மீறல்களை யார் புகாரளிக்கலாம்?


எங்கள் பிரத்யேக புகாரளித்தல் பாய்வு வழியாக எவரும் கணக்குகள் அல்லது கீச்சுகளைப் புகாரளிக்க முடியும். இந்த அறிக்கைகள் எங்கள் அமலாக்க அமைப்புகளைச் செம்மைப்படுத்தவும் புதிய மற்றும் வளர்ந்து வரும் நடப்புகள் மற்றும் நடத்தை அமைப்புகளை அடையாளம் காணவும் உதவுகின்றன, மேலும் உங்கள் புகாருக்கு நீங்கள் தனிப்பட்ட பதிலைப் பெறாமல் போகலாம்.

 

இந்தக் கொள்கையின் மீறல்களை நான் எப்படிப் புகாரளிப்பது?


பயன்பாட்டில்

பின்வரும் வகையில் இந்த உள்ளடக்கத்தைப் பற்றிய மதிப்பாய்வைப் பயன்பாட்டில் புகாரளிக்கலாம்:

 1.  ஐகானிலிருந்து கீச்சைப் புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 2. இது சந்தேகத்திற்கிடமானது அல்லது ஸ்பேம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. கீச்சு எவ்வாறு சந்தேகமானது அல்லது ஸ்பேமைப் பரப்புகிறது என்பதைச் சிறப்பாகக் கூறும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
 4. உங்கள் புகாரைச் சமர்ப்பிக்கவும்.
   

டெஸ்க்டாப்

பின்வரும் வகையில் இந்த உள்ளடக்கத்தைப் பற்றி டெஸ்க்டாப்பில் புகாரளிக்கலாம்:

 1.  ஐகானிலிருந்து கீச்சைப் புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 2. இது சந்தேகத்திற்கிடமானது அல்லது ஸ்பேம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. கீச்சு எவ்வாறு சந்தேகமானது அல்லது ஸ்பேமைப் பரப்புகிறது என்பதைச் சிறப்பாகக் கூறும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
 4. உங்கள் புகாரைச் சமர்ப்பிக்கவும்.

 

இந்தக் கொள்கையை மீறினால் என்னாகும்?


மீறலின் வகை மற்றும் தீவிரத்தன்மை மற்றும் முந்தைய மீறல்களின் வரலாறு ஆகியவற்றைப் பொறுத்து இந்தக் கொள்கையை மீறுவதால் ஏற்படும் பின்விளைவுகள் ஏற்படும். நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் பின்வருவன அடங்கக் கூடும்:
 

ஸ்பேம் எதிர்ப்புச் சவால்கள்

செயல்பாடானது சந்தேகத்திற்கிடமான அளவில் இருப்பதை நாங்கள் கண்டறியும்போது, கணக்குகள் பூட்டப்படக் கூடும் மற்றும் கூடுதல் தகவலை (எ.கா., ஃபோன் எண்) வழங்குமாறு கேட்கப்படலாம் அல்லது ஒரு reCAPTCHA -ஐத் தீர்க்கும்படி கேட்கப்படலாம். 
 

தடைசெய்யப்படும் URLகள்

பாதுகாப்பற்றது என்று நாங்கள் நம்பும் URLகளைப் பற்றி தடுப்புப்பட்டியல் அல்லது எச்சரிக்கைகளை வழங்குகிறோம். உங்கள் URL -ஐ நாங்கள் தவறாகப் பாதுகாப்பற்றது என அடையாளப்படுத்திவிட்டோம் என்றால் எவ்வாறு முறையீடு செய்வது என்பது உட்பட, பாதுகாப்பற்ற இணைப்புகள் பற்றி மேலும் படிக்கவும்.
 

கீச்சு நீக்கம் மற்றும் தற்காலிகமாகக் கணக்கைப் பூட்டுதல்கள்

மீறலானது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்லது முதல் குற்றமாக இருந்தால், ஒன்று அல்லது அதிக கீச்சுகளை நீக்குவது முதல் தற்காலிகமாகக் கணக்கை(களை)ப் பூட்டுவது வரை பல நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கலாம். ஸ்கேம், மோசடி அல்லது பிற மோசடியான தந்திரங்களில் ஈடுபடுவதற்கான எந்தவொரு முயற்சியும் நிரந்தர இடைநீக்கத்திற்கு வழிவகுக்கும்.
 

நிரந்தர இடைநீக்கம்

கடுமையான மீறல்களுக்கு, முதல் கண்டறிதலில் கணக்குகள் நிரந்தரமாக இடைநீக்கப்படும். கடுமையான மீறல்களுக்கான எடுத்துக்காட்டுகளில் அடங்குபவை:

 • மேலே விவரிக்கப்பட்ட கொள்கைகளை மீறுவதைப் பெரும்பான்மையான நடத்தையாகக் கொண்டிருக்கும் கணக்குகளை இயக்குதல்;
 • இடைநீக்கப்பட்ட கணக்கை பதிலீடு செய்ய அல்லது போலியாக அமைக்க கணக்குகளை உருவாக்குதல்.

 

கூடுதல் வளங்கள்


எங்களின் இயங்குதளத்தை ஏமாற்றுதல் மற்றும் ஸ்பேம் கொள்கை பற்றி மேலும் படிக்கவும்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க