எவ்வாறு மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிப்பது

புதுப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை உங்கள் கணக்குடன் இணைத்தல், மேம்பட்ட கணக்குப் பாதுகாப்பிற்கான முக்கிய படிநிலையாகும்.

குறிப்பு: உங்கள் Twitter கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரி ஒவ்வொரு முறை புதுப்பிக்கப்படும் போதும், இந்த மாற்றத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு, முன்னதாகப் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அறிவிப்பைை அனுப்புவோம். இந்த வகையான விழிப்பூட்டல்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கணக்குப் பாதுகாப்பு பற்றி படிக்கவும். கூடுதலாக, முன்னதாகப் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை தொடர்ந்து சேமித்து வைத்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த விவரத்தைப் பயன்படுத்துவோம். உங்கள் Twitter தரவு என்பதைப் பதிவிறக்குவதன் மூலமாக, உங்கள் கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிகளின் முழுமையான வரலாற்றை நீங்கள் அணுகலாம்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்கவும்
படி 1

 வழிசெலுத்தல் மெனுவை தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.

படி 2

கணக்கு என்பதைத் தொடவும்.

படி 3

மின்னஞ்சல் என்பதைத் தொடவும்.

படி 4

மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு அடுத்து என்பதைத் தொடவும். 
குறிப்பு: மின்னஞ்சல் முகவரியை ஒரே நேரத்தில் ஒரு Twitter கணக்குடன் மட்டுமே இணைக்க முடியும்.

படி 1

மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை  அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானை பார்ப்பீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் எந்த ஐகானையும் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 2

கணக்கு என்பதைத் தொடவும்.

படி 3

மின்னஞ்சல் என்பதைத் தொடவும்.

படி 4

மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு அடுத்து என்பதைத் தொடவும்.
குறிப்பு: மின்னஞ்சல் முகவரியை ஒரே நேரத்தில் ஒரு Twitter கணக்குடன் மட்டுமே இணைக்க முடியும்.

படி 1

twitter.com -இல் உள்நுழைந்து, மேலும்  ஐகானைக் கிளிக் செய்து, பின்னர் அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் கணக்கு அமைப்புகளுக்குச் செல்லவும்.

படி 2

உங்கள் கணக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3

கணக்குத் தகவல் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

படி 4

மின்னஞ்சல் என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 5

மின்னஞ்சல் புலத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். 
குறிப்பு: மின்னஞ்சல் முகவரியை ஒரே நேரத்தில் ஒரு Twitter கணக்குடன் மட்டுமே இணைக்க முடியும்.

படி 6

பக்கத்தின் அடிப்புறத்தில் உள்ள சேமி எனும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.


குறிப்பு: Twitter-இல் உங்களின் பொதுச் சுயவிவரத்தில் மின்னஞ்சல் முகவரி காட்டப்படாது. மின்னஞ்சல் முகவரி மூலம் மற்றவர்கள் என்னைக் கண்டறிவதை அனுமதிக்கவும் என்ற அமைப்பை நீங்கள் முடக்கவில்லை எனில், உங்கள் மின்னஞ்சல் முகவரியை ஏற்கனவே கொண்டுள்ள நபர்களால் உங்கள் Twitter கணக்கைக் கண்டறிய முடியும். மின்னஞ்சல் மற்றும் ஃபோன் எண்ணின் கண்டறிதல் தொடர்பான தனியுரிமை அமைப்புகள் பற்றி மேலும் அறிக.
 

உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தவும்

உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை நீங்கள் புதுப்பிக்கும் போது, மாற்றத்தை உறுதிப்படுத்தக் கோரி உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவோம். நாங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் உள்ள இப்போது உறுதிசெய் என்னும் பொத்தானைக் கிளிக் செய்வதனால், மின்னஞ்சல் முகவரி உங்களுக்குச் சொந்தமானது என்பதை நாங்கள் அறிந்துகொள்வோம்.

  1. நீங்கள் இப்போது புதுப்பித்த முகவரியின் மின்னஞ்சல் இன்பாக்ஸினுள் உள்நுழையவும்.
  2. உங்கள் கணக்கை உறுதிசெய்வதற்காக Twitter-இலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சலைத் திறக்கவும்.
  3. அந்த மின்னஞ்சலில் உள்ள இப்போது உறுதிசெய் என்னும் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  4. இதன் மூலம் உங்கள் Twitter கணக்கிற்குச் செல்வீர்கள், நீங்கள் உள்நுழைந்திருக்கவில்லை எனில், உள்நுழையுமாறு கேட்கப்படுவீர்கள்.


குறிப்பு: மேலுள்ள உறுதிப்படுத்தல் செயல்முறையை நிறைவு செய்யவில்லை எனில், மின்னஞ்சல் முகவரி உறுதிசெய்யப்படாத நிலையிலேயே இருக்கும். இதன் அர்த்தம், உங்கள் Twitter காப்பகத்திற்கான கோரிக்கை போன்ற சில கணக்கு அம்சங்கள் அல்லது உள்நுழைதல் சரிபார்ப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களை உங்களால் அணுக முடியாது என்பதாகும்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க