புதிய பயனர் FAQ

ட்விட் செய்தல்

Twitter என்றால் என்ன?

Twitter என்பது நண்பர்கள், குடும்பம் மற்றும் சகப்பணியாளர்களுடன் தொடர்புகொள்வதற்கும், செய்திகளை விரைவாக, அடிக்கடி பரிமாற்றிக் கொள்வதன் மூலம் இணைப்பிலேயே வைத்திருக்கச் செய்யும் ஒரு சேவை ஆகும். புகைப்படங்கள், வீடியோக்கள், இணைப்புகள், உரை ஆகியவற்றைக் கொண்டிருக்கக் கூடிய கீச்சுகளை நபர்கள் இடுகையிடுகிறார்கள். இந்தச் செய்திகள் உங்கள் சுயவிவரத்தில் இடுகையிடப்படுகின்றன, உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு அனுப்பப்படுகின்றன, அவற்றை Twitter தேடலில் தேடிக் கண்டறியலாம். Twitter -ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்று மேலும் அறியவும்.

இதைப் பயன்படுத்துவதற்கு, சிறப்பான ஏதாவது ஒன்று எனக்குத் தேவையா?

Twitter -ஐப் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஓர் இணைய இணைப்பு அல்லது மொபைல் ஃபோன் தான். எங்களுடன் இங்கு இணைக! நீங்கள் இணைந்ததும், உங்களுக்கு யாருடைய கீச்சுகளில் ஆர்வமுள்ளதோ அவர்களின் கணக்குகளைக் கண்டுபிடிக்கவும் பின்தொடரவும் தொடங்கலாம். நீங்கள் பதிவுசெய்ததும் நாங்கள் சிறந்த கணக்குகளைப் பரிந்துரைப்போம்.

கீச்சு என்பது என்ன?

கீச்சு என்பது, புகைப்படங்கள், வீடியோக்கள், இணைப்புகள், உரை ஆகியவற்றைக் கொண்டிருக்கக் கூடிய Twitter -இல் இடுகையிடப்படும் எந்தவொரு செய்தியும் ஆகும். உங்கள் சுயவிவரத்தில் புதுப்பிப்பை இடுகையிட, ட்விட் செய் பொத்தானைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும். கூடுதல் தகவலுக்கு, எங்கள் கீச்சை இடுகையிடுதல் என்ற கட்டுரையைப் படிக்கவும்.

புதுப்பிப்புகளை Twitter -க்கு எவ்வாறு அனுப்பலாம்?

கீச்சை எவ்வாறு இடுகையிடுவது என்பது பற்றிய எங்கள் கட்டுரையைப் படிக்கவும். twitter.com, மொபைல் சாதனம் அல்லது பயன்பாட்டிலிருந்து ட்விட் செய்யலாம். 

மறுகீச்சு என்பது என்ன?

ஒரு மறுகீச்சு என்பது, உங்கள் பின்தொடர்பவர்களுக்கு நீங்கள் பகிரும் ஒரு கீச்சு ஆகும்.

Twitter -இல் எவ்வாறு படத்தை இடுகையிடுவது?

Twitter -இல் படங்களைப் பதிவேற்றுவதும் பகிர்வதும் எளிது! Twitter -இல் எவ்வாறு படத்தை இடுகையிடுவது என்பது பற்றிய படிப்படியான அறிவுறுத்தல்களையும் FAQகளையும் காணவும்.

கீச்சை இடுகையிட்டதும் அதைத் திருத்தலாமா?

இல்லை, நீங்கள் கீச்சை இடுகையிட்ட பிறகு அதைத் திருத்த முடியாது, ஆனால் உங்கள் கீச்சை நீக்க முடியும்.

உங்கள் பார்வையை எவ்வாறு தனிப்பயனாக்குவது

twitter.com வழியாக உங்கள் எழுத்துரு அளவு, உரை நிறம் மற்றும் பின்னணி பயன்முறையை நிர்வகிக்க, மேலும்  என்பதைக் கிளிக் செய்து, மெனுவிலிருந்து காட்சி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்களுக்கு விருப்பமான எழுத்துரு அளவு மற்றும் நிறத்தைத் தேர்வு செய்யவும். இயல்புநிலை வெள்ளை பின்னணி அல்லது இருட்டுப் பயன்முறை விருப்பங்களான டிம் மற்றும் லைட்ஸ் அவுட் ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்ய ரேடியோ பொத்தான்களைப் பயன்படுத்தவும். இருட்டுப் பயன்முறை விருப்பத்தேர்வுகள் iOS -க்கான Twitter மற்றும் Android -க்கான Twitter -க்கும் கிடைக்கின்றன.

எனது புதுப்பிப்புகளை யார் படிப்பார்கள்?

உங்கள் கீச்சுகளை உங்களைப் பின்தொடர்பவர்கள் படிப்பார்கள். உங்களது கீச்சுகள் பொதுவானவை என்றால், உங்கள் கீச்சிலுள்ள ஒரு குறிச்சொல்லுக்கான தேடலை இயக்கும் எவரும் அந்தச் செய்தியைப் படிக்கலாம். இயல்புநிலையாக உங்கள் கீச்சுகள் பொதுவானதாக இருக்கும்; உங்களுக்குத் தெரியாதவர்கள் உங்கள் புதுப்பிப்புகளைப் படிப்பது உங்களுக்குப் பிடிக்காவிட்டால், பின்தொடர்பவர்களை அனுமதிப்பதற்கும், உங்கள் கீச்சுகளைத் தேடல் முடிவுகளிலிருந்து விலக்குவதற்கும் உங்கள் கீச்சுகளைப் பாதுகாக்கவும் .

எனது கீச்சுகள் அனைத்தையும் ஏன் என்னால் பார்க்க முடியவில்லை? அவற்றை இழந்துவிட்டேனா?

உங்கள் கீச்சுகள் அனைத்தையும் சேமிக்கிறோம். உங்கள் சுயவிவரக் காலவரிசையில் 3,200 வரையான உங்கள் மிகச் சமீபத்திய கீச்சுகளைப் பார்க்க, உங்கள் சுயவிவரத்திற்கு வழிசெலுத்துங்கள். மேலும் பார்க்க, உங்கள் Twitter காப்பகத்தைப் பதிவிறக்கலாம் மற்றும் உங்கள் முதல் கீச்சில் தொடங்கி, உங்கள் Twitter தகவலலின் ஸ்னாப்ஷாட்டை உலாவலாம்.

எனது Twitter புதுப்பிப்புகளை எனது வலைப்பதிவில் இடுகையிடலாமா?

ஆம்! உங்கள் வலைப்பதிவு அல்லது இணையதளத்தில் - Javascript அல்லது HTML -ஐ ஏற்கின்ற எந்த இடத்திலும் - ஒரு Twitter விட்ஜட்டை வையுங்கள்.

 

நீங்கள் பின்தொடர்வோர்

Twitter -இல் ஒருவரைப் பின்தொடர்வது என்பதன் பொருள் என்ன?

யாரேனும் ஒருவரைப் பின்தொடர்வது என்பது, நீங்கள் அவரின் Twitter புதுப்பிப்புகளுக்குக் குழுசேரத் தேர்வு செய்துள்ளீர்கள் என்று பொருள்படும். நீங்கள் ஒருவரைப் பின்தொடரும்போது, அவர் ஒரு புதிய செய்தியைப் பதிவுசெய்யும் ஒவ்வொரு முறையும், அது உங்கள் Twitter முகப்புக் காலவரிசையில் தோன்றும்.

பின்தொடர்வதற்கான நபர்களை எவ்வாறு கண்டறிவது?

நீங்கள் கணக்கை உருவாக்கும்போது, பெயர் அல்லது பயனர்பெயர் வாரியாக பயனர்களைத் தேடலாம், பிற நெட்வொர்க்குகளில் இருந்து நண்பர்களை இம்போர்ட் செய்யலாம் அல்லது மின்னஞ்சல் வழியாக நண்பர்களை அழைக்கலாம்

நான் யாரைப் பின்தொடர்கிறேன் என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது?

நீங்கள் யாரேனும் ஒருவரின் சுயவிவரத்தில் பின்தொடர் பொத்தானைக் கிளிக் செய்ததும் அல்லது தொட்டதும், அவரைப் பின்தொடர்வதாக அர்த்தம். உங்கள் சுயவிவரப் பக்கத்தில் அல்லது உங்கள் முகப்புப் பக்கத்தின் பக்கவாட்டுப் பட்டியில் உள்ள நீங்கள் பின்தொடர்வோர் இணைப்பைக் கிளிக் செய்து, நீங்கள் பின்தொடர்வோரின் பட்டியலைப் பார்க்கலாம்.

என்னை யார் பின்தொடர்கிறார் என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது?

புதிதாக ஒருவர் உங்களைப் பின்தொடரும்போது, Twitter உங்களுக்கு ஓர் அறிவிப்பை அனுப்புகிறது. உங்களுக்கு ஒரு புதிய பின்தொடர்பவர் கிடைக்கும்போது உங்களுக்குத் தெரிவிக்க, உங்கள் மின்னஞ்சல் விருப்பத்தேர்வுகள் மற்றும் மொபைல் புஷ் அறிவிப்புகளை அமைக்கவும். உங்கள் சுயவிவரத்திலுள்ள பின்தொடர்பவர்கள் இணைப்பும் கூட, உங்களை யார் பின்தொடர்கிறார் என்பதை உங்களுக்குக் கூறும்.

பின்தொடர்வதற்கான வரம்புகள் எவை?

உறுதித்தன்மைக்கும் முறைகேட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் Twitter -இல் பின்தொடர் மற்றும் புதுப்பிப்பு வரம்புகள் உள்ளன. பின்தொடரவதற்கான் வரம்புகள் பற்றி மேலும் அறியவும்.

 

பதில்கள்

பதில்கள் என்பவை யாவை?

ஒரு பதில் என்பது, மற்றொரு நபரின் கீச்சுக்கான ஒரு பதிலளிப்பு ஆகும். மற்றொருவரின் கீச்சுக்குப் பதிலளிக்க, அதில் உள்ள பதிலளி ஐகானை கிளிக் செய்யவும் அல்லது தொடவும். உங்களது கீச்சுகள் பாதுகாக்கப்பட்டிருந்தால், உங்களைப் பின்தொடராதவர்கள் உங்கள் பதில்கள் அல்லது குறிப்பீடுகளைப் பார்க்க மாட்டார்கள் என்பதைக் கவனத்தில் கொள்க. 

பதிலுக்கும் நேரடிச்செய்திக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்ன?

ஒரு பதில் என்பது, பின்தொடர்ந்தாலும் இல்லாவிட்டாலும் அனுப்பப்படும் ஒரு பொதுச் செய்தி ஆகும். அதை எவரும் பார்க்கலாம் (உங்கள் கீச்சுகள் பொதுவானவை என்றால்). ஒரு நேரடிச்செய்தி என்பது, ஒரு தனிப்பட்ட செய்தியாகும், இதை அனுப்புபவரும் அதற்கான பெறுநர்களும் மட்டுமே பார்க்க முடியும்.

 

நேரடிச்செய்திகள்

நேரடிச்செய்திகள் என்பவை யாவை?

நேரடிச் செய்திகள் என்பவை, ஒரு Twitter கணக்கிலிருந்து பிற Twitter கணக்கு(களுக்கு) அனுப்பப்படும் தனிப்பட்ட செய்திகள், மேலும் அவை வேறு எவரும் படிப்பதற்காகப் பொதுவில் தோன்றாது. உங்களைப் பின்தொடரும் எவருடனும் நீங்கள் உரையாடலைத் தொடங்கலாம்.

 

Twitter கொள்கைகள் மற்றும் புகாரளித்தல்

கணக்குகள் ஏன் இடைநீக்கப்படுகின்றன?

கணக்குகள், சேவை விதிமுறைகள் மீறல்கள் அல்லது ஸ்பேம் விசாரணைக்காக இடைநீக்கப்படுகின்றன. கணக்கு இடைநீக்கம் பற்றி பற்றி மேலும் படிக்கவும்.

ஸ்பேமை எவ்வாறு புகாரளிப்பது?

Twitter -இல் ஸ்பேமை எவ்வாறு புகாரளிப்பது என்பது பற்றிய எங்கள் கட்டுரையைப் படிக்கவும். நீங்கள் காணும் ஸ்பேமர்கள் எவரையும் எப்போதும் தடைசெய்யுமாறு உங்களை ஊக்கப்படுத்துகிறோம். 

Twitter -இன் சேவை விதிமுறைகளைப் பற்றிய மேலும் தகவலை எங்கே காணலாம்?

மேலும் தகவல்களுக்கு, Twitter சேவை விதிமுறைகள் மற்றும் Twitter விதிகள் ஆகியவற்றைப் படிக்கவும். 

பதிப்புரிமை, ஆள் மாறாட்டம், வணிகமுத்திரை அல்லது பிற சேவை விதிமுறைகள் குறித்த சிக்கல்களைப் பற்றிய புகாரை எவ்வாறு சமர்ப்பிப்பது?

விதிமீறலில் எவையெல்லாம் உள்ளடங்கியுள்ளது என்பதைப் பற்றியும், அது தொடர்பான சிக்கலை எவ்வாறு சரிசெய்ய வேண்டும் என்பதைப் பற்றி அறிய, எங்கள் சேவை விதிமுறைகள் பிரிவை மதிப்பாய்வு செய்யவும்.