X -இல் எவ்வாறு வீடியோக்களைப் பகிர்வது மற்றும் பார்ப்பது

X -இல் வீடியோக்களைப் பகிர்தல்
X -இல் வீடியோக்களைப் பகிர்வதற்கு நான்கு வழிகள் உள்ளன:
படி 1

ரெக்கார்டு: X பயன்பாட்டிலிருந்து வீடியோக்களை ரெக்கார்டு செய்யலாம், திருத்தலாம், பகிரலாம் (iPhone -க்கான X அல்லது Android OS 4.1 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றிற்கான X).

படி 2

இறக்குமதி: நீங்கள் iPhone அல்லது iPad -க்கான X பயன்பாட்டைப் பயன்படுத்தினால், உங்கள் சாதனத்திலிருந்து வீடியோக்களை இறக்குமதி செய்யலாம்.

படி 3

பதிவேற்றவும்: வீடியோக்களை x.com -க்குப் பதிவேற்றலாம்.

படி 4

நேரலைக்குச் செல்க: உங்கள் X பயன்பாட்டிலிருந்தே நேரலை வீடியோவை எப்படி உருவாக்குவது என்பதை அறிந்துகொள்ளவும்.

ஓர் இடுகைக்கான வீடியோவைப் பதிவுசெய்ய
படி 1

தருணத்தில் ஒரு வீடியோவை விரைவாகப் பகிர, மேல்பகுதியிலுள்ள மெனுவிலுள்ள கேமரா ஐகானை தொடவும் அல்லது காலவரிசையிலிருந்து இடதுபுறம் நோக்கித் தேய்க்கவும்.

வீடியோவைப் ரெக்கார்டு செய்ய, படம்பிடி ஐகானைத் தொட்டுப் பிடிக்கவும்.

இடுகையின் நகல் மற்றும் ஓர் அமைவிடத்தைச் சேர்க்கும் விருப்பத்தேர்வு உள்ளது.

நீங்கள் இடுகையிடத் தயாராக இருக்கும்போது இடுகையிடு என்பதைத் தொடவும், அல்லது அதை நீங்கள் கடைசியாகப் இடுகையிட்ட இடுகையுடன் இணைப்பதற்கு, தொடர்ச்சியில் சேர் என்பதைத் தொட்டு, அதைப் பகிர்வதற்கு சேர் என்பதை அழுத்தவும்.

படி 2

இடுகையில் வீடியோவைச் சேர்த்தல்.
உங்கள் கருத்தைச் சேர்ப்பதற்காக ஒரு வீடியோவை எடுக்க அல்லது பதிவேற்ற, ட்விட் செய் ஐகானை  தொடலாம்.

இடுகையை உருவாக்கும் பெட்டிக்குக் கீழே, புதிய வீடியோவைச் சேர்ப்பதற்கான விரைவுத் தேர்ந்தெடுப்பு விருப்பத்தேர்வுகளைப் பார்ப்பீர்கள். உங்கள் கேலரியிலுள்ள உங்களுடைய மிகச் சமீபத்திய வீடியோக்கள் விரைவு அணுகலுக்காக சிறுபட முன்னோட்டங்களாகத் தோன்றும்.

வீடியோ எடுக்க, கேமரா ஐகானை  தொடவும்.

அடிப்பகுதியிலுள்ள பட்டியின் ஏதேனும் ஒரு பகுதியை இழுத்து, உங்கள் வீடியோவின் நீளத்தைச் சுருக்கலாம். அதிகபட்ச வீடியோ நீளம் 2 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகள்.

உங்கள் திருத்தங்களை முடிக்க, ட்ரிம் என்பதைத் தொடவும். வீடியோவை இடுகையிடுவதற்கு முன்பாக அதை முன்னோட்டம் பார்ப்பதற்கு இயக்கு பொத்தானைத் தொடலாம், அதைப் பகிர்வதற்கு முன்பாக அதில் கூடுதல் திருத்தங்களைச் செய்யலாம்.

இடுகையிட, இடுகையிடு என்பதைத் தொடவும். 

 

குறிப்பு: இடுகையிடுவதற்கு முன்பு வீடியோவை அகற்ற, வீடியோ சிறுபடத்தில் உள்ள X -ஐத் தொடவும்.

படி 1

தருணத்தில் ஒரு வீடியோவை விரைவாகப் பகிர, மேல்பகுதியிலுள்ள மெனுவிலுள்ள கேமரா ஐகானை தொடவும் அல்லது காலவரிசையிலிருந்து இடதுபுறம் நோக்கித் தேய்க்கவும்.

வீடியோவைப் ரெக்கார்டு செய்ய, படம்பிடி ஐகானைத் தொட்டுப் பிடிக்கவும்.

இடுகை மற்றும் ஒரு அமைவிடத்தைச் சேர்க்கும் விருப்பத்தேர்வு உள்ளது.

நீங்கள் இடுகையிடத் தயாராக இருக்கும்போது இடுகையிடு என்பதைத் தொடவும், அல்லது அதை நீங்கள் கடைசியாகப் இடுகையிட்ட இடுகையுடன் இணைப்பதற்கு, தொடர்ச்சியில் சேர் என்பதைத் தொட்டு, அதைப் பகிர்வதற்கு சேர் என்பதை அழுத்தவும்.

படி 2

இடுகையில் வீடியோவைச் சேர்த்தல்.
உங்கள் கருத்தைச் சேர்ப்பதற்காக ஒரு வீடியோவை எடுக்க அல்லது பதிவேற்ற, இடுகையிடு ஐகானை தொடலாம்.

இடுகையை உருவாக்கும் பெட்டிக்குக் கீழே, புதிய வீடியோவைச் சேர்ப்பதற்கான விரைவுத் தேர்ந்தெடுப்பு விருப்பத்தேர்வுகளைப் பார்ப்பீர்கள். உங்கள் கேலரியிலுள்ள உங்களுடைய மிகச் சமீபத்திய வீடியோக்கள் விரைவு அணுகலுக்காக சிறுபட முன்னோட்டங்களாகத் தோன்றும்.

வீடியோ எடுக்க, கேமரா ஐகானை  தொடவும்.

அடிப்பகுதியிலுள்ள பட்டியின் ஏதேனும் ஒரு பகுதியை இழுத்து, உங்கள் வீடியோவின் நீளத்தைச் சுருக்கலாம். அதிகபட்ச வீடியோ நீளம் 2 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகள்.

உங்கள் திருத்தங்களை முடிக்க, ட்ரிம் என்பதைத் தொடவும். வீடியோவை இடுகையிடுவதற்கு முன்பாக அதை முன்னோட்டம் பார்ப்பதற்கு இயக்கு பொத்தானைத் தொடலாம், அதைப் பகிர்வதற்கு முன்பாக அதில் கூடுதல் திருத்தங்களைச் செய்யலாம்.

முடிக்க, இடுகையிடு என்பதைத் தொடவும். 

 

குறிப்பு: இடுகையிடுவதற்கு முன்பு வீடியோவை அகற்ற, வீடியோ சிறுபடத்தில் உள்ள X -ஐத் தொடவும்.

குறிப்பு: உங்கள் அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதிலுள்ள அணுகல்தன்மை பிரிவிலிருந்தும் உங்கள் தன்னியக்க அமைப்புகளைச் சரிசெய்யலாம்.


இணையம் வழியாக ஒரு வீடியோவைப் பதிவேற்ற மற்றும் இடுகையிட
 

  1. தொகுப்பான் பெட்டியைப் பயன்படுத்தவும் அல்லது இடுகையிடு பொத்தானை அழுத்தவும். 
  2. கேலரி என்னும் பொத்தானை  கிளிக் செய்யவும்.
  3. உங்கள் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு வீடியோ கோப்பைத் தேர்வுசெய்து, திற என்பதைக் கிளிக் செய்யவும். வீடியோவின் வடிவமைப்பு ஆதரிக்கப்படாவிட்டால் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். postVideo -க்கான கோப்பின் அதிகபட்ச அளவு 512MB ஆகும், 2 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகளுக்கு அதிகமான வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து, இடுகையில் அதனை இணைப்பதற்கு முன்னர் ட்ரிம் செய்யலாம்.
  4. உங்கள் செய்தியை எழுதி முடித்த பின்னர் உங்கள் இடுகையையும் வீடியோவையும் பகிர்வதற்கு இடுகையிடு என்பதைக் கிளிக் செய்யவும். 
 

வீடியோ காலமுத்திரைகள்

 

காலமுத்திரை என்பது உங்கள் வீடியோவில் உள்ள குறிப்பிட்ட தருணத்தை இணைக்கும் ஒரு வழியாகும். உங்கள் வீடியோவைப் பற்றிய கூடுதல் சூழலை வழங்குவதற்கும், உங்கள் உள்ளடக்கத்தை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்ற காலமுத்திரைகள் சிறந்த வழியாகும்.

நான் எப்படி காலமுத்திரைகளைப் பயன்படுத்துவது?

  • நீங்கள் ஒரு வீடியோவை இடுகையிடும்போது, உங்கள் வீடியோவைப் பற்றிய கூடுதல் சூழலை வழங்க காலமுத்திரைகளைச் சேர்க்கலாம், பார்வையாளர்கள் உங்கள் வீடியோவை வழிசெலுத்த உதவலாம் மற்றும் வீடியோவின் வெவ்வேறு பகுதிகளை எளிதாக மீண்டும் பார்க்க அனுமதிக்கலாம்.
  • வீடியோவுடன் இடுகையில் எங்கு வேண்டுமானாலும் காலமுத்திரைகளைச் சேர்க்கலாம்.
  • வீடியோவைக் கொண்ட இடுகையை உருவாக்கும்போது, பின்வரும் வடிவங்களில் ஏதேனும் ஒரு வீடியோவில் குறிப்பிட்ட நேரத்தைக் குறிப்பிட்டால், நீங்கள் இடுகையிட்டவுடன் காலமுத்திரை தானாகவே iOS -இல் கிளிக் செய்யக்கூடியதாக மாறும்:
    • x:xx
    • xx:xx
    • x:xx:xx
    • xx:xx:xx    
  • ஒரு இடுகையில் உள்ள காலமுத்திரையைத் தட்டினால், வீடியோ பிளேயரைத் திறந்து வீடியோவில் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கத் தொடங்கும்.
  • நினைவில் கொள்ள வேண்டிய ஒரு சில விஷயங்கள்:
    • 1 வீடியோ இணைக்கப்பட்ட இடுகைகளில் மட்டுமே கிளிக் செய்யக்கூடிய காலமுத்திரைகள் தெரியும். வீடியோ இல்லாத இடுகைகள், பல வீடியோக்களைக் கொண்ட இடுகைகள் அல்லது வீடியோ மற்றும் படம் இணைக்கப்பட்ட இடுகை போன்றவற்றில் அவற்றைக் கிளிக் செய்ய முடியாது. 
    • நீங்கள் iOS, Android மற்றும் இணையம் ஆகியவற்றிலிருந்து காலமுத்திரைகளை இடுகையிடலாம் எனினும் இப்போது காலமுத்திரைகளை iOS -இல் மட்டுமே கிளிக் செய்ய முடியும். Android மற்றும் இணைய ஆதரவு விரைவில் வரவுள்ளது.
    • ஓர் இடுகையில் நீங்கள் சேர்க்கக்கூடிய அதிகபட்ச காலமுத்திரைகள் 50 ஆகும்.


X -இல் வீடியோக்களைப் பார்த்தல்
 

காலவரிசைகளில், தருணங்களில், கண்டறிக தாவலில் மற்றும் X முழுவதிலும், சொந்த வீடியோக்களும் GIFகளும் தானாக இயக்கப்படும்.
 

வீடியோக்கள் தானாக இயக்கப்படுவதை எப்படித் தடுப்பது?

வீடியோ தன்னியக்க அமைப்பை மாற்றுவதன் மூலம் உங்கள் காலவரிசை, தருணங்கள், கண்டறிக தாவல் ஆகியவற்றில் வீடியோக்கள் தானாக இயக்கப்படுவதைத் தடுக்கலாம். வீடியோ தன்னியக்கத்திற்கான உங்கள் அமைப்புகளை X.com மற்றும் உங்கள் X பயன்பாட்டிற்குத் தனித்தனியாக சரிசெய்யலாம் (எடுத்துக்காட்டாக, உங்கள் iOS சாதனத்தில் வீடியோக்களைத் தானாக இயங்கும் வகையிலும் இணையத்தில் அவை தானாக இயங்காதவாறும் அமைக்கலாம்).
 

உங்கள் iOS -க்கான X பயன்பாட்டில் தன்னியக்கத்தைச் சரிசெய்ய:

  1. உங்கள் அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதற்குச் செல்லவும்.
  2. அணுகல்தன்மை, காட்சி மற்றும் மொழிகள் பிரிவின் கீழ், தரவு உபயோகம் என்பதைத் தொடவும்.
  3. வீடியோ தன்னியக்கம் என்பதைத் தொடவும். 
  4. பின்வரும் விருப்பத்தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்: 

    செல்லுலாரில் அல்லது Wi-Fi -இல், Wi-Fi -இல் மட்டும் மற்றும் ஒருபோதும் வேண்டாம்.
     

உங்கள் Android -க்கான X பயன்பாட்டில் தன்னியக்கத்தைச் சரிசெய்ய:

  1. உங்கள் அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதற்குச் செல்லவும். 
  2. அணுகல்தன்மை, காட்சி மற்றும் மொழிகள் என்பதன் கீழ், தரவு உபயோகம் என்பதைத் தொடவும்.
  3. வீடியோ தன்னியக்கம் என்பதைத் தொடவும். 
  4. பின்வரும் விருப்பங்களிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்: மொபைல் டேட்டா & Wi-Fi, Wi-Fi மட்டும், மற்றும் ஒருபோதும் வேண்டாம்.
     

X.com -இல் தன்னியக்கத்தைச் சரிசெய்ய:

  1. பிரதான மெனுவில் இருந்து, மேலும் என்பதைக் கிளிக் செய்யவும், பின்னர் அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. அணுகல்தன்மை, காட்சி மற்றும் மொழிகள் என்பதன் கீழ், தரவு உபயோகம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தன்னியக்கம் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் செல்லுலாரில் அல்லது Wi-Fi -இல், அல்லது ஒருபோதும் வேண்டாம் என்பவற்றிற்கு இடையில் தேர்வு செய்யவும்.
 

குளோஸ்டு கேப்ஷன்கள் மற்றும் சப்டைட்டில்கள்

வீடியோவில் குளோஸ்டு கேப்ஷன்களை எவ்வாறு காண்பது:

உங்கள் சாதனத்தின் அணுகல்தன்மை அமைப்புகளில் கேப்ஷன்கள் விருப்பத்தை இயக்கவும். iOS-இல், இது குளோஸ்டு கேப்ஷன்கள் என லேபிளிடப்பட்டிருக்கும். Android-இல் இது கேப்ஷன்கள் என லேபிளிடப்பட்டிருக்கும். 
 

சப்டைட்டிலை எவ்வாறு பார்ப்பது:
உங்கள் சாதனத்தின் ஒலியை ஆஃப் செய்யவும். இணையத்தில் சப்டைட்டில்களைக் காண, வீடியோவில் “CC” ஸ்லைடரைத் தொடவும்.

குறிப்பு: குறிப்பு: அனைத்து வீடியோக்களிலும் குளோஸ்டு கேப்ஷன்கள் அல்லது சப்டைட்டில்கள் இருக்காது. iOS மற்றும் Android-இல், உங்கள் காலவரிசையில் வீடியோக்களைப் பார்க்கும்போது கேப்ஷன்கள் தானாகவே காண்பிக்கப்படும். கேப்ஷன்களை முழுத் திரையில் காண, கணினியில் கேப்ஷன்களை இயக்கவும்.

 Microsoft Azure Cognitive சேவைகளைப் பயன்படுத்தி பேச்சுக்கு-உரை என்பது உருவாக்கப்படுகிறது.


X -இல் நேரலை வீடியோக்களைப் பார்த்தல்
 

தருணங்கள், கண்டறிக தாவல், நடப்புகள் ஆகியவற்றிலிருந்து அல்லது நேரலையில் உள்ள ஒரு கணக்கிலிருந்து அனுப்பப்படும் இடுகைகளிலுள்ள நேரலை வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம்.

Amazon Fire TV மற்றும் Apple TV -இலும் X இலிருந்து நேரலை நிகழ்ச்சியை நீங்கள் பார்க்கலாம்.  Xbox மற்றும் Android TV பயனர்கள் தங்கள் இணைய உலாவியைத் தொடங்கி, X.com -க்குச் சென்று X -ஐப் பயன்படுத்தி மகிழலாம்.

நேரலை வீடியோ அல்லது ரீப்ளேவைப் பார்க்கும்போது, அந்த அலைபரப்பை இடுகை, நேரடிச்செய்தி வழியாக அல்லது இணைப்பை நகலெடுத்துப் பகிரலாம். முழு அலைபரப்பையும் பகிரலாம் அல்லது உங்களுக்கு விருப்பமான குறிப்பிட்ட நேரத்திலிருந்து தொடங்கும் அலைபரப்பைப் பகிரலாம்.
 

நேரலை அலைபரப்பை அல்லது ரீப்ளேவை எப்படிப் பகிர்வது:

  1. நேரலை வீடியோ அல்லது ரீப்ளே முழுத்திரை பயன்முறையிலிருந்து, பகிர் ஐகானை  கிளிக் செய்யவும் அல்லது தொடவும்
    1. இடுகையிட, நேரடிச்செய்தியை அனுப்ப அல்லது முழு நேரலை வீடியோவின் இணைப்பை நகலெடுக்கவும் அல்லது தொடக்கத்தில் இருந்து ரீப்ளே செய்ய நேரலையைப் பகிர் (நேரலையில் இருக்கும்போது) அல்லது ஆரம்பத்தில் இருந்து பகிரவும் (ரீப்ளே பயன்முறையில் இருக்கும்போது) என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
    2. ஒரு முழு நேரலை வீடியோ அல்லது தேர்ந்தெடுப்புப் பட்டியைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கும் ரீப்ளேவை இடுகையிட, நேரடிச்செய்தி அனுப்ப அல்லது அதன் இணைப்பை நகலெடுக்க இதிலிருந்து பகிர்… என்பதை கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.

நேரலை வீடியோக்களைப் பார்க்கும்போது நீங்கள் சிக்கல்களை எதிர்கொள்ளலாம். பொதுவாக, வலுவான நெட்வொர்க் இணைப்பிலிருந்து பார்ப்பது மற்றும்/அல்லது வேறொரு நெட்வொர்க் அல்லது உலாவியைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. கூடுதலாக, பயன்பாடு அல்லது உலாவியை மூடி மீண்டும் திறப்பதும் உதவக்கூடும். சிறந்த முடிவுகளைப் பெற, சமீபத்தியது வரை புதுப்பிக்கப்பட்ட பயன்பாடு அல்லது உலாவிப் பதிப்பைப் பயன்படுத்தவும். நேரலை வீடியோவைப் பார்ப்பதில் சிக்கல்கள் நீடித்தால், எங்களுக்குத் தெரியப்படுத்தவும் .

வீடியோவை முன்னால் அல்லது பின்னால் நகர்த்துதல்

ஒரு வீடியோவைப் பார்க்கும்போது, அதை விரைவாகப் பின்னால் அல்லது முன்னால் நகர்த்துவதற்கு, உங்கள் திரையை இருமுறை தொடவும்.
 

ஒரு வீடியோவில் உள்ளடக்கத்தை எப்படி முன்னால்/பின்னால் நகர்த்துவது:

  1. 5 வினாடிகள் முன்னால் செல்ல, வீடியோ திரையின் வெளி வலதுபக்கத்தில் இருமுறை தொடவும். 
  2. 5 வினாடிகள் பின்னால் செல்ல, வீடியோ திரையின் வெளி இடதுபக்கத்தில் இருமுறை தொடவும்.

நீங்கள் ஸ்கிப் செய்ய இருமுறை தட்டியவுடன், அதே திசையில் தொடர்ந்து நகர ஒருமுறை தொடவும்.

முன்னால் மற்றும் பின்னால் ஸ்கிப் செய்வது தற்போது முழுத்திரையில் வீடியோக்களைப் பார்க்கும்போது மட்டுமே செய்ய முடியும்.

குறிப்பு: பிரீமியம் நேரலை உள்ளடக்க ஸ்ட்ரீமிங், உட்பொதிக்கப்பட்ட நேரலை வீடியோ விட்ஜட் ஆகியவை வேறொரு X.com டொமைனான twimg.com -இன் குக்கீகள் செய்யும் இரண்டு விஷயங்களைச் சார்ந்திருக்கின்றன: நேரலை வீடியோ அனுபவத்தைத் தயார் செய்தல் மற்றும் விளம்பரங்களை வழங்குதல். உங்கள் உலாவியில் மூன்றாம் தரப்பு குக்கீகள் முடக்கப்பட்டிருந்தால், நேரலை வீடியோ அனுபவம் வேலை செய்யாது, அத்துடன் உங்களுக்கு நேரலை அனுபவத்தை வழங்குவதற்கு ஆதரவளிக்கும் விளம்பரங்களை எங்களால் வழங்க இயலாது. Safari பயனர்களிடம் கோரப்படும்போது அவர்கள் “அனுமதி” பொத்தானை கிளிக் செய்தால், அவர்களுடைய உலாவி அமைப்புகளை மாற்றாமலேயே பிரீமியம் நேரலை உள்ளடக்க ஸ்ட்ரீமிங் அல்லது உட்பொதிக்கப்பட்ட நேரலை வீடியோ விட்ஜட்டைப் பார்க்கலாம். இது twimg.com -க்கான ஒரு குக்கீயை அமைக்க எங்களை அனுமதிக்கும் மற்றும் நேரலை வீடியோ அனுபவத்தைத் தயார்செய்யவும் விளம்பரங்களை வழங்கும் எங்களுக்கு உதவும். நீங்கள் வேறொரு உலாவியைப் பயன்படுத்தினால், மூன்றாம் தரப்பு குக்கீகளை அனுமதிப்பது குறித்த தகவலைப் பார்க்க உங்கள் உலாவியின் உதவிப் பிரிவைப் பார்க்கவும்.

நேரலை வீடியோக்களுக்கான புஷ் அறிவிப்புகள்
நீங்கள் தவறவிட விரும்பாத நேரலை வீடியோக்களை அலைபரப்பும் கணக்கு இருந்தால், அவர்கள் நேரலைக்குச் செல்லும்போது அதைப் பற்றிய புஷ் அறிவிப்பைப் பெறுவதற்கு நீங்கள் தேர்வுசெய்யலாம். கணக்கின் சுயவிவரப் பக்கத்திலிருந்து அறிவிப்புகளை எளிதில் நேரடியாக அமைக்கலாம்.
படி 1

கணக்குச் சுயவிவரத்தில், அறிவிப்பு ஐகானை  தொடவும்

படி 2

பாப்-அப் செய்தியில், நேரலை வீடியோ உள்ள இடுகைகள் மட்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3

நேரலை வீடியோ புஷ் அறிவிப்புகளை ரத்துசெய்ய, கணக்குச் சுயவிவரத்தில் தனிப்படுத்திய அறிவிப்பு ஐகானை  தொட்டு, எதுவுமில்லை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் தவறவிட விரும்பாத நேரலை வீடியோக்களை அலைபரப்பும் கணக்கு இருந்தால், அவர்கள் நேரலைக்குச் செல்லும்போது அதைப் பற்றிய புஷ் அறிவிப்பைப் பெறுவதற்கு நீங்கள் தேர்வுசெய்யலாம். கணக்கின் சுயவிவரப் பக்கத்திலிருந்து அறிவிப்புகளை எளிதில் நேரடியாக அமைக்கலாம்.
படி 1

கணக்குச் சுயவிவரத்தில், அறிவிப்பு ஐகானை  தொடவும்

படி 2

கணக்கு அறிவிப்புகள் என்பதற்குப் பக்கத்திலுள்ள பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும். 

படி 3

பாப்-அப் செய்தியில், நேரலை வீடியோ மட்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 4

நேரலை வீடியோ புஷ் அறிவிப்புகளை ரத்துசெய்ய, கணக்குச் சுயவிவரத்தில் தனிப்படுத்திய அறிவிப்பு ஐகானை  தொட்டு, எதுவுமில்லை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


X -இல் வீடியோ பதிவிறக்கங்கள்
 

Premium சப்ஸ்கிரைப்பர்கள் ஆஃப்லைனில் பார்க்க சில இடுகைகளிலிருந்து வீடியோக்களைப் பதிவிறக்கலாம் அல்லது புதிய உள்ளடக்கத்தை உருவாக்க இந்த வீடியோக்களை ஆக்கப்பூர்வமாகவும் ரீமிக்ஸ் செய்யவும்.

இருப்பினும், சில விஷயங்களைக் கவனிக்க வேண்டியது அவசியமாகும்:

  • உங்கள் கட்டுப்பாடு: ஜூலை 25, 2023 முதல், நீங்கள் X -க்குப் பதிவேற்றும் வீடியோக்கள் Premium சப்ஸ்கிரைப்பர்களால் பதிவிறக்கப்படும், உங்கள் இடுகையை உருவாக்கும்போது உங்கள் வீடியோவில் வீடியோவைப் பதிவிறக்க அனுமதி விருப்பத்தை முடக்கினால் தவிர. (குறிப்பு: ஜூலை 25, 2023-க்கு முன் இடுகையிடப்பட்ட வீடியோக்களைப் பதிவிறக்க முடியாது.)

  • வயதுக் கட்டுப்பாடுகள்: உங்கள் கணக்கானது 18 வயதுக்கு உட்பட்டதாக இருந்தால், உங்கள் வீடியோ பதிவிறக்க அமைப்பு தானாகவே ஆஃப் என்று அமைக்கப்படும், மேலும் இந்த அமைப்பை உங்களால் மாற்ற முடியாது.

  • மூன்றாம் தரப்புப் பகிர்வு: பதிவிறக்கங்கள் முடக்கப்பட்டிருந்தால் X பயனர்கள் உங்கள் வீடியோக்களை மூன்றாம் தரப்புத் தளங்களில் நேரடியாகப் பகிர முடியாது என்றாலும், அவர்கள் உங்கள் இடுகைக்கான இணைப்பைப் பகிரலாம் என்பதை நினைவில் கொள்ளவும். 

  • தனியுரிமை அமைப்புகள்: உங்கள் இடுகைகளை யார் பார்க்கலாம் மற்றும் உங்கள் வீடியோக்களை யார் பார்க்கலாம் என்பதில் கூடுதல் கட்டுப்பாட்டைப் பெற விரும்பினால், உங்கள் தனியுரிமை அமைப்புகளை எவ்வாறு மாற்றுவது என்பதை அறியவும். இது உங்கள் உள்ளடக்கத்தின் மீதும் மற்றும் அதை அணுகக்கூடியவர்கள் மீதும் கூடுதல் கட்டுப்பாட்டை வழங்கலாம்.

 

ஒரு வீடியோவை எவ்வாறு பதிவிறக்குவது

  1. நீங்கள் பதிவிறக்க விரும்பும் வீடியோவிற்குச் செல்லவும்
  2. மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி ஐகானைத் தட்டவும்
  3. வீடியோவைப் பதிவிறக்கு என்பதைத் தட்டவும்

 

எனது வீடியோவைப் பதிவிறக்கக்கூடியதிலிருந்து எப்படி அகற்றுவது

  1. இடுகையை உருவாக்கும்போது, உங்கள் இடுகையில் வீடியோவைப் பதிவேற்றிய பிறகு, உங்கள் வீடியோவின் கீழ் வலதுபுறத்தில் உள்ள திருத்து என்பதைத் தட்டவும்
  2. அமைப்புகள் என்பதைத் தட்டவும்

 

ஆன் அல்லது ஆஃப் செய்ய வீடியோவைப் பதிவிறக்க அனுமதி என்பதற்கு அடுத்து தட்டவும். (குறிப்பு: இந்த அமைப்பைப் பின்னர் மாற்ற முடியாது; எதிர்காலத்தில் பதிவிறக்கத்தை முடக்க, நீங்கள் இடுகையை நீக்க வேண்டும்.)


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
 

என் இடுகைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. எனது வீடியோக்களும் பாதுகாக்கப்பட்டிருக்குமா?

உங்கள் இடுகைகள் பாதுகாக்கப்பட்டிருந்தால், உங்கள் இடுகைகளிலுள்ள வீடியோக்களை உங்களைப் பின்தொடர்பவர்கள் மட்டுமே பார்க்க முடியும். பாதுகாக்கப்பட்ட இடுகைகளில் நீங்கள் பகிரும் வீடியோக்களை உங்களைப் பின்தொடர்பவர்கள் பதிவிறக்கலாம் அல்லது அவற்றுக்கான இணைப்புகளை மீண்டும் பகிரலாம் என்பதைக் குறித்துக்கொள்ளவும். X -இல் பகிரப்படும் வீடியோக்களுக்கான இணைப்புகள் பாதுகாக்கப்பட்டவை அல்ல. அவற்றுக்கான இணைப்பு உள்ள எவரும் அவற்றிலுள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க முடியும். X -இல் உங்கள் வீடியோக்களை எவரும் பார்க்க நீங்கள் விரும்பவில்லை எனில், அந்த வீடியோக்களைக் கொண்ட இடுகைகளை நீக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

இடுகையின் எழுத்து வரம்பில் வீடியோக்களும் அடங்குமா?

இல்லை, இடுகையின் எழுத்து வரம்பில் வீடியோக்கள் அடங்காது.

X -இல் வீடியோக்கள் தானாக மீண்டும் இயங்குமா?

X -இல் இடுகையிடப்பட்ட 60 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான நேரவரம்புள்ள அனைத்து வீடியோக்களும் தானாக மீண்டும் இயங்கும்.

X -இல் ஒரு வீடியோவை டாக் செய்ய முடியுமா?

iOS-க்கு உங்கள் X மற்றும் Android பயன்பாட்டிற்கான X ஆகியவற்றிலிருந்து முன்பே ரெக்கார்டு செய்யப்பட்ட வீடியோ அல்லது அலைபரப்பை நீங்கள் டாக் செய்யலாம். வீடியோவை டாக் செய்வதன் மூலம், X -ஐப் பயன்படுத்தியவாறே (உங்கள் காலவரிசையைப் பார்ப்பது அல்லது நேரடிச்செய்தி அனுப்புவது போன்றவற்றைச் செய்தவாறு) வீடியோவை எளிதாகப் பார்க்கலாம். 

ஒரு வீடியோவை எப்படி டாக் செய்வது மற்றும் டாக் நீக்குவது (iOS மற்றும் Android):

  • ஒரு வீடியோவை டாக் செய்ய, முழுத்திரைப் பயன்முறையில் வீடியோவின் மேல்வலதுபுறமுள்ள டாக்கிங் ஐகானை  தொடவும். 
  • டாக் செய்த வீடியோவிலிருந்து முழுத்திரைக் காட்சிக்குத் திரும்ப, வீடியோவைத் தொடவும்.
  • டாக் செய்த வீடியோவை நிராகரிக்க, அந்த வீடியோ மறையும் வரை அதை உங்கள் திரையின் முனை நோக்கி விரலால் இழுக்கவும். பதிலாக, நீங்கள் வேறொரு வீடியோவைத் தொடும்போது தற்போது டாக் செய்யப்பட்ட வீடியோ தானாக மறையும். 

இணையத்தில் பதிவேற்றுவதற்கான வீடியோ தெளிவுத்திறன்கள் மற்றும் வடிவ விகிதங்களில் ஏதேனும் வரம்புகள் உள்ளனவா?

  • குறைந்தபட்ச தெளிவுத்திறன்: 32 x 32
  • அதிகபட்ச தெளிவுத்திறன்: 1920 x 1200 (and 1200 x 1900)
  • வடிவ விகிதங்கள்: 1:2.39 - 2.39:1 வரம்பு (உள்ளடங்கியது)
  • அதிகபட்ச ஃப்ரேம் விகிதம்: 40 fps
  • அதிகபட்ச பிட்ரேட்: 25 Mbps

வீடியோவில் நான் பயனர்களை இணைக்க முடியுமா?

வீடியோவில் உங்களால் பயனர்களை இணைக்க முடியாது, எனினும் புகைப்படங்களில் இணைக்கலாம். புகைப்படம் இணைத்தல் பற்றி மேலும் அறிக.

ஒரு வீடியோவை (இடுகையிட்ட பின்னர்) அதை எவ்வாறு நீக்குவது?

 ஒரு புகைப்படத்தை நீக்குவதைப் போலவே இடுகையை நீக்குவதன் மூலம் ஒரு வீடியோவையும் நீக்கலாம். 

நேரடிச்செய்தி மூலம் வீடியோக்களை அனுப்ப முடியுமா?

முடியும், வீடியோக்களையும் GIFகளையும் நேரடிச்செய்திகள் மூலமாக அனுப்பலாம். 

இந்தக் கட்டுரையைப் பகிர்க