மக்களுக்குப் படங்களை அணுகத்தக்கதாக எவ்வாறு செய்யலாம்
iOS அல்லது Android-க்கான Twitter பயன்பாட்டை அல்லது twitter.com-ஐப் பயன்படுத்தி நீங்கள் புகைப்படங்களை ட்விட் செய்யும்போது, படங்களின் விளக்கத்தை எழுதும் விருப்பத்தேர்வு உங்களுக்கு உள்ளது. இதனால், பார்வையற்றவர்கள் அல்லது குறைந்த பார்வைத் திறன் கொண்டவர்கள் உட்பட அதிகமானவர்களுக்கு உள்ளடக்கம் அணுகக்கூடியதாக இருக்கும்.
நல்ல பட விளக்கங்கள் என்பவை சுருக்கமானதாகவும் தெளிவான விளக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் இருக்கும், அவை ஒரு படத்தில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுகிறது.
இந்தக் கட்டுரையில் பின்வருபவற்றைப் பயன்படுத்தி, பட விளக்கங்களை எழுதுவதற்கான வழிமுறைகள் உள்ளன:
twitter.com உடன் Mac-க்கான VoiceOver-ஐப் பயன்படுத்துதல்
twitter.com-இலிருந்து கீச்சுகளில் பட விளக்கங்களைச் சேர்ப்பது எவ்வாறு
- விசைப்பலகைக் குறுக்குவழியைப் பயன்படுத்தி (“n” விசையை அழுத்தவும்) கீச்சு எழுதி என்பதைத் திறக்கவும்.
- புகைப்படங்கள் அல்லது வீடியோ பொத்தானுக்குச் செல்ல, “tab” விசையைப் பயன்படுத்தவும் மற்றும் “enter” விசையை அழுத்தவும்.
- சேர்ப்பதற்கான படத்தைத் தேர்வு செய்ய, கோப்பு முறைமை உரையாடலைப் பயன்படுத்தவும்.
- தொகுப்பானில், நீங்கள் சேர்த்த படத்தை “tab” விசையைப் பயன்படுத்திக் கண்டறியவும். படம் சேர்க்கப்பட்ட வரிசையின்படி அதற்குப் பெயரிடப்படும் (எ.கா. "படம் 1").
- விளக்க உரையைச் சேர்க்க, படத்தில் கவனம் செலுத்தும்போது “enter” விசையை அழுத்துவதன் மூலம் சிறு பட முன்னோட்ட உரையாடல் பெட்டியைத் திறக்கவும்.
- படத்தின் உங்கள் விளக்கத்தை உள்ளிடவும். (எழுத்துக்குறி வரம்பு 1000.)
- “tab” விசையை அழுத்துவதன் மூலம் முடிந்தது என்ற பொத்தானைக் கண்டறிந்து, பின்னர் “enter” விசையை அழுத்தவும் அல்லது “command” விசையை அழுத்திப் பிடித்திருக்கையில் “enter” விசையை அழுத்தவும்.
- விளக்கத்தைத் திருத்த, கீச்சைப் பதிவிடுவதற்கு முன்பு சிறு பட முன்னோட்ட உரையாடல் பெட்டியை மீண்டும் திறக்கவும்.
twitter.com உடன் Windows-க்கான JAWS ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்துதல்
twitter.com-இலிருந்து கீச்சுகளில் பட விளக்கங்களைச் சேர்ப்பது எவ்வாறு
- JAWS' மெய்நிகர் வழிசெலுத்துதலைத் தற்காலிகமாகப் புறக்கணிக்க “insert" மற்றும் “3” விசைகளை ஒன்றாக அழுத்தவும்.
- விசைப்பலகைக் குறுக்குவழியைப் பயன்படுத்தி (“n” விசையை அழுத்தவும்) கீச்சு எழுதி என்பதைத் திறக்கவும்.
- புகைப்படங்கள் அல்லது வீடியோ பொத்தானுக்குச் செல்ல, “tab” விசையைப் பயன்படுத்தவும் மற்றும் “enter” விசையை அழுத்தவும்.
- சேர்ப்பதற்கான படத்தைத் தேர்வு செய்ய, கோப்பு முறைமை உரையாடலைப் பயன்படுத்தவும்.
- தொகுப்பானில், நீங்கள் சேர்த்த படத்தை “tab” விசையைப் பயன்படுத்திக் கண்டறியவும். படம் சேர்க்கப்பட்ட வரிசையின்படி அதற்குப் பெயரிடப்படும் (எ.கா. "படம் 1").
- விளக்க உரையைச் சேர்க்க, படத்தில் கவனம் செலுத்தும்போது “enter” விசையை அழுத்துவதன் மூலம் சிறு பட முன்னோட்ட உரையாடல் பெட்டியைத் திறக்கவும்.
- படத்தின் உங்கள் விளக்கத்தை உள்ளிடவும். (எழுத்துக்குறி வரம்பு 1000.)
- “tab” விசையை அழுத்துவதன் மூலம் முடிந்தது என்ற பொத்தானைக் கண்டறிந்து, பின்னர் “enter” விசையை அழுத்தவும் அல்லது “control” விசையை அழுத்திப் பிடித்திருக்கையில் “enter” விசையை அழுத்தவும்.
- விளக்கத்தைத் திருத்த, கீச்சைப் பதிவிடுவதற்கு முன்பு சிறு பட முன்னோட்ட உரையாடல் பெட்டியை மீண்டும் திறக்கவும்.
twitter.com உடன் Windows-க்கான NVDA ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்துதல்
twitter.com-இலிருந்து கீச்சுகளில் பட விளக்கங்களைச் சேர்ப்பது எவ்வாறு
- படிவங்கள் பயன்முறைக்குச் செல்ல, “insert” மற்றும் இடைவெளி விசைகளை ஒன்றாக அழுத்தவும்.
- விசைப்பலகைக் குறுக்குவழியைப் பயன்படுத்தி (n விசையை அழுத்தவும்) கீச்சு எழுதி என்பதைத் திறக்கவும்.
- புகைப்படங்கள் அல்லது வீடியோ பொத்தானுக்குச் செல்ல, “tab” விசையைப் பயன்படுத்தவும் மற்றும் “enter” விசையை அழுத்தவும்.
- சேர்ப்பதற்கான படத்தைத் தேர்வு செய்ய, கோப்பு முறைமை உரையாடலைப் பயன்படுத்தவும்.
- தொகுப்பானில், நீங்கள் சேர்த்த படத்தை “tab” விசையைப் பயன்படுத்திக் கண்டறியவும். படம் சேர்க்கப்பட்ட வரிசையின்படி அதற்குப் பெயரிடப்படும் (எ.கா. "படம் 1").
- விளக்க உரையைச் சேர்க்க, படத்தில் கவனம் செலுத்தும்போது “enter” விசையை அழுத்துவதன் மூலம் சிறு பட முன்னோட்ட உரையாடல் பெட்டியைத் திறக்கவும்.
- படத்தின் உங்கள் விளக்கத்தை உள்ளிடவும். (எழுத்துக்குறி வரம்பு 1000.)
- “tab” விசையை அழுத்துவதன் மூலம் முடிந்தது என்ற பொத்தானைக் கண்டறிந்து, பின்னர் “enter” விசையை அழுத்தவும் அல்லது “control” விசையை அழுத்திப் பிடித்திருக்கையில் “enter” விசையை அழுத்தவும்.
- விளக்கத்தைத் திருத்த, கீச்சைப் பதிவிடுவதற்கு முன்பு சிறு பட முன்னோட்ட உரையாடல் பெட்டியை மீண்டும் திறக்கவும்.
குறிப்பு: பதிவிட்டதும், படத்திற்குப் பயன்படுத்தப்பட்ட விளக்கம் தெரியாது, ஆனால் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் அவர்களது தொழில்நுட்பம் (எ.கா., ஸ்கிரீன் ரீடர்கள் மற்றும் பிரைலி டிஸ்பிளேக்கள்) மூலம் அந்த விளக்கத்தைக் கேட்பார்கள்.