எவ்வாறு உங்கள் Twitter அனுபவத்தைக் கட்டுப்படுத்துவது

Twitter என்பது எண்ணங்கள் மற்றும் தகவலைப் பகிர்வதற்கான, உங்கள் சமூகங்களுடன் இணைவதற்கான மற்றும் உங்களைச் சுற்றியுள்ள உலகைப் பார்ப்பதற்கான இடம். அந்த அனுபவத்தின் மிகச்சிறந்த பகுதிகளைப் பாதுகாப்பதற்காக, நீங்கள் Twitter -இல் நம்பிக்கையுடன் உங்களை வெளிப்படுத்தக் கூடிய வகையில், நீங்கள் பார்ப்பவற்றையும் மற்றவர்கள் உங்களைப் பற்றி பார்ப்பவற்றையும் கட்டுப்படுத்த உங்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட கருவிகளை வழங்குகிறோம்.

 

ஒரு கீச்சின் மீது நீங்கள் நடவடிக்கை எடுப்பதை எளிதாக்கியுள்ளோம். பின்தொடராதே, செயல்மறை, தடைசெய், புகாரளி மற்றும் பல விருப்பங்களை விரைவாக அணுகுவதற்கு, உங்கள் முகப்புக் காலவரிசையிலிருந்தே எந்தவொரு கீச்சின் மேற்புறத்திலும் உள்ள  ஐகானைத் தொடலாம். 
 

பின்தொடராதே

பின்தொடராமல் விடுவது என்பது, உங்கள் முகப்புக் காலவரிசையில் ஒருவரின் கீச்சுகளைப் பார்ப்பதை நிறுத்துவதற்கு நீங்கள் மேற்கொள்ளக்கூடிய மிக எளிமையான நடவடிக்கை ஆகும். பின்னர் ஒருவேளை உங்கள் மனம் மாறினால், எப்போது வேண்டுமானாலும் ஒரு கணக்கை மீண்டும் பின்தொடரலாம். இந்த விருப்பத்தை, கீச்சில் உள்ள  ஐகானில் இருந்து அணுகலாம்.

நபர்களை எவ்வாறு பின்தொடர்வதை நிறுத்துவது என்பது பற்றி மேலும் படிக்கவும்.

வடிகட்டி அறிவிப்புகள்

உங்கள் அறிவிப்புகள் காலவரிசையில் குறிப்பீடுகள், விருப்பங்கள், மறுகீச்சுகள் மற்றும் உங்களைச் சமீபத்தில் பின்தொடர்ந்திருப்பவர்கள் போன்ற பிற Twitter கணக்குகளுடனான உங்கள் உரையாடல்கள் காண்பிக்கப்படும். நீங்கள் பின்தொடராத கணக்குகளில் இருந்து தேவையற்ற பதில்கள் அல்லது குறிப்பீடுகளைப் பெற்றால், நீங்கள் பெறும் அறிவிப்புகளின் வகைகளை வடிகட்டலாம்.

உங்கள் அறிவிப்புகள் காலவரிசையைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளைப் படிக்கவும்.

குறைவாக அடிக்கடி காட்டு 

குறைவாக அடிக்கடி காட்டு என ஒரு கீச்சைக் குறித்தால், அது உங்கள் முகப்புக் காலவரிசையில் நீங்கள் குறைவாகப் பார்க்க விரும்பும் கீச்சுகளின் வகைகளை Twitter இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவும். எதிர்காலத்தில் உங்கள் அனுபவத்தை உகந்ததாக்குவதற்கும் தனிப்பயனாக்குவதற்கும் இந்தத் தகவலை நாங்கள் பயன்படுத்தலாம். இந்த விருப்பத்தை, கீச்சில் உள்ள  ஐகானில் இருந்து அணுகலாம்.
 

செயல்மறை

மற்றொரு Twitter கணக்கைச் செயல்மறைத்தால், உங்கள் காலவரிசையில் அந்தக் கணக்கின் கீச்சுகளைப் பார்க்க மாட்டீர்கள். நண்பர்களின் கீச்சுகள் அனைத்தையும் நீங்கள் பார்க்க விரும்பவில்லை என்றால் கூட, அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க இது ஒரு சிறந்த வழியாகும். செயல்மறைக்கப்பட்ட கணக்குகளுக்கு நீங்கள் அவற்றைச் செயல்மறைத்துள்ளீர்கள் என்று அறிவிக்கப்படாது, மேலும் அவர்கள் கீச்சுகளில் உங்களைக் குறிப்பிடும்போதும், உங்களுக்கு நேரடிச்செய்திகளை அனுப்பும்போதும் அறிவிப்புகளைப் பெறுவீர்கள். நீங்கள் பின்தொடராத கணக்குகளைக் கூட நீங்கள் செயல்மறைக்கலாம், இதனால் அவர்களின் கீச்சுகள் உங்கள் அறிவிப்புகள் காலவரிசைகளில் காண்பிக்கப்படாது.

செயல்மறைப்பது என்பது தடைசெய்வது அல்லது பின்தொடராமல் விடுவதை விட வித்தியாசமானது: நீங்கள் செயல்மறைத்துள்ள கணக்குகளுக்கு, அவற்றை நீங்கள் செயல்மறைத்துள்ளீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வழி எதுவும் இல்லை. இந்த விருப்பத்தை, கீச்சில் உள்ள  ஐகானில் இருந்து அணுகலாம்.

கணக்குகளைச் செயல்மறைப்பது பற்றி மேலும் படிக்கவும்.

நீங்கள் குறிப்பிட்ட சொற்கள், சொற்றொடர்கள், பயனர்பெயர்கள், எமோஜிக்கள் அல்லது ஹேஷ்டேக்குகளைக் கொண்டிருக்கும் கீச்சுகளையும் செயல்மறைக்கலாம்
 

தடைசெய்

Twitter -இல் ஒரு கணக்கைத் தடைசெய்யும்போது, உங்கள் கணக்குடன் தொடர்புகொள்வதற்கான அந்தக் கணக்கின் திறனைக் கட்டுப்படுத்துகிறீர்கள். நீங்கள் தொடர்புகொள்ள விரும்பாத கணக்குகளின் தேவையற்ற உரையாடல்களைக் கையாள இது ஒரு திறனுள்ள வழியாகும்.

நீங்கள் தடைசெய்துள்ள கணக்குகள் Twitter -இல் உள்நுழைந்திருக்கும்போது உங்கள் கீச்சுகள், நீங்கள் பின்தொடர்வோர் அல்லது உங்களைப் பின்தொடர்பவர்களின் பட்டியல்கள், விருப்பங்கள் அல்லது பட்டியல்களைப் பார்க்க முடியாது, மேலும் நீங்கள் நேரடியாக அந்தக் கணக்குகளில் இருந்து குறிப்பீடுகளைப் பற்றிய அறிவிப்புகளைப் பெற மாட்டீர்கள். மேலும் உங்கள் காலவரிசையில் அவர்களின் கீச்சுகள் காண்பிக்கப்படுவதும் நிறுத்தப்படும்.

தடைசெய்யப்பட்ட கணக்கு உங்கள் சுயவிவரத்தைப் பார்வையிட அல்லது உங்களைப் பின்தொடர முயற்சித்தால், நீங்கள் அவர்களைத் தடைசெய்தது அவர்களுக்குத் தெரியலாம், ஆனால் நீங்கள் அவர்களைத் தடைசெய்துள்ளதாக அறிவிப்புகள் எதையும் அவர்கள் பெற மாட்டார்கள். இந்த விருப்பத்தை, கீச்சில் உள்ள  ஐகானில் இருந்து அணுகலாம்.

கணக்குகளைத் தடைசெய்வது பற்றி மேலும் படிக்கவும்.

புகாரளி

Twitter விதிகள் அல்லது எங்கள் சேவை விதிமுறைகளை ஒரு கணக்கு அல்லது கீச்சு மீறுவதாக நீங்கள் நினைத்தால், அந்தக் கணக்கு அல்லது கீச்சைப் எங்களுக்குப் புகாரளிப்பதன் மூலம் அதைப் பற்றி எங்களிடம் கூறவும். நீங்கள் புகாரளிக்கக்கூடிய சில விதிமீறல்கள்: துஷ்பிரயோகம், உணர்ச்சிகரமான ஊடகம், ஆள் மாறாட்டம் மற்றும் ஸ்பேம். புகாரைச் சமர்ப்பிப்பதற்கு சில படிநிலைகள் தேவைப்படும், ஆனால் உங்கள் புகார் Twitter -ஐ அனைவருக்குமான சிறந்த இடமாக மாற்ற எங்களுக்கு உதவும். இந்த விருப்பத்தை, கீச்சில் உள்ள  ஐகானில் இருந்து அணுகலாம்.

Twitter -இடம் நீங்கள் எவற்றைப் புகாரளிக்கலாம் என்பதைப் பற்றி மேலும் படிக்கவும்.

கீச்சுகளில் பார்க்கும் ஊடகத்தைக் கட்டுப்படுத்துதல்

உணர்ச்சிகரமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கக்கூடிய கீச்சுகளில் உள்ள ஊடகம் குறித்த எச்சரிக்கையைப் பார்க்க விரும்புவதாக நீங்கள் முடிவு செய்தால், அதற்காக உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் கீச்சு ஊடக விருப்பங்கள் உள்ளன. உங்கள் அமைப்புகள் இயல்புநிலையாக எச்சரிக்கையை வழங்கும், எனினும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அமைப்பை மாற்றலாம்.

கீச்சுகளில் பார்க்கும் ஊடகத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது பற்றி மேலும் படிக்கவும்.

மற்றவர்கள் உங்களைப் பற்றி பார்ப்பவற்றைக் கட்டுப்படுத்தலாம்

உங்கள் கீச்சுகளைப் பாதுகாத்தல்

உங்கள் கீச்சுகளைப் பாதுகாப்பது என்றால், உங்கள் கீச்சுகள் உங்கள் பின்தொடர்பவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று பொருள். உங்கள் கீச்சுகளைப் பாதுகாப்பதன் மூலம், உங்களது Twitter அனுபவத்தைக் கட்டுப்படுத்தலாம்: உங்கள் கணக்கை யாராவது ஒருவர் பின்தொடர விரும்பும் ஒவ்வொரு முறையும், அவரது கோரிக்கையை ஏற்பதா மறுப்பதா என்ற தேர்வு உங்களுக்கு உள்ளது.

உங்கள் கீச்சுகள் பாதுகாக்கப்படுவதற்கு முன்னர் உங்களைப் பின்தொடர்ந்த கணக்குகள் தொடர்ந்து உங்களைப் பின்தொடரும் (அதாவது, நீங்கள் அவற்றை மறுபடியும் அங்கீகரிக்க வேண்டியது இல்லை), ஆனால் அவற்றைத் தடைசெய்து உங்களைப் பின்தொடர்வதை நிறுத்த முடியும்.

பொது மற்றும் பாதுகாக்கப்பட்ட கீச்சுகள் பற்றி மேலும் படிக்கவும்.
 

புகைப்படத்தில் இணைத்தல்

புகைப்படங்களில் நண்பர்களை இணைத்தல் என்பது இணைப்பிலேயே இருக்க சிறந்த வழியாகும், ஆனால் உங்கள் Twitter அனுபவம் மேலும் தனிப்பட்டதாக இருக்க வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். புகைப்படங்களில் உங்களை இணைக்க யாரை வேண்டுமானாலும் அனுமதிப்பதா, நண்பர்களை மட்டும் அனுமதிப்பதா அல்லது எவரையும் அனுமதிக்க வேண்டாமா என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.

உங்கள் புகைப்படத்தில் இணைத்தல் அமைப்புகளைப் பற்றி படிக்கவும்.

கண்டறிதல்

நீங்கள் அக்கறை கொண்டுள்ள நண்பர்கள் மற்றும் நபர்களை Twitter -இல் கண்டுபிடிப்பது சிறந்த அனுபவத்திற்கு வழிவகுக்கும், மேலும் உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண்ணைப் பயன்படுத்துவதன் மூலம், அந்த இணைப்புகளை எளிதில் உருவாக்க உங்களுக்கு நாங்கள் உதவ முடியும்.

எனினும், எங்கள் உதவியின்றி நீங்கள் நண்பர்களையும் தொடர்புகளையும் கண்டறிய விரும்பலாம், இந்த வழியில் கண்டறியப்படாமல் உங்கள் கணக்கை வைத்திருக்க, அமைப்பைச் சரிசெய்வது எளிது. கண்டறிதல் அமைப்புகள் பற்றியும் உங்கள் கண்டறியப்படும் நிலையை எவ்வாறு மாற்றுவது என்பது பற்றியும் மேலும் படிக்கவும்.

கீச்சுகளில் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்தல்

ஒவ்வொரு தனிக் கீச்சிலும் உங்கள் அமைவிடத்தை சேர்க்க வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்க Twitter உங்களை அனுமதிக்கிறது. உங்கள் அமைவிடத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், செய்ய வேண்டிய விஷயங்கள் அல்லது செல்ல வேண்டிய இடங்களைப் பற்றி கருத்துத் தெரிவிக்கவும் பரிந்துரைகளை வழங்கவும் உங்களைப் பின்தொடர்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள், எனினும் உங்கள் அமைவிடத்தைப் பொதுவில் பகிர்வதில் சில ஆபத்துகளும் உள்ளன. உங்களைப் பின்தொடர்பவர்கள் அனைவரையும் உங்களுக்குத் தெரியாது என்பதால், பகிர்வதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் விஷயத்தைக் குறித்து விழிப்போடு இருப்பது நல்லது.

உங்கள் அமைவிடத்தை ட்விட் செய்வது பற்றி மேலும் அறியவும். மொபைல் சாதனங்களில் அமைவிட அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் நீங்கள் மேலும் அறியலாம்.

ஊடக அமைப்புகள்

உங்கள் சொந்தக் கீச்சுகளில் உணர்ச்சிகரமான ஊடகங்கள் இருப்பதாக நீங்கள் கொடியிடலாம், இதனால் ஊடகம் காட்டப்படுவதற்கு முன்பாக பிறருக்கு ஓர் எச்சரிக்கை காண்பிக்கப்படும்.

உங்கள் கீச்சுகளில் உள்ள ஊடகம் உணர்ச்சிகரமான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாக எவ்வாறு குறியிடுவது என்பது பற்றி மேலும் படிக்கவும்.

மூன்றாம் தரப்புப் பயன்பாடுகளுக்கு என்ன தகவலை வழங்குகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும்

பிற நிறுவனங்கள் உங்களது Twitter அனுபவத்தை விரிவுபடுத்துவதற்காக பயன்பாடுகளை உருவாக்கியுள்ளன. ஒரு மூன்றாம் தரப்புப் பயன்பாட்டுடன் இணைப்பதற்கு முன்பு, அவர்களின் இணையதளத்தைப் பார்வையிட்டு, அவர்களுடைய சேவை விதிமுறைகளை கட்டாயம் படிக்கவும். மூன்றாம் தரப்புப் பயன்பாடுகளை அங்கீகரித்தல் மற்றும் இணைத்தல் பற்றி மேலும் அறியவும்.

 

இந்தக் கட்டுரையைப் பகிர்க