எவ்வாறு அடைதலை அதிகரிப்பது

நீங்கள் ட்விட் செய்த ஏதேனும் ஒன்றில் உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்து, அதனைப் பல நபர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால், அதன் அடைதலை அதிகரிக்க விளம்பரப்படுத்தலாம், இதனால் அதிகப் பார்வையாளர்கள் அதனைக் கண்டறிய முடியும். கீச்சை விளம்பரப்படுத்துவது எளிதானது, முன்னேற்றத்தைத் தடமறிவதற்கும் முடிவுகளைக் காண்பதற்கும் உதவும் கருவிகளை நாங்கள் வழங்குகிறோம்.

எவ்வாறு அதிகப் பயனர்களை அடைவது

தொடங்குவதற்கு, நீங்கள் விளம்பரப்படுத்த விரும்பும் கீச்சைக் கண்டறியவும் (நீங்கள் ஏற்கனவே இடுகையிட்ட கீச்சுகளை மட்டுமே விளம்பரப்படுத்த முடியும்):

 1. சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.
  1. வலைத்தளத்தின் மூலம்: உங்கள் சுயவிவரம் ஐகானில் கிளிக் செய்யவும்.
  2. iOS -க்கான Twitter -இல்: மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொட்டு, சுயவிவரம் என்பதைத் தொடவும்.
  3. Android -க்கான Twitter-இல்: மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை  அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களுக்கு கிடைக்கும் எந்த ஐகானையும் தொட்டு, சுயவிவரம் என்பதைத் தொடவும்.
 2. நீங்கள் விளம்பரப்படுத்த விரும்பும் கீச்சைக் கண்டறியவும்.
 3. கீச்சுச் செயல்பாட்டை காண்பி என்ற ஐகானை  கிளிக் செய்யவும் அல்லது தொடவும் 
 4. உங்கள் கீச்சை விளம்பரப்படுத்தவும் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
 5. நீங்கள் முதன் முறையாகக் கீச்சை விளம்பரப்படுத்தும் போது, பின்வரும் தகவலை வழங்கவும்:
 6. நாடு மற்றும் நேர மண்டலத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் தொடர்புத் தகவலை வழங்கவும் மற்றும் Twitter விளம்பரப்படுத்தல் விதிகளை ஏற்கவும். பின்னர் அடுத்து என்பதைத் தொடவும்.
 7. உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டு விவரம் மற்றும் பில்லிங் முகவரியை உள்ளிடவும். பின்னர் அடுத்து என்பதைத் தொடவும். 
  குறிப்பு: எதிர்காலத்தில் விளம்பரம் செய்யப்படும் கீச்சுகளுக்காக இந்த விவரம் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்படும்.
 8. இலக்கிடல் என்பதன் கீழ், உங்கள் கீச்சின் மூலம் நீங்கள் இலக்காக வைக்க விரும்பும், இடத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் உலகளாவில் அல்லது உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள இடங்களை இலக்காகத் தேர்ந்தெடுக்கலாம்.
 9. பட்ஜெட் என்பதன் கீழ், நீங்கள் செலவிட விரும்பும் தொகையைத் தேர்ந்தெடுக்கவும். $10 மற்றும் $2,500-க்கு (அல்லது அதற்குச் சமமான உள்ளூர் கட்டணம்) இடைப்பட்ட தொகையை நீங்கள் செலவிடலாம், ஒவ்வொரு தொகைக்குமான ஈடுபாடுகளின் கணக்கிடப்பட்ட எண்ணிக்கையை நாங்கள் காட்டுவோம்.
 10. உங்கள் விளம்பரத்தை உறுதிசெய்வதற்கு தொகையை உறுதிசெய் என்பதில் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.

குறிப்பு: விளம்பரக் காலம் முடிவடைந்த பின்னர், அதே கீச்சை நீங்கள் மீண்டும் விளம்பரம் செய்யலாம்.


முன்னேற்றத்தைக் கண்காணித்தல் மற்றும் முடிவுகளைப் பார்த்தல்


நீங்கள் நிகழ் நேரத்தில் முடிவுகளைக் கண்காணிக்கலாம் மற்றும் விளம்பரபடுத்தல் நிறைவடைந்த பின்னர் இறுதி முடிவுகளைக் காணலாம்:

 1. நீங்கள் விளம்பரப்படுத்திய கீச்சைக் கண்டறிந்து, கீச்சு விவரத்தைத் திறக்க, கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
 2. கீச்சுச் செயல்பாடு ஐகானை  கிளிக் செய்யவும் அல்லது தொடவும்
 3. ஆர்கானிக் மற்றும் விளம்பரப்படுத்தப்பட்ட ஈடுபாடுகளால் ஒழுங்கமைக்கப்பட்ட முடிவுகளை நீங்கள் காணலாம்:
  • இணைப்பு கிளிக்குகள் (உங்கள் கீச்சில் இணைப்பு ஏதுமிருந்தால்);
  • இம்ப்ரெஷன்கள் (உங்கள் கீச்சைப் பார்த்துள்ளவர்களின் எண்ணிக்கை); மற்றும்
  • மொத்த ஈடுபாடுகள் (உங்கள் கீச்சு உடனான ஊடாடல்களின் எண்ணிக்கை).
    

நீங்கள் விளம்பரப்படுத்திய கீச்சிற்கான மேலும் விரிவான பகுப்பாய்வுகள் மற்றும் மேம்பட்ட கட்டுப்பாடுகளுக்கு, உங்கள் Twitter பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, ads.twitter.com -இல் உள்நுழையலாம். ஒவ்வொரு முறையும் நீங்கள் கீச்சை விளம்பரப்படுத்தும் போதும், பிரச்சாரம் தாவலில், அதன் சொந்தப் பிரச்சாரமாகப் பதிவு செய்யப்படும்.

உங்கள் கிரெடிட் கார்டு தகவலை நிர்வகித்தல்


கிரெடிட் கார்டு தகவலை நீங்கள் ஒருமுறை உள்ளிட்ட பின்னர், எதிர்கால கீச்சு விளம்பரங்களுக்காக அது சேமித்து வைத்திருக்கப்படும்.

ads.twitter.com -ஐப் பார்வையிடுவதன் மூலம், ஏற்கனவேயுள்ள கிரெடிட்/டெபிட் கார்டு தகவலை மாற்றலாம் அல்லது கூடுதல் கார்டுகளைச் சேர்க்கலாம்.

 1. உங்கள் Twitter பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி ads.twitter.com-இல் உள்நுழைக.
 2. உங்கள் கணக்குப் பெயரில் (மேலுள்ள தலைப்புப் பட்டியில்) கிளிக் செய்து, மெனுவிலிருந்து கட்டண முறைகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. இங்கே, பயன்படுத்துவதற்கான இயல்புநிலை கார்டை நீங்கள் அடையாளம் காணலாம் (கீச்சு விளம்பரங்களுடன் தொடர்புடைய பல கார்டுகளை நீங்கள் கொண்டிருந்தால்); கார்டை நீக்கலாம்; மற்றும் புதிய கட்டண முறைகளைச் சேர்க்கலாம்.

குறிப்பு: கீச்சு விளம்பரப்படுத்தல்கள் அல்லது விளம்பரப் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவதற்காகச் சேமிக்கப்பட்ட கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளின் தகவல்கள், Twitter -ஐப் பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்காக உங்கள் கணக்கு கட்டண அமைப்புகளில் நீங்கள் சேமித்திருக்கும் கட்டண முறைகளில் இருந்து தனித்தனியாக ads.twitter.com -இல் சேமிக்கப்படுகின்றன.
 

எனது விளம்பரம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்?

பொதுவாக கீச்சு விளம்பரப்படுத்தல் சில மணிநேரங்கள் நீடிக்கும், ஆனால் மொத்தக் காலஅளவு என்பது உங்களின் பட்ஜெட், உங்களை பின்தொடர்பவர்கள், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் பலவற்றைப் பொறுத்து மாறுபடும். விளம்பரக் காலம் நிறைவடைந்த பின்னர், நீங்கள் ஒரு அறிவிப்பைப் பெறுவீர்கள்.

 

நான் விளம்பரப்படுத்திய கீச்சை யார் காண்பார்கள்?

உங்களின் உள்ளடக்கத்தைப் பாராட்ட விரும்பும் நபர்களுக்கு உங்கள் கீச்சை அனுப்புவோம். உங்களின் கீச்சுகளைக் காண்பதைத் தேர்வுசெய்துள்ள நபர்களான, உங்களைத் தற்போது பின்தொடர்பவர்களின் அடிப்படையில் இதனை நாங்கள் வடிவமைப்போம்.

 

எந்தக் கிரெடிட் கார்டுகளை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்?

நாங்கள் தற்போது Visa, Mastercard மற்றும் American Express கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை ஏற்றுக்கொள்கிறோம். நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயங்களில் கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். Twitter Ads -க்கான தகுதியைப் பற்றி மேலும் அறிக.

 

விளம்பரப்படுத்தப்பட்ட கீச்சுகளுக்கான ஆதரிக்கப்படும் மொழிகள் எவை?

விளம்பரப்படுத்தப்பட்ட கீச்சுகள், ஆதரிக்கப்படும் Twitter மொழியைப் பயன்படுத்த வேண்டும். இவற்றுள் சில மொழிகள் அடங்கும்: பஹாசா, ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலியன், டச்சு, ஜெர்மன், போர்த்துகீசியம், ஜப்பனீஸ், பின்னிஷ், நார்வேஜியன், ஸ்வீடிஷ் அல்லது டேனிஷ். Twitter Ads -க்கான தகுதி மற்றும் ஆதரிக்கப்படும் மொழிகள் பற்றி மேலும் அறிக.

 

விளம்பரப்படுத்தப்பட்ட கீச்சுகள் எங்கே காண்பிக்கப்படும்?

நீங்கள் விளம்பரப்படுத்தும் கீச்சுகள், Twitter -க்குச் சொந்தமான மற்றும் Twitter மூலம் இயக்கப்படும் எந்த உடைமைகளிலும் காட்டப்படும், எ.கா. முகப்புக் காலவரிசைகள், சுயவிவரங்கள் போன்றவை.

 

இந்தக் கட்டுரையைப் பகிர்க