மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.
கணக்கு என்பதைத் தொடவும்.
தரவு மற்றும் அனுமதிகள் என்பதன் கீழ், உங்கள் Twitter தரவு என்பதைத் தொடவும்.
கோப்பில் உள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும்/அல்லது ஃபோன் எண்ணுக்கு குறியீட்டை அனுப்பு என்பதைத் தொடுவதன் மூலம் உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும். கோப்பில் மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண் இல்லையென்றால், கணக்குத் தகவல் பக்கத்திற்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்.
உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும்/அல்லது ஃபோன் எண்ணுக்கு அனுப்பப்பட்ட குறியீட்டை உள்ளிடவும்.
உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்த பிறகு, உங்கள் தரவைப் பதிவிறக்கவும் என்பதன் கீழ், Twitter -க்கு அடுத்து, தரவைக் கோரவும் என்பதைத் தொடவும்.
உங்கள் பதிவிறக்கம் தயாரானதும், இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் கணக்கிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவோம் அல்லது நீங்கள் பயன்பாட்டை நிறுவியிருந்தால் ஒரு புஷ் அறிவிப்பை அனுப்புவோம். உங்களின் அமைப்புகளிலிருந்து, உங்கள் தரவைப் பதிவிறக்குக என்பதன் கீழ், காப்பகத்தைப் பதிவிறக்குக என்பதைத் தொடவும்.
உங்கள் Twitter கணக்குடன் தொடர்புடைய, உறுதிப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு, பதிவிறக்க இணைப்புடன் கூடிய மின்னஞ்சலையும் அனுப்புவோம்.
நீங்கள் மின்னஞ்சலைப் பெற்றவுடன், உங்கள் Twitter கணக்கில் உள்நுழைந்து, பதிவிறக்கு என்ற பொத்தானைக் கிளிக் செய்து, உங்கள் Twitter காப்பகத்தின் .zip கோப்பைப் பதிவிறக்கவும்.