உங்கள் குரல் மூலம் எப்படி ட்விட் செய்வது

iOS பயன்பாட்டிற்கான Twitter -இல் ஆடியோ செய்திகளை ட்விட் செய்வதற்கான விருப்பத்தை நாங்கள் தற்போது சோதிக்கிறோம். இந்த அம்சமானது குரல் மூலம், பயணத்தின்போதே ட்விட் செய்வதை எளிதாக்குகிறது. அணுகலை மேம்படுத்த நாங்கள் தானியங்கி வசனவரிகளையும் சேர்த்துள்ளோம்.

ஒரு குரல் கீச்சை எப்படிப் பதிவு செய்வது
  1.  கீச்சு உருவாக்குதல்  ஐகானை தொடவும்.
  2.  குரல் என்ற ஐகானை தொடவும்.
  3. உங்கள் செய்தியைப் பதிவு செய்ய, சிவப்பு நிற பதிவுசெய் என்ற பொத்தானைத் தொடவும், நீங்கள் முடித்ததும் முடிந்தது என்பதைத் தொடவும்.
  4. கீச்சு உரையைச் சேர்க்க மற்றும்/அல்லது பல கீச்சுகளுடன் ஒரு தொடர்ச்சியைத் தொடங்க உங்களுக்கு விருப்பத்தேர்வு உள்ளது. ஒவ்வொரு தனிப்பட்ட குரல் கீச்சிற்கும் நீங்கள் 2 நிமிடங்கள் 20 வினாடிகள் வரை பதிவு செய்யலாம். உங்கள் செய்தி அதை விட நீளமானதாக இருந்தால், அது தானாகவே 25 கீச்சுகள் வரை தொடர்ச்சியாக்கப்படும். 
  5. நீங்கள் தயாரானதும், அனுப்புவதற்கு, ட்விட் செய்க என்பதைத் தொடவும். 
ஒரு குரல் கீச்சை எப்படி பிளே செய்வது

நீங்கள் பின்தொடரும் ஒருவர் ஒரு குரல் கீச்சைப் பதிவு செய்யும்போது, இந்தப் படிகளுடன் மொபைல் மற்றும் twitter.com -இல் பிளேபேக் கிடைக்கிறது: 

1. குரல் கீச்சுக்குச் செல்லவும்.

2. பிளேபேக்கை தொடங்கவும் நிறுத்தவும் குரல் கீச்சு சிறுபடத்தைத் தொடவும்/கிளிக் செய்யவும். 

குரல் கீச்சுகளின் வசனவரிகளை எப்படிப் பார்ப்பது

iOS 13 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றிற்குப் பின்வருமாறு உங்கள் அமைப்புகளைச் சரிசெய்வதன் மூலம் வசனவரிகளை இயக்கலாம்: 
குறிப்பு: இது உங்கள் Twitter பயன்பாட்டில் உள்ள அமைப்புகள் பக்கம் அல்ல.

        1. உங்கள் iOS சாதனத்தில் முகப்புத்

        திரையில் இருந்து அமைப்புகள் பயன்பாட்டைத் திறக்கவும்.

        2. அணுகல்தன்மை என்பதற்குச் சென்று, சப்டைட்டில்கள் & கேப்ஷனிங் என்பதற்குச் செல்லவும்

        3. “மூடிய வசனவரிகள் + SDH” விருப்பத்தை இயக்கவும் அல்லது முடக்கவும்

    

உங்கள் iOS சாதனத்தில் வசனவரிகளை நீங்கள் இயக்கியவுடன்:

        1. குரல் கீச்சுக்குச் செல்லவும்.

        2. குரல் கீச்சு சிறுபடத்தைத் தொடவும்.

        3. குரல் கீச்சின் டிரான்ஸ்கிரிப்ட் ஆனது குரல் கீச்சு சிறுபடத்தின் மீது மேலடுக்கில் தானாகவே தோன்றும்

        .

 

பின்வருமாறு உங்கள் Android அமைப்புகளைச் சரிசெய்வதன் மூலம் வசனவரிகளை இயக்கலாம்:
குறிப்பு: இது உங்கள் Twitter பயன்பாட்டில் உள்ள அமைப்புகள் பக்கம் அல்ல.

        1. உங்கள் Android சாதனத்தில்

        முகப்புத் திரையில் இருந்து அமைப்புகள் பயன்பாட்டைத் திறக்கவும். 

        2. அணுகல்தன்மை என்பதற்குச் சென்று, அணுகல்தன்மை -> ஆடியோ &

        திரையில் தோன்றும் உரை.

        3. வசனவரி விருப்பத்தேர்வுகளை இயக்கவும் அல்லது முடக்கவும்.

 

உங்கள் Android சாதனத்தில் வசனவரிகளை நீங்கள் இயக்கியவுடன்:

        1. குரல் கீச்சுக்குச் செல்லவும்.

        2. குரல் கீச்சு சிறுபடத்தைத் தொடவும்.

        3. குரல் கீச்சின் டிரான்ஸ்கிரிப்ட் ஆனது குரல் கீச்சு சிறுபடத்தின் மீது மேலடுக்கில் தானாகவே தோன்றும்

        .

 

ஒரு வலை உலாவியில் வசனவரிகளைக் காண:

        1. குரல் கீச்சுக்குச் செல்லவும். அந்தக் கீச்சில் வசனவரிகள் இருந்தால் மேல்

        வலது மூலையில் ஒரு CC ஐகான் தோன்றும்   

        2. குரல் கீச்சு பிளேயரில் CC என்பதைக் கிளிக் செய்யவும்.

        3. குரல் கீச்சின் டிரான்ஸ்கிரிப்ட் ஆனது குரல் கீச்சு சிறுபடத்தின் மீது மேலடுக்கில் தானாகவே தோன்றும்

        .

 

குரல் கீச்சுகள் பற்றி மேலும்

 

  • பயனர்கள் பிளே செய்யக்கூடிய ஆடியோ இணைப்புகளுடன் கீச்சுகளாகக் குரல் கீச்சுகள் வெளியிடப்படும். உங்களின் தற்போதைய சுயவிவரப் புகைப்படம் உங்கள் ஆடியோ இணைப்பில் ஒரு நிலையான படமாகச் சேர்க்கப்படும், மேலும் உங்கள் சுயவிவரப் புகைப்படத்தை நீங்கள் புதுப்பித்தால், ஆடியோ இணைப்பில் உள்ள படம் புதுப்பிக்கப்படாது.
  • iOS -இல் ஒருவரின் குரல் கீச்சைத் தொடுவது ஆடியோ செய்தியை பிளே செய்யும் மற்றும் தொடர்ச்சியான குரல் கீச்சுகளுக்குத் தானாகவே முன்னேறும். 
  • IOS -இல், நீங்கள் பிளே என்பதைத் தொடும்போது, அது தானாகவே உங்கள் திரையின் அடிப்பகுதியில் உள்ள ஆடியோ டாக்கில் சிறிதாக்கப்படும், இதனால் நீங்கள் Twitter -இல் ஸ்க்ரால் செய்யும்போதும், பயன்பாட்டை விட்டு வெளியேறும்போதும் தொடர்ந்து கேட்க முடியும். 

இந்தக் கட்டுரையைப் பகிர்க