உங்கள் தொடர்புகளைப் பதிவேற்றுவது மற்றும் நிர்வகிப்பது எவ்வாறு

உங்கள் தொடர்புகளை உங்கள் கணக்கில் பதிவேற்றும்போது, Twitter -இல் உங்களுக்குத் தெரிந்தவர்களைக் கண்டுபிடிக்க நாங்கள் உங்களுக்கு உதவலாம். பிற நபர்களை அவர்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண் மூலம் கண்டுபிடிக்க அனுமதித்துள்ள தொடர்புகளை நீங்கள் கண்டுபிடித்துப் பின்தொடர முடியும். உங்களுக்கும் பிற நபர்களுக்கும் பரிந்துரைகளை வழங்குவது அல்லது பயனர் கணக்குகள் மற்றும் கீச்சுகளைக் காண்பிப்பது போன்ற, உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்க உங்களின் இறக்குமதி செய்யப்பட்ட முகவரிப் புத்தகத்தில் உள்ள தொடர்புகளையும் நாங்கள் பயன்படுத்தலாம். கணக்குப் பரிந்துரைகளைச் செய்வதற்கு உங்கள் பதிவேற்றிய தொடர்புகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதையும் Twitter -இல் பின்தொடர்வதற்கு நபர்களைக் கண்டுபிடிக்கும் பிற வழிகள் பற்றியும் மேலும் அறிக.

உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண் மூலமாக உங்களைப் பிறர் கண்டுபிடிக்க அனுமதிக்கும் தனியுரிமை அமைப்புகளைச் சரிப்படுத்துவதன் மூலம், Twitter உங்கள் கணக்கை மற்றவர்களுக்குப் பரிந்துரைக்க உங்கள் முகவரிப் புத்தகத்தைப் பயன்படுத்தலாமா என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். 

Twitter -இல் தொடர்புகளைக் கண்டறிய
படி 1

மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.

படி 2

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும். 

படி 3

கண்டறிதல் மற்றும் தொடர்புகள் என்பதன் கீழ், கண்டறிதல் மற்றும் தொடர்புகள் என்பதைத் தொடவும்.

படி 4

முகவரிப் புத்தகத் தொடர்புகளை ஒத்திசை என்பதைத் தொடவும். உங்கள் தொடர்புகளை ஒத்திசைக்கும்போது, தொடர்ந்து நடக்கும் அடிப்படையில் உங்கள் சாதனத்தின் முகவரிப் புத்தகத்திலிருந்து Twitter -க்குத் தொடர்புகள் பதிவேற்றப்படும்.

படி 5

ஏற்கனவே Twitter -இல் இருக்கும், உங்கள் முகவரிப் புத்தகத்திலிருந்து தொடர்புகளின் கணக்குகள் காண்பிக்கப்படும்.

படி 1

மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை  அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானை பார்ப்பீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் எந்த ஐகானையும் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 2

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.

படி 3

கண்டறிதல் மற்றும் தொடர்புகள் என்பதன் கீழ், கண்டறிதல் மற்றும் தொடர்புகள் என்பதைத் தொடவும்.

படி 4

முகவரிப் புத்தகத் தொடர்புகளை ஒத்திசை என்பதைத் தொடவும். உங்கள் தொடர்புகளை ஒத்திசைக்கும்போது, தொடர்ந்து நடக்கும் அடிப்படையில் உங்கள் சாதனத்தின் முகவரிப் புத்தகத்திலிருந்து Twitter -க்குத் தொடர்புகள் பதிவேற்றப்படும்.

படி 5

ஏற்கனவே Twitter -இல் இருக்கும், உங்கள் முகவரிப் புத்தகத்திலிருந்து தொடர்புகளின் கணக்குகள் காண்பிக்கப்படும்.

IOS அல்லது Android பயன்பாட்டிற்காக Twitter -இல் முகவரிப் புத்தகத் தொடர்புகளை ஒத்திசைப்பதை நிறுத்த

முகவரிப் புத்தகத் தொடர்புகளை ஒத்திசை அமைப்பைச் சரிசெய்வதன் மூலம் உங்கள் தொடர்புகளை Twitter -இல் தொடர்ந்து பதிவேற்றுவதை நிறுத்தலாம்.

iOS -க்கான Twitter -ஐப் பயன்படுத்துதல்:

 1. மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானை தொடவும்.
 2. அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொட்டு, பிறகு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.
 3. கண்டறிதல் மற்றும் தொடர்புகள் என்பதன் கீழ், கண்டறிதல் மற்றும் தொடர்புகள் என்பதைத் தொடவும்.
 4. முகவரிப் புத்தகத் தொடர்புகளை ஒத்திசை என்பதற்கு அருகில், முடக்குவதற்கு ஸ்லைடரை இழுக்கவும்.

Android -க்கான Twitter -ஐப் பயன்படுத்துதல்:

 1. மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை  அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களிடம் உள்ள எந்த ஐகானையும் தொடவும்.
 2. அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொட்டு, பிறகு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.
 3. கண்டறிதல் மற்றும் தொடர்புகள் என்பதன் கீழ், கண்டறிதல் மற்றும் தொடர்புகள் என்பதைத் தொடவும்.
 4. முகவரிப் புத்தகத் தொடர்புகளை ஒத்த்சை என்பதற்கு அருகிலுள்ள பெட்டியைத் தேர்வுநீக்கு அதை ஆஃப் செய்யவும்.

குறிப்பு: குறிப்பிட்ட சாதனத்தில் உங்கள் முகவரிப் புத்தகத் தொடர்புகளை ஒத்திசை அமைப்பை ஆஃப் செய்யும்போது, அது அந்தச் சாதனத்திலிருந்து மட்டும் Twitter உடன் தொடர்புகளை ஒத்திசைப்பதை நிறுத்தும். பிற சாதனங்களிலிருந்து உங்கள் தொடர்புகளை ஒத்திசைப்பதை நிறுத்த விரும்பினால், அந்தச் சாதனங்களில் உங்கள் அமைப்புகளைச் சரிசெய்ய வேண்டும் அல்லது Twitter -இலிருந்து எல்லாத் தொடர்புகளையும் அகற்ற வேண்டும். எல்லாத் தொடர்புகளையும் அகற்றாவிட்டால், நீங்கள் முன்பு பதிவேற்றிய தொடர்புகளை Twitter தொடர்ந்து சேமித்துப் பயன்படுத்தும்.

iOS அல்லது Android -க்கான Twitter பயன்பாட்டிற்கு உங்களின் Twitter -இல் தொடர்புகளை அகற்ற
 
 1. மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானை (iOS) அல்லது வழிசெலுத்தல் மெனு ஐகானை  அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானை (Android) தொடவும்.
 2. அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொட்டு, பிறகு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.
 3. கண்டறிதல் மற்றும் தொடர்புகள் என்பதன் கீழ், கண்டறிதல் மற்றும் தொடர்புகள் என்பதைத் தொடவும்.
 4. அனைத்துத் தொடர்புகளையும் அகற்று என்பதைத் தொடவும். செயல்கட்டளையைத் தொடுவதன் மூலம் அனைத்துத் தொடர்புகளையும் அகற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
   
குறிப்பு: இது நீங்கள் முன்பு பதிவேற்றிய தொடர்புகள் எவற்றையும் அகற்றும், தொடர்புகளை ஒத்திசைக்க நீங்கள் முன்பு தேர்வு செய்த சாதனங்கள் எவற்றிலும் உங்கள் கணக்கின் முகவரிப் புத்தகத் தொடர்புகளை ஒத்திசை அமைப்பை ஆஃப் செய்யும். இதற்கு சிறிது நேரம் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இதற்கிடையில் Twitter -இல் (உங்கள் தொடர்புகளின் அடிப்படையில்) சில பரிந்துரைகளை நீங்கள் இன்னமும் கவனிக்கலாம்.
 
twitter.com மூலம் தொடர்புகளைக் காணுவதும் அகற்றுவதும் எவ்வாறு
தொடர்புகளைக் காண அல்லது அகற்ற:

எந்த நேரத்திலும் Twitter -இலிருந்து முன்பு இறக்கிய தொடர்புகளைக் காணலாம் அல்லது அகற்றலாம். இந்தத் தகவலை நீக்கிய பின் உங்கள் கணக்குப் பரிந்துரைகள் பொருத்தமானவையாக இல்லாமல் போகலாம் என்பதை நினைவில் கொள்க.

 1. மேலும்  என்னும் மெனுவில் கிளிக் செய்யவும்.
 2. அமைப்புகள் மற்றும் தனியுரிமைக்குச் செல்லவும்.
 3. தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
 4. கண்டறிதல் மற்றும் தொடர்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
 5. தொடர்புகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
 6. உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுமாறு உங்களுக்குக் கூறப்படாமல் இருக்கலாம். பதிவேற்றப்பட்ட உங்கள் தொடர்புகள் அனைத்தும் காட்டப்படும்.
 7. உங்கள் தொடர்புகளை அகற்ற விரும்பினால், அனைத்துத் தொடர்புகளையும் அகற்று என்பதைக் கிளிக் செய்யவும். அகற்று என்பதைக் கிளிக் செய்து இந்தக் கோரிக்கையை உறுதிப்படுத்தியதும், நீங்கள் முன்பு பதிவேற்றிய தொடர்புகள் எவையும் Twitter -இலிருந்து அகற்றப்படும், தொடர்புகளை ஒத்திசைக்க நீங்கள் முன்பு தேர்வு செய்த சாதனங்கள் எவற்றிலும் உங்கள் கணக்கின் முகவரிப் புத்தகத் தொடர்புகளை ஒத்திசை என்ற அமைப்பானது, ஆஃப் செய்யப்படும். இதற்கு சிறிது நேரம் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இதற்கிடையில் Twitter -இல் (உங்கள் தொடர்புகளின் அடிப்படையில்) சில பரிந்துரைகளை நீங்கள் இன்னமும் கவனிக்கலாம்.
   
mobile.twitter.com மூலம் தொடர்புகளை அகற்ற:

 1. உங்கள் சுயவிவரம் ஐகானை தொடவும்.
 2. அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொட்டு, பிறகு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.
 3. கண்டறிதல் மற்றும் தொடர்புகள் என்பதன் கீழ், கண்டறிதல் மற்றும் தொடர்புகள் என்பதைத் தொடவும்.
 4. தொடர்புகளை அகற்று என்பதைத் தொடவும். செயல்கட்டளையைத் தொடுவதன் மூலம் அனைத்துத் தொடர்புகளையும் அகற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க