Twitter -இல் எவ்வாறு வீடியோக்களைப் பகிர்வது மற்றும் பார்ப்பது
Twitter-இல் வீடியோக்களைப் பகிர்தல்
Twitter-இல் வீடியோக்களைப் பகிர்வதற்கு நான்கு வழிகள் உள்ளன:
- பதிவுசெய்தல்: Twitter பயன்பாட்டிலிருந்து வீடியோக்களைப் பதிவுசெய்யலாம், திருத்தலாம், பகிரலாம் (iPhoneக்கான Twitter அல்லது Androidக்கான Twitter OS 4.1 அல்லது பிந்தையவை).
- இறக்குமதிசெய்தல்: நீங்கள் iPhone அல்லது iPadக்கான Twitter பயன்பாட்டைப் பயன்படுத்தினால், உங்கள் சாதனத்திலிருந்து வீடியோக்களை இறக்குமதிசெய்யலாம்.
- பதிவேற்றுதல்: வீடியோக்களை twitter.com -க்குப் பதிவேற்றலாம்.
- நேரலைக்குச் செல்லுதல்: உங்கள் Twitter பயன்பாட்டிலிருந்தே நேரலை வீடியோவை எப்படி உருவாக்குவது என்பதை அறிந்துகொள்ளவும்.
குறிப்பு: உங்கள் அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதிலுள்ள அணுகல்தன்மை பிரிவிலிருந்தும் உங்கள் தன்னியக்க அமைப்புகளைச் சரிசெய்யலாம்.
இணையம் வழியாக ஒரு வீடியோவைப் பதிவேற்ற மற்றும் ட்விட் செய்ய
- தொகுப்பான் பெட்டியைப் பயன்படுத்தவும் அல்லது ட்விட் செய் பொத்தானை அழுத்தவும்.
- கேலரி என்னும் பொத்தானை கிளிக் செய்யவும்
- உங்கள் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு வீடியோ கோப்பைத் தேர்வுசெய்து, திற என்பதைக் கிளிக் செய்யவும். வீடியோவின் வடிவமைப்பு ஆதரிக்கப்படாவிட்டால் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். TweetVideoக்கான கோப்பின் அதிகபட்ச அளவு 512MB ஆகும், 2 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகளுக்கு அதிகமான வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து, கீச்சில் அதனை இணைப்பதற்கு முன்னர் ட்ரிம் செய்யலாம்.
- உங்கள் செய்தியை எழுதி முடித்த பின்னர் உங்கள் கீச்சையும் வீடியோவையும் பகிர்வதற்கு ட்விட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
Twitter-இல் வீடியோக்களைப் பார்த்தல்
காலவரிசைகளில், தருணங்களில், கண்டறிக தாவலில் மற்றும் Twitter முழுவதிலும், சொந்த வீடியோக்களும் GIFகளும் தானாக இயக்கப்படும்.
வீடியோக்கள் தானாக இயக்கப்படுவதை எப்படித் தடுப்பது?
வீடியோ தன்னியக்க அமைப்பை மாற்றுவதன் மூலம் உங்கள் காலவரிசை, தருணங்கள், 'கண்டறிக' தாவல் ஆகியவற்றில் வீடியோக்கள் தானாக இயக்கப்படுவதைத் தடுக்கலாம். வீடியோ தன்னியக்கத்திற்கான உங்கள் அமைப்புகளை twitter.com மற்றும் உங்கள் Twitter பயன்பாட்டிற்குத் தனித்தனியாக சரிசெய்யலாம் (எடுத்துக்காட்டாக, உங்கள் iOS சாதனத்தில் வீடியோக்களைத் தானாக இயங்கும் வகையிலும் இணையத்தில் அவை தானாக இயங்காதவாறும் அமைக்கலாம்).
உங்கள் iOSக்கான Twitter பயன்பாட்டில் தன்னியக்கத்தை சரிசெய்ய:
- உங்கள் அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதற்குச் செல்லவும்.
- பொது பிரிவின் கீழ், டேட்டா பயன்பாடு என்பதைத் தொடவும்.
- வீடியோ தன்னியக்கம் என்பதைத் தொடவும்.
- பின்வரும் விருப்பத்தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்:
செல்லுலாரில் அல்லது Wi-Fi -இல், Wi-Fi -இல் மட்டும் மற்றும் ஒருபோதும் வேண்டாம்.
உங்கள் Androidக்கான Twitter பயன்பாட்டில் தன்னியக்கத்தை சரிசெய்ய:
- உங்கள் அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதற்குச் செல்லவும்.
- பொது பிரிவின் கீழ், டேட்டா பயன்பாடு என்பதைத் தொடவும்.
- வீடியோ தன்னியக்கம் என்பதைத் தொடவும்.
- பின்வரும் விருப்பத்தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்: மொபைல் டேட்டா & Wi-Fi, Wi-Fi மட்டும், ஒருபோதும் வேண்டாம்.
twitter.com -இல் தன்னியக்கத்தை சரிசெய்ய:
- பிரதான மெனுவில் இருந்து, மேலும் என்பதைக் கிளிக் செய்யவும், பின்னர் அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பொது என்பதன் கீழ், டேட்டா உபயோகம் என்பதைக் கிளிக் செய்யவும்.
- தன்னியக்கம் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் செல்லுலாரில் அல்லது Wi-Fi -இல், அல்லது ஒருபோதும் வேண்டாம் என்பவற்றிற்கு இடையில் தேர்வு செய்யவும்.
குளோஸ்டு கேப்ஷன்கள் மற்றும் சப்டைட்டில்கள்
வீடியோவில் குளோஸ்டு கேப்ஷன்களை எவ்வாறு காண்பது:
உங்கள் சாதனத்தின் அணுகல்தன்மை அமைப்புகளில் கேப்ஷன்கள் விருப்பத்தை இயக்கவும். iOS-இல், இது குளோஸ்டு கேப்ஷன்கள் என லேபிளிடப்பட்டிருக்கும். Android-இல் இது கேப்ஷன்கள் என லேபிளிடப்பட்டிருக்கும்.
சப்டைட்டில்களை எவ்வாறு காண்பது:
உங்கள் சாதனத்தின் ஒலியை அணைக்கவும். இணையத்தில் சப்டைட்டில்களைக் காண, வீடியோவில் “CC” ஸ்லைடரைத் தொடவும்.
குறிப்பு: எல்லா வீடியோக்களிலும் கேப்ஷன்கள் அல்லது சப்டைட்டில்கள் இருக்காது. iOS மற்றும் Android-இல், உங்கள் காலவரிசையில் வீடியோக்களைப் பார்க்கும்போது கேப்ஷன்கள் தானாகவே காண்பிக்கப்படும். கேப்ஷன்களை முழுத் திரையில் காண, கணினியில் கேப்ஷன்களை இயக்கவும்.
Twitter-இல் நேரலை வீடியோக்களைப் பார்த்தல்
தருணங்கள், கண்டறிக தாவல், நடப்புகள் ஆகியவற்றிலிருந்து அல்லது நேரலையில் உள்ள ஒரு கணக்கிலிருந்து அனுப்பப்படும் கீச்சுகளிலுள்ள நேரலை வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம்.
Amazon Fire TV மற்றும் Apple TV -இலும் Twitter இலிருந்து நேரலை நிகழ்ச்சியை நீங்கள் பார்க்கலாம். Xbox மற்றும் Android TV பயனர்கள் தங்கள் இணைய உலாவியைத் தொடங்கி, twitter.com -க்குச் சென்று Twitter-ஐப் பயன்படுத்தி மகிழலாம்.
நேரலை வீடியோ அல்லது ரீப்ளேவைப் பார்க்கும்போது, அந்த அலைபரப்பை கீச்சு, நேரடிச்செய்தி வழியாக அல்லது இணைப்பை நகலெடுத்துப் பகிரலாம். முழு அலைபரப்பையும் பகிரலாம் அல்லது உங்களுக்கு விருப்பமான குறிப்பிட்ட நேரத்திலிருந்து தொடங்கும் அலைபரப்பைப் பகிரலாம்.
நேரலை அலைபரப்பை அல்லது ரீப்ளேவை எப்படிப் பகிர்வது:
- நேரலை வீடியோ அல்லது ரீப்ளே முழுத்திரை பயன்முறையிலிருந்து, பகிர் ஐகானை கிளிக் செய்யவும் அல்லது தொடவும்
- ஒரு முழு நேரலை வீடியோ அல்லது ரீப்ளேவைத் தொடக்கத்திலிருந்து ட்விட் செய்ய, நேரடிச்செய்தி அனுப்ப அல்லது அதன் இணைப்பை நகலெடுக்க நேரலையில் பகிர்(நேரலையில் இருக்கும்போது) அல்லது தொடக்கத்திலிருந்து பகிர் (ரீப்ளே பயன்முறையில் இருக்கும்போது) என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
- ஒரு முழு நேரலை வீடியோ அல்லது தேர்ந்தெடுப்புப் பட்டியைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கும் ரீப்ளேவை ட்விட் செய்ய, நேரடிச்செய்தி அனுப்ப அல்லது அதன் இணைப்பை நகலெடுக்க இதிலிருந்து பகிர்… என்பதை கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
நேரலை வீடியோக்களைப் பார்க்கும்போது நீங்கள் சிக்கல்களை எதிர்கொள்ளலாம். பொதுவாக, வலுவான நெட்வொர்க் இணைப்பிலிருந்து பார்ப்பது மற்றும்/அல்லது வேறொரு நெட்வொர்க் அல்லது உலாவியைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. கூடுதலாக, பயன்பாடு அல்லது உலாவியை மூடி மீண்டும் திறப்பதும் உதவக்கூடும். சிறந்த முடிவுகளைப் பெற, சமீபத்தியது வரை புதுப்பிக்கப்பட்ட பயன்பாடு அல்லது உலாவிப் பதிப்பைப் பயன்படுத்தவும். நேரலை வீடியோவைப் பார்ப்பதில் சிக்கல்கள் நீடித்தால், எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.
வீடியோவை முன்னால் அல்லது பின்னால் நகர்த்துதல்
ஒரு வீடியோவைப் பார்க்கும்போது, அதை விரைவாகப் பின்னால் அல்லது முன்னால் நகர்த்துவதற்கு, உங்கள் திரையை இருமுறை தொடவும்.
ஒரு வீடியோவில் உள்ளடக்கத்தை எப்படி முன்னால்/பின்னால் நகர்த்துவது:
- 5 வினாடிகள் முன்னால் செல்ல, வீடியோ திரையின் வெளி வலதுபக்கத்தில் இருமுறை தொடவும்.
- 5 வினாடிகள் பின்னால் செல்ல, வீடியோ திரையின் வெளி இடதுபக்கத்தில் இருமுறை தொடவும்.
முன்னால்/பின்னால் நகர்த்த இருமுறை தட்டியவுடன், அதே திசையில் தொடர்ந்து நகர ஒருமுறை தொடவும்.
முன்னால்/பின்னால் நகர்த்துவதைத் தற்போது முழுத்திரையில் வீடியோக்களைப் பார்க்கும்போது மட்டுமே செய்ய முடியும்.
குறிப்பு: பிரீமியம் நேரலை உள்ளடக்க ஸ்ட்ரீமிங், உட்பொதிக்கப்பட்ட நேரலை வீடியோ விட்ஜட் ஆகியவை வேறொரு twitter.com டொமைனான twimg.com -இன் குக்கீகள் செய்யும் இரண்டு விஷயங்களைச் சார்ந்திருக்கின்றன: நேரலை வீடியோ அனுபவத்தைத் தயார்செய்தல் மற்றும் விளம்பரங்களை வழங்குதல். உங்கள் உலாவியில் மூன்றாம் தரப்பு குக்கீகள் முடக்கப்பட்டிருந்தால், நேரலை வீடியோ அனுபவம் வேலை செய்யாது, அத்துடன் உங்களுக்கு நேரலை அனுபவத்தை வழங்குவதற்கு ஆதரவளிக்கும் விளம்பரங்களை எங்களால் வழங்க இயலாது. Safari பயனர்களிடம் கோரப்படும்போது அவர்கள் “அனுமதி” பொத்தானை கிளிக் செய்தால், அவர்களுடைய உலாவி அமைப்புகளை மாற்றாமலேயே பிரீமியம் நேரலை உள்ளடக்க ஸ்ட்ரீமிங் அல்லது உட்பொதிக்கப்பட்ட நேரலை வீடியோ விட்ஜட்டைப் பார்க்கலாம். இது twimg.com -க்கான ஒரு குக்கீயை அமைக்க எங்களை அனுமதிக்கும் மற்றும் நேரலை வீடியோ அனுபவத்தைத் தயார்செய்யவும் விளம்பரங்களை வழங்கும் எங்களுக்கு உதவும். நீங்கள் வேறொரு உலாவியைப் பயன்படுத்தினால், மூன்றாம் தரப்பு குக்கீகளை அனுமதிப்பது குறித்த தகவல்களைப் பார்க்க உங்கள் உலாவியின் உதவிப் பிரிவைப் பார்க்கவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்கள் கீச்சுகள் பாதுகாக்கப்பட்டிருந்தால், உங்கள் கீச்சுகளிலுள்ள வீடியோக்களை உங்களைப் பின்தொடர்பவர்கள் மட்டுமே பார்க்க முடியும். பாதுகாக்கப்பட்ட கீச்சுகளில் நீங்கள் பகிரும் வீடியோக்களை உங்களைப் பின்தொடர்பவர்கள் பதிவிறக்கலாம் அல்லது அவற்றுக்கான இணைப்புகளை மீண்டும் பகிரலாம் என்பதைக் குறித்துக்கொள்ளவும். Twitter-இல் பகிரப்படும் வீடியோக்களுக்கான இணைப்புகள் பாதுகாக்கப்பட்டவை அல்ல. அவற்றுக்கான இணைப்பு உள்ள எவரும் அவற்றிலுள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க முடியும். Twitter-இல் உங்கள் வீடியோக்களை எவரும் பார்க்க நீங்கள் விரும்பவில்லை எனில், அந்த வீடியோக்களைக் கொண்ட கீச்சுகளை நீக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
முன்னதாகப் பதிவுசெய்த ஒரு வீடியோவை அல்லது உங்கள் iOSக்கான Twitter மற்றும்Androidக்கான Twitter பயன்பாட்டிலிருந்து ஒரு அலைபரப்பை டாக் செய்யலாம். வீடியோவை டாக் செய்வதன் மூலம், Twitter-ஐப் பயன்படுத்தியவாறே (உங்கள் காலவரிசையைப் பார்ப்பது அல்லது நேரடிச்செய்தி அனுப்புவது போன்றவற்றைச் செய்தவாறு) வீடியோவை எளிதாகப் பார்க்கலாம்.
ஒரு வீடியோவை எப்படி டாக் செய்வது மற்றும் அன்டாக் செய்வது (iOS மற்றும் Android):
- ஒரு வீடியோவை டாக் செய்ய, முழுத்திரைப் பயன்முறையில் வீடியோவின் மேல்வலதுபுறமுள்ள டாக்கிங் ஐகானை தொடவும்.
- டாக் செய்த வீடியோவிலிருந்து முழுத்திரைக் காட்சிக்குத் திரும்ப, வீடியோவைத் தொடவும்.
- டாக் செய்த வீடியோவை நிராகரிக்க, அந்த வீடியோ மறையும் வரை அதை உங்கள் திரையின் முனை நோக்கி விரலால் இழுக்கவும். பதிலாக, நீங்கள் வேறொரு வீடியோவைத் தொடும்போது தற்போது டாக் செய்யப்பட்ட வீடியோ தானாக மறையும்.
மொபைல் பயன்பாடுகளில் தற்போது MP4 மற்றும் MOV வீடியோ வடிவமைப்புகளை ஆதரிக்கிறோம்.
இணையத்தில், MP4 வீடியோ வடிவமைப்பையும் AAC ஆடியோ உள்ள H264 வடிவமைப்பையும் ஆதரிக்கிறோம். 512MB வரையுள்ள வீடியோக்களைப் பதிவேற்றலாம், எனினும் வீடியோக்களை 2 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான காலஅளவிற்குத் திருத்துமாறு கோரப்படுவீர்கள்.
இணையத்தில் பதிவேற்றுவதற்கான வீடியோ தெளிவுத்திறன்கள் மற்றும் வடிவ விகிதங்களில் ஏதேனும் வரம்புகள் உள்ளனவா?
- குறைந்தபட்ச தெளிவுத்திறன்: 32 x 32
- அதிகபட்சத் தெளிவுத்திறன்: 1920 x 1200 (மற்றும் 1200 x 1900)
- வடிவ விகிதங்கள்: 1:2.39 - 2.39:1 வரம்பு (உள்ளடங்கியது)
- அதிகபட்ச ஃப்ரேம் விகிதம்: 40 fps
- அதிகபட்ச பிட்ரேட்: 25 Mbps
வீடியோவில் உங்களால் பயனர்களை இணைக்க முடியாது, எனினும் புகைப்படங்களில் இணைக்கலாம். புகைப்படம் இணைத்தல் பற்றி மேலும் அறிக.
ஒரு புகைப்படத்தை நீக்குவதைப் போலவே கீச்சை நீக்குவதன் மூலம் ஒரு வீடியோவையும் நீக்கலாம்.
முடியும், வீடியோக்களையும் GIFகளையும் நேரடிச்செய்திகள் மூலமாக அனுப்பலாம்.