Twitter வாக்கெடுப்புகள் குறித்த அறிமுகம்

Twitter -இல் மற்றவர்கள் எழுப்பும் கேள்விகளை எடைபோட Twitter வாக்கெடுப்புகள் உங்களை அனுமதிக்கின்றன. நீங்கள் எளிதாக உங்கள் சொந்த வாக்கெடுப்பை உருவாக்கி, முடிவுகளை உடனடியாகக் காணலாம்.

Twitter வாக்கெடுப்பில் வாக்களியுங்கள்
 

வாக்கெடுப்பில் வாக்களிக்க:

கீச்சில் ஒரு வாக்கெடுப்பைக் காணும்போது, உங்களுக்கு விருப்பமான விருப்பத்தைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும். நீங்கள் வாக்களித்த பின்னர் முடிவுகள் உடனடியாகக் காண்பிக்கப்படும். தேர்வுக்கு அடுத்த சரி அடையாளம் மூலம் உங்கள் வாக்கு குறிக்கப்படுகிறது. 

வாக்கெடுப்பில் ஒருமுறை வாக்களிக்கலாம். தற்போதைய மொத்த வாக்கு எண்ணிக்கையும் வாக்கெடுப்பில் மீதமுள்ள நேரமும் வாக்கெடுப்பு தேர்வுகளின் கீழ் காட்டப்படும்.
 

இறுதி முடிவுகளைக் காண:

Twitter வாக்கெடுப்பானது அதை ட்விட் செய்த நபர் நிர்ணயித்த கால அளவைப் பொறுத்து அது இடுகையிடப்பட்ட 5 நிமிடங்கள் முதல் 7 நாட்களுக்குள் முடிவடைகிறது. வென்ற தேர்வு தடிமனாகக் காட்டப்படுகிறது. நீங்கள் ஒரு வாக்கெடுப்பில் வாக்களித்தால், இறுதி முடிவுகள் குறித்து உங்களை விழிப்பூட்டும் புஷ் அறிவிப்பு உங்களுக்குக் கிடைக்கலாம்.
 

தனிப்பட்ட முறையில் வாக்களிக்கவும்:

நீங்கள் ஒரு வாக்கெடுப்பில் வாக்களிக்கும் போது, உங்கள் பங்கேற்பு மற்றவர்களுக்குக் காட்டப்படாது: வாக்கெடுப்பை உருவாக்கியவர் அல்லது பிற பங்கேற்பாளர்கள் யார் வாக்களித்தார்கள் அல்லது எப்படி வாக்களித்தார்கள் என்பதைக் காண முடியாது.

Twitter வாக்கெடுப்பை உருவாக்கவும்
படி 1

கீச்சு எழுதுதல் ஐகானை  தொடவும்.

படி 2

வாக்கெடுப்பைச் சேர் என்ற ஐகானை  தொடவும்

படி 3

உங்கள் வாக்கெடுப்புக் கேள்வியை பிரதான எழுதுதல் பெட்டியில் உள்ளிடவும். உங்கள் வாக்கெடுப்புக் கேள்வியில் அதிகபட்ச எழுத்து எண்ணிக்கை வரை பயன்படுத்தலாம்.

படி 4

உங்கள் முதல் வாக்கெடுப்பு விருப்பத்தை தேர்வு 1 பெட்டியிலும், உங்கள் இரண்டாவது வாக்கெடுப்பு விருப்பத்தை தேர்வு 2 பெட்டியிலும் செருகவும். ஒவ்வொரு விருப்பத்திற்கும் 25 எழுத்துகள் வரை பயன்படுத்தலாம்.

படி 5

உங்கள் வாக்கெடுப்பில் கூடுதல் விருப்பங்களைச் சேர்க்க, + தேர்வைச் சேர் என்பதைத் தொடவும். உங்கள் வாக்கெடுப்பில் நான்கு விருப்பங்கள் இருக்கலாம்.

படி 6

உங்கள் வாக்கெடுப்பின் காலம் இயல்புநிலையாக 1 நாள். உங்கள் வாக்கெடுப்பின் கால அளவை, 1 நாள் என்பதைத் தொட்டு, நாட்கள்மணிநேரம் மற்றும் நிமிடங்கள் ஆகியவற்றைச் சரிசெய்வதன் மூலம் மாற்றலாம். ஒரு வாக்கெடுப்புக்கான குறைந்தபட்ச நேரம் 5 நிமிடங்கள், அதிகபட்சம் 7 நாட்கள்.

படி 7

வாக்கெடுப்பை இடுகையிட, ட்விட் செய் என்பதைத் தொடவும்.

படி 1

கீச்சு எழுதுதல் ஐகானை  தொடவும்.

படி 2

வாக்கெடுப்பைச் சேர் என்ற ஐகானை  தொடவும்

படி 3

உங்கள் வாக்கெடுப்புக் கேள்வியை பிரதான எழுதுதல் பெட்டியில் உள்ளிடவும். உங்கள் வாக்கெடுப்புக் கேள்வியில் அதிகபட்ச எழுத்து எண்ணிக்கை வரை பயன்படுத்தலாம்.

படி 4

உங்கள் முதல் வாக்கெடுப்பு விருப்பத்தை தேர்வு 1 பெட்டியிலும், உங்கள் இரண்டாவது வாக்கெடுப்பு விருப்பத்தை தேர்வு 2 பெட்டியிலும் செருகவும். ஒவ்வொரு விருப்பத்திற்கும் 25 எழுத்துகள் வரை பயன்படுத்தலாம்.

படி 5

உங்கள் வாக்கெடுப்பில் கூடுதல் விருப்பங்களைச் சேர்க்க, + தேர்வைச் சேர் என்பதைத் தொடவும். உங்கள் வாக்கெடுப்பில் நான்கு விருப்பங்கள் இருக்கலாம்.

படி 6

உங்கள் வாக்கெடுப்பின் காலம் இயல்புநிலையாக 1 நாள். உங்கள் வாக்கெடுப்பின் கால அளவை, 1 நாள் என்பதைத் தொட்டு, நாட்கள், மணிநேரம் மற்றும் நிமிடங்கள் ஆகியவற்றைச் சரிசெய்வதன் மூலம் மாற்றலாம். ஒரு வாக்கெடுப்புக்கான குறைந்தபட்ச நேரம் 5 நிமிடங்கள், அதிகபட்சம் 7 நாட்கள்.

படி 7

வாக்கெடுப்பை இடுகையிட, ட்விட் செய் என்பதைத் தொடவும்.

படி 1

உங்கள் முகப்புக் காலவரிசையின் மேலே உள்ள கீச்சு எழுதுதல் பெட்டியில் கிளிக் செய்யடவும் அல்லது இடது வழிசெலுத்தல் பட்டியில் உள்ள ட்விட் செய் பொத்தானைக் கிளிக் செய்யவும்.

படி 2

வாக்கெடுப்பைச் சேர் ஐகானை  கிளிக் செய்யவும்

படி 3

உங்கள் வாக்கெடுப்புக் கேள்வியை பிரதான எழுதும் பெட்டியில் உள்ளிடவும். உங்கள் வாக்கெடுப்புக் கேள்வியில் அதிகபட்ச எழுத்து எண்ணிக்கை வரை பயன்படுத்தலாம். வாக்கெடுப்பை இடுகையிட, கீச்சில் உரை சேர்க்கப்பட வேண்டும்.

படி 4

உங்கள் முதல் வாக்கெடுப்பு விருப்பத்தை தேர்வு 1 பெட்டியிலும், உங்கள் இரண்டாவது வாக்கெடுப்பு விருப்பத்தை தேர்வு 2 பெட்டியிலும் செருகவும். ஒவ்வொரு விருப்பத்திற்கும் 25 எழுத்துகள் வரை பயன்படுத்தலாம்.

படி 5

உங்கள் வாக்கெடுப்பில் கூடுதல் விருப்பங்களைச் சேர்க்க, + தேர்வைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் வாக்கெடுப்பில் நான்கு விருப்பங்கள் இருக்கலாம்.

படி 6

உங்கள் வாக்கெடுப்பின் காலம் இயல்புநிலையாக 1 நாள். உங்கள் வாக்கெடுப்பின் கால அளவை, 1 நாள் என்பதைக் கிளிக் செய்து நாட்கள், மணிநேரம் மற்றும் நிமிடங்கள் ஆகியவற்றைச் சரிசெய்வதன் மூலம் மாற்றலாம். ஒரு வாக்கெடுப்புக்கான குறைந்தபட்ச நேரம் 5 நிமிடங்கள், அதிகபட்சம் 7 நாட்கள்.

படி 7

வாக்கெடுப்பை இடுகுயிட, ட்விட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.


குறிப்பு: Twitter வாக்கெடுப்பில் புகைப்படங்களைச் சேர்க்க முடியாது.

இந்தக் கட்டுரையைப் பகிர்க