Twitter -இல் கணக்குகளை எவ்வாறு செயல்மறைப்பது
'செயல்மறை' அம்சம், ஒரு கணக்கைப் பின்தொடராமல் அல்லது தடைசெய்யாமல் உங்கள் காலவரிசையிலிருந்து அந்தக் கணக்கின் கீச்சுகளை அகற்றுவதற்கு உங்களை அனுமதிக்கின்ற ஓர் அம்சமாகும். செயல்மறைக்கப்பட்ட கணக்குகளுக்கு நீங்கள் அவற்றைச் செயல்மறைத்துள்ளீர்கள் என்பது தெரியாது, மேலும் எந்த நேரத்திலும் நீங்கள் அவற்றைச் செயல்மறைவு நீக்கலாம். நீங்கள் செயல்மறைத்துள்ள கணக்குகளின் பட்டியலை அணுக, twitter.com -இல் உங்கள் செயல்மறைக்கப்பட்ட கணக்கு அமைப்புகள் என்பதற்கோ iOS அல்லது Android -க்கான Twitter -இல் உங்கள் பயன்பாட்டு அமைப்புகள் என்பதற்கோ செல்லவும்.
அறிவிப்புகளைச் செயல்மறைப்பது பற்றி அறிய, Twitter -இல் எங்கள் மேம்பட்ட செயல்மறைக்கும் விருப்பங்கள் பற்றி படிக்கவும்.
செயல்மறைப்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:
- செயல்மறைக்கப்பட்ட கணக்குகள் உங்களைப் பின்தொடரலாம் மற்றும் நீங்கள் செயல்மறைக்கப்பட்ட கணக்குகளைப் பின்தொடரலாம். ஒரு கணக்கைச் செயல்மறைப்பது, நீங்கள் அதைப் பின்தொடர்வதை நிறுத்தாது.
- ஒரு கணக்கைச் செயல்மறைப்பது, அந்தக் கணக்கு உங்களுக்கு ஒரு நேரடிச்செய்தியை அனுப்புவதற்கான அதன் திறனைப் பாதிக்காது.
- செயல்மறைக்கப்பட்ட எந்தவொரு கணக்கிலிருந்தும் இனி புஷ் அறிவிப்புகளைப் பெறமாட்டீர்கள்.
நீங்கள் பின்தொடரும் செயல்மறைக்கப்பட்ட கணக்குகளுக்கு:
- செயல்மறைக்கப்பட்ட கணக்கின் பதில்களும் குறிப்பீடுகளும் இன்னமும் உங்கள் அறிவிப்புகள் தாவலில் தோன்றும்.
- செயல்மறைக்கப்பட்ட கணக்கின் கீச்சுகள் – கணக்கைச் செயல்மறைக்கும் முன் இடுகையிட்டவை – உங்கள் முகப்புக் காலவரிசையில் இருந்து அகற்றப்படும்.
- நீங்கள் ஓர் உரையாடலை கிளிக் செய்யும்போது அல்லது தொடும்போது, செயல்மறைக்கப்பட்ட கணக்குகளின் பதில்கள் காண்பிக்கப்படும்.
நீங்கள் பின்தொடராத செயல்மறைக்கப்பட்ட கணக்குகளுக்கு:
- பதில்களும் குறிப்பீடுகளும் உங்கள் அறிவிப்புகள் தாவலில் தோன்றாது.
- நீங்கள் பின்தொடராத ஒரு கணக்கைச் செயல்மறைத்து, உங்களைக் குறிப்பிடும் ஓர் உரையாடலை அவர்கள் தொடங்கினால், நீங்கள் பின்தொடர்கிறவர்கள் அந்த உரையாடலில் பதிலளித்து, உங்களைக் குறிப்பிடும் அறிவிப்புகளை மட்டுமே பெறுவீர்கள். உங்களைக் குறிப்பிடும் குறிப்பீடுகள் அனைத்தையும் நீங்கள் பார்க்க விரும்பினால், உங்கள் பயனர்பெயரைத் தேடுவதன் மூலம் அவற்றைப் பார்க்கலாம்.
- நீங்கள் ஒரு உரையாடலை கிளிக் செய்யும்போது அல்லது தொடும்போது, செயல்மறைக்கப்பட்ட கணக்குகளின் பதில்கள் காண்பிக்கப்படாது.
- நீங்கள் செயல்மறைக்காத ஒரு கணக்கானது நீங்கள் செயல்மறைத்துள்ள ஒரு கணக்கு குறித்து கருத்துகளுடன் மறு ட்விட் செய்தால், இந்தக் கீச்சு கிடைக்கவில்லை என்ற செய்தியுடன் கீச்சு மறைக்கப்படும்.
கணக்கை எவ்வாறு செயல்மறைவு நீக்குவது
- செயல்மறைக்கப்பட்ட கணக்கின் சுயவிவரத்தை Twitter -இல் பார்வையிடவும்.
- twitter.com -இல், செயல்மறைவு நீக்க, செயல்மறை ஐகானை கிளிக் செய்யவும். iOS அல்லது Android -க்கான Twitter பயன்பாட்டில், இந்தக் கணக்கிலிருந்து கீச்சுகளைச் செயல்மறைத்துள்ளீர்கள் என்பதற்குப் பக்கத்தில் உள்ள செயல்மறைவு நீக்கு என்பதைத் தொடவும்.
உங்கள் செயல்மறைக்கப்பட்ட கணக்குகளின் பட்டியலைப் பார்க்க மற்றும் நிர்வகிக்க
twitter.com -இல் உங்கள் செயல்மறைக்கப்பட்ட கணக்கு அமைப்புகளுக்குச் சென்று அல்லது iOS அல்லது Android -க்கான Twitter -இல் உங்கள் பயன்பாட்டு அமைப்புகளைப் பார்வையிட்டு, உங்கள் செயல்மறைக்கப்பட்ட கணக்குகளின் முழுப் பட்டியலைப் பார்க்கலாம்.
iOS -க்கான Twitter பயன்பாட்டில்:
- உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.
- தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.
- பாதுகாப்பு என்பதன் கீழ், செயல்மறைக்கப்பட்டவை என்பதைத் தொடவும்.
- செயல்மறைக்கப்பட்ட கணக்குகள் என்பதைத் தொடவும்.
- செயல்மறை ஐகானை தொடுவதன் மூலம், கணக்குகளைச் செயல்மறைவு நீக்கலாம்
- பின்தொடர் மற்றும் பின்தொடராதே ஐகான்களைத் தொடுவதன் மூலமும் இந்தப் பட்டியலில் உள்ள கணக்குகளில் ஒன்றை நீங்கள் பின்தொடரவோ பின்தொடர்வதை நிறுத்தவோ முடியும்.
- ஒரு கணக்கைத் தடைசெய்ய அல்லது புகாரளிக்க, சுயவிவரப் படத்தைத் தொடவும். நீங்கள் கணக்கின் சுயவிவரத்திற்கு அனுப்பப்படுவீர்கள். இங்கிருந்து, ஓவர்ஃப்ளோ ஐகானை தொட்டு, மெனுவிலிருந்து தடைசெய் அல்லது புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Android -க்கான Twitter பயன்பாட்டில்:
- மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களிடம் உள்ள எந்த ஐகானையும் தொடவும்.
- அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.
- தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.
- பாதுகாப்பு என்பதன் கீழ், செயல்மறைக்கப்பட்ட கணக்குகள் என்பதைத் தொடவும்.
- செயல்மறை ஐகானை தொடுவதன் மூலம், பயனர்களைச் செயல்மறைவு நீக்கலாம்
- பின்தொடர் மற்றும் பின்தொடராதே ஐகான்களைத் தொடுவதன் மூலமும், இந்தப் பட்டியலில் உள்ள கணக்குகளில் எதையும் நீங்கள் பின்தொடரவோ பின்தொடர்வதை நிறுத்தவோ முடியும்.
- ஒரு கணக்கைத் தடைசெய்ய அல்லது புகாரளிக்க, சுயவிவரப் படத்தைத் தொடவும். நீங்கள் கணக்கின் சுயவிவரத்திற்கு அனுப்பப்படுவீர்கள். இங்கிருந்து, ஓவர்ஃப்ளோ ஐகானை தொட்டு, மெனுவிலிருந்து தடைசெய் அல்லது புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
twitter.com வழியாக:
- உங்கள் சுயவிவரம் ஐகானில் இருந்து, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.
- செயல்மறைக்கப்பட்ட கணக்குகள் என்பதை கிளிக் செய்யவும்.
- பட்டியலின் மேற்புறத்தில் இருந்து, நீங்கள் செயல்மறைத்துள்ள நீங்கள் பின்தொடரும் கணக்குகளை அல்லது நீங்கள் செயல்மறைத்துள்ள அனைத்து கணக்குகளையும் காட்டுமாறு தேர்ந்தெடுக்கலாம்.
- செயல்மறை பொத்தானை கிளிக் செய்வதன் மூலம், கணக்குகளைச் செயல்மறைவு நீக்கலாம்
- கணக்கைத் தடைசெய்ய அல்லது புகாரளிக்க, ஓவர்ஃப்ளோ ஐகானை கிளிக் செய்து, மெனுவிலிருந்து தடைசெய் அல்லது புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
குறிப்பு: நீங்கள் பின்தொடரும் கணக்குகள், நீங்கள் தற்போது பின்தொடர்கின்ற மற்றும் செயல்மறைக்கின்ற கணக்குகளைப் பட்டியலிடும். அனைத்தும் தாவலானது, நீங்கள் பின்தொடர்பவை உள்ளிட்ட நீங்கள் செயல்மறைக்கின்ற அனைத்துக் கணக்குகளையும் காட்டும்.
கணக்குகளைப் பின்தொடராமல் விடுதல், தடைசெய்தல் மற்றும் புகாரளித்தல்
கணக்குகளைச் செயல்மறைப்பதோடு கூடுதலாக, விதிமீறல்களுக்காகக் கணக்குகளைப் பின்தொடர்வதை நிறுத்தலாம், தடைசெய்யலாம், புகார் அளிக்கலாம் அல்லது விதிமீறல்களுக்காகக் கணக்குகளை ஸ்பேம் என்பதாகவும் புகார் அளிக்கலாம்.