தொகுப்பானிலிருந்து ஐகானை தொடவும்.
அடிப்புறத்தில் உள்ள தேர்ந்தெடுப்பானில் நேரலை என்பதைத் தொடவும்.
வீடியோ இல்லாமல் ஆடியோவுடன் நேரலைக்குச் செல்ல, மேல் வலதுபுறத்தில் உள்ள மைக்ரோஃபோனை தொடவும். இது கேமராவை முடக்கும், நீங்கள் கூறுவதைப் பார்வையாளர்கள் கேட்பார்கள், ஆனால் உங்களைப் பார்க்க மாட்டார்கள்.
விரும்பினால் கீச்சாகத் தோன்றும் விருப்பத்திற்குரிய விளக்கத்தையும், இருப்பிடத்தையும் நிரப்பவும்.
நேரலைக்குச் செல்வதற்கு முன் விருந்தினர்களை அழைக்க, உங்கள் அலைபரப்பில் சேர பயனர்களைத் தேர்ந்தெடுக்க அல்லது தேட விருந்தினர்களை அழைக்கவும் என்பதைத் தொடவும்.
- நீங்கள் சேர விரும்பும் விருந்தினர்களின் சுயவிவர ஐகானை தொடவும்.
- சேமி என்பதைத் தொடவும்.
நேரலைக்குச் செல்க என்பதைத் தொடவும். விளக்கம் மற்றும் இருப்பிடத்துடன் (சேர்த்திருந்தால்) உங்கள் நேரலை அலைபரப்பு உங்களைப் பின்தொடர்பவரின் காலவரிசையிலுள்ள கீச்சிலும் உங்கள் சுயவிவரத்திலும் தோன்றும்.