Android –இல் Twitter Lite –ஐப் பயன்படுத்துவது எவ்வாறு

Twitter Lite பயன்பாடு என்பது, ஸ்மார்ட்ஃபோனில் Twitter –ஐப் பயன்படுத்துவதற்கான தரவுக்கும் சேமிப்பகத்திற்கும் நட்பான ஒரு வழி ஆகும். Twitter Lite பயன்பாட்டின் முக்கிய அம்சங்கள்:

  • 2G மற்றும் 3G நெட்வொர்க்குகளில் விரைவாக ஏற்றப்படும். 
  • தரவுப் பயன்பாட்டைக் குறைக்கும் – நீங்கள் பார்க்க விரும்பும் படங்கள் அல்லது வீடியோக்களை மட்டுமே பதிவிறக்க, தரவு சேமிப்பான் பயன்முறையை இயக்கவும்.
  • குறைந்தளவு இடத்தையே பயன்படுத்தும் - 3MB –இலும் குறைந்த நிறுவல் அளவில், Twitter Lite உங்கள் தொலைபேசியில் அதிகளவு இடத்தைப் பயன்படுத்தாது.

Note: Twitter Lite பிரத்தியேகமாகe Google Play ஸ்டோரில்* கிடைக்கிறது மற்றும் Android பதிப்புகள் 5.0 மற்றும் உயர்ந்த பதிப்புகளை ஆதரிக்கும் சாதனங்களுடன் தற்போது இணக்கமாக உள்ளது. நீங்கள் Google Play ஸ்டோரை அணுக முடியாவிட்டால், mobile.twitter.com என்ற தளத்தில் Twitter –இன் மொபைல் இணையப் பதிப்பைப் பயன்படுத்தலாம்.

உங்கள் தரவ உபயோகத்தைக் குறைப்பது எவ்வாறு

நீங்கள் Twitter –ஐப் பயன்படுத்தும்போது பயன்படுத்தப்படும் தரவின் அளவைக் குறைப்பதற்கே Twitter Lite வடிவமைக்கப்பட்டுள்ளது. தரவு சேமிப்பான் பயன்முறையை இயக்குவதன் மூலம், Twitter பயன்படுத்தும் தரவின் அளவைக் குறைக்கலாம். தரவைச் சேமிப்பதற்கு உதவ, நிகழ் நேரத்தில் எந்த ஊடகம் பதிவிறக்கப்படவிரும்புகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்தவும். 

  • டேஷ் மெனுவை அணுக உங்கள் சுயவிவரத்தைத் தொடவும்.
  • இயக்குவதற்கு, தரவு சேமிப்பான் என்பதற்குப் பக்கத்திலுள்ள நிலைமாற்று என்பதைத் தொடவும்.

இந்தப் பயன்முறையில், படங்கள் ஒரு முன்னோட்டமாக வழங்கப்படும், மேலும் நீங்கள் கோரினால் மட்டுமே பெரிய படங்கள் ஏற்றப்படும். Twitter Lite –இல் படத்தை ஏற்று என்பதை நீங்கள் தொட்டால் மட்டுமே படங்களைப் பார்க்கலாம்.

 

உள்நுழைய அல்லது பதிவுசெய்ய

தொடங்குவதற்கு, Twitter Lite பயன்பாடு பதிவிறக்கப்பட்டதும் அதைத் திறக்கவும்.

உள்நுழைய:

  1. உள்நுழை என்பதைத் தொடவும்.
  2. உங்கள் பயனர்பெயர், தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.
  3. உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  4. உள்நுழை என்பதைத் தொடவும்.

புதிய கணக்கிற்குப் பதிவுசெய்ய:

  1. பதிவுசெய் என்பதைத் தொடவும்.
  2. உங்கள் முழுப் பெயரையும் உங்கள் தொலைபேசி எண்ணையும் உள்ளிடவும். உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்த விரும்பினால், பதிலாக மின்னஞ்சலைப் பயன்படுத்து என்பதைத் தொடவும். 
  3. பதிவுசெய் என்பதைத் தொடவும். 
  4. ஒரு கடவுச்சொல்லை உள்ளிட்டு, அடுத்து என்பதைத் தொடவும்.
  5. நீங்கள் ஒரு மின்னஞ்சல் முகவரியைப் பதிவுசெய்ய விரும்பினால், உங்கள் தொலைபேசி எண்ணை நாங்கள் கேட்கக்கூடும். நீங்கள் இதை உள்ளிடலாம் அல்லது இப்போது வேண்டாம் என்பதைத் தொடலாம்.
  6. பயனர்பெயரை உள்ளிட்டு (கிடைக்கின்ற சில விருப்பங்களை நாங்கள் பரிந்துரைப்போம்), பிறகு அடுத்து என்பதைத் தொடவும்.
  7. அந்த வகைகளுக்குள் ஆர்வ வகைகள் மற்றும் கணக்குகளைப் பரிந்துரைப்பதன் மூலம் தொடங்குவதற்கு உங்களுக்கு உதவுவோம்.
  8. நீங்கள் Android சாதனத்தில் இருந்தால், புஷ் அறிவிப்புகளைப் பெறலாம். புஷ் அறிவிப்புகளைப் பெற, அறிவிப்புகளை இயக்கு என்பதைத் தொடவும்.
  9. உங்கள் காலவரிசைக்குச் செல்ல நீங்கள் தயார் என்றால், முடிந்தது என்பதைத் தொடவும்.

கீச்சைப் பதிவுசெய்ய

  1. உங்கள் முகப்புக் காலவரிசை, தேடல் தாவல், அறிவிப்புகள் தாவல் அல்லது சுயவிவரங்களிலிருந்து அணுகக் கூடிய கீச்சைத் தொகு ஐகானை  தொடவும்.
  2. என்ன நடக்கிறது?  என்று கூறப்படும் இடத்தில் தட்டச்சுச் செய்யத் தொடங்கவும்
  3. படத்தை ட்விட் செய்ய விரும்பினால், புகைப்படம் ஐகானை  தொடவும் உங்கள் கீச்சில் நான்கு படங்கள் வரை சேர்க்கலாம்.
  4. பதிவுசெய்ய, ட்விட் செய் என்பதைத் தொடவும்.

குறிப்பு: பல கீச்சுகளைக் கொண்ட ஒரு தொடர்ச்சியை உருவாக்குவது எவ்வாறு என்பதை அறிக.

கணக்குகளைக் கண்டுபிடிக்க மற்றும் பின்தொடர

கணக்கைக் கண்டுபிடிக்க:

  1. தேடல் ஐகானை  தொடவும்
  2. நீங்கள் தேடும் கணக்கின் பெயர் அல்லது பயனர்பெயரை உள்ளிடவும். 
  3. நீங்கள் தட்டச்சு செய்தவுடன் பரிந்துரைக்கப்பட்ட கணக்குகள் மற்றும் போக்குகளின் பட்டியல் தோன்றும்.

கணக்கைப் பின்தொடர:

  1. கணக்கின் சுயவிவரத்திற்குச் சென்று, பின்தொடர் என்பதைத் தொடவும். 
  2. நீங்கள் ஒரு கணக்கிலிருந்து கீச்சைப் பார்த்து, அவரைப் பின்தொடர விரும்பினால், கீச்சை விரிவுபடுத்த அதைத் தொட்டு, பிறகு பின்தொடர் ஐகானை  தொடவும்

கீச்சுகளைப் புத்தகக்குறியிடுவது எவ்வாறு 

நீங்கள் பின்னர் படிக்க விரும்பும் கீச்சுகளைப் புத்தகக்குறியிட, புத்தகக்குறிகள் அம்சத்தைப் பயன்படுத்தவும்:

  1. பகிர் ஐகானைத் தொடவும்.
  2. பின்னர் பார்ப்பதற்காகக் கீச்சுகளைச் சேமிக்க, புத்தகக்குறிகளில் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் புத்தகக்குறிகளை அணுக:

  1. மேல் இடது மூலையில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைத் தொட்டு, புத்தகக்குறிகள் மெனு விருப்பத்தை அணுகவும்.

முகப்புக் காலவரிசை

  1. உங்கள் முகப்புக் காலவரிசையைப் பெற, முகப்பு ஐகானை  தொடவும்.
  2. நீங்கள் பின்தொடரும் கணக்குகளின் சமீபத்திய கீச்சுகளை உங்கள் முகப்புக் காலவரிசை உள்ளடக்கும்.
  3. முகப்புத் தாவலுக்கு அருகில் ஒரு நீலப் புள்ளி உள்ளபோது, உங்கள் காலவரிசையில் தோன்றக் காத்திருக்கும் புதிய கீச்சுகள் உள்ளன. இந்தப் புதிய கீச்சுகளை ஏற்ற, உங்கள் காலவரிசையைக் கீழே இழுக்கவும்.
  4. முகப்புக் காலவரிசையில் இருந்து, கீச்சு விவரங்களைக் காண, தனிப்பட்ட கீச்சைத் தட்டலாம். இங்கிருந்து, நீங்கள் கீச்சுக்குப் பதிலளிக்கலாம், அதை மறுட்விட் செய்யலாம், கீச்சை மேற்கோளிடலாம் அல்லது லைக் செய்யலாம்.
  5. நீங்கள் மீண்டும் முகப்புக் காலவரிசைக்கு வழிசெலுத்த விரும்பும்போது, பின்செல் ஐகானை  தொடவும்

அறிவிப்புகள்

Twitter –இல் உள்ள பிறர் உங்களுடன் எவ்வாறு ஊடாடுகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கக் கூடிய இடமே அறிவிப்புகள் தாவல்.

  1. உங்கள் அறிவிப்புகள் காலவரிசையைப் பெற, அறிவிப்புகள் ஐகானை  தொடவும்.
  2. உங்கள் கீச்சுகளில் லைக் செய்யப்பட்டுள்ளவை, சமீபத்திய மறுகீச்சுகள் (உங்கள் கீச்சுகளில்), உங்களுக்குத் திருப்பிவிடப்பட்ட கீச்சுகள் (பதில்கள் மற்றும் குறிப்பீடுகள்) மற்றும் உங்களுடைய புதிய பின்தொடர்பவர்கள் ஆகியவற்றை உங்கள் அறிவிப்புகள் காலவரிசை காட்டுகிறது.

சுயவிவரம் மற்றும் அமைப்புகள்

உங்கள் சுயவிவரம் மற்றும் அமைப்புகளை அணுக, உங்கள் சுயவிவரப் படத்தைத் தொடவும். மெனுவில், நீங்கள்:

  • உங்கள் சுயவிவரத்தைப் பெற, சுயவிவரம் என்பதைத் தொடவும்.
  • உங்கள் சுயவிவரத்தைத் திருத்த, சுயவிவரம் என்பதையும், பிறகு சுயவிவரத்தைத் திருத்து என்பதையும் தொடவும். இங்கிருந்து, உங்கள் சுயவிவரப் படம், முழுப் பெயர், URL, இருப்பிடம் மற்றும் பயோ ஆகியவற்றைத் திருத்தலாம்.
  • சுயவிவரம் என்பதைத் தொட்டு, நீங்கள் பின்தொடர்வோர் மற்றும் உங்களைப் பின்தொடர்பவர் பட்டியல்களையும் நீங்கள் பதிவுசெய்த ஊடகம் மற்றும் உங்கள் லைக்குகள் ஆகியவற்றையும் பாருங்கள்.
  • உங்கள் அமைப்புகளைத் திருத்த, உங்கள் சுயவிவரப் படத்தைத் தொட்டு, பிறகு அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும். இங்கிருந்து நீங்கள் இவற்றைத் திருத்தலாம்:
  • கணக்கு அமைப்புகள், இவற்றில் அடங்குபவை:
    • பயனர்பெயர்
    • தொலைபேசி
    • மின்னஞ்சல்
    • கடவுச்சொல்
    • பாதுகாப்பு
    • தரவு மற்றும் அனுமதி, இங்குதான் உங்கள் Twitter தரவு மற்றும் இணைக்கப்பட்ட பயன்பாடுகள் ஆகியவற்றை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.
  • தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள்
  • அறிவிப்புகள் அமைப்புகள்
  • உள்ளடக்க விருப்பத்தேர்வுகள்
  • பொது அமைப்புகள், இவற்றில் தரவுப் பயன்பாடு உள்ளடங்கும்

இருட்டுப் பயன்முறையை எவ்வாறு இயக்குவது

  1. மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொடவும்.

  2. அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.

  3. காட்சி மற்றும் ஒலி தாவலைத் தொடவும்.

  4. அம்சத்தை இயக்க, இருட்டுப் பயன்முறை ஸ்லைடரைத் தொடவும்.

  5. அம்சத்தை முடக்க, இருட்டுப் பயன்முறை ஸ்லைடரை மீண்டும் தொடவும்.


மெனுவிலிருந்து இருட்டுப் பயன்முறையை எவ்வாறு இயக்குவது

  1. உங்கள் சுயவிவரத்தைத் தொடவும். 

  2. இருட்டுப் பயன்முறையை இயக்க, கீழ் இடதுபுறம் அமைந்துள்ள இருட்டுப் பயன்முறை ஸ்லைடரைத் தொடவும்.

நேரடிச்செய்திகள்

மேலும் தகவல்களுக்கு, நேரடிச்செய்திகள் பற்றி மற்றும் எங்கள் நேரடிச்செய்தி FAQகள் ஆகியவற்றைப் படிக்கவும். குறிப்பு: நேரடிச்செய்திகளில் முன்பே தீர்மானிக்கப்பட்ட பதில்களை Twitter Lite ஆதரிக்காது (எ.கா. வணிகச் சுயவிவரங்களில் இருந்து). 

*Twitter Lite பயன்பாடு பின்வரும் நாடுகளில் கிடைக்கிறது: அல்பேனியா, அங்கோலா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆர்மீனியா, அருபா, ஆஸ்திரியா, அஜர்பைஜான், பஹாமாஸ், பஹ்ரைன், பெலிஸ், பெனின், போஸ்னியா மற்றும் ஹெர்ஜிகோவினா, போட்ஸ்வானா, பல்கேரியா, புர்கினா பாசோ, கம்போடியா, கேமரூன், கேப் வெர்டே, கோட் டி'ஐவோர், குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு. ஃபிஜி, பின்லாந்து, காபோன், இத்தாலி, ஜமைக்கா, குவைத், கிர்கிஸ்தான், லாவோஸ், லாத்வியா, லீச்டென்ஸ்டீன், லக்ஸம்பர்க், மாசிடோனியா (FYROM), மாலி, மால்டா, மொரிஷியஸ், மால்டோவா, மொசாம்பிக், மியன்மார் (பர்மா), நமிபியா, நைஜர், ஓமான், பாகிஸ்தான், பாப்புவா நியூ கினியா, போலந்து, கத்தார், ரஷ்யா, ருவாண்டா, சவுதி அரேபியா, செனகல், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, இலங்கை, சுவீடன், ஸ்விட்சர்லாந்து, தஜிகிஸ்தான், டோகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துர்க்மேனிஸ்தான், ஐக்கிய அரபிய எமிரேட்ஸ், ஐக்கிய இராஜ்ஜியம், உஸ்பெகிஸ்தான், வியட்நாம் மற்றும் சாம்பியா.

 

Bookmark or share this article