Twitter பட்டியல்களை எவ்வாறு பயன்படுத்துவது

உங்கள் காலவரிசையில் நீங்கள் காணும் கீச்சுகளைத் தனிப்பயனாக்க, ஒழுங்கமைக்க மற்றும் முன்னுரிமை அளிக்க Twitter பட்டியல்கள் உங்களை அனுமதிக்கின்றன. Twitter -இல் மற்றவர்கள் உருவாக்கிய பட்டியல்களில் சேர நீங்கள் தேர்வு செய்யலாம் அல்லது உங்கள் சொந்த கணக்கிலிருந்து குழு, தலைப்பு அல்லது ஆர்வத்தின் அடிப்படையில் பிற கணக்குகளின் பட்டியல்களை உருவாக்க நீங்கள் தேர்வு செய்யலாம். பட்டியல் காலவரிசையைப் பார்ப்பது அந்தப் பட்டியலில் உள்ள கணக்குகளிலிருந்து மட்டுமே கீச்சுகளின் ஸ்ட்ரீமைக் காண்பிக்கும். உங்களுக்குப் பிடித்த பட்டியல்களை உங்கள் முகப்புக் காலவரிசைக்கு மேலேயும் நீங்கள் பின் செய்யலாம், எனவே உங்களுக்கு மிக முக்கியமான கணக்குகளிலிருந்து ஒரு கீச்சை ஒருபோதும் இழக்க மாட்டீர்கள்.
 

பட்டியல்களை எவ்வாறு கண்டறிவது

iOS மற்றும் Android பயன்பாடுகளுக்கான Twitter -இல் உள்ள உங்கள் முகப்புக் காலவரிசையில், புதிய பட்டியல்களைக் கண்டறிக என்ற கோரலை நீங்கள் காணலாம். உங்களுக்கு விருப்பமான பட்டியலை நாங்கள் பரிந்துரைத்தால், பின்தொடர் என்பதைத் தொட்டால் போதும். அந்தக் கோரலில் இருந்து, எங்கள் பட்டியல்கள் கண்டுபிடிப்பு பக்கத்தின் மூலம் உலாவ, மேலும் காண்பி என்பதையும் நீங்கள் தொடலாம். அங்கு, நீங்கள் பின்தொடர விரும்புவீர்கள் என்று நாங்கள் நினைக்கக்கூடிய கூடுதல் பட்டியல்களைக் காண்பிப்போம், மேலும் பக்கத்தின் மேலே உள்ள தேடல் பெட்டியில் கூடுதல் பட்டியல்களை நீங்கள் தேடலாம். 

உங்கள் முகப்புக் காலவரிசையில், நீங்கள் பின்தொடரும் பட்டியல்களின் முன்னணி கீச்சுகளையும் காண்பிப்போம்.

பட்டியலை எவ்வாறு உருவாக்குவது
படி 1

மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானை தொடவும்.

படி 2

பட்டியல்கள் என்பதைத் தொடவும்.

படி 3

புதிய பட்டியல் ஐகானை  தொடவும்

படி 4

உங்கள் பட்டியலுக்கு ஒரு பெயரையும், பட்டியலின் குறுகிய விளக்கத்தையும் தேர்ந்தெடுக்கவும். பட்டியல் பெயர்கள் 25 எழுத்துகளைத் தாண்டக்கூடாது, அவை எண்ணில் தொடங்கக் கூடாது. உங்கள் பட்டியலுக்கான இயல்புநிலை அமைப்பு பொதுவானது (யார் வேண்டுமானாலும் பட்டியலைப் பின்தொடரலாம்). பட்டியலை நீங்கள் மட்டுமே அணுகக்கூடியதாக மாற்ற, தனிப்பட்டது என்பதற்கு அடுத்துள்ள ஸ்லைடரை ஆன் என்பதற்கு இழுக்கவும்.

படி 5

முடிந்தது என்பதைத் தொடவும்.

படி 1

மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை  அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் எந்த ஐகானையும் தொட்டு, பட்டியல்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 2

புதிய பட்டியல் ஐகானை  தொடவும்

படி 3

உங்கள் பட்டியலுக்கு ஒரு பெயரையும், பட்டியலின் குறுகிய விளக்கத்தையும் தேர்ந்தெடுக்கவும். பட்டியல் பெயர்கள் 25 எழுத்துகளைத் தாண்டக்கூடாது, அவை எண்ணில் தொடங்கக் கூடாது. உங்கள் பட்டியலுக்கான இயல்புநிலை அமைப்பு பொதுவானது (யார் வேண்டுமானாலும் பட்டியலைப் பின்தொடரலாம்). பட்டியலை நீங்கள் மட்டுமே அணுகக்கூடியதாக மாற்ற, தனிப்பட்டதாக வைத்திரு என்பதற்கு அடுத்துள்ள தேர்வுப்பெட்டியைத் தொடவும்.

படி 4

சேமி என்பதைத் தொடவும்.

படி 1

வழிசெலுத்தல் பட்டியில் பட்டியல்கள்  என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 2

மேலுள்ள, புதிய பட்டியலை உருவாக்குக  ஐகானைக் கிளிக் செய்யவும்.

படி 3

உங்கள் பட்டியலுக்கு ஒரு பெயரையும், பட்டியலின் குறுகிய விளக்கத்தையும் தேர்வு செய்யவும். பட்டியல் பெயர்கள் 25 எழுத்துகளைத் தாண்டக்கூடாது, அவை எண்ணில் தொடங்கக் கூடாது. பின்னர், பட்டியல் தனிப்பட்டதாக (நீங்கள் மட்டுமே அணுகக்கூடியது) அல்லது பொதுவில் (யார் வேண்டுமானாலும் பட்டியலைப் பின்தொடரலாம்) இருக்க வேண்டுமா என்று தேர்ந்தெடுக்கவும்.

படி 4

அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 5

பிறகு பயனர்களை நீங்கள் தேடலாம், மேலும் உங்கள் பட்டியலில் அவர்களைச் சேர்க்கலாம்.

படி 6

முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் பட்டியல்களில் இருந்து பயனர்களை எவ்வாறு சேர்ப்பது அல்லது அகற்றுவது
படி 1

மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானை தொடவும்.

படி 2

பட்டியல்கள் என்பதைத் தொடவும்.

படி 3

நீங்கள் திருத்த விரும்பும் பட்டியலைத் தொடவும். 

படி 4

உறுப்பினர்கள் என்பதைத் தொடவும்.

படி 5

கணக்கின் சுயவிவரத்தில் மேலும் என்ற ஐகானை  தொடவும்.

படி 6

நீங்கள் சேர்க்க விரும்பும் கணக்குகளைத் தொடவும் அல்லது நீங்கள் நீக்க விரும்பும் பட்டியல்களின் கணக்குகளைத் தேர்வுநீக்கவும்.

படி 1

கணக்கின் சுயவிவரத்தில் மேலும் என்ற ஐகானை  தொடவும்.

படி 2

பட்டியலில் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (ஒரு கணக்கை உங்கள் பட்டியலில் சேர்க்க நீங்கள் அதைப் பின்தொடர வேண்டிய அவசியமில்லை.)

படி 3

நீங்கள் உருவாக்கிய பட்டியல்களைக் காண்பிக்கும் பாப்-அப் தோன்றும். நீங்கள் கணக்கைச் சேர்க்க விரும்பும் பட்டியல்களுக்கு அடுத்துள்ள தேர்வுப்பெட்டியைத்தொடவும் அல்லது கணக்கை நீக்க விரும்பும் பட்டியல்களைத் தேர்வுநீக்கவும்.

படி 4

நீங்கள் சேர்க்க விரும்பிய கணக்கு அந்தப் பட்டியலில் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, மேல் மெனுவிலிருந்து பட்டியல்கள் தாவலுக்குச் செல்லவும். பிடித்த பட்டியலைத் தொட்டு, பிறகு உறுப்பினர்கள் என்பதைத் தொடவும். உறுப்பினர்கள் பட்டியலில் கணக்கு தோன்றும்.

படி 1

கணக்கின் சுயவிவரத்தில் மேலும் என்ற ஐகானை  கிளிக் செய்யவும்.

படி 2

பட்டியலில் சேர் அல்லது அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (ஒரு கணக்கை உங்கள் பட்டியலில் சேர்க்க நீங்கள் அதைப் பின்தொடர வேண்டிய அவசியமில்லை.)

படி 3

நீங்கள் உருவாக்கிய பட்டியல்களைக் காண்பிக்கும் பாப்-அப் தோன்றும். நீங்கள் கணக்கைச் சேர்க்க விரும்பும் பட்டியல்களுக்கு அடுத்துள்ள தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யவும் அல்லது கணக்கை நீக்க விரும்பும் பட்டியல்களைத் தேர்வுநீக்கவும்.

படி 4

நீங்கள் சேர்க்க விரும்பிய கணக்கு அந்தப் பட்டியலில் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, பட்டியல்கள் தாவலுக்குச் செல்லவும். பிடித்த பட்டியலைக் கிளிக் செய்து, பிறகு பட்டியல் உறுப்பினர்கள் என்பதைக் கிளிக் செய்யவும். உறுப்பினர்கள் பட்டியலில் கணக்கு தோன்றும்.

நீங்கள் இருக்கும் பட்டியல்களை எவ்வாறு பார்ப்பது
உங்கள் பட்டியல்கள் தாவலின் மூலம் நீங்கள் எந்தப் பட்டியல்களில் உறுப்பினராக உள்ளீர்கள் என்பதை நீங்கள் காணலாம்.
படி 1

மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானை தொடவும்.

படி 2

பட்டியல்கள் என்பதைத் தொடவும்.

படி 3

மேலும்  என்ற ஐகானை தொடவும்.

படி 4

நீங்கள் இருக்கும் பட்டியல்களைத் தொடவும்.

குறிப்பு: பட்டியலிலிருந்து உங்களை நீங்களே அகற்றுவதற்கு, அந்தப் பட்டியலை உருவாக்கியவரை நீங்கள் தடைசெய்ய வேண்டும்.

உங்கள் பட்டியல்கள் தாவலின் மூலம் நீங்கள் எந்தப் பட்டியல்களில் உறுப்பினராக உள்ளீர்கள் என்பதை நீங்கள் காணலாம்.
படி 1

உங்கள் சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.

படி 2

3 புள்ளிகளைத் தொடவும்

படி 3

நீங்கள் இருக்கும் பட்டியல்களைத் தேர்ந்தெடுக்கவும்

குறிப்பு:
பட்டியலிலிருந்து உங்களை நீங்களே அகற்றுவதற்கு, அந்தப் பட்டியலை உருவாக்கியவரை நீங்கள் தடைசெய்ய வேண்டும்.

உங்கள் பட்டியல்கள் தாவலின் மூலம் நீங்கள் எந்தப் பட்டியல்களில் உறுப்பினராக உள்ளீர்கள் என்பதை நீங்கள் காணலாம்.
படி 1

வழிசெலுத்தல் மெனுவில் இருந்து பட்டியல்கள் தாவலைக் கிளிக் செய்யவும்.

படி 2

புதிய பட்டியல் ஐக்கானுக்கு அடுத்து உள்ள மேலும் என்ற ஐகானை கிளிக் செய்யவும்.

படி 3

நீங்கள் இருக்கும் பட்டியல்களைக் கிளிக் செய்யவும்.

படி 4

உங்களை நீங்களே அகற்ற விரும்பும் பட்டியலைக் கிளிக் செய்யவும்.

படி 5

பட்டியலை உருவாக்கியவரின் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்

படி 6

பட்டியலை உருவாக்கியவரின் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்

படி 7

 பகர் என்ற ஐகானுக்கு அடுத்து உள்ள மேலும் என்ற ஐகானை கிளிக் செய்யவும்.

படி 8

சுயவிவர பயனர் அடையாளத்திற்கு (@பயனர்அடையாளம்) அடுத்து உள்ள தடைசெய்  என்பதைக் கிளிக் செய்யவும்

குறிப்பு: பட்டியலிலிருந்து உங்களை நீங்களே அகற்றுவதற்கு, அந்தப் பட்டியலை உருவாக்கியவரை நீங்கள் தடைசெய்ய வேண்டும்.

ஒரு பட்டியலிலிருந்து உங்களை நீங்களே எவ்வாறு அகற்றுவது
உங்கள் பட்டியல்கள் தாவலின் மூலம் நீங்கள் எந்தப் பட்டியல்களில் உறுப்பினராக உள்ளீர்கள் என்பதை நீங்கள் காணலாம். பட்டியலிலிருந்து உங்களை நீங்களே அகற்றுவதற்கு, கீழேயுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி அந்தப் பட்டியலை உருவாக்கியவரை நீங்கள் தடைசெய்ய வேண்டும்:
படி 1

மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானை தொடவும்.

படி 2

பட்டியல்கள் என்பதைத் தொடவும்.

படி 3

மேலும் என்ற ஐகானை தொடவும். 

படி 4

நீங்கள் இருக்கும் பட்டியல்களைத் தொடவும்.

படி 5

உங்களை நீங்களே அகற்ற விரும்பும் பட்டியல் மீது தொடவும்

படி 6

பகர் என்ற பொத்தானுக்கு அடுத்து உள்ள மேலும்  என்ற ஐகான் மீது தொடவும். 

படி 7

சுயவிவர பயனர் அடையாளத்திற்கு (@பயனர்அடையாளம்) அடுத்து உள்ள தடைசெய் என்பதைத் தொடவும் 

உங்கள் பட்டியல்கள் தாவலின் மூலம் நீங்கள் எந்தப் பட்டியல்களில் உறுப்பினராக உள்ளீர்கள் என்பதை நீங்கள் காணலாம். பட்டியலிலிருந்து உங்களை நீங்களே அகற்றுவதற்கு, கீழேயுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி அந்தப் பட்டியலை உருவாக்கியவரை நீங்கள் தடைசெய்ய வேண்டும்: 

1. உங்கள் சுயவிவரம் பக்கத்திற்குச் செல்லவும்.

2. 3 புள்ளிகளைத் தொடவும் 

3. நீங்கள் இருக்கும் பட்டியல்களைத் தேர்ந்தெடுக்கவும்

4. பட்டியல் மீது கிளிக் செய்யவும்

5. @பயனர்பெயர் என்பதைத் தடைசெய்க

உங்கள் பட்டியல்கள் தாவலின் மூலம் நீங்கள் எந்தப் பட்டியல்களில் உறுப்பினராக உள்ளீர்கள் என்பதை நீங்கள் காணலாம். பட்டியலிலிருந்து உங்களை நீங்களே அகற்றுவதற்கு, கீழேயுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி அந்தப் பட்டியலை உருவாக்கியவரை நீங்கள் தடைசெய்ய வேண்டும்: 

1. வழிசெலுத்தல் மெனுவில் இருந்து பட்டியல்கள் தாவலைக் கிளிக் செய்யவும். 

2. புதிய பட்டியல் ஐக்கானுக்கு அடுத்து உள்ள மேலும் என்ற ஐகானை கிளிக் செய்யவும்.

3. நீங்கள் இருக்கும் பட்டியல்களை  கிளிக் செய்யவும்.

4. உங்களை நீங்களே அகற்ற விரும்பும் பட்டியலைக் கிளிக் செய்யவும்.

5. பகர் என்ற பொத்தானுக்கு அடுத்து உள்ள மேலும் என்ற ஐகானை  கிளிக் செய்யவும்.

7. சுயவிவர பயனர் அடையாளத்திற்கு (@பயனர்அடையாளம்) அடுத்து உள்ள தடைசெய் என்பதைக் கிளிக் செய்யவும் 

 


பட்டியலைப் பகிர
 

1. நீங்கள் பகிர விரும்பும் பட்டியலுக்குச் செல்லவும்.

2. பட்டியலின் விவரப் பக்கத்தின் மேல் வலதுபுறத்திலிருந்து பகிர் என்ற ஐகானை (iOS-இல், இணையத்தில் மற்றும் Android-இல்) பயன்படுத்தவும், மேலும் பின்வருவதிலிருந்து தேர்வு செய்யவும்:

  • இணைப்பைப் பட்டியலுக்கு நகலெடுக்கவும்
  • நேரடிச்செய்தி வழியாக அனுப்புவும்
  • இதை ட்விட் செய்க
     

பட்டியலிலிருந்து கீச்சுகளைக் காண

  1. உங்கள் பட்டியல்கள் தாவலுக்குச் செல்லவும்.
  2. நீங்கள் காண விரும்பும் பட்டியலைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
  3. அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கணக்குகளிலிருந்து கீச்சுகளின் காலவரிசையைப் பார்ப்பீர்கள்.
     

பட்டியல்களைத் திருத்த அல்லது நீக்க
 

  1. சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. பட்டியல்கள் தாவலைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
  3. நீங்கள் உருவாக்கிய பட்டியல்களையும், நீங்கள் பின்தொடரும் பிற பயனர்களின் பட்டியல்களையும், பின்தொடர் என்ற தாவலின் கீழே பார்ப்பீர்கள்.
  4. நீங்கள் உருவாக்கிய பட்டியல்களிலிருந்து நீங்கள் திருத்த அல்லது நீக்க விரும்பும் பட்டியலில் கிளிக் செய்யவும் அல்லது தொடவும். உங்கள் பட்டியல் விவரங்களைப் புதுப்பிக்க, திருத்து என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும். 
  5. உங்கள் பட்டியலிலிருந்து பயனர்களைச் சேர்க்க அல்லது அகற்ற விரும்பினால், பட்டியலைத் திருத்து என்பதைத் தொடவும், பிறகு உறுப்பினர்களை நிர்வகி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தேடல் பெட்டியைப் பயன்படுத்தி உறுப்பினர்களைச் சேர்க்கவும், மேலும், உறுப்பினர்களைப் பட்டியலிலிருந்து முழுவதுமாக அகற்ற அவர்களை நீக்கவும்.
  6. பட்டியலை நீக்க, பட்டியலை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும். 
     

மற்றவர்களின் பட்டியல்களைப் பின்தொடர
 

  1. கணக்கின் சுயவிவரத்தில் மேலும் என்ற ஐகானை  தொடவும்.
  2. பட்டியல்களைக் காண்பி என்பதைத் தொடவும்.
  3. நீங்கள் பின்தொடர விரும்பும் பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. பட்டியல் பக்கத்திலிருந்து, பட்டியலைப் பின்தொடர, பின்தொடர் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும். ஒரு பட்டியலில் உள்ள தனிப்பட்ட கணக்குகளைப் பின்தொடராமல் அந்தப் பட்டியல்களைப் பின்தொடரலாம்.
     

உங்கள் முகப்புக் காலவரிசைக்குப் பட்டியல்களைச் சேர்க்க/அகற்ற
 

  1. உங்கள் சுயவிவர ஐகான் மெனுவுக்குச் செல்லவும்.

  2. பட்டியல்கள் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.

  3. நீங்கள் உருவாக்கிய பட்டியல்களையும், நீங்கள் பின்தொடரும் பிற பயனர்களின் பட்டியல்களையும் பார்ப்பீர்கள்.

  4. உங்கள் முகப்புக் காலவரிசைக்குப் பட்டியலைச் சேர்க்க,  ஐகானை தொடவும். 

  5. உங்கள் முகப்புக் காலவரிசையிலிருந்து அவற்றை அணுக வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

  6. 5 பட்டியல்கள் வரை சேர்க்கவும். 

  7. பட்டியலை அகற்ற, பின்செய்யப்பட்டது என்பதன் கீழ், புஷ்பின் என்பதை முன்னிலைப்படுத்துவதை நீக்க  ஐகானை தொடவும், அது உங்கள் முகப்புக் காலவரிசையிலிருந்து அகற்றப்படும். (குறிப்பு: இது பட்டியலை நீக்காது.) 
     

பின்செய்யப்பட்ட பட்டியல்களை மறுவரிசைப்படுத்த
 

  1. உங்கள் சுயவிவர ஐகான் மெனுவுக்குச் செல்லவும்.
  2. பட்டியல்கள் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
  3. நீங்கள் உருவாக்கிய பட்டியல்களையும், நீங்கள் பின்தொடரும் பிற பயனர்களின் பட்டியல்களையும் பார்ப்பீர்கள்.
  4. திருத்து என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
  5. பட்டியல் பிரிவின் வலது பக்கத்தில் உள்ள மறுவரிசைப்படுத்து என்ற ஐகானை அழுத்திப் பிடித்து, விரும்பிய நிலைக்குப் பட்டியலை இழுக்கவும்.
  6. புதிய வரிசையைச் சமர்ப்பிக்க முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் மாற்றங்கள் உங்கள் முகப்புக் காலவரிசையில் பிரதிபலிப்பதை நீங்கள் காண வேண்டும்.
     

ஒரு பட்டியலைப் புகாரளிக்க


முறைகேடான நடத்தைக்கு ஒரு பட்டியலைப் புகாரளிப்பது எவ்வாறு என்பதை அறிக.

இந்தக் கட்டுரையைப் பகிர்க