Mac -க்கான Twitter -ஐ எவ்வாறு பயன்படுத்துவது
பயன்பாட்டை எங்கே பெறுவது
ஆப் ஸ்டோரிலிருந்து Mac -க்கான Twitter -ஐ பதிவிறக்கம் செய்யலாம்.
பயன்பாட்டுடன் பதிவு செய்வது அல்லது உள் நுழைவது எப்படி
புதிய கணக்கை உருவாக்க:
உங்கள் சாதனத்திலிருந்து Twitter பயன்பாட்டைத் தொடங்கவும்.
Twitter கணக்கை உருவாக்க பதிவு செய்க என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பயனர்பெயர், மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுத்து உள்ளிடவும்.
ஏற்கனவே உள்ள Twitter கணக்கில் உள் நுழைய:
பயன்பாட்டைத் திறந்து, உள் நுழைக என்பதைத் தொடவும்.
உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
கீச்சுகள் மற்றும் நேரடிச்செய்திகளை எவ்வாறு இடுகையிடுவது மற்றும் நீக்குவது
கீச்சை இடுகையிட:
என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் செய்தியை, கீச்சை எழுதுக என்ற பெட்டியில் உள்ளிடவும்.
உங்கள் கீச்சை இடுகையிட ட்விட் செய்க என்பதைக் கிளிக் செய்யவும்.
கீச்சில் புகைப்படம், GIF அல்லது வாக்கெடுப்பை இணைக்க:
என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
புகைப்படம், GIF அல்லது வாக்கெடுப்பைச் சேர்க்க, , அல்லது என்பதைத் தொடவும். உங்கள் கிசசு்களில் நான்கு படங்கள் வரைச் சேர்க்கலாம்.
கீச்சை உருவாக்க என்ற பெட்டியில் உங்கள் செய்தியை உள்ளிடவும்.
உங்கள் கீச்சை இடுகையிட ட்விட் செய்க என்பதைக் கிளிக் செய்யவும்.
கீச்சை நீக்க:
நீங்கள் நீக்க விரும்பும் கீச்சைத் தேர்ந்தெடுக்கவும்.
ஐகானை கிளிக் செய்யவும்
கீச்சை நீக்கு என்பதைத் தொடவும்.
நேரடிச்செய்தியை அனுப்ப:
மெனுவிலிருந்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
என்பதைக் கிளிக் செய்யவும்
நீங்கள் செய்தியை அனுப்ப விரும்பும் நபரின் பயனர்பெயரைத் உள்ளிட்டு, பிறகு அவர்களைத் தேர்ந்தெடுக்க அவர்களின் பெயரைக் கிளிக் செய்க. குழு செய்தியை உருவாக்க நீங்கள் அதிக பங்கேற்பாளர்களை சேர்க்கலாம்.
அடுத்து என்பதைத் தொடவும்.
உங்கள் செய்தியை எழுதுதல் பெட்டியில் உள்ளிடவும்.
புகைப்படத்தைச் சேர்க்க (விரும்பினால்) என்பதைக் கிளிக் செய்க.
GIF-ஐச் சேர்க்க (விரும்பினால்) என்பதைக் கிளிக் செய்க.
செய்தியை அனுப்ப அனுப்பு என்பதை அழுத்தவும்.
கீச்சுகளை எவ்வாறு புத்தகக்குறியிடுவது
ஒரு கீச்சிலிருந்து, என்பதைத் தொடவும், பிறகு புத்தகக்குறியிடல்களில் கீச்சைச் சேர்க்கவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்களின் சேமிக்கப்பட்ட கீச்சுகளைக் காண, உங்கள் சுயவிவர ஐகான் மெனுவிலிருந்து புத்தகக்குறியிடுகள் என்பதைக் கிளிக் செய்க.
சேமிக்கப்பட்ட புத்தகக்குறியீடை அகற்ற, உங்கள் புத்தகக்குறியீட்டுக்கு காலவரிசையில் உள்ள ட்விட்டிலிருந்து என்பதைத் தொடவும், பிறகு புத்தகக்குறியிடுகளிலிருந்து கீச்சைை அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆராய்க தாவலை எவ்வாறு அணுகுவது
ஆராய்க தாவலுக்குச் செல்ல மெனுவிலிருந்து என்பதைத் தொடவும்.
நடப்புத் தலைப்புகள், தருணங்கள், பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கம், பிரபலமான கட்டுரைகள் மற்றும் பலவற்றைக் காண ஸ்க்ரால் செய்யவும்.
உங்கள் சுயவிவரத் தகவலை எவ்வாறு மாற்றுவது
- உங்கள் சுயவிவரப் பக்கத்திற்குச் செல்ல, சுயவிவர ஐகானை தொடவும்.
- சுயவிவரத்தைத் திருத்துக என்ற பொத்தானைத் தொடவும்.
- உங்கள் மாற்றங்களைச் செய்து, சேமி என்பதைத் தொடவும்.
விரும்புதல், மறுட்விட் செய்தல் மற்றும் கருத்துடன் மறுட்விட் செய்தல்
கீச்சை விரும்ப:
என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும், அது சிவப்பு நிறமாக மாறும், இது நீங்கள் ட்விட்டை விரும்பியதை உறுதிப்படுத்துகிறது.
நீங்கள் ஒரு ட்விட்டை சுயவிவரப் பக்கத்திலிருந்தும் கீச்சின் பெர்மாலிங்க் பக்கத்திலிருந்தும் விரும்பலாம்.
விருப்பத்தைச் செயல்தவிர்க்க அல்லது அகற்ற:
நீங்கள் விரும்பிய கீச்சை கண்டுபிடிக்கவும் (இதயம் சிவப்பாக இருக்கும்).
விரும்பியதைச் செயல்தவிர்க்க என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
ஒரு கீச்சை மறுட்விட் செய்ய:
மறுட்விட் செய் என்ற ஐகானை கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
மறுட்விட் செய் என்பதைத் தொடவும்.
ஐகான் பச்சை நிறமாக மாறும், இது நீங்கள் ட்விட்டை மறுட்விட் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
நீங்கள் ஒரு ட்விட்டை சுயவிவரப் பக்கத்திலிருந்தும் ட்விட்டின் பெர்மாலிங்க் பக்கத்திலிருந்தும் மறுட்விட் செய்யலாம்.
மறுட்விட்டை செயல்தவிர்க்க அல்லது அகற்ற:
நீங்கள் விரும்பிய ட்விட்டைக் கண்டுபிடிக்கவும் (ஐகான் பச்சை நிறமாக இருக்கும்).
மறுட்விட்டை செயல்தவிர்க்க மறுட்விட் செய்க என்ற ஐகானை கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
ஒரு கீச்சை மேற்கோள் காட்ட:
மறுட்விட் செய் என்ற ஐகானை கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
கீச்சை மேற்கோள் காட்டு என்பதைத் தொடவும்.
உங்கள் கருத்துகளை உள்ளிட்டு மறுட்விட் செய் என்பதை அழுத்தவும்.
ஐகான் பச்சை நிறமாக மாறும், இது நீங்கள் ட்விட்டை மறுட்விட் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
நீங்கள் ஒரு ட்விட்டை சுயவிவரப் பக்கத்திலிருந்தும் கிச்சின் பெர்மாலிங்க் பக்கத்திலிருந்தும் மறுட்விட் செய்யலாம்.
வெளியேறுவது எப்படி
உங்கள் சுயவிவரம் ஐகானை தொடவும்.
வெளியேறு என்பதைத் தொடவும்.