Android -க்கான Twitter -ஐ எவ்வாறு பயன்படுத்துவது
- நீங்கள் ஏற்கனவே நிறுவவில்லை என்றால், Android -க்கான Twitter பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
- பயன்பாடு நிறுவப்பட்டதும், நீங்கள் ஏற்கனவே உள்ள கணக்குடன் உள்நுழையலாம் அல்லது பயன்பாட்டிலிருந்து நேரடியாக ஒரு புதிய கணக்கிற்குப் பதிவுசெய்யலாம். உங்கள் பயன்பாடு வழியாக பல Twitter கணக்குகளை நிர்வகிப்பது பற்றி அறிக.
- எங்களின் பதிவுசெய்தல் அனுபவம் குறித்து உங்களுக்கு வழிகாட்டப்படும், உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை உள்ளிடுமாறு கேட்கப்படும்.
- பதிவுசெய்யும்போது நீங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கியிருந்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரியை நாங்கள் உறுதிசெய்யும் வகையில் அறிவுறுத்தல்களுடன் ஒரு மின்னஞ்சலை உடனடியாக உங்களுக்கு அனுப்புவோம்.
- பதிவுசெய்தபோது நீங்கள் தொலைபேசி எண்ணை வழங்கியிருந்தால், உங்கள் எண்ணை நாங்கள் உறுதிசெய்யும்வகையில் ஓர் உரைச் செய்தியை உடனடியாக உங்களுக்கு அனுப்புவோம்.
- உங்கள் புதிய கணக்கிற்கான அமைப்புகளைத் தனிப்பயனாக்குவது எவ்வாறு என்று அறிக.
குறிப்பு: Google பிளே ஸ்டோரில் Android பதிப்புகள் 2.3 முதல் 4.1 வரை இனி ஆதரிக்க மாட்டோம். நீங்கள் இன்னமும் இந்தப் பதிப்புகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அவை புதுப்பிக்கப்படாது என்பதைக் கவனத்தில் கொள்க. மிகச் சமீபத்திய Android -க்கான Twitter அனுபவத்தைப் பெற, ஸ்டோரில் இருந்து சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கவும் அல்லது உங்கள் உலாவியில் twitter.com -க்குச் செல்லவும்.
உங்கள் சுயவிவரத்தைத் திருத்துதல்
- மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானை பார்ப்பீர்கள். உங்களிடம் உள்ள எந்த ஐகானையும் தொடவும்.
- சுயவிவரம் என்பதைத் தொட்டு, சுயவிவரத்தைத் திருத்துக என்பதைத் தொடவும்.
- இங்கிருந்து, உங்கள் சுயவிவரம் மற்றும் தலைப்பு படம் ("பேனர்" என்றும் குறிப்பிடப்படுகிறது), காட்சிப் பெயர், இருப்பிடம், இணையதளம், பிறந்த தேதி மற்றும் சுயகுறிப்பு ஆகியவற்றை நீங்கள் மாற்றலாம்.
- நீங்கள் விரும்பும் மாற்றங்களைச் செய்து, சேமி என்பதைத் தொடவும்.
உங்கள் கணக்கு அமைப்புகளைப் புதுப்பிக்கிறது
- மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானை பார்ப்பீர்கள். உங்களிடம் உள்ள எந்த ஐகானையும் தொடவும்.
- அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.
- மெனு வழியாக உருட்டி, உங்கள் பயனர்பெயரை மாற்றுதல் போன்ற, நீங்கள் பார்க்க/திருத்த விரும்பும் கணக்கு அமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் தரவுப் பயன்பாட்டை எப்படி குறைப்பது
தரவு சேமிப்பான் பயன்முறையை இயக்குவதன் மூலம், Twitter பயன்படுத்தும் தரவின் அளவைக் குறைக்கலாம். தரவைச் சேமிப்பதற்கு உதவ, நிகழ் நேரத்தில் எந்த ஊடகம் பதிவிறக்கப்படவிரும்புகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்தவும்.
- உங்கள் சுயவிவரம் மெனுவிலிருந்து, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.
- பொதுவானவை என்பதன் கீழ், தரவுப் பயன்பாடு என்பதைத் தொடவும்.
- இயக்குவதற்கு, தரவு சேமிப்பான் என்பதற்குப் பக்கத்திலுள்ள நிலைமாற்று என்பதைத் தொடவும்.
இந்தப் பயன்முறையில், படங்கள் குறைந்த தரத்தில் ஏற்றப்படும் மற்றும் வீடியோக்கள் தானாக இயங்காது. உயர்தரப் படங்கள், வீடியோ மற்றும் வீடியோ தானியக்கி ஆகியவற்றுக்கும் விருப்பத்தேர்வு உள்ளது.
கீச்சை எவ்வாறு இடுகையிடுவது மற்றும் நீக்குவது
கீச்சை இடுகையிட:
- ட்விட் செய் என்ற ஐகானை தொடவும்
- உங்கள் செய்தியை உள்ளிட்டு, ட்விட் செய் என்பதைத் தொடவும்.
- உங்கள் சாதனத்தின் நிலைப் பட்டியில் ஓர் அறிவிப்பு தோன்றும், கீச்சு வெற்றிகரமாக அனுப்பப்பட்டதும் அது மறைந்துவிடும்.
கீச்சை ஒரு வரைவாகச் சேமிக்க:
- உங்கள் கீச்சை ஒரு வரைவாகச் சேமிக்க விரும்பினால், கீச்சு எழுதும் சாளரத்தில் X என்பதைத் தொடவும்.
- வரைவாகச் சேமிப்பதற்கான விருப்பத்தைப் பார்ப்பீர்கள். உங்களின் சேமித்த வரைவுகளை அணுக, உங்கள் சுயவிவரத்திற்குச் சென்று, ஓவர்ஃப்ளோ ஐகானை தொட்டு, பிறகு வரைவுகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- தொகுப்பான் பெட்டியில் தொட்டு, பிறகு பெட்டிக்குள் வரைவுகள் என்பதைத் தொடுவதன் மூலமும் உங்கள் வரைவுகளை அணுகலாம்.
- நீங்கள் குறைந்தபட்சம் ஒரு வரைவைச் சேமித்திருந்தால் மட்டுமே வரைவுகள் கோரலைப் பார்ப்பீர்கள். உங்கள் பயன்பாட்டின் மூலம் உங்கள் கணக்கிலிருந்து வெளியேறினால் அல்லது உங்கள் பயன்பாட்டை நிறுவல் நீக்கம் செய்தால், நீங்கள் சேமித்த வரைவுகள் நீக்கப்படும், அவற்றை மீட்டெடுக்க முடியாது.
உங்கள் கீச்சுடன் ஒரு புகைப்படம் அல்லது GIF -ஐப் பதிவுசெய்ய:
- Twitter -இல் புகைப்படங்கள் அல்லது GIFகளை இடுகையிடுதல் பற்றி படிக்கவும்.
உங்கள் கீச்சுடன் ஒரு வீடியோவைப் பதிவுசெய்ய:
- Twitter -இல் வீடியோக்களைப் பகிர்தல் மற்றும் பார்த்தல் பற்றி படிக்கவும். (வீடியோ அம்சத்தைப் பயன்படுத்த, Android OS 4.1 மற்றும் உயர்ந்த பதிப்பு தேவை.)
உங்கள் கீச்சுடன் ஒரு Twitter வாக்கெடுப்பை இடுகையிட:
- Twitter வாக்கெடுப்பை உருவாகுதல் பற்றி படிக்கவும்.
பதிலை எவ்வாறு பதிவுசெய்வது:
- நீங்கள் பதிலளிக்க விரும்பும் கீச்சைக் கண்டறியவும்.
- பதிலளி ஐகானை கிளிக் செய்யவும்
- எழுதுதல் பெட்டி தோன்றும், உங்கள் செய்தியை உள்ளிட்டு, அதை இடுகையிட பதிலளி என்பதைத் தொடவும்.
குறிப்பீட்டை எவ்வாறு இடுகையிடுவது:
- கீச்சுப் பெட்டியில் உங்கள் செய்தியை உள்ளிடவும்.
- குறிப்பிட்டதொரு கணக்கிற்கு முகவரியிடும்போது, பயனர்பெயர்(களுக்கு) முன்னால் @ என்ற குறியீட்டை உள்ளிடவும்.
- இடுகையிடுவதற்கு, ட்விட் செய் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
- பதில்கள் மற்றும் குறிப்பீடுகள் பற்றி மேலும் படிக்கவும்.
உங்கள் இருப்பிடத்துடன் ட்விட் செய்ய:
- உங்கள் கீச்சிற்கு உங்கள் இருப்பிடத்தைச் சேர்க்க, இருப்பிடம் ஐகானை தொடவும்.
- உங்கள் மொபைல் சாதனத்தில் இருப்பிட அம்சத்தைப் பயன்படுத்துவது பற்றி மேலும் அறிக.
கீச்சில் URL -ஐச் சேர்க்க:
- Twitter -இன் சொந்த t.co சேவையைப் பயன்படுத்தி இணைப்புகள் தானாகக் குறுக்கப்படுகின்றன.
- URL -இல் உள்ளிடுவது அல்லது ஒட்டுவது, உங்கள் எழுத்துக்குறி வரம்பிலிருந்து எழுத்துக்குறிகளைத் தானாகவே குறைக்கிறது—அசல் இணைப்பு எவ்வளவு நீளமாக இருந்தாலும் பரவாயில்லை.
கீச்சை நீக்க:
- உங்கள் சுயவிவரம் மெனுவிலிருந்து, சுயவிவரம்என்பதைத் தொடவும்.
- நீங்கள் நீக்க விரும்பும் கீச்சைக் கண்டுபிடிக்கவும்.
- கீச்சின் மேற்பகுதியில் உள்ள ஐகானை தொடவும்.
- நீக்கு என்பதைத் தொடவும்.
- உறுதிப்படுத்த, ஆம் என்பதைத் தொடவும்.
இருட்டுப் பயன்முறையை எவ்வாறு இயக்குவது
- மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானை தொடவும்.
- அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.
- காட்சி மற்றும் ஒலி தாவலைத் தொடவும்.
- அம்சத்தை ஆன் செய்ய, இருட்டுப் பயன்முறை என்பதைத் தொடவும். சூரிய அஸ்தமனத்தில் தானாக இயங்கு என்ற விருப்பத்தையும் நீங்கள் செயல்படுத்தலாம்.
- இருட்டுப் பயன்முறை என்பதன் கீழ் உள்ள உங்கள் விருப்பத்தைத் தொடுவதன் மூலம் டிம் அல்லது லைட்ஸ் அவுட் என்பதைத் தேர்வுசெய்யவும்.
- அம்சத்தை ஆஃப் செய்ய, இருட்டுப் பயன்முறை விருப்பத்தைை மீண்டும் தொடவும்.
மெனுவிலிருந்து இருட்டுப் பயன்முறையை எவ்வாறு இயக்குவது
- உங்கள் சுயவிவரம் ஐகானை தொடவும்.
- இருட்டுப் பயன்முறையை அன் செய்ய, லைட் பல்ப் ஐகானை தொடவும்.
- டிம் அல்லது லைட்ஸ் அவுட் இடையே மாற்ற அமைப்புகளுக்குச் செல்லவும்.