மேம்பட்ட தேடலை எவ்வாறு பயன்படுத்துவது

நீங்கள் ஒரு பழைய கீச்சைத் தேட விரும்புகிறீர்களா அல்லது ஒரு குறிப்பிட்ட கீச்சைக் கண்டுபிடிக்க விரும்புகிறீர்களா? தேடலில் நீங்கள் தேடுவதைச் சரியாகக் கண்டறியுங்கள்
 

நீங்கள் twitter.com -இல் உள்நுழையும்போது மேம்பட்ட தேடல் கிடைக்கிறது. தேடல் முடிவுகளை குறிப்பிட்ட தேதி வரம்புகள், நபர்கள் மற்றும் பலவற்றிற்கு ஏற்ப வடிவமைக்க இது உங்களை அனுமதிக்கிறது. இது குறிப்பிட்ட கீச்சுகளைக் கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறது.
 

மேம்பட்ட தேடலை எவ்வாறு பயன்படுத்துவது
 1. twitter.com -இல் தேடல் பட்டியில் உங்கள் தேடலை உள்ளிடவும்.
 2. உங்கள் தேடல் பக்கத்தின் மேல் வலதுபுறத்திலுள்ள தேடல் வடிகட்டிகளுக்குக் கீழே அமைந்துள்ள மேம்பட்ட தேடல் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது மேலும் விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்து, பிறகு மேம்பட்ட தேடல் என்பதைக் கிளிக் செய்யவும்.
 3. உங்கள் தேடல் முடிவுகளைத் துல்லியப்படுத்த, பொருத்தமான புலங்களை நிரப்பவும் (சில பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பெற, கீழே பார்க்கவும்).
 4. உங்கள் முடிவுகளைப் பார்க்க, தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.


உங்கள் மேம்பட்ட தேடலை எவ்வாறு துல்லியப்படுத்துவது


மேம்பட்ட தேடலைப் பயன்படுத்தி, கீழேயுள்ள புலங்களின் எந்தவொரு கலவையையும் பயன்படுத்தி உங்கள் தேடல் முடிவுகளைத் துல்லியப்படுத்தலாம்:
 

சொற்கள்

 • எந்தவொரு இடத்திலும் எல்லாச் சொற்களையும் கொண்ட கீச்சுகள் (“Twitter” மற்றும் “தேடல்”)  
 • சரியான சொற்றொடர்களைக் கொண்ட கீச்சுகள் (“Twitter தேடல்”)
 • ஏதேனும் சொற்களைக் கொண்ட கீச்சுகள் (“Twitter” அல்லது “தேடல்”)
 • குறிப்பிட்ட சொற்களைத் தவிர்க்கின்ற கீச்சுகள் (“Twitter” ஆனால் “தேடல்” அல்ல)
 • ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேக்கைக் கொண்ட கீச்சுகள் (#twitter)
 • ஒரு குறிப்பிட்ட மொழியிலுள்ள கீச்சுகள் (ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது)
   

நபர்கள்

 • குறிப்பிட்ட கணக்கிலிருந்து கிடைத்த கீச்சுகள் (“@TwitterComms” ட்விட் செய்தவை)
 • ஒரு குறிப்பிட்ட கணக்கிற்கான பதில்களாக அனுப்பப்பட்ட கீச்சுகள் (“@TwitterComms” -க்கான பதிலில்)
 • ஒரு குறிப்பிட்ட கணக்கைக் குறிப்பிடும் கீச்சுகள் (“@TwitterComms” என்பதை உள்ளடக்கும் கீச்சு)
   

இடங்கள்

 • புவியியல் இருப்பிடத்தில் இருந்து அனுப்பப்பட்ட கீச்சுகள், எ.கா. குறிப்பிட்ட நகரம், மாநிலம், நாடு
  • புவியியல் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்க, இடம் என்ற ட்ராப்டவுனை பயன்படுத்தவும்
    

தேதிகள்

 • குறிப்பிட்ட ஒரு தேதிக்கு முன், குறிப்பிட்ட ஒரு தேதிக்குப் பிறகு அல்லது தேதி வரம்பிற்குள் அனுப்பப்பட்ட கீச்சுகள்
  • “தொடக்க” தேதி, “முடிவு” தேதி அல்லது இரண்டையும் தேர்ந்தெடுக்க நாட்காட்டி ட்ராப்டவுனை பயன்படுத்தவும்
 • முதல் பொதுக் கீச்சு முதல் எந்தத் தேதியின் கீச்சுகளையும் தேடவும்
   

மேம்பட்ட தேடலில் புலங்களை இணைப்பதன் மூலம், உங்கள் தேடல் முடிவுகளை ஆற்றல்மிக்க முறையில் மாற்றியமைக்கலாம். எடுத்துக்காட்டாக, புத்தாண்டு தினத்தில் நீங்கள் செய்ததைப் பற்றி அனுப்பிய பழைய கீச்சைத் தேடுகிறீர்கள் என்றால், டிசம்பர் 30, 2013 -க்கும் ஜனவரி 2, 2014 -க்கும் இடையில் “புத்தாண்டுகள்” என்ற சொல் உள்ள ஆனால் “தீர்மானம்” என்ற சொல்லைத் தவிர்த்து நீங்கள் கீச்சுகளைத் தேடலாம். ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஆங்கிலத்திலும் நீங்கள் கீச்சுகளைத் தேடலாம். எடுத்துக்காட்டாக, ஜூலை 2014 -இல் பிரேசிலிலிருந்து அனுப்பப்பட்ட “#WorldCup” என்றது, அந்த ஆண்டு உலகக் கோப்பை பற்றிய கீச்சுகளை உங்களுக்குக் காண்பிக்கும்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க