TweetDeck –இலுள்ள குழுக்கள் அம்சத்தைப் பயன்படுத்தும் முறை
கடவுச்சொல்லைப் பகிராமலே TweetDeck-இன் குழுக்கள் அம்சத்தின் மூலம் Twitter கணக்கைப் பலர் பகிர்ந்துகொள்ளலாம்.
குழு உறுப்பினர் அவரது சொந்த Twitter கணக்கைப் பயன்படுத்தி TweetDeck-இல் உள்நுழையும்போது, பகிர்ந்த கணக்கை அவரது கணக்குகள் தாவலிலும் அவரது புதிய கீச்சு என்ற பலகத்திலும் பார்ப்பார். குழு உறுப்பினர்கள் அவர்களது சொந்தக் கணக்குகளில் உள்நுழைவுச் சரிபார்ப்பை இயக்கலாம், அவை அவர்களது கணக்கை (அவர்களது TweetDeck -இல் உள்ள ஏதேனும் கூடுதல் கணக்குகளையும்) பாதுகாப்பாக வைத்திருக்கும்.
குழுக்கள் அம்சத்தின் மூலம், கணக்கு உரிமையாளர் மற்றவர்களுடன் அவரது கடவுச்சொல்லைப் பகிர்ந்துகொள்ளாமலே தனிநபர்களுக்கு கணக்கு அணுகலை வழங்க முடியும்:
உரிமையாளர்
- கடவுச்சொல், தொலைபேசி எண் மற்றும் உள்நுழைவுச் சரிபார்ப்பு அமைப்புகளை நிர்வகிக்கலாம்.
- நிர்வாகிகளாக அல்லது பங்களிப்பாளர்களாக கணக்கை அணுகுமாறு மற்றவர்களை அழைக்கலாம்.
- குழுக் கணக்கின் சார்பாக நடவடிக்கை எடுக்கலாம் (கீச்சு, மறுகீச்சு, நேரடிச்செய்தி, லைக் போன்றவை), கீச்சுகளைத் திட்டமிடலாம், பட்டியல்களை உருவாக்கலாம் மற்றும் தொகுப்புகளைக் கட்டமைக்கலாம்.
நிர்வாகி
- நிர்வாகிகளாக அல்லது பங்களிப்பாளர்களாக கணக்கை அணுகுமாறு மற்றவர்களை அழைக்கலாம்.
- குழுக் கணக்கின் சார்பாக நடவடிக்கை எடுக்கலாம் (கீச்சு, மறுகீச்சு, நேரடிச்செய்தி, லைக் போன்றவை), கீச்சுகளைத் திட்டமிடலாம், பட்டியல்களை உருவாக்கலாம் மற்றும் தொகுப்புகளைக் கட்டமைக்கலாம்.
பங்களிப்பாளர்
- குழுக் கணக்கின் சார்பாக நடவடிக்கை எடுக்கலாம் (கீச்சு, மறுகீச்சு, நேரடிச்செய்தி, லைக் போன்றவை), கீச்சுகளைத் திட்டமிடலாம், பட்டியல்களை உருவாக்கலாம் மற்றும் தொகுப்புகளைக் கட்டமைக்கலாம்.
கிளையண்ட் மூலம் கணக்குச் செயல்கள் சிறிதளவு வேறுபடுகின்றன. TweetDeck வழியாகத் தொடங்கும் முறை பற்றிய அறிவுறுத்தல்களுக்கு, பின்வரும் கட்டுரைகளைப் பார்க்கவும்:
குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் பங்களிப்பாளர்கள் மூலம் கணக்கு உரிமையாளர்களின் கணக்குகளில் பதிவிடப்படும் உள்ளடக்கத்திற்கு அந்த உரிமையாளர்களே பொறுப்பு.
கணக்குடன் அணுகலைப் பகிர்தல்
உங்கள் குழுவை அமைக்க:
- எந்தக் கணக்கிற்கான அணுகலைப் பகிர விரும்புகிறீர்களோ அந்தக் கணக்குடன் TweetDeck -இல் உள்நுழையவும்.
- வழிசெலுத்தல் பட்டியில் கணக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- எந்தக் கணக்கிற்கான அணுகலைப் பகிர விரும்புகிறீர்களோ அந்தக் கணக்கைத் தேர்ந்தெடுத்து, குழுவை நிர்வகி என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் அழைக்க விரும்புபவரின் பெயர் அல்லது @பயனர்பெயரை குழு உறுப்பினரைச் சேர் புலத்தில் உள்ளிடவும்.
- அங்கீகரி என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் ஒருவரை அங்கீகரித்ததும், ஓர் அழைப்பு, அவரது TweetDeck -இன் கணக்குகள் பலகத்தில் ஒரு மின்னஞ்சல் மற்றும் ஒரு புஷ் அறிவிப்பு ஆகியவற்றைப் பெறுவார்.
- பகிர்ந்த கணக்கைப் பயன்படுத்தத் தொடங்க, புதிய குழு உறுப்பினர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பு: நீங்கள் உங்கள் சொந்த TweetDeck -இலிருந்து குழுவை நிர்வகிக்கக் கூடியவாறு, ஒரு நிர்வாகியாக உங்கள் Twitter கணக்கைச் சேர்க்க நீங்கள் விரும்பக் கூடும். நீங்கள் 200 குழு உறுப்பினர்கள் வரை சேர்க்கலாம்.
குழுவை நிர்வகித்தல்
பகிர்ந்த கணக்கின் உரிமையாளர் மட்டுமே கடவுச்சொல், தொலைபேசி எண் மற்றும் உள்நுழைவுச் சரிபார்ப்பு அமைப்புகளை நிர்வகிக்கிறார்.
உரிமையாளர்களும் நிர்வாகிகளும் குழுவை நிர்வகிக்க முடியும்.
TweetDeck வழியாக ஒரு பணியை மாற்ற அல்லது குழு உறுப்பினரை அகற்ற:
- வழிசெலுத்தல் பட்டியில் கணக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் நிர்வகிக்க விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
- குழு உறுப்பினர்களின் பட்டியலைத் திறக்க, குழுவை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் பணியை மாற்ற விரும்புபவரைக் கண்டறிந்து, பணியை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- பங்களிப்பாளர், நிர்வாகி அல்லது குழுவிலிருந்து அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் தெரிவை உறுதிப்படுத்தவும்.
குறிப்பு: பங்களிப்பாளர்களுக்கு குழுக் கணக்குகளை நிர்வகிக்கும் ஆற்றல் இல்லை. நிர்வாகிகள் மட்டுமே குழுவை நிர்வகிக்க முடியும்.
உங்களை குழுவிலிருந்து அகற்றுதல்
குழுவொன்றில் இனி இருக்க விரும்பாவிட்டால், அந்த குழுவிலிருந்து உங்களை நீங்கள் அகற்ற முடியும்.
TweetDeck வழியாக உங்களை குழுவிலிருந்து அகற்ற:
- வழிசெலுத்தல் பட்டியில் கணக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- எந்தக் கணக்கிற்கு குழுவிலிருந்து உங்களை அகற்ற விரும்புகிறீர்களோ அந்தக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
- குழுவிலிருந்து விலகு என்பதைக் கிளிக் செய்யவும்.
- வெளியேறு என்பதைக் கிளிக் செய்து உங்கள் தெரிவை உறுதிப்படுத்தவும்.
Twitter.com -இல் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் குழுக்களுக்கான Twitter பிரிவில், குழுவுக்கு உங்களை யாரெல்லாம் அழைக்க முடியும் என்பதைச் சரிசெய்ய உங்கள் அமைப்புகளை மாற்றலாம்.
நான் முன்பு ஒரு கணக்கிற்கான கடவுச்சொல்லை அளித்துள்ளேன். இப்போது அணுகல் உள்ளவர்களை எவ்வாறு நிர்வகிக்கலாம்?
வரலாற்றுரீதியாகக் கடவுச்சொல்லை வழங்கியுள்ளவர்களும் பங்களிப்பவர்கள் அல்லது நிர்வாகிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களும் உட்பட, TweetDeck -இல் தற்போது இந்தக் கணக்கிற்கான அணுகல் உள்ள அனைவரையும் உங்கள் குழு உறுப்பினர்களின் பட்டியல் காட்டும்.
அணுகலைப் பெறக் கூடாத ஒருவர் இந்தப் பட்டியலில் காட்டப்பட்டால், அந்த நபருக்கு அருகிலுள்ள பணியை மாற்று என்பதைக் கிளிக் செய்து, குழுவிலிருந்து அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது, TweetDeck -இல் அந்த நபருக்கான அணுகலைத் திரும்பப்பெறும். கூடுதல் பாதுகாப்புக்காக, உங்கள் கடவுச்சொல்லை மாற்றவும் மற்றும் twitter.com/settings/applications என்ற முகவரியில் உங்கள் கணக்கை அணுகுவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள பயன்பாடுகளை மதிப்பாய்வு செய்யவும்.
நான் TweetDeck -இல் பயன்படுத்தும் பிற கணக்குகளையும் சொந்தமாக வைத்திருக்கிறேன். குழுவை எவ்வாறு நிர்வகிப்பது?
உங்களிடம் துணைக் கணக்கு இருந்து, குழு உறுப்பினர்களின் பட்டியலைப் பார்க்கவும் நிர்வகிக்கவும் விரும்புகிறீர்கள் என்றாலும், நீங்கள் தற்போது உள்நுழைந்துள்ள கணக்கிலிருந்து வெளியேறி, பிடித்த கணக்கில் மீண்டும் உள்நுழைய வேண்டும்.
எனது Twitter கணக்கிற்கான TweetDeck அணுகலைத் திரும்பப்பெற்றால், எனது குழு உறுப்பினர்களுக்கு என்ன நடக்கும்?
உங்கள் குழு உறுப்பினர்களை TweetDeck -இன் குழுப் பட்டியலிலிருந்து அகற்றாவிட்டால், அவர்கள் உங்கள் Twitter கணக்கிற்கான அணுகலை இழக்க மாட்டார்கள். TweetDeck -க்கான பயன்பாட்டு அணுகலைத் திரும்பப்பெறுவதால் குழு உறுப்பினர்களின் பட்டியலில் பாதிப்பு ஏற்படாது.
கடவுச்சொல்லை மாற்றினால், கணக்கிற்கான அணுகலை உங்கள் குழு உறுப்பினர்கள் இழக்க மாட்டார்கள். நீங்கள் மட்டுமே (உரிமையாளர் அல்லது கணக்கை நிர்வகிக்கும் நபராக) அறியும் வகையில் கடவுச்சொல்லை மாற்றுமாறு உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.
குழு அம்சத்தைப் பயன்படுத்துவது என்பது, உங்கள் குழு உறுப்பினர்கள் அவர்களது Twitter கணக்கைப் பயன்படுத்தி TweetDeck -இல் உள்நுழைவதைக் குறிப்பிடுகிறது. பகிர்ந்த கணக்குகள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவ, அவர்கள் TweetDeck -இல் உள்நுழையப் பயன்படுத்தும் கணக்கிற்காக உள்நுழைவுச் சரிபார்ப்பு அம்சத்தை இயக்கலாம்.
குழுக் கணக்கில் இணையுமாறு நீங்கள் அழைக்கப்படும்போதும் உங்கள் கணக்குகளில் ஒன்றுக்கான குழுவில் இருக்குமாறு யாராவது அழைக்கப்படும்போதும் Twitter ஒரு மின்னஞ்சல் அறிவிப்பை அனுப்பும். இது உங்கள் குழுவைப் பற்றிய முக்கிய அறிவிப்பு என்று நினைக்கிறோம், ஆகவே அவற்றுக்கு குழுவிலகல் விருப்பம் எதுவும் இல்லை. “அழைக்கப்பட்டுள்ளீர்கள்” மின்னஞ்சல் அறிவிப்புகளைப் பெறுவதை நிறுத்த விரும்பினால், twitter.com -இல் உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்குச் சென்று உங்களை அணிக்கு யார் அழைக்கலாம் என்பதைச் சரிசெய்ய, உங்கள் அமைப்புகளை மாற்றலாம்.
குழுவொன்றில் தாம் சேர்க்கப்படுவதைத் தவிர்க்கும் தனியுரிமை அமைப்புகளை அந்த நபர் இயக்கியிருக்கலாம். இவ்வாறுதான் உள்ளதா என்பதைச் சரிபார்க்க, குழு உறுப்பினருடன் பேசவும். புதிய அழைப்பை ஏற்பதற்கு, twitter.com -இல் அவர்களது தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் பக்கத்தின் குழுக்களுக்கான Twitter என்ற பிரிவில் அந்த அமைப்பைத் தற்காலிகமாக முடக்கலாம்.