கீச்சுடன் உங்கள் இருப்பிட விவரத்தைச் சேர்ப்பது எவ்வாறு
குறிப்பு: இந்த அம்சத்தை இயக்குவது Twitter -ஐ உங்கள் கீச்சின் ஒரு பகுதியாக நீங்கள் ட்விட் செய்யும் இருப்பிடத்தைக் காட்ட அனுமதிக்கிறது.
Android -க்கான Twitter, iOS -க்கான Twitter, Twitter.com அல்லது பிற மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி உங்கள் கீச்சுகளில் இருப்பிடத்தைச் சேர்க்க நீங்கள் தேர்வு செய்யலாம். எடுத்துக்காட்டாக: உங்கள் கீச்சுக்குக் கூடுதல் இருப்பிடச் சூழலை வழங்க, “சோமா, சான் பிரான்சிஸ்கோ” போன்ற பொதுவான இருப்பிட லேபிளை நீங்கள் சேர்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட இருப்பிடங்களில், iOS -க்கான Twitter மற்றும் Android -க்கான Twitter -இல், உங்கள் கீச்சை ஒரு குறிப்பிட்ட வணிகத்தின் பெயர், மைல்கல் அல்லது பிற ஆர்வமுள்ள விஷயத்தின்படி பெயரிடலாம். இந்த இருப்பிடங்களை Foursquare மற்றும் Yelp வழங்குகின்றன.
நீங்கள் Android -க்கான Twitter அல்லது iOS -க்கான Twitter -ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், கீச்சில் உங்கள் துல்லியமான இருப்பிடமும் இருக்கலாம் (அதாவது, நீங்கள் ட்விட் செய்த GPS ஆயங்கள்), அதை நீங்கள் தேர்ந்தெடுத்த இருப்பிட லேபிளைத் தவிர, Twitter API மூலம் கண்டறியலாம். மேலும் தகவலைப் பெற, கீழே பார்க்கவும்.
குறிப்பு: Twitter -இல் இருப்பிடத் தகவலை நீக்குவது மூன்றாம் தரப்புப் பயன்பாடுகளிலுள்ள தரவின் அனைத்து நகல்களிலிருந்தும் அல்லது வெளிப்புறத் தேடல் முடிவுகளிலிருந்தும் தகவல்கள் அகற்றப்படும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியமாகும். கூடுதலாக, இந்த அமைப்பு நேரடிச்செய்திகளின் மூலம் பகிரப்பட்ட இருப்பிடங்களை அகற்றாது.
சில பகுதிகளில், ஒரு குறிப்பிட்ட வணிகத்தின் பெயர், மைல்கல் அல்லது ஆர்வமுள்ள விஷயத்துடன் உங்கள் கீச்சுக்கு லேபிளிடும் விருப்பம் உங்களுக்கு உள்ளது. இந்த இடங்கள் Foursquare மற்றும் Yelp ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றன. Foursquare வழங்கிய இடம் குறித்த சிக்கலைப் பார்த்தால், அதை Foursquare உதவி மையம் வழியாகப் புகாரளிக்கலாம். குறிப்பிட்ட ஒரு கீச்சு பழிச்சொல்லானது என்று நம்பினால், இங்கு உள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, Twitter இடம் புகாரளியுங்கள்.