கீச்சைப் பகிர்வது எவ்வாறு

ஒரு கீச்சைத் தனிப்பட்ட முறையில் பகிர்வது எளிதானது. உங்களைப் பின்தொடர்பவர்களுடன் நேரடிச்செய்தி வழியாகவோ அல்லது உங்கள் ஃபோனின் முகவரிப் புத்தகத்திலுள்ள உங்கள் தொடர்புகளுக்கு SMS அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தேர்வு உள்ளது.

நேரடிச்செய்தி மூலமாகக் கீச்சைப் பகிர்ந்துகொள்வதற்கு
படி 1

உங்கள் முகப்புக் காலவரிசையில் உள்ள ஒரு கீச்சிலிருந்து அல்லது கீச்சு விவரத்தில் இருந்து பகிர் ஐகானை  தொடவும்.
குறிப்பு: பாதுகாக்கப்பட்ட கீச்சை நேரடிச்செய்தி வழியாகப் பகிர முடியாது.

படி 2

நீங்கள் அடிக்கடி செய்தி அனுப்பும் கணக்குகளின் விரைவுப்-பகிர்வு பட்டியலிலிருந்து பெறுநரைத் தேர்வு செய்யவும். அல்லது நீங்கள் செய்தி அனுப்ப விரும்பும் கணக்கு(களை) உள்ளிட, நபர்களையும் குழுக்களையும் தேடுக என்ற விருப்பத்தேர்வைத் தொடவும்.

படி 3

உங்கள் செய்திக்கு ஒரு கருத்தைச் சேர்க்கும் விருப்பத்தேர்வு உள்ளது.

படி 4

அனுப்பு என்பதைத் தொடவும்.

படி 1

உங்கள் முகப்புக் காலவரிசையில் உள்ள ஒரு கீச்சிலிருந்து அல்லது கீச்சு விவரத்தில் இருந்து பகிர் ஐகானை  தொடவும்.
குறிப்பு: பாதுகாக்கப்பட்ட கீச்சை நேரடிச்செய்தி வழியாகப் பகிர முடியாது.

படி 2

மெனுவிலிருந்து நேரடிச்செய்தி வழியாக அனுப்பு என்பதைத் தொடவும்.

படி 3

பரிந்துரைக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஒரு கணக்கைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது நீங்கள் செய்தியை அனுப்ப விரும்பும் கணக்கு(களை) உள்ளிட, நபர்களையும் குழுக்களையும் தேடுக என்ற உரைப் பெட்டியைத் தொடவும். 

படி 4

உங்கள் செய்திக்கு ஒரு குறிப்பைச் சேர்க்கும் விருப்பத்தேர்வு உள்ளது.

படி 5

அனுப்பு என்பதைத் தொடவும்.

படி 1

உங்கள் முகப்புக் காலவரிசையில் அல்லது கீச்சு விவரத்தில் இருந்து பகிர் ஐகானை  கிளிக் செய்யவும்.
குறிப்பு: பாதுகாக்கப்பட்ட கீச்சை நேரடிச்செய்தி வழியாகப் பகிர முடியாது.

படி 2

நேரடிச்செய்தி வழியாக அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3

பாப்-அப் மெனுவிலிருந்து, நீங்கள் செய்தியை அனுப்ப விரும்பும் நபரின் பெயரை உள்ளிடவும் அல்லது பரிந்துரைக்கப்படும் கணக்குப் பட்டியலிலிருந்து தேர்வு செய்யவும்.

படி 4

உங்கள் செய்திக்கு ஒரு கருத்தைச் சேர்க்கும் விருப்பத்தேர்வு உள்ளது.

படி 5

அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: உங்கள் சுயவிவரப் பக்கத்திலுள்ள உங்கள் சொந்தக் கீச்சுகளில் பகிர் ஐகான் தோன்றாது. உங்கள் சுயவிவரத்திலிருந்து நேரடிச்செய்தி வழியாக உங்கள் கீச்சுகளில் ஒன்றை அனுப்ப, கீழ் வலதுபுறத்தில்  ஐகானை கிளிக் செய்யவும். நேரடிச்செய்திகள் பற்றி மேலும் அறிக.

SMS அல்லது மின்னஞ்சல் மூலமாகக் கீச்சைப் பகிர்வதற்கு
படி 1

உங்கள் முகப்புக் காலவரிசையில் உள்ள ஒரு கீச்சிலிருந்து அல்லது கீச்சு விவரத்தில் இருந்து பகிர் ஐகானை  தொடவும்.

படி 2

பாப்-அப் மெனுவில், இதன் மூலம் கீச்சைப் பகிர்... என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3

SMS வழியாக அனுப்ப, உங்கள் SMS பயன்பாட்டைத் தேர்ந்தெடுத்து, கீச்சை அனுப்ப விரும்பும் தொடர்புகளைச் சேர்க்கவும்.

படி 4

மின்னஞ்சல் வழியாக அனுப்ப, உங்கள் மின்னஞ்சல் கிளையண்டைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் கீச்சை மின்னஞ்சல் செய்ய விரும்பும் நபர்களின் மின்னஞ்சல் முகவரி(களை) உள்ளிடவும்.

படி 5

SMS அல்லது மின்னஞ்சலில் ஒரு கருத்தைச் சேர்க்க நீங்கள் தேர்வு செய்யலாம்.

படி 6

அனுப்பு என்பதைத் தொடவும்.

படி 1

உங்கள் முகப்புக் காலவரிசையில் உள்ள ஒரு கீச்சிலிருந்து அல்லது கீச்சு விவரத்தில் இருந்து பகிர்ஐகானை  தொடவும்.

படி 2

பாப்-அப் மெனுவில், இதன் மூலம் கீச்சைப் பகிர்... என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3

SMS வழியாக அனுப்ப, உங்கள் SMS பயன்பாட்டைத் தேர்ந்தெடுத்து, கீச்சை அனுப்ப விரும்பும் தொடர்புகளைச் சேர்க்கவும்.

படி 4

மின்னஞ்சல் வழியாக அனுப்ப, உங்கள் மின்னஞ்சல் கிளையண்டைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் கீச்சை மின்னஞ்சல் செய்ய விரும்பும் நபர்களின் மின்னஞ்சல் முகவரி(களை) உள்ளிடவும்.

படி 5

SMS அல்லது மின்னஞ்சலில் ஒரு கருத்தைச் சேர்க்க நீங்கள் தேர்வு செய்யலாம்.

படி 6

அனுப்பு என்பதைத் தொடவும்.

படி 1

கீச்சில் அமைந்துள்ள ஐகானை கிளிக் செய்யவும்.

படி 2

பாப்-அப் மெனுவில், இணைப்பைக் கீச்சுக்கு நகலெடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3

URL இப்போது உங்கள் கிளிப்போர்டுக்கு நகலெடுக்கப்படும்.

படி 4

உங்கள் மின்னஞ்சல் கிளையண்டைத் திறந்ததும், நீங்கள் உருவாக்கும் மின்னஞ்சலில் URL -ஐ ஒட்டலாம்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க