Media Studio-ஐப் பயன்படுத்தும் முறை

Twitter -இல் உங்கள் வீடியோவை நிர்வகிக்க, அளவிட மற்றும் லாபம் பெற, பயன்படுத்த எளிய இயங்குதளம்.

Twitter என்பது 280 –க்கு மேற்பட்ட எழுத்துக்குறிகள் பற்றியது. படங்கள், GIFகள், வீடியோக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு கதையைக் கூறுங்கள். ஒரு லைவ்ஸ்ட்ரீமைத் தொடங்குங்கள். உங்களிடம் ஒரு கணக்கு இருந்தாலும் ஐம்பது கணக்குகள் இருந்தாலும், உங்கள் முழு நிறுவனத்திற்கும் Twitter –இல் உள்ளடக்கத்தை நிர்வகிப்பதற்கான ஒரே நிறுத்தமாகிய Media Studio –ஐப் பயன்படுத்தி உங்களது கதையைக் கூறுங்கள். நூலகம், பகுப்பாய்வுகள், லாபம் பெறுதல் மற்றும் தயாரிப்பாளருடன் Media Studio –இலிருந்து எவ்வாறு அதிக பலனைப் பெறுவது என்று அறிந்து கொள்க.

உங்கள் நூலகத்திற்கு ஊடகத்தை எவ்வாறு பதிவேற்றுவது

  1. நீங்கள் studio.twitter.com –இல் உள்நுழைந்து, பார்க்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்.
  2. பக்கத்தின் மேல் வலது பக்கத்திலுள்ள பதிவேற்று பொத்தானை கிளிக் செய்யவும்.
  3. உங்கள் கணினியிலுள்ள ஊடகத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
    1. உதவிக்குறிப்பு: ஒரு பதிவேற்றத்திற்குப் பல்வேறு ஊடக வகைகள் உட்பட, நீங்கள் விரும்பும் எண்ணிக்கையான பல கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
  4. உங்கள் ஊடகம் தேர்ந்தெடுக்கப்பட்டதும், பதிவேற்றம் தானாகவே தொடங்கும்.

ஊடக மீத்தரவை எவ்வாறு மாற்றுவது

  1. உங்கள் Media Studio நூலத்திற்குள் நீங்கள் மாற்ற விரும்பும் ஊடகம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. அமைப்புகள் தாவலில் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் பின்வரும் மீத்தரவு வகைகளைப் புதுப்பிக்கலாம் (அனைத்தும் விருப்பத்தேர்வுக்கானவை):
    1. தலைப்பு
    2. விளக்கம்
    3. செயலுக்கான அழைப்பு URL
    4. உதவிக்குறிப்பு: டெஸ்க்டாப் வழியாக உங்கள் வீடியோவைப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே தலைப்பு மற்றும் விளக்கப் புலங்கள் தோன்றும்; இந்தப் புலங்கள் எந்தவொரு மொபைல் இயங்குதளத்திலும் தெரியாது.
  4. வீடியோ புவியிட-கட்டுப்பாடுகளை இயக்க வேண்டும் என்றால், உள்ளடக்கக் கட்டுப்பாடுகளைத் திறக்கவும்:
    1. சேர்த்துக்கொள்
    2. விலக்கிக்கொள்

 

உங்கள் நூலகத்திலிருந்து ஊடகத்தை எவ்வாறு ட்விச் செய்வது

  1. ஊடகச் சிறுபடத்தின் கீழே உள்ள ட்விட் செய் பொத்தானைக்  கிளிக் செய்யவும்.
  2. கீச்சு எழுதும் சாளரத்தில், உங்கள் கீச்சு உரையை (280 எழுத்துக்குறிகள் வரை) உள்ளிடுங்கள்.
  3. உங்கள் புதிய கீச்சை உடனடியாகப் பதிவிட, ட்விட் செய் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
    1. உதவிக்குறிப்பு: உங்கள் காலவரிசையில் தோன்றாத ஒரு கீச்சை உருவாக்க விரும்பினால், ‘விளம்பரப்படுத்தப்பட்ட-மட்டும்’ எனக் குறிக்கப்பட்ட தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும். விளம்பரப்படுத்தப்பட்ட-மட்டும் கீச்சுகள் பற்றி மேலும் தகவல்களைக் கண்டறியுங்கள்.

உங்கள் நூலகத்திலிருந்து கீச்சை எவ்வாறு திட்டமிடுவது

  1. ஊடகச் சிறுபடத்தின் கீழே உள்ள ட்விட் செய் பொத்தானைக்  கிளிக் செய்யவும்.
  2. கீச்சு எழுதும் சாளரத்தில், உங்கள் கீச்சு உரையை (280 எழுத்துக்குறிகள் வரை) உள்ளிடுங்கள்.
  3. உரையாடல் பெட்டியின் அடிப்புறத்தில் உள்ள திட்ட அட்டவணையிடு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  4. தோன்றுகின்ற தேதி தேர்ந்தெடுப்பானில், ஒரு தேதியையும் சரியான நேரத்தையும் (உங்கள் நடப்பு நேரமண்டலத்துடன் காண்பிக்கப்படும்) தேர்ந்தெடுக்கவும்.
  5. திட்ட அட்டவணையிட்ட கீச்சைச் சேமிக்க, ட்விட் செய் பொத்தானைக் (compose.svg) கிளிக் செய்யவும்.
  6. நீங்கள் திட்ட அட்டவணையிட்ட தேதி மற்றும் நேரத்தில், Media Studio உங்கள் கீச்சைப் பதிவிடும்.

உங்கள் நூலகத்திலிருந்து மற்றொரு Twitter பயனர்பெயருக்கு மீடியாவை எவ்வாறு பகிர்வது

  1. உங்கள் Media Studio நூலகத்தில் உள்ள ஓர் ஊடகத்தில் கிளிக் செய்யவும்.
  2. பகிர்தல் தாவலைக் கிளிக் செய்யவும்.
  3. நபரின் எந்தப் பயனர்பெயருடன் ஊடகத்தைப் பகிர விரும்புகிறீர்களோ அதை உள்ளிடத் தொடங்குங்கள்.
  4. ட்ராப்டவுனில் தோன்றும் சரியான பயனர்பெயரைக் கிளிக் செய்யவும்.
  5. பகிர்ந்த அணுகலை அகற்ற வேண்டும் என்றால், இணைக்கப்பட்ட பயனர்பெயருக்கு அருகிலுள்ள நீக்கு ஐகானைக்  கிளிக் செய்யவும்.

Media Studio வழியாகப் பகிரப்பட்டுள்ள ஊடகத்தை எவ்வாறு நிர்வகிப்பது

  1. வழிசெலுத்தல் பட்டியின் கீழுள்ள நூலகம் மேற்குறிப்பிற்கு அருகிலுள்ள ட்ராப்டவுனைக் கிளிக் செய்யவும்.
  2. பகிர்ந்த ஊடகம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இந்தக் காட்சிக்குள் பகிர்ந்த ஊடகம் வழியாகக் கீச்சுகளை நிர்வகிக்கலாம் மற்றும் உருவாக்கலாம்.
    1. குறிப்பு: இந்த முறை மூலம் உருவாக்கப்படும் அனைத்துக் கீச்சுகளும், வீடியோவின் அசல் உரிமையாளருக்கான (வீடியோவை ஆரம்பத்தில் பகிர்ந்த பயனர்) அடைமொழியை உள்ளடக்கும்.

உங்கள் Media Studio கணக்கிற்குக் கூடுதல் நபர்களை எவ்வாறு சேர்ப்பது

  1. மேல் வலது மூலையில் உங்கள் பெயருக்கு அருகிலுள்ள ட்ராப்டவுனைக் கிளிக் செய்யவும்.
  2. கணக்கிற்கான அணுகலைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அணுகலைச் சேர் பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  4. அணுகலைப் பெறுபவரின் பயனர்பெயரை உள்ளிடத் தொடங்கவும், தோன்றுகின்ற பரிந்துரைத்த பட்டியலில் இருந்து அதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. பட்டியலில் இருந்து ஓர் அனுமதி நிலையைத் தேர்ந்தெடுக்கவும்:
    1. Studio கணக்கு நிர்வாகி – பயனருக்கு அந்தக் கணக்கிற்கான முழு அணுகல் வழங்கப்படும், கணக்கின் உரிமையாளர் செய்யக் கூடிய அனைத்தையும் பயனரும் செய்யலாம். ஒரு குறிப்பிட்ட கணக்கிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் இருக்கலாம்.
    2. Studio பங்களிப்பாளர் – கணக்கு அமைப்புகளை மாற்றுதல் அல்லது கூடுதல் பயனர்களைச் சேர்த்தல் தவிர, பயனருக்கு அந்தக் கணக்கிற்கான கிட்டத்தட்ட முழு அணுகல் வழங்கப்படும்.
    3. Studio வெளியீட்டாளர் – பயனருக்கு அவரது சொந்தத் தனிப்பட்ட கணக்கிற்கான நூலகத்திலிருந்து ஊடகத்தைப் பயன்படுத்த அணுகல் வழங்கப்படும். பிரதான கணக்கின் சார்பாக ஏதேனும் செயல்களை அவர்கள் மேற்கொள்ள முடியாது.
    4. Studio பகுப்பாய்வாளர் – பகுப்பாய்வுகளை அணுகி, மதிப்பாய்வு செய்வதற்காக, பயனருக்கு நூலகத்திற்கான பார்க்க-மட்டும் அணுகல் வழங்கப்படும்.
  6. மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Media Studio –இல் SRT வசனக் கோப்பை எவ்வாறு பதிவேற்றுவது

  1. உங்கள் வீடியோவை Media Studio –க்கு நேரடியாகப் பதிவேற்றவும்.
  2. பதிவேற்றம் நிறைவடைந்ததும், வீடியோவுக்கான விரிவாக்கிய மெனுவைப் பார்க்க, மீடியா விவரம் என்பதைத் தட்டவும்.
  3. வசனங்கள் தாவலைத் தொடவும்.
  4. Media Studio-ஆதரித்த மொழிகளின் பட்டியலில் இருந்து, SRT கோப்பின் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. பதிவேற்று என்பதைத் தட்டவும்.
  6. உங்கள் சாதனத்திலிருந்து SRT கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

நூலகப் பதிவேற்ற விவரக்குறிப்புகள்

Media Studio –க்கு மட்டுமே இந்த அறிவுறுத்தல்கள் செல்லுபடியாகும், மேலும் இவற்றை Twitter developer API, Pro Media API, டெஸ்க்டாப் பதிவேற்றம் அல்லது மொபைல் பதிவேற்றம் போன்ற செயல்பாடுகளுக்கு பின்பற்ற வேண்டாம்.

வீடியோ

கோப்பு அளவு மற்றும் வகை

அதிகபட்சக் கோப்பு அளவு: 1 GB
வகை: .MP4, .MOV

தெளிவுத்திறன்

பரிந்துரைக்கப்பட்ட தெளிவுத்திறன் (லேண்ட்ஸ்கேப்): 1280x720
பரிந்துரைக்கப்பட்ட தெளிவுத்திறன் (சதுரம்): 720x720

குறியாக்கம்

வீடியோ விவரக்குறிப்பு: AVC குறியாக்கம் (H264)
ஆடியோ விவரக்குறிப்பு: ஸ்டீரியோ/மொனோ AAC (LC)
வசனங்கள்: CEA 608/708 உட்பொதிக்கப்பட்டது, .SRT பக்கப்பட்டி
அதிகபட்ச ஃபிரேம்ரேட்: 60 FPS

காலஅளவு

பெரும்பாலானவர்களுக்கு 2:20 (140 வினாடிகள்) வரம்பிடப்படுகிறது, எனினும் 10 நிமிடங்கள் வரையான வீடியோ காலஅளவை வழங்க சில கூட்டாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

> 2:20 நிமிட வீடியோப் பதிவேற்றங்களை (10 நிமிடங்கள் வரை) பதிவேற்றுவதற்காக உங்களை அனுமதிக்க வேண்டும் என விரும்பினால், உங்கள் Twitter கணக்கு நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.

படம்

கோப்பு அளவு மற்றும் வகை

அதிகபட்சக் கோப்பு அளவு: 20 MB
கோப்பு வகை: .JPG, .PNG

தெளிவுத்திறன்

அதிகபட்சத் தெளிவுத்திறன்: 8192x8192

GIF

கோப்பு அளவு

அதிகபட்சக் கோப்பு அளவு: 15 MB
கோப்பு வகை: . GIF

தெளிவுத்திறன்

அதிகபட்சத் தெளிவுத்திறன்: 2048x2048

Bookmark or share this article