எவ்வாறு TweetDeck -ஐப் பயன்படுத்துவது

ஒரே இடைமுகத்தில் பல காலவரிசைகளைப் பார்ப்பதற்கு உங்களை அனுமதிப்பதன் மூலம் மிகவும் வசதியான Twitter அனுபவத்தை TweetDeck வழங்குகிறது. Twitter -இன் பெரும்பாலான அம்சங்களைப் பெறுவதற்கு உதவும் வகையில், மேம்பட்ட அம்சங்களின் தொகுப்பை இது கொண்டுள்ளது: பல Twitter கணக்குகளை நிர்வகித்தல், எதிர்காலத்தில் கீச்சுகளை இடுகையிடுவதற்கான நேரத்தைத் திட்டமிடல், கீச்சின் தனித்தொகுப்புகளை உருவாக்குதல் மற்றும் பல.

TweetDeck தற்போது tweetdeck.com அல்லது Mac ஆப் ஸ்டோரில்கிடைக்கிறது.

எவ்வவாறு TweetDeck -ஐப் பயன்படுத்தத் தொடங்குவது
 1. http://tweetdeck.twitter.com என்னும் வலைத்தளத்திற்குச் செல்லவும் அல்லது Mac -க்கான டெஸ்க்டாப் பயன்பாட்டைத் திறக்கவும்.
 2. உங்கள் Twitter கணக்கின் மூலம் உள்நுழைக. மற்ற நபர்களுடன் பகிர்ந்துகொள்ளாத Twitter கணக்கைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.
 3. ஒருமுறை நீங்கள் உள்நுழைந்த பின்னர், பல Twitter கணக்குகளை உங்கள் TweetDeck கணக்குடன் இணைக்கலாம்.

குறிப்பு: Mac -க்கான டெஸ்க்டாப் பயன்பாட்டின் பழைய பதிப்பினை (Mac: 3.5.0 பதிப்பிற்கு முந்தையது) நீங்கள் பயன்படுத்தினால், சமீபத்திய பதிப்பிற்கு நீங்கள் தரமேற்றும் வரை உங்களால் Twitter கணக்கின் மூலம் உள்நுழையவோ புதிய கணக்கை உருவாக்கவோ முடியாது.


பெருநிறுவனம் அல்லது குழுவில் நீங்கள் TweetDeck -ஐப் பயன்படுத்தினால்
குழுக் கணக்கை அமைக்கும் முறையை அறிந்துகொள்ளவும்.

உங்கள TweetDeck உடன் பல Twitter கணக்குளை எவ்வாறு இணைப்பது
 1. வழிசெலுத்தல் பட்டியில் கணக்குகள்  என்பதைக் கிளிக் செய்யவும்.
 2. உங்களுக்குச் சொந்தமான மற்றொரு கணக்கை இணைக்கவும் என்பதில் கிளிக் செய்யவும்.
 3. நீங்கள் சேர்க்கின்ற குழுத் தொடர்புக் கணக்கை உருவாக்குவீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள செய்தியை வாசிக்கவும், பின்னர் தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
 4. புதிய விண்டோவில், கணக்கின் பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, அங்கீகரி என்பதைக் கிளிக் செய்யவும்.
 5. நீங்கள் TweetDeck -ஐப் பயன்படுத்தத் தயாராகிவிட்டீர்கள்!
TweetDeck -இலிருந்து கணக்கை எவ்வாறு அகற்றுவது
 1. வழிசெலுத்தல் பட்டியில் கணக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
 2. கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் நீக்க விரும்பும் கணக்கை விரிவாக்கவும்.
 3. குழுவிலிருந்து விலகு என்பதைக் கிளிக் செய்து, உறுதிசெய்வதற்கு விலகு என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: நீங்கள் TweetDeck -இல் உள்நுழைந்துள்ள கணக்கை TweetDeck -இலிருந்து அகற்ற முடியாது.


TweetDeck -இல் பல கணக்குகளை நிர்வகித்தல்


இயல்புநிலைக் கணக்கைத் தேர்ந்தெடுத்தல்:

உங்கள் கணக்குகளில் எதனை இயல்புநிலைக் கணக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். கீச்சை உருவாக்குதல், கீச்சை விரும்புதல் மற்றும் கீச்சுகளுக்குப் பதிலளித்தல் போன்றவற்றிற்கு இந்தக் கணக்கைத்தான் பயன்படுத்துவீர்கள்.

 1. வழிசெலுத்தல் பட்டியில் கணக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
 2. கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் இயல்புநிலைக் கணக்காக அமைக்க விரும்பும் கணக்கை விரிவாக்கவும்.
 3. இயல்புநிலைக் கணக்கு தெரிவில் மாற்றவும்.
   

பல்வேறு கணக்குகளிலிருந்து ட்விட் செய்தல்:

TweetDeck மூலம் பல்வேறு கணக்குகளிலிருந்து எளிதாக ட்விட் செய்யலாம். நீங்கள் எந்தக் கணக்கிலிருந்து ட்விட் செய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு:

 1. வழிசெலுத்தல் பட்டியில் மேலேயுள்ள ட்விட் செய் பொத்தானில் கிளிக் செய்யவும்; நீங்கள் அங்கீகரித்துள்ள கணக்குகள் மேலே பட்டியலிடப்படும் (கணக்கின் பயனர்பெயரைப் பார்க்க, ஐகானின் மீது கர்சரைக் கொண்டு செல்லலாம்).
 2. நீங்கள் எந்தக் கணக்கிலிருந்து ட்விட் செய்ய விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் (கணக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அது பச்சை நிற சரி அடையாளம் மூலம் தனிப்படுத்திக் காண்பிக்கப்படும்).
  உதவிக்குறிப்பு: உங்கள் TweetDeck உடன் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு கணக்கிற்கும் முன்கூட்டியே கீச்சுகளைத் திட்ட அட்டவணையிடலாம் (மதிப்புடன் அல்லது மதிப்பில்லாமல்).
   

பல கணக்குகளிலிருந்து விரும்புதல்:

TweetDeck ஆனது பல கணக்குகளிருந்து விரும்ப உங்களை அனுமதிக்கிறது.

 1. கீச்சில் உள்ள மேலும் என்னும் ஐகானில்  கிளிக் செய்யவும்.
 2. பாப் அப் செய்யப்படும் மெனுவிலிருந்து கணக்குகளிலிருந்து விரும்பு... என்பதில் கிளிக் செய்யவும்
 3. நீங்கள் எந்தக் கணக்கு(களிலிருந்து) விருப்பம் தெரிவுக்க விரும்புகிறீர்களோ அதன் அடுத்துள்ள விரும்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
   

பல கணக்குகளிலிருந்து பின்தொடர்தல்:

TweetDeck மூலம் நீங்கள் பல கணக்குகளிலிருந்து எவரேனும் ஒருவரைப் பின்தொடரலாம். ஒருவரின் சுயவிவரத்தில் உள்ள பின்தொடர் என்பதைக் கிளிக் செய்வதன் மூலமாகவும் அவரைப் பின்தொடரலாம், ஆனால் இயல்புநிலைக் கணக்கிலிருந்து மட்டுமே பின்தொடரப்படும்.

 1. நீங்கள் பின்தொடர விரும்பும் கணக்கில் கிளிக் செய்யவும்; ஒரு சுயவிவரம் தோன்றும்.
 2. மேலும் என்னும் ஐகானில் கிளிக் செய்து, கணக்குகளிருந்து பின்தொடர்... என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
 3. எந்தக் கணக்கிலிருந்து பின்தொடர விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  குறிப்பு: கணக்கைப் பின்தொடர்வதை நிறுத்துவதற்கும் இதே வழிமுறைகள் பொருந்தும்.
   

தனிப்பட்ட Twitter பயனர்பெயர் மூலம் உள்நுழைவது ஏன் மிகவும் பாதுகாப்பாக உள்ளது?


கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்ட தனிப்பட்ட பயனர்பெயரைப் பயன்படுத்தி நீங்கள் உள்நுழைவதனால், கணக்கின் பாதுகாப்பைக் குறித்த ஆபத்து இல்லமால், குழுக் கணக்குகளைப் பாதுகாப்பாக அணுகலாம். கூடுதல் பாதுகாப்பிற்கு உள்நுழைவுச் சரிபார்ப்பைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.

எவ்வாறு TweetDeck -இல் கீச்சு உருவாக்குவது


என்ன நிகழ்கிறது என்பதை வார்த்தைகள், படிமங்கள், GIFகள், எமோஜிகள், தொடர்ச்சிகள், வாக்கெடுப்புகள் மற்றும் பலவற்றுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால், TweetDeck -இல் உள்ள கீச்சு உருவாக்கி உரையாடலில் இணைவதை எளிதாக்குகிறது.

 1. உங்கள் Twitter கணக்கில் உள்நுழைந்துள்ள போது, ட்விட் செய் என்பதில் கிளிக் செய்யவும்.
 2. நீங்கள் பல கணக்குகளில் உள்நுழைந்திருந்தால், எந்தக் கணக்கிலிருந்து ட்விட் செய்ய விரும்புகிறீர்களோ அது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.
 3. உரையுடன் உங்கள் கீச்சை உருவாக்குங்கள். என்பதில் கிளிக் செய்வதன் மூலம் எமோஜியைச் சேர்க்கவும்.   என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் படம் அல்லது வீடியோ, என்பதில் தட்டுவதன் மூலம் GIF அல்லது  என்பதன் மூலம் வாக்கெடுப்பு போன்றவற்றைச் சேர்க்கவும்.
 4. தொடர்ச்சியை உருவாக்க, உங்களின் தொடர்ச்சியில் அடுத்தக் கீச்சைச் சேர்ப்பதற்கு  என்பதில் கிளிக் செய்யவும்.
 5. பகிர்வதற்கு ட்விட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
   

TweetDeck நெடுவரிசைகளைப் பயன்படுத்துதல்


ஒரேயொரு காலவரிசைக்குப் பதிலாக, உங்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கத்தைக் காட்ட நெடுவரிசைகளைச் சேர்த்துக்கொள்ள உங்களை TweetDeck அனுமதிக்கிறது மற்றும் அவற்றை நீங்கள் அருகருகே காணலாம். உங்களின் அனைத்துக் குறிப்பீடுகள், தேடல் வினவல் முடிவுகள், விருப்பங்களின் பட்டியல், ஹேஷ்டேக் அல்லது ட்ரெண்டிலிருந்து சமீபத்திய கீச்சுகள் மற்றும் பலவற்றைக் காண்பிக்கும் நெடுவரிசைகளைச் சேர்க்கவும்.
 

நெடுவரிசையைச் சேர்ப்பதற்கு:

 1. வழிசெலுத்தல் பட்டியிலிருந்து, நெடுவரிசையைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்க, ப்ளஸ் ஐகானில்  கிளிக் செய்யவும். 
 2. நீங்கள் சேர்க்க விரும்பும் நெடுவரிசையின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. உங்கள் கணக்குகள் என்பதில், நீங்கள் நெடுவரிசையாகக் காண்பிக்க விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

குறிப்பு: மற்ற கணக்குகளின் செயல்கள் அடிப்படையிலான தகவலைப் பயன்படுத்தியும் நெடுவரிசைகளை உருவாக்கலாம். கணக்குப் பயனர்பெயரில் கிளிக் செய்து, குறிப்பீடுகள், பட்டியல்கள், தனித்தொகுப்புகள் அல்லது விருப்பங்கள் போன்ற செயல்பாடுகளைத் தேர்வுசெய்யவும்.

நெடுவரிசையை அகற்றுவதற்கு:

 1. நெடுவரிசை தலைப்பிற்கு அடுத்துள்ள, நெடுவரிசை மேற்குறிப்பில் வடிகட்டு ஐகானில்  கிளிக் செய்யவும்.
 2. நெடுவரிசையை நீக்குவதற்கு அகற்று பொத்தானில் கிளிக் செய்யவும்.
   

நெடுவரிசை வடிகட்டிகள்:

உங்களின் ஒவ்வொரு நெடுவரிசையிலும் காட்ட விரும்பும் கீச்சுகளின் வகையை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். உள்ளடக்கம், இருப்பிடம்பயனர்கள், ஈடுபாடுகள் அல்லது விழிப்பூட்டல்கள்; அல்லது மூன்றின் கலவை ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். 

 1. உள்ளடக்க வடிகட்டுதல், மறுகீச்சுகள், குறிப்பிட்ட வார்த்தை அல்லது சொற்றொடரைக் கொண்டுள்ள ட்விட்கள் அல்லது புகைப்படங்கள் உள்ள ட்விட்கள் போன்ற சில கீச்சு, வகைகளின் படி நெடுவரிசையை வடிகட்ட உங்களை அனுமதிக்கிறது. 
 2. குறிப்பிட்ட இடங்களில் இடக்குறிச்சொல்லிட்ட கீச்சுகளை வடிகட்ட, இருப்பிட வடிகட்டி உங்களை அனுமதிக்கிறது.
 3. ஒரு குறிப்பிட்ட நெடுவரிசையில், குறிப்பிட்ட ஆசிரியரால் எழுத்தப்பட்ட ட்விட்கள் மற்றும் அவர்கள் குறிப்பீடு செய்தவை போன்றவற்றை வடிகட்ட, பயனர் வடிகட்டி உங்களை அனுமதிக்கிறது. 
 4. குறைந்தபட்ச எண்ணிக்கையிலான மறுகீச்சுகள், விருப்பங்கள் அல்லது பதிலளிப்புகள் போன்றவற்றினுள் கீச்சுகளை வடிகட்ட ஈடுபாடு வடிகட்டி உங்களை அனுமதிக்கிறது.
 5. பாப் அப்கள் அல்லது குறிப்பிட்ட நெடுவரிசைக்கான ஒலிகளைச் செயல்படுத்த விழிப்பூட்டல் வடிகட்டி உங்களை அனுமதிக்கிறது.
 6. குறிப்பு: தேடல் நெடுவரிசையை உருவாக்கினால், முடிவுகளை இருப்பிடம், தேதி மற்றும் ஈடுபாட்டின் படி வடிகட்டலாம். உங்களுக்கு விருப்பமான பகுதியிலுள்ள தொடர்புடைய உள்ளடக்கத்தை வடிகட்ட இருப்பிட வடிகட்டியைப் பயன்படுத்தலாம். இருப்பிட வடிகட்டி பயன்படுத்தப்படும்போது, இருப்பிடத்துடன் இடக்குறிச்சொல்லிட்ட பாதுகாக்கப்படாத கீச்சுகள் மட்டுமே தேடல் முடிவுகளில் தோன்றும்.
   

ஒரு வடிகட்டியை உருவாக்க:

 1. நெடுவரிசை தலைப்பிற்கு அடுத்துள்ள, நெடுவரிசை மேற்குறிப்பில் வடிகட்டு ஐகானில்  கிளிக் செய்யவும்.
 2. நெடுவரிசைக்கு எந்த வகையான வடிகட்டி(களை) பயன்படுத்த விரும்புகிறீர்கள் (உள்ளடக்கம், பயனர்கள் அல்லது விழிப்பூட்டல்கள்) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. நெடுவரிசை அமைப்புகளைச் சுருக்க, மீண்டும் வடிகட்டி ஐகானில்   கிளிக் செய்யவும்.
  குறிப்பு: தனிப்பயன் வடிகட்டலைக் கொண்ட நெடுவரிசைகள், நீங்கள் செயல்படுத்தியுள்ள வடிகட்டிக்கான ஐகானுடன் இதன் மூலம் வடிகட்டப்பட்டுள்ளது என்பதைக் காட்டும்.
   

நெடுவரிசைகளை மறுவரிசைப்படுத்தல்:

சில துரிதமான கிளிக்குகள் மூலம் TweetDeck -இல் உள்ள நெடுவரிசைகளை எளிதாக மறுவரிசைப்படுத்தலாம்.

 1. நெடுவரிசை தலைப்பிற்கு அடுத்துள்ள, நெடுவரிசை மேற்குறிப்பில் வடிகட்டு ஐகானில்  கிளிக் செய்யவும்.
 2. நெடுவரிசையை எங்கு நகர்த்த விரும்புகிறீர்கள் என்பதன் அடிப்படையில் இடது அல்லது வலது அம்புக்குறியில் கிளிக் செய்யவும்.
  குறிப்பு: நெடுவரிசைகளை மறுவரிசைப்படுத்த, வழிசெலுத்தல் பட்டியில் உள்ள அவற்றிற்கான ஐகான்களை இழுத்து விடவும் செய்யலாம்.
   

TweetDeck நெடுவரிசைகளின் வகை மற்றும் அவற்றில் தோன்றுபவை
 

 • முகப்பு: எந்தவொரு குறிப்பிட்ட கணக்கிற்குமான முகப்புக் காலவரிசை.
 • பயனர்: குறிப்பிட்ட கணக்கிலிருந்து கீச்சுகள்.
 • அறிவிப்புகள்: குறிப்பிட்ட கணக்கின் கீச்சுகள், மறுகீச்சுகள், லைக்குகள், குறிப்பீடுகள் மற்றும் யாரேனும் ஒருவர் கணக்கைப் பின்தொடர்தல் போன்றவை உட்பட, அந்தக் கணக்கிற்கான அறிவிப்புகள்.
 • தேடு: ஒரு குறிப்பிட்ட தேடல் சொல்.
 • பட்டியல்கள்: பின்தொடரும் பட்டியலை உருவாக்கவும் அல்லது நீங்கள் ஏற்கனவே பின்தொடரும் பட்டியலை இணைக்கவும்.
 • தனித்தொகுப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட கீச்சுகளுக்கான காலவரிசை, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு.
 • செயல்பாடு: நீங்கள் பின்தொடரும் கணக்குகளில் என்ன நிகழ்கிறது.
 • லைக்குகள்: குறிப்பிட்ட கணக்கிலிருந்து விருப்பம் தெரிவிக்கப்பட்ட கீச்சுகள்.
 • செய்திகள் (ஒரு கணக்கு): குறிப்பிட்ட கணக்கிற்கான நேரடிச் செய்திகள்.
 • குறிப்பீடுகள் (ஒரு கணக்கு): குறிப்பிட்ட கணக்கை எவரேனும் ஒருவர் குறிப்பிடும்போது.
 • பின்தொடர்பவர்கள்: குறிப்பிட்ட கணக்கிற்கான பின்தொடர்தல் செயல்பாடு
 • திட்டமிடப்பட்டவை: உங்களின் திட்டமிடப்பட்ட கீச்சுகள்.
 • செய்திகள் (அனைத்துக் கணக்குகள்): அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கணக்குகளுக்குமான நேரடிச் செய்திகள் திரளாக.
 • குறிப்பீடுகள் (அனைத்துக் கணக்குகள்): அனைத்துக் கணக்குகளிலிருந்தும் குறிப்பீடுகள்.
 • பிரபலமானவை: குறிப்பிட்ட உலகளாவிய போக்குகள்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க