நேரடிச்செய்திகள் பற்றி
நேரடிச்செய்திகள் என்பது Twitter –இன் தனிப்பட்ட பகுதியாகும். கீச்சுகள் மற்றும் மற்ற உள்ளடக்கத்தைப் பற்றி பிற நபர்களுடன் உரையாடுவதற்கு, நேரடிச்செய்திகளைப் பயன்படுத்தலாம்.
iOS -க்கான Twitter -இலிருந்து நேரடிச்செய்தியை அனுப்புவதற்கு
Android –க்கான Twitter –இலிருந்து நேரடிச் செய்திகளை அனுப்புவதற்கு
வலைத்தளத்தின் மூலம் நேரடிச்செய்தியை அனுப்புவதற்கு
நேரடிச்செய்தி அறிவிப்புகளைப் பார்ப்பதைத் தள்ளி வைப்பதற்கு
நேரடிச்செய்தி அல்லது உரையாடலைப் பற்றி புகாரளிக்க
நேரடிச்செய்தி மூலமாகக் கீச்சைப் பகிர்ந்துகொள்வதற்கு
அனைவரிடமிருந்தும் நேரடிச்செய்திகளைப் பெறுவதற்கு
நேரடிச்செய்திக் கோரிக்கைகளைப் பார்க்க
நேரடிச்செய்தி படித்தல் ரசீதுகளை முடக்க
SMS மூலமாக உங்கள் ஃபோனில் நேரடிச்செய்திகளை அனுப்புவதற்கு மற்றும் பெறுவதற்கு
நேரடிச்செய்திகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
- உங்களைப் பின்தொடரும் எவருடனும் தனிப்பட்ட உரையாடலைத் தொடங்கலாம் அல்லது குழு உரையாடலை உருவாக்கலாம்.
- பின்வரும் நிபந்தனைகளில், உங்களைப் பின்தொடராத யார் வேண்டுமானாலும் உங்களுக்கு நேரடிச்செய்திகளை அனுப்பலாம்:
- யாரிடமிருந்தும் நேரடிச்செய்திகளைப் பெறுவதற்கான விருப்பத்தேர்வை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் அல்லது;
- அந்த நபருக்கு நீங்கள் முன்னதாக நேரடிச்செய்தி அனுப்பியிருந்தால்.
- உரையாடலில் உள்ள யார் வேண்டுமானாலும் குழுவிற்கு நேரடிச்செய்திகளை அனுப்பலாம். குழுவில் உள்ள அனைவரும், ஒருவருக்கொருவர் பின்தொடராவிடினும் கூட, அனைத்துச் செய்திகளையும் பார்க்கலாம்.
- குழு உரையாடல்களில், உரையாடலில் உள்ள யார் வேண்டுமானாலும் மற்ற பங்கேற்பாளர்களைச் சேர்க்கலாம். புதிதாகச் சேர்க்கப்பட்ட பங்கேற்பாளர்கள், உரையாடலின் முந்தைய வரலாற்றைக் காண முடியாது.
- சில கணக்குகள், குறிப்பாக Twitter –இல் வணிகங்கள் போன்றவை அனைவரிடமிருந்தும் நேரடிச்செய்திகளைப் பெறுவதற்கான அமைப்பைப் செயல்படுத்தியுள்ளன. அது போன்ற கணக்குகள் உங்களைப் பின்தொடராவிடினும் நீங்கள் அவர்களுக்கு நேரடிச்செய்திகளை அனுப்பலாம்.
- குழு மற்றும் தனிநபருடனான உரையாடல்களில், நீங்கள் தடைசெய்த கணக்குடன் உரையாட முடியாது.
iOS -க்கான Twitter -இலிருந்து நேரடிச்செய்தியை அனுப்புவதற்கு
- உறை ஐகானைத் தொடவும். நீங்கள் செய்திகள் என்பதற்கு அனுப்பப்படுவீர்கள்.
- புதிய செய்தியை உருவாக்க செய்திகள் என்னும் ஐகானை தொடவும்.
- முகவரிப் பெட்டியில், நீங்கள் செய்தி அனுப்ப விரும்பும் பெயர்(கள்) அல்லது @பயனர்பெயர்(களை) உள்ளிடவும். ஒரு குழுவில் 50 நபர்கள் வரை இருக்கலாம்.
- உங்கள் செய்தியை உள்ளிடவும்.
- உங்கள் நேரடிச்செய்தியில் உரையுடன், புகைப்படம், வீடியோ அல்லதி GIF போன்றவற்றைச் சேர்க்கலாம். செய்தி உருவாக்குதல் பட்டியில், ப்ளஸ் ஐகானில் பின்வரும் விருப்பத்தேர்வுகளை அணுகலாம்.
- புகைப்படம் எடுக்க அல்லது வீடியோவைப் பதிவுசெய்வதற்கு அல்லது உங்கள் சாதனக் கேலரியிலிருந்து ஒன்றை இணைப்பதற்கு புகைப்படம் ஐகானை தொடவும். உங்கள் செய்தியை அனுப்பபுவதற்கு முன்னர், புகைப்படத்தை உங்களால் திருத்த முடியும். மேம்படுத்தல், வெட்டுதல் மற்றும் வடிகட்டிகளைச் சேர்க்கக்கூடிய அம்சங்களைக் கொண்ட திருத்துதல் திரைக்குச் செல்ல, புகைப்படத்தைத் தொடவும். நீங்கள் திருத்தி முடித்த பின்னர், சேமி என்பதைத் தொடவும். மேம்பட்ட புகைப்பட விருப்பத்தேர்வுகள் பற்றி மேலும் அறியவும்.
- உங்கள் செய்தியில் அனிமேஷன் செய்யப்பட்ட GIF -ஐச் சேர்ப்பதற்கு, மீடியா லைப்ரரியில் இருந்து தேடி ஒன்றைச் சேர்ப்பதற்கு GIF ஐகானை தொடவும்.
- உங்கள் செய்தியை அனுப்ப, காகித விமானம் ஐகானை தொடவும்
நேரடிச்செய்தி அல்லது உரையாடலை நீக்க:
- நேரடிச்செய்தியை நீக்க, செய்தியைத் தொட்டு பிடித்து பாப் அப் ஆகும் மெனுவிலிருந்து செய்தியை நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் இன்பாக்ஸிலிருந்து முழுவதுமான உரையாடலை நீக்குவதற்கு, உரையாடலில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து, குப்பைத் தொட்டி ஐகானை தொடவும் மேலும் உரையாடல் தகவல் பக்கத்திலிருந்து தகவல் ஐகானை தொட்டு, உரையாடலை நீக்கு என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் முழு உரையாடலையும் நீங்கள் நீக்கலாம்.
- நேரடிச்செய்தி அல்லது உரையாடலை நீங்கள் நீக்கும் போது (அனுப்பிய அல்லது பெறப்பட்ட), அது உங்கள் கணக்கிலிருந்து மட்டுமே நீக்கப்படும். நீங்கள் நீக்கிய நேரடிச்செய்தி அல்லது உரையாடல்களை, உரையாடலில் உள்ள மற்ற நபர்களால் இன்னும் காண முடியும்.
குழு உரையாடல்களை நிர்வகிக்க:
- உரையாடல் பங்கேற்பாளர்களின் பட்டியலைத் துரிதமாக அணுகுவதற்கு, உங்கள் இன்பாக்ஸிலிருந்து சுயவிவரம் படத்தைத் தொடவும்.
- குழு உரையாடலிலிருந்து, அதன் அமைப்புகள் பக்கத்திற்குச் செல்ல, தகவல் ஐகானை தொடவும்.
- அமைப்புகள் விவரங்கள்:
- குழு உரையாடல் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் புதுப்பிக்க, திருத்து என்பதைத் தொடவும். புகைப்படத்தை மாற்றுவதற்கு, லைப்ரரியிலிருந்து தேர்வு செய்ய அல்லது புதிதாக ஒன்றை எடுப்பதற்கு, புகைப்படத்தில் உள்ள கேமரா ஐகானைத் தொடவும். புதுப்பிக்க, சேமி என்பதைத் தொடவும்.
குறிப்பு: புகைப்படத்தை நீங்கள் மாற்றிய பின்னர், தற்போதைய புகைப்படத்தை அகற்று, தற்போதைய புகைப்படத்தைக் காட்டு, லைப்ரரியிலிருந்து தேர்ந்தெடுக்கவும் அல்லது புதிதாக ஒன்றை எடு என்ற விருப்பத்தேர்வைப் பெறுவீர்கள். - உரையாடலில் உறுப்பினர்களைச் சேர்க்க, உறுப்பினர்களைச் சேர் என்பதைத் தொடவும்.
- 1 மணிநேரம், 8 மணிநேரம், 1 வாரம் அல்லது எப்போதும் அறிவிப்புகளைத் தள்ளிவைக்க, உரையாடலைத் தள்ளிவை என்பதற்கு அடுத்துள்ள ஸ்லைடரை இழுக்கவும்.
- குழு உரையாடலில் நீங்கள் குறிப்பிடப்படும் போது, நீங்கள் அறிவிப்புகளைப் பெற வேண்டுமா என்பதைக் கட்டுப்படுத்த, குறிப்பீடுகளைத் தள்ளிவை என்பதற்கு அடுத்துள்ள ஸ்லைடரை இழுக்கவும். நீங்கள் உரையாடலைத் தள்ளி வை என்னும் அம்சத்தைச் செயல்படுத்தியிருந்தாலும் கூட, இந்த அம்சத்தைச் செயல்படுத்தும் வரை, உரையாடலில் நீங்கள் குறிப்பிடப்படும் போது அறிவிப்புகளைப் பெறுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். கூடுதலாக, குழு உரையாடலில் குறிப்பீடு அறிவிப்புகளைப் பெறுவதற்கு நீங்கள் அதில் பங்கேற்பாளராக இருக்க வேண்டும்.
- குழு உரையாடலைப் பற்றி புகாரளிக்க, உரையாடலைப் புகாரளி என்பதைத் தொடவும்.
- குழு உரையாடலிலிருந்து விலக, உரையாடலிலிருந்து விலக்கு என்பதைத் தொடவும்.
- குழு உரையாடல் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் புதுப்பிக்க, திருத்து என்பதைத் தொடவும். புகைப்படத்தை மாற்றுவதற்கு, லைப்ரரியிலிருந்து தேர்வு செய்ய அல்லது புதிதாக ஒன்றை எடுப்பதற்கு, புகைப்படத்தில் உள்ள கேமரா ஐகானைத் தொடவும். புதுப்பிக்க, சேமி என்பதைத் தொடவும்.
Android –க்கான Twitter –இலிருந்து நேரடிச் செய்திகளை அனுப்புவதற்கு
- உறை ஐகானைத் தொடவும். நீங்கள் செய்திகள் என்பதற்கு அனுப்பப்படுவீர்கள்.
- புதிய செய்தியை உருவாக்க செய்திகள் என்னும் ஐகானை தொடவும்.
- முகவரிப் பெட்டியில், நீங்கள் செய்தி அனுப்ப விரும்பும் பெயர்(கள்) அல்லது @பயனர்பெயர்(களை) உள்ளிடவும். ஒரு குழுவில் 50 நபர்கள் வரை இருக்கலாம்.
- உங்கள் செய்தியை உள்ளிடவும்.
- உங்கள் நேரடிச்செய்தியில் உரையுடன், புகைப்படம், வீடியோ அல்லது GIF போன்றவற்றைச் சேர்க்கலாம்.
- புகைப்படம் எடுக்க அல்லது வீடியோவைப் பதிவுசெய்வதற்கு அல்லது உங்கள் சாதனக் கேலரியிலிருந்து ஒன்றை இணைப்பதற்கு புகைப்படம் ஐகானை தொடவும். உங்கள் செய்தியை அனுப்பபுவதற்கு முன்னர், iOS -க்கான Twitter அல்லது Android –க்கான Twitter பயன்பாட்டின் மூலமாகப் புகைப்படத்தை உங்களால் திருத்த முடியும். மேம்படுத்தல், வெட்டுதல் மற்றும் வடிகட்டிகளைச் சேர்க்கக்கூடிய அம்சங்களைக் கொண்ட திருத்துதல் திரைக்குச் செல்ல, புகைப்படத்தைத் தொடவும். நீங்கள் திருத்தி முடித்த பின்னர், சேமி என்பதைத் தொடவும். மேம்பட்ட புகைப்பட விருப்பத்தேர்வுகள் பற்றி மேலும் அறியவும்.
- உங்கள் செய்தியில் அனிமேஷன் செய்யப்பட்ட GIF -ஐச் சேர்ப்பதற்கு, மீடியா லைப்ரரியில் இருந்து தேடி ஒன்றைச் சேர்ப்பதற்கு GIF ஐகானை தொடவும்.
- புகைப்படம் எடுக்க அல்லது வீடியோவைப் பதிவுசெய்வதற்கு அல்லது உங்கள் சாதனக் கேலரியிலிருந்து ஒன்றை இணைப்பதற்கு புகைப்படம் ஐகானை தொடவும். உங்கள் செய்தியை அனுப்பபுவதற்கு முன்னர், iOS -க்கான Twitter அல்லது Android –க்கான Twitter பயன்பாட்டின் மூலமாகப் புகைப்படத்தை உங்களால் திருத்த முடியும். மேம்படுத்தல், வெட்டுதல் மற்றும் வடிகட்டிகளைச் சேர்க்கக்கூடிய அம்சங்களைக் கொண்ட திருத்துதல் திரைக்குச் செல்ல, புகைப்படத்தைத் தொடவும். நீங்கள் திருத்தி முடித்த பின்னர், சேமி என்பதைத் தொடவும். மேம்பட்ட புகைப்பட விருப்பத்தேர்வுகள் பற்றி மேலும் அறியவும்.
- அனுப்பு ஐகானை தொடவும்.
நேரடிச்செய்தி அல்லது உரையாடலை நீக்க:
- நேரடிச்செய்தியை நீக்க, செய்தியைத் தொட்டு பிடித்து பாப் அப் ஆகும் மெனுவிலிருந்து செய்தியை நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் இன்பாக்ஸிலிருந்து முழுவதுமாக உரையாடலை நீக்குவதற்கு, உரையாடலைத் தொட்டுப் பிடித்து உரையாடலை நீக்கு என்பதைத் தேர்ந்தேடுக்கவும். உரையாடல் தகவல் பக்கத்திலிருந்து தகவல் ஐகானை தொட்டு, உரையாடலை நீக்கு என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் முழு உரையாடலையும் நீங்கள் நீக்கலாம்.
- நேரடிச்செய்தி அல்லது உரையாடலை நீங்கள் நீக்கும் போது (அனுப்பிய அல்லது பெறப்பட்ட), அது உங்கள் கணக்கிலிருந்து மட்டுமே நீக்கப்படும். நீங்கள் நீக்கிய நேரடிச்செய்தி அல்லது உரையாடல்களை, உரையாடலில் உள்ள மற்ற நபர்களால் இன்னும் காண முடியும்.
குழு உரையாடல்களை நிர்வகிக்க:
- உரையாடல் பங்கேற்பாளர்களின் பட்டியலைத் துரிதமாக அணுகுவதற்கு, உங்கள் இன்பாக்ஸிலிருந்து சுயவிவரம் படத்தைத் தொடவும்.
- குழு உரையாடலிலிருந்து, அதன் அமைப்புகள் பக்கத்திற்குச் செல்ல, தகவல் ஐகானை தொடவும்.
- அமைப்புகள் விவரங்கள்:
- குழு உரையாடல் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் புதுப்பிக்க, திருத்து என்பதைத் தொடவும். பின்வரும் புகைப்பட விருப்பத்தேர்வுகளுக்கு செல்ல, கேமரா ஐகானை தொடவும்: புகைப்படத்தைக் காட்டு, கேமரா, புகைப்படக் கேலரி அல்லது புகைப்படத்தை அகற்று. புதுப்பிக்க, சேமி என்பதைத் தொடவும்.
- உரையாடலில் உறுப்பினர்களைச் சேர்க்க, உறுப்பினர்களைச் சேர் என்பதைத் தொடவும். குழுவை உருவாக்கியவரே குழுவின் நிர்வாகியாவார். நிர்வாகிக் குழுவிலிருந்து வெளியேறினால், நிர்வாகிக்குப் பின்னர் குழுவில் இணைந்த முதல் உறுப்பினர், குழுவின் நிர்வாகியாக மாற்றப்படுவார். குழு நிர்வாகியாக, உங்களால் குழுவிலிருந்து உறுப்பினர்களை அகற்ற முடியும்.
- 1 மணிநேரம், 8 மணிநேரம், 1 வாரம் அல்லது எப்போதும் அறிவிப்புகளைத் தள்ளிவைக்க, உரையாடலைத் தள்ளிவை என்பதைத் தொடவும்.
- குழு உரையாடலில் நீங்கள் குறிப்பிடப்படும் போது, நீங்கள் அறிவிப்புகளைப் பெற வேண்டுமா என்பதைக் கட்டுப்படுத்த, குறிப்பீடுகளைத் தள்ளிவை என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் உரையாடலைத் தள்ளிவை என்னும் அம்சத்தைச் செயல்படுத்தியிருந்தாலும் கூட, இந்த அம்சத்தை செயல்படுத்தும் வரை, உரையாடலில் நீங்கள் குறிப்பிடப்படும் போது அறிவிப்புகளைப் பெறுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். கூடுதலாக, குழு உரையாடலில் குறிப்பீடு அறிவிப்புகளைப் பெறுவதற்கு நீங்கள் அதில் பங்கேற்பாளராக இருக்க வேண்டும்.
- குழு உரையாடலைப் பற்றி புகாரளிக்க, உரையாடலைப் புகாரளி என்பதைத் தொடவும்.
- குழு உரையாடலிலிருந்து விலக, உரையாடலிலிருந்து விலக்கு என்பதைத் தொடவும்.
வலைத்தளத்தின் மூலம் நேரடிச்செய்தியை அனுப்புவதற்கு
- இடது வழிசெலுத்தல் பட்டியில், செய்திகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- நேரடிச்செய்தி வரலாற்றைக் காண்பீர்கள். மேலுள்ள புதிய செய்தி என்பதில் கிளிக் செய்யவும்.
- முகவரிப் பெட்டியில், நீங்கள் செய்தி அனுப்ப விரும்பும் பெயர்(கள்) அல்லது @பயனர்பெயர்(களை) உள்ளிடவும். ஒரு குழுவில் 50 நபர்கள் வரை இருக்கலாம்.
- அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- செய்திப் பெட்டியில், நேரடிச்செய்தி மூலமாகப் புகைப்படம், வீடியோ, GIF அல்லது எமோஜியைச் சேர்க்கலாம்.
- புகைப்படம் அல்லது வீடியோவைப் பதிவேற்ற, புகைப்பட ஐகானில் கிளிக் செய்யவும்.
- உங்கள் செய்தியில் அனிமேஷன் செய்யப்பட்ட GIF –ஐச் சேர்ப்பதற்கு, மீடியா லைப்ரரியில் இருந்து தேடி ஒன்றைச் சேர்ப்பதற்கு GIF ஐகானை தொடவும்.
- அனுப்புவதற்கு, அனுப்பு பொத்தானைக் கிளிக் செய்யவும் அல்லது எண்டர் விசையை அழுத்தவும்.
குறிப்பு: செய்தியில் புதிய வரிசையைத் தொடங்க, ஒரே நேரத்தில் ஷிப்ட் மற்றும் எண்டர் விசைகளை அழுத்தவும். எண்டர் விசையை மட்டும் அழுத்தினால் உங்கள் செய்தி அனுப்பப்படும்.
நேரடிச்செய்தி அல்லது உரையாடலை நீக்க:
- நேரடிச்செய்தியை நீக்குவதற்கு, செய்தியில் கிளிக் செய்து, நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஒரு உரையாடலிலிருந்து விலக, உரையாடலைக் கண்டறிந்து அதனைத் திறக்க அதன்மீது கிளிக் செய்யவும். தகவல் ஐகானில் கிளிக் செய்து, உரையாடலிலிருந்து விலக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் நேரடிச்செய்தியை நீக்கும்போது அல்லது உரையாடலை நீங்கள் உரையாடலிலிருந்து விலக்கும்போது (அனுப்பிய அல்லது பெறப்பட்ட), அது உங்கள் கணக்கிலிருந்து மட்டுமே நீக்கப்படும். நீங்கள் நீக்கிய நேரடிச்செய்தி அல்லது உரையாடல்களை, உரையாடலில் உள்ள மற்ற நபர்களால் இன்னும் காண முடியும்.
குழு உரையாடல்களை நிர்வகிக்க:
- குழு உரையாடலிலிருந்து, உரையாடல் அமைப்புகளை அணுக, தகவல் ஐகானை கிளிக் செய்யவும்.
- குழுத் தகவல் பக்கத்திலிருந்து, ட்ராப்-டவுன் மெனுவை அணுக, மேலும் என்ற ஐகானை கிளிக் செய்யவும். குழுப் பெயரைத் திருத்து, புதிய புகைப்படத்தைப் பதிவேற்று, புகைப்படத்தைக் காட்டு அல்லது புகைப்படத்தை அகற்று போன்றவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
குறிப்பு: குழுச் செய்திப் புகைப்படம் பதிவேற்றப்பட்டிருந்தால் மட்டுமே புகைப்படத்தைப் பார்ப்பதற்கு மற்றும் அகற்றுவதற்கான விருப்பத்தேர்வுகள் கிடைக்கும்.
- குழுத் தகவல் பக்கத்திலிருந்து, ட்ராப்-டவுன் மெனுவை அணுக, மேலும் என்ற ஐகானை கிளிக் செய்யவும். குழுப் பெயரைத் திருத்து, புதிய புகைப்படத்தைப் பதிவேற்று, புகைப்படத்தைக் காட்டு அல்லது புகைப்படத்தை அகற்று போன்றவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
- அறிவிப்புகள் என்பதன் கீழ், நீங்கள் இவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்:
- 1 மணிநேரம், 8 மணிநேரம், 1 வாரம் அல்லது எப்போதும் அறிவிப்புகளைத் தள்ளிவைக்க, உரையாடலைத் தள்ளிவை என்பதைக் கிளிக் செய்யவும்.
- குழு உரையாடலில் நீங்கள் குறிப்பிடப்படும் போது, நீங்கள் அறிவிப்புகளைப் பெற வேண்டுமா என்பதைக் கட்டுப்படுத்த, குறிப்பீடுகளைத் தள்ளிவை என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் உரையாடலைத் தள்ளிவை என்னும் அம்சத்தைச் செயல்படுத்தியிருந்தாலும் கூட, இந்த அம்சத்தை செயல்படுத்தும் வரை, உரையாடலில் நீங்கள் குறிப்பிடப்படும் போது அறிவிப்புகளைப் பெறுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். கூடுதலாக, குழு உரையாடலில் குறிப்பீடு அறிவிப்புகளைப் பெறுவதற்கு நீங்கள் அதில் பங்கேற்பாளராக இருக்க வேண்டும்.
- குழு உரையாடலைப் பற்றி புகாரளிக்க, உரையாடலைப் புகாரளி என்பதைக் கிளிக் செய்யவும்.
- குழு உரையாடலிலிருந்து விலக, உரையாடலிலிருந்து விலக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
நேரடிச்செய்தி அறிவிப்புகளைப் பார்ப்பதைத் தள்ளி வைப்பதற்கு
1 மணிநேரம், 8 மணிநேரம், 1 வாரம் அல்லது எப்போதும் நேரடிச்செய்திகளுக்கான அறிவிப்புகளை நீங்கள் தள்ளி வைக்கலாம். நீங்கள் நேரடிச்செய்தி உரையாடலைப் பார்ப்பதைத் தள்ளி வைக்கும்போது, நீங்கள் இன்னும் புதிய செய்திகளைப் பெறுவீர்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் அறிவிப்பைப் பெறமாட்டீர்கள். குறிப்பு: குறிப்பீடுகளைத் தள்ளிவை என்னும் அமைப்பு செயல்படுத்தப்படாத வரை, நீங்கள் பங்கேற்பாளராக உள்ள குழுவில் நீங்கள் குறிப்பிடப்படும் போது இன்னும் அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.
twitter.com, iOS -க்கான Twitter மற்றும் Android -க்கான Twitter நேரடிச்செய்தி உரையாடலினுள் அறிவிப்புகளை எவ்வாறு தள்ளி வைப்பது:
- நீங்கள் தள்ளிவைக்க விரும்பும் நேரடிச்செய்திக்குச் செல்லவும்.
- செய்தி அமைப்புகளில் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
- தகவல் ஐகானை கிளிக் செய்து அல்லது தொட்டு, அறிவிப்புகளைத் தள்ளிவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பாப்-அப் மெனுவில், நீங்கள் பார்ப்பதைத் தள்ளிவைக்க விரும்பும் கால இடைவெளியைத் தேர்ந்தெடுக்கவும்: 1 மணிநேரம், 8 மணிநேரம், 1 வாரம் அல்லது எப்போதும்.
- தள்ளிவைப்பை நீக்க, தகவல் ஐகானை கிளிக் செய்யவும் அல்லது தொடவும், பின்னர் அறிவிப்புகளைத் தள்ளிவை என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
iOS -க்கான Twitter -இல் உங்கள் நேரடிச்செய்தி இன்பாக்ஸில் இருந்து அறிவிப்புகளை எவ்வாறு தள்ளிவைப்பது:
- உங்கள் நேரடிச்செய்தி இன்பாக்ஸிற்குச் செல்லவும்.
- நீங்கள் தள்ளிவைக்க விரும்பும் உரையாடலைக் கண்டறியவும்.
- செய்தியில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து, அறிவிப்புகள் ஐகானை தொடவும்
குறிப்பு: உரையாடலில் நீங்கள் இடது புறமாக ஸ்வைப் செய்யும் போது, புகாரளி அல்லது நீக்கு என்பதையும் தேர்வு செய்யலாம். - பாப்-அப் மெனுவில், நீங்கள் பார்ப்பதைத் தள்ளிவைக்க விரும்பும் கால இடைவெளியைத் தேர்ந்தெடுக்கவும்: 1 மணிநேரம், 8 மணிநேரம், 1 வாரம் அல்லது எப்போதும்.
- தள்ளிவைப்பை நீக்க, இடதுபுறமாக ஸ்வைப் செய்து, தள்ளிவைக்கப்பட்ட அறிவிப்புகள் ஐகானை தொடவும்
Android -க்கான Twitter -இல் உங்கள் நேரடிச்செய்தி இன்பாக்ஸில் இருந்து அறிவிப்புகளை எவ்வாறு தள்ளிவைப்பது:
- உங்கள் நேரடிச்செய்தி இன்பாக்ஸிற்குச் செல்லவும்.
- நீங்கள் தள்ளிவைக்க விரும்பும் உரையாடலைக் கண்டறியவும்.
- செய்தியில் நீண்ட நேரம் அழுத்தி, அறிவிப்புகளைத் தள்ளிவை என்பதைத் தொடவும்.
- பாப்-அப் மெனுவில், நீங்கள் பார்ப்பதைத் தள்ளிவைக்க விரும்பும் கால இடைவெளியைத் தேர்ந்தெடுக்கவும்: 1 மணிநேரம், 8 மணிநேரம், 1 வாரம் அல்லது எப்போதும்.
- தள்ளிவைப்பை நீக்க, செய்தியில் நீண்ட நேரம் அழுத்தி, அறிவிப்புகள் தள்ளிவைப்பை நீக்குக என்பதைத் தொடவும்.
நேரடிச்செய்தி புஷ் அறிவிப்பை எவ்வாறு தள்ளிவைப்பது:
- உங்கள் மொபைல் சாதனத்தின் பூட்டுத் திரையிலிருந்து நீங்கள் தள்ளிவைக்க விரும்பும் நேரடிச்செய்தி புஷ் அறிவிப்பைக் கண்டறியவும்:
- iOS -க்கான Twitter பயன்பாட்டிலிருந்து: பூட்டுத் திரை புஷ் அறிவிப்பில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து, காட்டு என்பதைத் தொட்டு, 1 மணிநேரத்திற்குத் தள்ளிவை என்பதைத் தொடவும்.
- Android -க்கான Twitter பயன்பாட்டிலிருந்து: பூட்டுத் திரை புஷ் அறிவிப்பில் கீழ்ப்புறமாக ஸ்வைப் செய்து, தள்ளிவை என்பதைத் தொடவும்.
- உரையாடல் அறிவிப்புகள் ஒரு மணிநேரத்திற்குச் தள்ளிவைக்கப்படும்.
நேரடிச்செய்தி அல்லது உரையாடலைப் பற்றி புகாரளிக்க
தனிப்பட்ட செய்தி அல்லது முழு உரையாடலையும் நீங்கள் புகாரளிக்கலாம். விதிமீறல்களுக்காக கீச்சை அல்லது நேரடிச்செய்தியை எவ்வாறு புகாரளிப்பது என்று அறிக.
நேரடிச்செய்தி மூலமாகக் கீச்சைப் பகிர்ந்துகொள்வதற்கு
நண்பர்கள் குழுவுடன் உரையாடலைத் தொடங்குவதற்கு நேரடிச்செய்தி மூலமாகக் கீச்சைப் பகிர்வது சிறப்பான வழி.
அனைவரிடமிருந்தும் நேரடிச்செய்திகளைப் பெறுவதற்கு
twitter.com -இல் உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் என்பதிலிருந்து, அனைவரிடமிருந்தும் செய்திகள் கோரிக்கைகளை அனுமதிக்கவும் என்பதற்கு அடுத்துள்ள பெட்டியை டிக் செய்வதன் மூலம், நீங்கள் அனைவரிடமிருந்தும் செய்திகளைப் பெறலாம். iOS -க்கான Twitter அல்லது Android -க்கான Twitter பயன்பாடுகளின் மூலமாக இந்த அமைப்பை மாற்றலாம். இந்த விருப்பத்தேர்வை நீங்கள் செயல்படுத்தினால், யார் வேண்டுமானாலும் உங்களுக்குச் செய்தி அனுப்பலாம், உங்களைக் குழு உரையாடல்களில் சேர்க்கலாம்.
iOS -்க்கான Twitter -ஐப் பயன்படுத்தி உங்கள் அமைப்புகளை மாற்றுவதற்கு:
- வழிசெலுத்தல் மெனுவை தொடவும்.
- அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.
- அனைவரும் உங்களுக்கு நேரடிச்செய்திகள் அனுப்புவதை அனுமதிக்க, நேரடிச்செய்திகள் என்பதற்கு கீழ் மற்றும் அனைவரிடமிருந்தும் செய்திகள் கோரிக்கைகளை அனுமதிக்கவும் என்பதற்கு அடுத்துள்ள ஸ்லைடரை இழுக்கவும்.
Android -க்கான Twitter -ஐப் பயன்படுத்தி உங்கள் அமைப்புகளை மாற்றுவதற்கு:
- மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானை பார்ப்பீர்கள். உங்களிடம் உள்ள எந்த ஐகானையும் தொடவும்.
- அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.
- அனைவரும் உங்களுக்கு நேரடிச்செய்திகள் அனுப்புவதை அனுமதிக்க, நேரடிச்செய்திகள் என்பதற்கு கீழ் மற்றும் அனைவரிடமிருந்தும் செய்திகளைப் பெறவும் என்பதற்கு அடுத்துள்ள பெட்டியை டிக் செய்யவும்.
twitter.com -க்கான Twitter -ஐப் பயன்படுத்தி உங்கள் அமைப்புகளை மாற்றுவதற்கு:
- வழிசெலுத்தல் பட்டியில் உள்ள மேலும் என்னும் ஐகானை கிளிக் செய்யவும்.
- அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.
- அனைவரும் உங்களுக்கு நேரடிச்செய்திகள் அனுப்புவதை அனுமதிக்க, நேரடிச்செய்திகள் என்பதற்கு கீழ் மற்றும் அனைவரிடமிருந்தும் செய்திகளைப் பெறவும் என்பதற்கு அடுத்துள்ள பெட்டியை டிக் செய்யவும்.
குறிப்பு: அனைவரிடமிருந்தும் செய்திகளைப் பெறு என்னும் அமைப்பை முடக்குவதன் மூலம், நீங்கள் பின்தொடராத நபருடன் ஏற்கனவே உரையாடலை மேற்கொண்டிருந்தால், அவர்களிடமிருந்து பெறும் நேரடிச்செய்திகளைத் தடுக்க இயலாது. அந்த நபரிடமிருந்து நேரடிச்செய்திகளைப் பெறுவதைத் தடுக்க, உரையாடலைப் புகாரளிக்க வேண்டும் அல்லது கணக்கைத் தடைசெய்ய வேண்டும்.
நேரடிச்செய்திக் கோரிக்கைகளைப் பார்க்க
அனைவரிடமிருந்தும் செய்திகளைப் பெறு என்னும் அமைப்பு செயல்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் பின்தொடராத நபர்களிடமிருந்து பெறப்படும் செய்திகள் செய்திகள் தாவலில், கோரிக்கைகள் எனத் தோன்றும். நீங்கள் பின்தொடராத நபர்களால் நீங்கள் புதிய குழு உரையாடலில் சேர்க்கப்பட்டால், அவையும் கோரிக்கைகள் என்பதில் தோன்றும். உரையாடலில் உள்நுழையும் போது, நீக்கு அல்லது ஏற்றுக்கொள் என்பதைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்கப்படுவீர்கள். செய்தியை ஏற்பதனால், நீங்கள் அந்த நபருடன் இணைக்கப்படுவதுடன், செய்தி உங்கள் இன்பாக்ஸிற்கு நகர்த்தப்படும். நீங்கள் அவர்களின் கோரிக்கையை ஏற்கும் வரை, நீங்கள் செய்தியைப் பார்த்துவிட்டீர்களா என்பதை அவர்களால் அறிய முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
செய்தியை நீக்குவதனால் அது உங்கள் இன்பாக்ஸிலிருந்து அகற்றப்படும். குறிப்பு: செய்தியை நீக்குவதனால், அந்தக் கணக்கிலிருந்து நீங்கள் எதிர்காலத்தில் பெறும் செய்திகள் தடுக்கப்படாது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கணக்கைத் தடைசெய்யலாம் அல்லது உரையாடலைப் புகாரளிக்கலாம். தடைசெய்யப்பட்ட கணக்கால், நீங்கள் அதனை மீண்டும் தடைநீக்கும் வரை உங்களுக்குச் செய்திகளை அனுப்ப முடியாது.
செய்தியை ஏற்பதனால் நீங்கள் அந்த நபருடன் ஊடாடுவது அனுமதிக்கப்படும். செய்தியை ஏற்பதற்கு முன்னர் அனைத்து மீடியாவும் மறைக்கப்படும். மறைக்கப்பட்ட மீடியாவைக் காண்பிக்க விரும்பினால், மீடியாவைக் காண்பி என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
குறிப்பு: நீங்கள் பின்தொடராத புதிய நபரிடமிருந்து பெறப்படும் செய்திகளை ஏற்றுக்கொள் அல்லது நீக்கு மற்றும் மீடியாவைக் காண்பி போன்ற விருப்பத்தேர்வுகள், iOS மற்றும் Android -க்கான Twitter பயன்பாடுகளில் மற்றும் twitter.com -இல் மட்டுமே கிடைக்கிறது.
மேலும், இயல்புநிலையாக iOS மற்றும் Android -க்கான Twitter பயன்பாட்டின் இன்பாக்ஸின் கோரிக்கைக்கள் பிரிவிலிருந்து குறைந்தத் தரக் கோரிக்கைகளை வடிகட்டுவோம். செயல்படுத்தப்படும் போது, செய்தி கோரிக்கைகளுக்கான தர வடிகட்டியானது தரம் குறைவானது என நாங்கள் கருதும் உரையாடல் கோரிக்கைகளை மறைக்கிறது. வடிகட்டப்பட்ட கோரிக்கைகளுக்கான அறிவிப்புகளை நீங்கள் பெறமாட்டீர்கள், ஆனால் உங்கள் இன்பாக்ஸின் கோரிக்கைகள் பிரிவின் கீழே இருக்கும் குறைந்த தரம் வடிகட்டியின் பின்னால் இந்தச் செய்திகள் இன்னும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.
செய்திக் கோரிக்கைகளுக்கான தர வடிகட்டியை முடக்க அல்லது செயல்படுத்த:
- கோரிக்கைகள் தாவலின் மேலே, அமைப்புகளை மாற்று என்பதைத் தொடவும்.
- உங்கள் செய்தி அமைப்புகளின், தனியுரிமைப் பிரிவில், தர வடிகட்டி என்பதற்கு அடுத்துள்ள ஸ்லைடரை மாற்றவும்.
நேரடிச்செய்திகளில் கிராஃபிக் மீடியாவை எவ்வாறு வடிகட்டுவது
வடிகட்டி இயல்புநிலையில் இயக்கப்பட்டிருக்கும், மேலும் இவ்வாறு வேலை செய்யும்:
- நீங்கள் பின்தொடரும் நபர்கள் மற்றும் தெரியாத நபர்கள் அனுப்பும் DMகளில் கிராஃபிக் மீடியா மீது காட்டப்படும் எச்சரிக்கை இருக்கும். கூடுதலாக, இது நீங்கள் பின்தொடராத ஒருவரிடமிருந்து அனுப்பப்பட்டதாக இருந்தால், நாங்கள் அதை ஸ்பேம் போல் கருதி அதை உங்கள் கோரிக்கை இன்பாக்ஸின் கீழே நகர்த்துவோம்.
- ஆஃப் செய்யப்பட்டிருந்து, நீங்கள் பின்தொடரும் ஒருவரிடமிருந்து ஒரு கிராஃபிக் செய்தியைப் பெற்றால், நீங்கள் பெறக்கூடிய உரையாடலில் வேறு எந்த படம், வீடியோ அல்லது GIF -ஐப் போலவே கிராஃபிக் மீடியாவையும் நாங்கள் காண்பிப்போம். நீங்கள் பின்தொடராத ஒருவரிடமிருந்து அனுப்பப்பட்டால், நாங்கள் இன்னும் ஒரு எச்சரிக்கையைக் காண்பிப்போம், ஏனென்றால் எல்லா மீடியாவிலும் அதைச் செய்கிறோம், ஆனால் அது மீடியாவை சாத்தியமான உணர்ச்சிகரமான/கிராஃபிக் என்று வெளிப்படையாக அடையாளம் காட்டாது.
குறிப்பு: உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் நேரடிச்செய்திகள் என்ற பிரிவின் கீழுள்ள அனைவரிடமிருந்தும் செய்தி கோரிக்கைகளை அனுமதிக்கவும் என்ற அமைப்பை நீங்கள் செயல்படுத்தியிருந்தால், உங்கள் தனியுரிமை அமைப்புகளிலிருந்து தர வடிகட்டியை முடக்கலாம் மற்றும் செயல்படுத்தலாம். இந்த அம்சம் தற்போது iOS மற்றும் Android சாதனங்களில் மட்டுமே கிடைக்கிறது.
நேரடிச்செய்தி படித்தல் ரசீதுகளை முடக்க
நேரடிச்செய்திகள், வாசிப்பு ரசீதுகள் அம்சத்தை வழங்குகிறது, எனவே மற்றவர்கள் எப்போது உங்கள் செய்திகளைக் பார்த்துள்ளனர் என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும். யாரேனும் ஒருவர் உங்களுக்கு நேரடிச்செய்தியை அனுப்பும் போது, வாசிப்பு ரசீதுகளைக் காண்பி என்னும் அமைப்பை நீங்கள் செயல்படுத்தியிருந்தால், உரையாடலில் உள்ள அனைவரும் நீங்கள் எப்போது அதனைப் பார்த்தீர்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். இயல்புநிலையாக இந்த அமைப்பு செயல்படுத்தப்பட்டிருக்கும், ஆனால் எந்த நேரத்திலும் நீங்கள் இதனை ஆஃப் செய்யலாம் (அல்லது மீண்டும் ஆன் செய்யலாம்). நீங்கள் வாசிப்பு ரசீதுகளைக் காண்பி என்னும் அமைப்பை ஆஃப் செய்திருந்தால், மற்ற நபர்களின் வாசிப்பு ரசீதுகளைப் பார்க்க முடியாது.
iOS -க்கான Twitter மற்றும் Android -க்கான Twitter பயன்பாடுகள் மற்றும் twitter.com -இல் மட்டுமே வாசிப்பு ரசீதுகளைப் பார்க்க முடியும். நீங்கள் மொபைல் இணையத்தில் நேரடிச்செய்திகளைப் பார்க்கும் போதும், வாசிப்பு ரசீதுகள் அனுப்பப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
iOS -க்கான Twitter -ஐப் பயன்படுத்தி முடக்க அல்லது செயல்படுத்த:
- மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானை தொடவும்.
- அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.
- நேரடிச்செய்திகள் என்பதன் கீழ் மற்றும் வாசிப்பு ரசீதுகளைக் காண்பி என்பதற்கு அடுத்துள்ள ஸ்லைடரை இழுப்பதன் மூலம் அம்சத்தை ஆஃப் ஆல்லது ஆன் செய்யலாம்.
Android -க்கான Twitter -ஐப் பயன்படுத்தி முடக்க அல்லது செயல்படுத்த:
- மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானை பார்ப்பீர்கள். உங்களிடம் உள்ள எந்த ஐகானையும் தொடவும்.
- அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.
- அம்சத்தை ஆஃப் செய்வதற்கு, நேரடிச்செய்திகள் என்பதன் கீழ் மற்றும் வாசிப்பு ரசீதுகளைக் காண்பி என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுநீக்கவும் அல்லது மீண்டும் ஆன் செய்ய, தேர்ந்தெடுக்கவும்.
twitter.com மூலம் முடக்க அல்லது செயல்படுத்த:
- மேலும் ஐகானை கிளிக் செய்து, தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
- அம்சத்தை ஆஃப் செய்வதற்கு, தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதன் கீழ் மற்றும் வாசிப்பு ரசீதுகளைக் காண்பி என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைக் கிளிக் செய்யவும் அல்லது மீண்டும் ஆன் செய்ய, கிளிக் செய்யவும்.
குறிப்பு: கோரிக்கைகள் என்பதில் தோன்றும் உரையாடல்களுக்கு, அனுப்புநர்(கள்), நீங்கள் உரையாடலை ஏற்கும் வரை அவர்களின் நேரடிச்செய்திகளைப் படித்துவிட்டீர்களா என்பதைப் பார்க்க முடியாது.
SMS மூலமாக உங்கள் ஃபோனில் நேரடிச்செய்திகளை அனுப்புவதற்கு மற்றும் பெறுவதற்கு
உங்கள் Twitter கணக்கு, உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், SMS மூலமாக நீங்கள் நேரடிச்செய்திகளை அனுப்பலாம் மற்றும் பெறலாம்.
- உங்கள் மொபைல் எண்ணைச் சேர்க்கவில்லையா? உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை எவ்வாறு சேர்ப்பது என்பதை அறிக.
- ஏற்கனவே மொபைல் எண்ணைச் சேர்த்துள்ளீர்களா? SMS மூலமாக நேரடிச்செய்திகளை அனுப்புவதற்கு என்னென்ன உரைக் கட்டளைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிக
- SMS வழியாக நேரடிச்செய்திகளை எவ்வாறு பெறுவது என்பது பற்றி மேலும் அறிய, உங்கள் மொபைல் விருப்பங்களை அமைத்தல் பற்றி இந்தக் கட்டுரையில் படிக்கவும்.
குறிப்பு: நேரடிச்செய்தி தோல்வியடைவதைப் பற்றிய குறிப்பு: SMS வழியாக நீங்கள் அனுப்பும் நேரடிச்செய்திகளானது d கட்டளை மற்றும் பயனர்பெயர் உட்பட 160 எழுத்துகளுக்குள் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். உங்கள் சேவை வழங்குநர் 160 எழுத்துகளுக்கு மேல் உள்ள SMS செய்திகளைப் பல SMS செய்திகளாகப் பிரிக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த SMS செய்திகள், பொருத்தமான உரைக் கட்டளையுடன் (d பயனர்பெயரில்) தொடங்காததால், முதல் SMS செய்தியாகவும் அவை Twitter -க்கான நேரடிச்செய்திகளாகக் கருதப்பட்டு, பொதுக் கீச்சுகளாக இடுகையிடப்படும்.
நேரடிச்செய்திகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
- நேரடிச்செய்தி அல்லது உரையாடலை நீங்கள் நீக்கும் போது (அனுப்பிய அல்லது பெறப்பட்ட), அது உங்கள் கணக்கிலிருந்து மட்டுமே நீக்கப்படும். நீங்கள் நீக்கிய நேரடிச்செய்தி அல்லது உரையாடல்களை, உரையாடலில் உள்ள மற்ற நபர்களால் இன்னும் காண முடியும். குழு உரையாடலை நீக்கும்போது, நீங்கள் அந்தக் குழுவிலிருந்து வெளியேறுவீர்கள், அத்துடன் இனி உங்களால் அதில் பங்கேற்க முடியாது.
- நீங்கள் நேரடிச்செய்தியில் இணைப்பைப் பகிரும்போது, அது தானாகவே செயலாக்கப்பட்டு t.co இணைப்பாகச் சுருக்கப்படுகிறது. இணைப்பைச் சுருக்குதல் பற்றி மேலும் அறியவும். t.co சுருக்கப்பட்ட இணைப்பைக் கொண்டுள்ள எவரும் இலக்கு URL -க்குச் செல்ல முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.
- நீங்கள் நேரடிச்செய்தியில் மீடியாவை பகிரும்போது, உரையாடலில் உள்ள அனைவராலும் அதைக் காண முடியும். நேரடிச்செய்தியில் நீங்கள் பகிரும் மீடியாவை பெறுநர்கள் பதிவிறக்கலாம் அல்லது அவற்றுக்கான இணைப்புகளை மீண்டும் பகிரலாம் என்பதைக் குறித்துக்கொள்ளவும். நேரடிச்செய்தியில் பகிர்ந்த மீடியாவிற்கான இணைப்பைக் கொண்டுள்ள எவரும் அவற்றிலுள்ள உள்ளடக்கத்தைப் பார்க்க முடியும்.
மேலும் தகவல் தேவையா?
நேரடிச்செய்திகளைப் பற்றி அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகளைப் பார்க்கவும்.