மேம்பட்ட செயல்மறைவு விருப்பத்தேர்வைப் பயன்படுத்துவது எவ்வாறு

சொற்கள் மற்றும் ஹேஷ்டேக்குகளுக்கான செயல்மறைவு விருப்பத்தேர்வுகள்

 

நீங்கள் தவிர்க்க விரும்பும் கீச்சுகளின் உள்ளடக்கத்தைப் பார்க்கலாம். குறிப்பிட்ட சொற்கள், சொற்றொடர்கள், பயனர்பெயர்கள், ஈமோஜிகள் அல்லது ஹேஷ்டேக்குகளைக் கொண்டிருக்கும் கீச்சுகளைச் செயல்மறைப்பதற்கான விருப்பத்தேர்வை உங்களுக்கு வழங்குகிறோம். செயல்மறைப்பது உங்கள் அறிவிப்புகள் தாவல், புஷ் அறிவிப்புகள், SMS, மின்னஞ்சல் அறிவிப்புகள், முகப்புக் காலவரிசை மற்றும் கீச்சுகளுக்கான பதில்களிலிருந்து இந்தக் கீச்சுகளை அகற்றிவிடும்.

 

குறிப்பு: சொற்கள் மற்றும் ஹேஷ்டேக்குகளை செயல்மறைப்பது உங்கள் அறிவிப்புகள் மற்றும் முகப்புக் காலவரிசைக்கு மட்டுமே பொருந்தும். தேடல் மூலம் இந்தக் கீச்சுகளை இன்னும் பார்ப்பீர்கள். செயல்மறைக்கப்பட்ட சொற்கள் மற்றும் ஹேஷ்டேக்குகளுக்கான அறிவிப்புகள் பதில்களுக்கும் குறிப்பீடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன, அதில் அந்தப் பதில்கள் மற்றும் குறிப்பீடுகளுக்குத் தொடர்பான அனைத்து ஊடாடல்களும் அடங்கும்: விருப்பங்கள், மறுகீச்சுகள், கூடுதல் பதில்கள் மற்றும் மேற்கோள் கீச்சு. 

நீங்கள் பின்தொடரும் கணக்கு ட்விட் செய்யும்போது மொபைல் அறிவிப்புகளைப் பெற நீங்கள் தெரிவுசெய்திருக்கலாம். அப்படி இருந்தால், இந்த அறிவிப்புகளுக்குச் சொற்கள் மற்றும் ஹேஷ்டேக்குகளை செயல்மறைப்பது பொருந்தாது. இந்தக் கணக்குகளின் கீச்சு(கள்) நீங்கள் செயல்மறைத்த ஒரு சொல் அல்லது ஹேஷ்டேக்கைக் கொண்டிருந்தாலும் கூட, இதுபோன்ற மொபைல் அறிவிப்புகளை நீங்கள் இன்னும் பெறுவீர்கள்.

சொற்கள், சொற்றொடர்கள், பயனர்பெயர்கள், ஈமோஜிகள் மற்றும் ஹேஷ்டேக்குகளை செயல்மறைத்தல் கண்ணோட்டம்:
 

 1. செயல்மறைத்தல் என்பது எழுத்து அளவு வித்தியாசமற்றது. எடுத்துக்காட்டாக:
  • உங்கள் செயல்மறைவு பட்டியலில் “CATS” -ஐச் சேர்த்தால், “cats” பற்றிய எந்த குறிப்பீடும் உங்கள் அறிவிப்புகளிலிருந்து செயல்மறைக்கப்படும்.
 2. செயல்மறைக்கும்போது ஒரு சொல் அல்லது சொற்றொடருக்குள் நிறுத்தற்குறியைச் சேர்க்கலாம். ஒரு சொல் அல்லது சொற்றொடரின் முடிவில் நிறுத்தற்குறி தேவையில்லை.
 3. ஒரு வார்த்தையைச் செயல்மறைப்பது வார்த்தையையும் அதன் ஹேஷ்டேக்கையும் செயல்மறைக்கும். எடுத்துக்காட்டாக:
  • நீங்கள் “யூனிகார்ன்” என்பதைச் செயல்மறைத்தால், “யூனிகார்ன்” மற்றும் “#யூனிகார்ன்” ஆகிய இரண்டும் உங்கள் அறிவிப்புகளிலிருந்து செயல்மறைக்கப்படும்.
 4. முகப்புக் காலவரிசையிலிருந்து, அல்லது ஒரு குறிப்பிட்ட கணக்கைக் குறிப்பிடும் கீச்சுகளுக்கான பதில்களிலிருந்து கீச்சு அறிவிப்புகளைச் செயல்மறைக்க, பெயருக்கு முன் @ அடையாளத்தைச் சேர்க்க வேண்டும். இதைச் செய்வது அந்தக் கணக்கைக் குறிப்பிடும் கீச்சு அறிவிப்புகளைச் செயல்மறைக்கும், ஆனால் கணக்கைச் செயல்மறைக்காது
 5. சொற்கள், சொற்றொடர்கள், பயனர்பெயர்கள், ஈமோஜிகள் மற்றும் ஹேஷ்டேக்குகளை அதிகபட்ச எழுத்து எண்ணிக்கை வரை செயல்மறைக்கலாம்.
 6. Twitter ஆதரிக்கும் எல்லா மொழிகளிலும் செயல்மறைப்பது சாத்தியமாகும்.
 7. செயல்மறைப்பது, என்றென்றும் என்ற இயல்புநிலை கால அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. செயல்மறைவு கால அளவை எவ்வாறு சரிசெய்வது என்பதற்கான வழிமுறைகள் ஆதரிக்கப்பட்ட சாதனங்களுக்காகக் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
 8. உங்கள் அமைப்புகளில் உங்களின் செயல்மறைக்கப்பட்ட சொற்களின் (அவற்றைச் செயல்மறைவு நீக்குக) பட்டியலை நீங்கள் காணலாம்.
 9. மின்னஞ்சல் அல்லது Twitter மூலம் உங்களுக்கு வழங்கப்படும் பரிந்துரைகள், உங்களின் செயல்மறைக்கப்பட்ட சொற்களையும் ஹேஷ்டேக்குகளையும் உள்ளடக்கிய உள்ளடக்கத்தைப் பரிந்துரைக்காது.

குறிப்பு: அம்சமானது அறிவிப்புகளுக்கு மட்டும் என்று அமைக்கப்பட்டிருக்கும்போது உங்களின் செயல்மறைவுப் பட்டியலில் முன்பு சொற்களைச் சேர்த்திருந்தால், பின்வரும் இயல்புநிலை செயல்மறைவு அமைப்புகள் இயக்கப்படும்: அறிவிப்புகள் மட்டும்; யாரிடமிருந்தும்; என்றென்றும். நீங்கள் ஏற்கனவே இருக்கும் செயல்மறைவு அமைப்புகளை எந்த நேரத்திலும் திருத்தலாம், வழிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சொற்களையும் ஹேஷ்டேக்குகளையும் எவ்வாறு செயல்மறைப்பது
படி 1

உங்கள் அறிவிப்புகள் தாவலுக்கு  செல்லவும்.

படி 2

கியர் ஐகானை  தொடவும்

படி 3

செயல்மறைக்கப்பட்டது என்பதைத் தொடவும், பின்னர் செயல்மறைக்கப்பட்ட சொற்கள் என்பதைத் தொடவும்.

படி 4

சேர் என்பதைத் தொடவும்.

படி 5

நீங்கள் செயல்மறைக்க விரும்பும் சொல் அல்லது ஹேஷ்டேக்கை தட்டச்சு செய்க. உள்ளீடுகள் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே சேர்க்க முடியும்.

படி 6

இதை முகப்புக் காலவரிசை அல்லது அறிவிப்புகள் என்பதில் அல்லது இரண்டிலும் இயக்க வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 7

இது யாரிடமிருந்தும் அல்லது நீங்கள் பின்தொடராத நபர்களிடமிருந்து என்பதிலிருந்து தேர்ந்தெடுக்கவும் (அறிவிப்புகள் மட்டும் என இயக்கப்பட்டதற்கு).

படி 8

எவ்வளவு காலம் என்பதற்காகத் தொடவும்? பின்னர் என்றென்றும், 24 மணிநேரம், 7 நாட்கள், அல்லது 30 நாட்கள் ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்யவும்.

படி 9

சேமி என்பதைத் தொடவும்.

படி 10

உள்ளிடப்பட்ட ஒவ்வொரு சொல் அல்லது ஹேஷ்டேக்கிற்கு அடுத்ததாக சுட்டிக்காட்டப்பட்ட செயல்மறைவு கால அளவைக் காண்பீர்கள்.

படி 11

வெளியேற முடிந்தது என்பதைத் தொடவும்.

படி 1

உங்கள் அறிவிப்புகள் தாவலுக்கு  செல்லவும்.

படி 2

கியர் ஐகானை  தொடவும் 

படி 3

செயல்மறைக்கப்பட்ட சொற்கள் என்பதைத் தொடவும்.

படி 4

பிளஸ் ஐகானை  தொடவும்

படி 5

நீங்கள் செயல்மறைக்க விரும்பும் சொல் அல்லது ஹேஷ்டேக்கை தட்டச்சு செய்க. உள்ளீடுகள் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே சேர்க்க முடியும்.

படி 6

இதை முகப்புக் காலவரிசை அல்லது அறிவிப்புகள் என்பதில் அல்லது இரண்டிலும் இயக்க வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 7

இது யாராவது அல்லது நீங்கள் பின்தொடராத நபர்களிடமிருந்து என்பதிலிருந்து தேர்ந்தெடுக்கவும் (அறிவிப்புகள் மட்டும் என இயக்கப்பட்டதற்கு, சரிசெய்ய அறிவிப்புகள் என்பதைத் தொடவும்).

படி 8

எவ்வளவு காலம்? என்பதைத் தொடவும், பின்னர் என்றென்றும், இப்போதிலிருந்து 24 மணி நேரத்திற்கு, இப்போதிலிருந்து 7 நாட்களுக்கு, அல்லது இப்போதிலிருந்து 30 நாட்களுக்கு ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்யவும்.)

படி 9

சேமி என்பதைத் தொடவும்.

படி 10

செயல்மறைக்கப்பட்ட ஐகான்  மற்றும் உள்ளிடப்பட்ட ஒவ்வொரு சொல் அல்லது ஹேஷ்டேக்கிற்கு அடுத்ததாக செயல்மறைவு கால அளவைக் காண்பீர்கள்.

படி 1

பக்கவாட்டு வழிசெலுத்தல் மெனுவிலிருந்து, மேலும் என்பதைக் கிளிக் செய்து, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதில் கிளிக் செய்யவும்.

படி 2

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்ற தாவலை கிளிக் செய்து, செயல்மறை மற்றும் தடைசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3

செயல்மறைக்கப்பட்ட சொற்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 4

பிளஸ் ஐகானை கிளிக் செய்யவும். 

படி 5

நீங்கள் செயல்மறைக்க விரும்பும் சொல் அல்லது ஹேஷ்டேக்கை உள்ளிடவும். உள்ளீடுகள் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே சேர்க்க முடியும்.

படி 6

உங்கள் முகப்புக் காலவரிசையிலிருந்து சொல் அல்லது சொற்றொடரை செயல்மறைக்க விரும்பினால் முகப்புக் காலவரிசை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 7

உங்கள் அறிவிப்புகளிலிருந்து சொல் அல்லது சொற்றொடரை செயல்மறைக்க விரும்பினால் அறிவிப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 8

இது யாரிடமிருந்தும் அல்லது நீங்கள் பின்தொடராத நபர்களிடமிருந்து என்பதைக் குறிப்பிடவும்.

படி 9

செயல்மறைவு காலம் என்பதன் கீழ் என்றென்றும், இப்போதிலிருந்து 24 மணிநேரத்திற்கு, இப்போதிலிருந்து 7 நாட்களுக்கு, அல்லது இப்போதிலிருந்து 30 நாட்களுக்கு ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்யவும்.

படி 10

சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

சொற்களையும் ஹேஷ்டேக்குகளையும் எவ்வாறு திருத்துவது அல்லது செயல்மறைவு நீக்குவது
படி 1

உங்கள் அறிவிப்புகள் தாவலுக்கு  செல்லவும்.

படி 2

கியர் ஐகானை  தொடவும்

படி 3

செயல்மறைக்கப்பட்டது என்பதைத் தொடவும், பின்னர் செயல்மறைக்கப்பட்ட சொற்கள் என்பதைத் தொடவும்.

படி 4

நீங்கள் திருத்த அல்லது செயல்மறைவு நீக்க விரும்பும் சொல் அல்லது ஹேஷ்டேக்கை தொடவும்.

படி 5

இதிலிருந்து செயல்மறை அல்லது செயல்மறைவு காலம் என்ற தேர்வுகளை மாற்றி சேமி என்பதைத் தொடவும்.

படி 6

சொல்லை செயல்மறைவு நீக்க, சொல்லை நீக்கு என்பதைத் தொட்டு, உறுதிப்படுத்துவதற்கு சொல்லை நீக்கு என்பதைத் தொடவும்.

படி 7

வெளியேற முடிந்தது என்பதைத் தொடவும்.

படி 1

உங்கள் அறிவிப்புகள் தாவலுக்கு  செல்லவும்.

படி 2

கியர் ஐகானை  தொடவும்

படி 3

செயல்மறைக்கப்பட்ட சொற்கள் என்பதைத் தொடவும்.

படி 4

நீங்கள் திருத்த அல்லது செயல்மறைவு நீக்க விரும்பும் சொல் அல்லது ஹேஷ்டேக்கை தொடவும்.

படி 5

இதிலிருந்து செயல்மறை அல்லது செயல்மறைவு காலத்தை நீட்டிக்கவும் என்ற தேர்வுகளை மாற்றி சேமி என்பதைத் தொடவும்.

படி 6

சொல் அல்லது ஹேஷ்டேக்கை செயல்மறைவு நீக்க, சொல்லை நீக்கு என்பதைத் தொட்டு, உறுதிப்படுத்துவதற்கு ஆம், நிச்சயமாக என்பதைத் தொடவும்.

படி 1

பக்கவாட்டு வழிசெலுத்தல் மெனுவிலிருந்து, மேலும் என்பதைக் கிளிக் செய்து, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதில் கிளிக் செய்யவும்.

படி 2

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்ற தாவலை கிளிக் செய்து, செயல்மறை மற்றும் தடைசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3

செயல்மறைக்கப்பட்ட சொற்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 4

நீங்கள் திருத்த அல்லது செயல்மறைவு நீக்க விரும்பும் சொல் அல்லது ஹேஷ்டேக்கை கிளிக் செய்யவும்.

படி 5

இதிலிருந்து செயல்மறை அல்லது செயல்மறைவு காலத்தை நீட்டிக்கவும் என்ற தேர்வுகளை மாற்றி சேமி என்பதைக் கிளிக் செய்க.

படி 6

சொல் அல்லது ஹேஷ்டேக்கை செயல்மறைவு நீக்க, செயல்மறைக்கப்பட்டதுபொத்தானை  கிளிக் செய்யவும்

 

உரையாடலுக்கான அறிவிப்புகளைச் செயல்மறைத்தல்

 

ஒரு குறிப்பிட்ட உரையாடலுக்கான அறிவிப்புகளைப் பெறுவதை நீங்கள் நிறுத்த விரும்பினால், அதைச் செயல்மறைக்கத் தேர்வு செய்யலாம். நீங்கள் ஒரு உரையாடலைச் செயல்மறைக்கும்போது, அந்த உரையாடலைப் பற்றிய புதிய அறிவிப்புகள் எதுவும் உங்களுக்குக் கிடைக்காது. இருப்பினும், உங்கள் காலவரிசையிலும் அசல் கீச்சைக் கிளிக் செய்யும்போதும் உரையாடலிலிருந்து வரும் கீச்சுகளை இன்னும் பார்ப்பீர்கள். 

twitter.com மூலமாகவோ, உங்கள் iOS அல்லது Android -க்கான Twitter பயன்பாடு மூலமாகவோ உரையாடலைச் செயல்மறைக்க:
 

 1. உரையாடலில் நீங்கள் செயல்மறைக்க விரும்பும் எந்தவொரு கீச்சு அல்லது ஒரு பதிலின் கீச்சு விவரத்திற்குச் செல்லவும்.
 2. மேலும் என்ற ஐகானை கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
 3. இந்த உரையாடலைச் செயல்மறை என்பதை கிளிக் செய்யவும் அல்லது தொடவும். 
 4. உறுதிப்படுத்த, கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க