துல்லியமான இருப்பிடத்தை மொபைல் சாதனங்களில் எவ்வாறு பயன்படுத்துவது

Twitter -இன் அதிகாரப்பூர்வ பயன்பாடுகள் மூலம் துல்லியமான இருப்பிடத்தை இயக்குவது, GPS தகவல் போன்ற உங்களின் துல்லியமான இருப்பிடத்தைச் சேகரிக்க, சேமிக்க மற்றும் பயன்படுத்த Twitter -ஐ அனுமதிக்கிறது. இது எங்களின் பல்வேறு சேவைகளை வழங்க, உருவாக்க மற்றும் மேம்படுத்த அனுமதிக்கிறது, இதில் பின்வருபவை அடங்கும் ஆனால் இவை மட்டுமல்ல:

  • கீச்சுகள் மற்றும் விளம்பரப்படுத்தல் உள்ளிட்ட உள்ளடக்கத்தை வழங்குதல், உங்கள் இருப்பிடத்திற்கு ஏற்ப சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இருப்பிடம் சார்ந்த போக்குகளை வழங்குதல்.
  • உங்கள் கீச்சை ஜியோடேக் செய்ய நீங்கள் முடிவு செய்தால், உங்கள் கீச்சின் ஒரு பகுதியாக, நீங்கள் ட்விட் செய்யும் இடத்தைப் பின்தொடர்பவர்களுக்குக் காண்பிக்கும். 
 
சாதன நிலையில் இருப்பிடச் சேவைகளை எவ்வாறு இயக்குவது மற்றும் முடக்குவது
படி 1

உங்கள் சாதனத்தின் அமைப்புகள் அம்சத்திற்குச் சென்று தனியுரிமை என்பதைத் தொடவும்.

படி 2

இருப்பிட சேவைகள் என்பதைத் தொடவும்.

படி 3

அம்சத்தை ஆன் செய்ய, இருப்பிட சேவைகள் என்பதற்கு அடுத்துள்ள ஸ்லைடரை இழுக்கவும்.

படி 4

பின்னர், பட்டியலிலுள்ள Twitter பயன்பாட்டைக் கண்டறிந்து, வேண்டாம் அல்லது பயன்பாட்டைப் பயன்படுத்தும்போது என்பதைத் தொடவும்.

படி 1

உங்கள் சாதனத்தின் அமைப்புகள் அம்சத்திற்குச் சென்று பயன்பாடுகள் என்பதைத் தொடவும்.

படி 2

உங்கள் பயன்பாடுகளின் பட்டியலில் Twitter -ஐக் கண்டறிந்து அனுமதிகள் என்பதைத் தொடவும், பின்னர் ஆன் அல்லது ஆஃப் செய்ய இருப்பிடத்திற்கு அடுத்துள்ள சுவிட்சை மாற்றவும்.

Twitter பயன்பாட்டிற்குள் கணக்கு அளவில் துல்லியமான இருப்பிடத்தை எவ்வாறு இயக்குவது மற்றும் முடக்குவது
படி 1

மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.

படி 2

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.

படி 3

பாதுகாப்பு என்பதன் கீழ், இருப்பிடப் பிரிவில் துல்லியமான இருப்பிடம் என்பதைத் தொடவும்.

படி 4

அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்ய, துல்லியமான இருப்பிடம் என்ற பக்கத்திற்குள் ஸ்லைடரை இழுக்கவும்.

படி 1

மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை  அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் எந்த ஐகானையும் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.

படி 2

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.

படி 3

பாதுகாப்பு என்பதன் கீழ், இருப்பிடப் பிரிவில் துல்லியமான இருப்பிடம் என்பதைத் தொடவும்.

படி 4

அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்ய, துல்லியமான இருப்பிடம் என்ற பக்கத்திற்குள் தேர்வுப்பெட்டியைத் தொடவும்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க