எனது ஹேக் செய்யப்பட்ட கணக்கிற்கான உதவி

நீங்கள் ஹேக் செய்யப்பட்டதாக நினைத்தால், மேலும் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைய முடியவில்லை என்றால், பின்வரும் இரண்டு படிகளை மேற்கொள்ளவும்:

1. கடவுச்சொல் மீட்டமைப்பைக் கோரவும்


கடவுச்சொல் மீட்டமைப்புப் படிவத்திலிருந்து மின்னஞ்சலைக் கோருவதன் மூலம் உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்கவும். உங்கள் பயனர்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய இரண்டையும் உள்ளிட முயற்சிக்கவும், மேலும் உங்கள் Twitter கணக்குடன் தொடர்புடைய முகவரியில் மீட்டமைப்பு மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.

கடவுச்சொல்லை மீட்டமைத்தப் பிறகு நீங்கள் உள்நுழைய முடிந்தால், உங்கள் கணக்குத் திருடப்பட்டுள்ளதா எனச் சரிபார்த்து, உங்கள் கணக்கை மீண்டும் பாதுகாக்கவும்.

 

2. உங்களுக்கு இன்னும் உதவி தேவைப்பட்டால், ஆதரவைத் தொடர்பு கொள்ளவும்


உங்களால் இன்னும் உள்நுழைய முடியவில்லை எனில், ஆதரவு கோரிக்கையைச் சமர்ப்பித்து எங்களைத் தொடர்புகொள்ளவும். ஹேக் செய்யப்பட்ட Twitter கணக்குடன் நீங்கள் இணைத்துள்ள மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்; அந்த மின்னஞ்சல் முகவரிக்குக் கூடுதல் தகவலையும் வழிமுறைகளையும் அனுப்புவோம். உங்கள் ஆதரவுக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் போது, உங்கள் பயனர்பெயர் மற்றும் உங்கள் கணக்கை நீங்கள் கடைசியாக அணுகிய தேதி ஆகிய இரண்டையும் சேர்க்கவும்.

உங்கள் Twitter கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கிற்கான அணுகலை நீங்கள் இழந்திருந்தால், என்ன செய்யலாம் என்பதைப் பற்றி மேலும் அறிக.

இந்தக் கட்டுரையைப் பகிர்க