சுய தீங்கு மற்றும் தற்கொலை பற்றி

நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் சுயதீங்கு அல்லது தற்கொலை ஆபத்திலிருந்தால், Twitter -க்கு இதைப் புகாரளிப்பதுடன் நெருக்கடி தலையீடு மற்றும் தற்கொலை தடுப்பில் நிபுணத்துவம் பெறும் அமைப்புகளைத் தொடர்புகொண்டு முடிந்த வரை விரைவில் உதவியை நாடவும். Twitter -இல் நீங்கள் சுயதீங்கு அல்லது தற்கொலை போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டால், அத்தகைய அச்சுறுத்தல்களைக் கையாளும் பிரத்யேக குழுவுக்கும் கூட எச்சரிக்கவும்.

சுய தீங்கு மற்றும் தற்கொலை அச்சுறுத்தல்களுக்கு Twitter -இன் அணுகுமுறை

சுய தீங்கு அல்லது தற்கொலை பற்றிய ஒரு புகாரை நாங்கள் மதிப்பீடு செய்தபின், புகாரளிக்கப்பட்ட பயனரை Twitter தொடர்புகொண்டு, அவர்களைப் பற்றி அக்கறை கொண்ட ஒருவர் அவர் ஆபத்தில் இருக்கக் கூடும் என்பதை அடையாளம் கண்டுகொண்டுள்ளதைத் தெரிவிக்கும். புகாரளிக்கப்பட்டுள்ள பயனருக்கு நாங்கள் ஆன்லைன் மற்றும் ஹாட்லைன் ஆதாரங்களை வழங்கி, உதவி பெறும்படி அவர்களை ஊக்குவிப்போம்.

அறிகுறிகளை அடையாளம் காணுதல்

ஆன்லைன் இடுகைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நடத்தையைத் தீர்மானிப்பது சவாலான விஷயம், ஆனால் சுய தீங்கு அல்லது தற்கொலைக்குச் சாத்தியமான எச்சரிக்கை அறிகுறிகள் அல்லது குறிகாட்டிகள் உள்ளன. மற்றொரு பயனர் தற்கொலை எண்ணங்களை உணர்கிறாரா என மதிப்பிடுவதற்கு உதவுவதற்கு உங்களை நீங்களே கேட்க வேண்டிய கேள்விகள் கீழுள்ளன:

  • இந்த நபர் மனச்சோர்வு அல்லது நம்பிக்கையின்மை பற்றி உள்ளடக்கத்தைப் பதிவிடுகிறாரா?
  • மரணம் மட்டுமே விருப்பம் என்று மரணம் அல்லது உணர்வுகள் பற்றிய கருத்துக்களை இடுவதா?
  • கடந்த காலத்தில் தற்கொலை முயற்சி பற்றி கருத்துக்களை வெளியிடுகிறாரா?
  • அவர் சுய தீங்கின் புகைப்படங்களை விவரிக்கிறாரா அல்லது பதிவிடுகிறாரா அல்லது தம்மை தற்கொலை செய்பவராக அடையாளப்படுத்துகிறாரா?
  • அவரது மனநிலையும் அவரது இடுகைகளின் உள்ளடக்கமும் சமீபத்தில் மாறிவிட்டதா?

நீங்கள் நிலைமையை மதிப்பிட்டு, அவர் சம்பந்தப்பட்டுள்ளதை அறிந்தால், தொழில்முறை உதவியை நாடுமாறு அவரை ஊக்குவிக்கவும். மற்ற வகையில், சம்பந்தப்பட்ட நபரை உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இன்னமும் நீங்கள் அவரைத் தொடர்புகொண்டு, அவரது கவலையை வெளிப்படுத்த வைக்கலாம் அல்லது ஓர் ஆலோசகர், தற்கொலைசார் ஹாட்லைன் அல்லது அவர்களை நன்றாகத் தெரிந்த ஒருவரிடம் அவரைப் பற்றி கூறலாம். நீங்களாகவே அவரைத் தொடர்புகொள்வது உங்களுக்குச் சங்கடமாக இருந்தால் அல்லது அவரை எவ்வாறு தொடர்புகொள்வது என உறுதியாகத் தெரியாவிட்டால், நீங்கள்Twitter -இலும் எச்சரிக்கை விடலாம்.

சுய தீங்கு அல்லது தற்கொலை எண்ணங்களைக் கையாளுதல்

உங்களுக்குச் சுய தீங்கு, தற்கொலை அல்லது மனச்சோர்வு ஆகியவற்றின் எண்ணங்கள் இருந்தால், யாரேனும் ஒருவரைத் தொடர்புகொண்டு, உதவியைக் கோருங்கள். மனச்சோர்வு, தனிமை, பொருள் துஷ்பிரயோகம், நோய், உறவில் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் இந்த ஆதாரங்களை அணுகலாம்.

மனச்சோர்வுக்கு பல்வேறு அறிகுறிகக் உள்ளன, இது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பெரியவர்களை பாதிக்கிறது. பொதுவான அறிகுறிகளில் துயரம், செயல்பாடுகளில் ஆர்வம் குறைதல், பசி மற்றும் தூக்க வடிவங்களில் மாற்றங்ள், ஆற்றல் இழப்பு, சிந்திப்பதில் சிரமம் மற்றும் அநேகமாக தற்கொலை பற்றிய எண்ணங்கள் ஆகியவை அடங்கும். நீங்கள் இந்த வகைகளான நடத்தைகளை வெளிப்படுத்தலாம் அல்லது அவை நுட்பமானதாக இருக்கலாம். எவ்வாறு இருந்தாலும், அவற்றைப் புறக்கணிக்க வேண்டாம்.

நம்பகமான நிபுணர்களிடமிருந்து உதவி செய்ய விரும்பினால், உதவி புரியக் கூடிய பல ஆன்லைன் ஆதாரங்கள் உள்ளன.

Bookmark or share this article

Was this article helpful?

Thank you for the feedback. We’re really glad we could help!

Thank you for the feedback. How could we improve this article?

Thank you for the feedback. Your comments will help us improve our articles in the future.