Twitter -இல் ஸ்பேம் பற்றி புகாரளிக்கவும்
ஸ்பேம் என்றால் என்ன?
"ஸ்பேம்" என்பது Twitter விதிகளை மீறும் தடைசெய்யப்பட்ட நடத்தைககளின் வகையைக் குறிக்கிறது. ஸ்பேம் பொதுவாக மற்றவர்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், கேட்கப்படாத, மீண்டும் நிகழும் செயல்கள் என விவரிக்கப்படலாம். இது தானியங்கி கணக்கு ஊடாடல்கள் மற்றும் நடத்தைகளின் பல வடிவங்கள் மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்தும் அல்லது ஏமாற்றும் முயற்சிகளையும் உள்ளடக்கியது. Twitter -இல் "ஸ்பேமிங்" ஏற்படக் காரணமாகும் நடத்தைகள் தொடர்ந்து பரிணாமம் அடையும்.
Twitter விதிகளில் "ஸ்பேமிங்" ஏற்படக் காரணமாகுபவற்றின் எடுத்துக்காட்டுகளின் ஒரு பட்டியல் உள்ளது. ஸ்பேம் கணக்குகள் பெரும்பாலும் பயன்படுத்தும் சில பொதுவான தந்திரோபாயங்கள் இங்கே உள்ளன:
- தீங்கிழைக்கும் இணைப்புகளைப் பதிவிடுதல் (ஃபிஷிங் அல்லது தீம்பொருள் தளங்களுக்கான இணைப்புகள் உட்பட)
- பகைமை உணர்வான பின்வரும் நடத்தை (கவனத்திற்காக திரள் பின்தொடர்தல் மற்றும் திரள் பின்தொடராமை)
- கணக்குகளுக்கு தேவையற்ற செய்திகளைப் பதிவிடுவதற்கு பதில் அல்லது குறிப்பீடுச் செயல்பாடுகளை தவறாகப் பயன்படுத்துதல்
- பல கணக்குகளை உருவாக்குதல் (கைமுறையாக அல்லது தானியங்கு கருவிகளைப் பயன்படுத்துதல்)
- கவனத்தை ஈர்க்க முயற்சி செய்ய, பிரபலமான தலைப்புகளை மீண்டும் மீண்டும் பதிவிடுதல்
- பிரதிப் புதுப்பிப்புகளை மீண்டும் மீண்டும் பதிவிடுதல்
- தொடர்பில்லாத கீச்சுகளுடன் இணைப்புகளைப் பதிவிடுதல்
தனிப்பட்ட கீச்சுகளை எவ்வாறு புகாரளிப்பது
Twitter விதிகள் அல்லது எங்கள் சேவை விதிமுறைகளின் மீறலில் உள்ள தனிப்பட்ட கீச்சுகளையும் கூட நீங்கள் புகாரளிக்கலாம்.
ஸ்பேமிங்கிற்காக கீச்சைப் பற்றி புகாரளிக்க:
- நீங்கள் புகாரளிக்க விரும்பும் கீச்சுக்குச் செல்லவும்.
- ஐகானைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
- கீச்சைப் பற்றி புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் புகாரைச் சமர்ப்பிக்க, இது ஸ்பேம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து, உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் எடுக்கக் கூடிய கூடுதல் நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.
நீங்கள் வேறு ஏதும் தீங்கிழைக்கும், எரிச்சலூட்டும் அல்லது சட்டவிரோத உள்ளடக்கத்தை Twitter -இல் கண்டால், பிற சாத்தியமான மீறல்களைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது என்று கண்டறியுங்கள்.
Twitter -இல் ஸ்பேமிலிருந்து என்னை நான் எவ்வாறு பாதுகாக்க முடியும்?
இந்தக் கட்டுரையில் கணக்குப் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் பற்றி விவாதித்துள்ள பின்வரும் சில எளிய முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணக்கைப் பாதுகாக்க உதவலாம்.
Twitter -இல் ஸ்பேமைப் பரவச் செய்யக் கூடியது என்ன?
- தீங்கான இணைப்புகள் (ஃபிஷிங் மற்றும் தீம்பொருள் தளங்களுக்கான இணைப்புகள் உட்பட)
- தீங்கான இணைப்புகளைத் தானாகவே பதிவிடும் அல்லது ஸ்பேம் சார்ந்த செயல்களை நிர்வகிக்கும் தீங்கிழைக்கக் கூடிய 3ஆம் தரப்புப் பயன்பாடுகள் (பின்தொடர்வுகள், விருப்பங்கள், மறுகீச்சுகள் போன்றவை)
- ஸ்பேம் சார்ந்த செயல்பாடுகள் அல்லது செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் சமரசம் செய்யப்பட்ட அல்லது ஹேக் செய்யப்பட்ட கணக்குகள்
ஸ்பேமை நிறுத்த Twitter என்ன செய்கிறது?
ஸ்பேமை Twitter தீவிரமாக எதிர்த்து போராடுகிறது, மேலும் ஸ்பேமைப் பற்றி கவலைப்படாமல் எங்கள் பயனர்கள் சேவையை மகிழ்வுடன் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். Twitter -இல் ஸ்பேம் இல்லாத ஒரு சூழலை இயக்க, ஸ்பேமின் புதிய வடிவங்களுக்கு எங்கள் ஸ்பேம் எதிர்ப்புக் குழு தொடர்ந்து பரிணாமம் அடைந்து, பதிலளித்து வருகிறது.
எங்களிடம் Twitter -இல் ஸ்பேமைக் கண்டறிய அமைப்புகளும் கருவிகளும் இருக்கும் அதேவேளை, ஸ்பேமைப் புகாரளிப்பதன் மூலம் உதவுவதற்கு உங்களைச் சார்ந்திருக்கிறோம்.