Twitter -இல் பதிவிடப்படும் தனிப்பட்ட தகவலைப் பற்றி புகாரளிக்கவும்

மற்றொரு நபரின் தனிப்பட்ட மற்றும் இரகசியத் தகவலைப் பதிவிடுவது Twitter விதிகளை மீறுவதாகும். Twitter -இல் பதிவிடப்படும் தனிப்பட்ட தகவல் தொடர்பான எங்கள் கொள்கையைப் பற்றி படிக்கவும். 

ஒரு புகாரை அளிக்க நான் Twitter கணக்கு வைத்திருக்க வேண்டுமா?

இல்லை, உங்களது தனிப்பட்ட மற்றும் இரகசியத் தகவல்கள் Twitter -இல் பதிவிடப்பட்டுள்ளதாக ஒரு புகாரைத் தாக்கல் செய்ய உங்களுக்கு Twitter கணக்கு தேவையில்லை.

பதிப்புரிமை பெற்ற தகவலை அனுமதியின்றி பதிவிடுவதை நான் புகாரளிக்கலாமா?

உங்கள் பதிப்புரிமை பெற்ற தகவல் உங்கள் அனுமதியின்று ட்விட் செய்யப்பட்டால், எங்கள் பதிப்புரிமை மற்றும் DMCA கொள்கையைப் பார்க்கவும்.  

எனது தகவல் பிற வலைத்தளங்களில் பதிவிடப்பட்டால் நான் என்ன செய்ய முடியும்?

Twitter தவிர வேறொரு வலைத்தளத்தில் பதிவிடப்படும் எந்தத் தகவலையும் நாங்கள் எடுக்க முடியாது. உங்கள் தகவல் மற்றொரு வலைத்தளத்தில் பதிவிடப்பட்டிருந்தால், உங்கள் தகவல் பதிவிடப்பட்டுள்ள வலைத்தளத்திற்கான உதவி மையம் அல்லது உதவிப் பணியாளரைத் தொடர்புகொள்ளவும்.

எனது தனிப்பட்ட தகவல்கள் Twitter -இல் பதிவிடப்படுவதை நான் எவ்வாறு புகாரளிப்பது?

உங்கள் தனிப்பட்ட தகவல், Twitter -இல் பதிவிடப்பட்டதாக மனதை வருத்தும் கீச்சில்(களில்) இருந்து நேரடியாக நீங்கள் புகாரளிக்கலாம். தனிப்பட்ட கீச்சுகளைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது என்று அறியவும்.

யாரோ ஒருவர் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பதிவிட்டுள்ளார் என்று ஒரு புகாரைத் தாக்கல் செய்யவும். 

Twitter சரியான ஒரு புகாரைப் பெறும்போது என்ன நடக்கிறது?

Twitter -இல் தனிப்பட்ட தகவல் பதிவிடப்பட்டதாக முழுமையான மற்றும் சரியான புகாரை நாங்கள் பெறும்போது, புகாரளிக்கப்பட்ட கணக்கு மற்றும் கீச்சுகளைப் பற்றி விசாரிப்போம். எங்கிருந்தாலும், கணக்கில் அல்லது கீச்சுகளில் நடவடிக்கை எடுக்க முன்னர் தகவல் பொதுவாக எங்கேனும் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளதா என்பதை மதிப்பாய்வு செய்வோம்.  நீங்கள் புகாரளித்த தகவல் முன்பு இணையத்தில் பிற இடங்களில் முன்னர் பதிவிடப்பட்டிருந்தால், இது எங்கள் கொள்கை மீறலாகாது, அதற்காக நடவடிக்கை எடுக்க மாட்டோம்.

Twitter மற்றும் பிற வலைத்தளங்களில் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பது பற்றி மேலும் அறிக.

Twitter -இல் பதிவிடப்படும் தனிப்பட்ட தகவல் தொடர்பான எங்கள் கொள்கையைப் படிக்கவும்.

Bookmark or share this article

Was this article helpful?

Thank you for the feedback. We’re really glad we could help!

Thank you for the feedback. How could we improve this article?

Thank you for the feedback. Your comments will help us improve our articles in the future.