வன்முறை அச்சுறுத்தல் வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
கீச்சுகள், சுயவிவரங்கள் அல்லது நேரடிச்செய்திகளை நேரடியாக எங்களுக்குப் புகாரளிக்கலாம் (மேலே பார்க்கவும்). அச்சுறுத்தும் கீச்சு, நேரடிச்செய்தி மற்றும்/அல்லது அதற்குப் பொறுப்பான கணக்கு மீது Twitter நடவடிக்கை எடுக்கலாம்.
இருப்பினும், நம்பத்தகுந்ததாக நீங்கள் கருதும் அல்லது உங்களுக்கோ வேறொருவருக்கோ ஏற்படக்கூடிய உடல் சார்ந்த தீங்கு குறித்து நீங்கள் அஞ்சக்கூடிய வன்முறை அச்சுறுத்தலைக் கொண்டுள்ள கீச்சை அல்லது செய்தியை யாராவது அனுப்பியிருந்தால், உங்கள் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனத்தை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கலாம். அவர்கள் அச்சுறுத்தலின் ஏற்புடைமையை துல்லியமாக மதிப்பிட்டு அச்சுறுத்தலின் மூலத்தை விசாரித்து உடல் சார்ந்த பாதுகாப்பு குறித்த கவலைகளுக்குப் பதிலளிக்கலாம். சட்ட அமலாக்கத்தால் நேரடியாகத் தொடர்பு கொள்ளப்பட்டால், நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றி அச்சுறுத்தல் குறித்த அவர்களின் விசாரணைக்குத் தேவையான தகவல்களை வழங்க முடியும். கீச்சுப் புகார்களுக்கு மட்டும்: உங்கள் புகாரைப் பெற்றுள்ளோம் என்ற திரையில் புகாரை மின்னஞ்சல் அனுப்பு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் சட்ட அமலாக்கத்துடன் பகிர்ந்து கொள்வதற்காக வன்முறை அச்சுறுத்தல் குறித்த உங்கள் புகாரின் சொந்த நகலை நீங்கள் பெறலாம்.
நான் புகாரைச் சமர்ப்பித்த பின் என்ன நடக்கிறது?
நீங்கள் ஒரு புகாரைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் புகாரை நாங்கள் பெற்றுள்ளோம் என்று விழிப்பூட்டும் ஒரு உறுதிப்படுத்தல் செய்தியைக் காண்பீர்கள் (செய்தியைக் காண 24 மணிநேரம் வரை ஆகலாம்). புகாரளிக்கப்பட்ட கணக்கு மற்றும்/அல்லது கீச்சு(கள்), மற்றும்/அல்லது நேரடிச்செய்தி(கள்) ஆகியவற்றை மதிப்பாய்வு செய்வோம். கணக்கு, மற்றும்/அல்லது கீச்சு(கள்) மற்றும்/அல்லது நேரடிச்செய்தி(கள்) எங்கள் கொள்கைகளை மீறுவதாக நாங்கள் தீர்மானித்தால், நடவடிக்கை எடுப்போம் (எச்சரிப்பது முதல் கணக்கை நிரந்தரமாக இடைநீக்குவது வரையாகும்). உங்களிடமிருந்து கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் அல்லது புகாரளிக்கப்பட்ட கணக்கு, மற்றும்/அல்லது கீச்சு(கள்), மற்றும்/அல்லது நேரடிச்செய்தி(கள்) மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கும்போது எங்களிடமிருந்து தொடர் செய்திகளைப் பெறுவீர்கள்.
கூடுதலாக, புகாரளிக்கப்பட்ட கீச்சுகளின் அசல் உள்ளடக்கத்திற்குப் பதிலாக, நீங்கள் இதைப் பற்றி புகாரளித்துள்ளீர்கள் என்று கூறும் ஓர் அறிவிப்பு காண்பிக்கப்படும். நீங்கள் விரும்பினால் அந்தக் கீச்சைக் கிளிக் செய்து, பார்க்கலாம்.
குறிப்பு: கூடுதலாக, நீங்கள் சமீபத்தில் புகாரளித்தக் கணக்கின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், தயாரிப்பிலிருந்து நேரடியாகவே அறிவிப்பைப் பெறுவீர்கள். இந்த நடவடிக்கை உங்கள் புகாருடன் தொடர்புடையதாக அல்லது தொடர்பில்லாததாக இருக்கலாம்.
புதிய கணக்குகளை உருவாக்குவதிலிருந்து Twitter ஏன் ஒரு கணக்கைத் தடைசெய்ய முடியாது?
IP-ஐத் தடைசெய்வது என்பது தேவையற்ற நடத்தையை நிறுத்துவதில் பொதுவாகப் பயனற்றது, மேலும் சட்டப்பூர்வமான கணக்குகள் எங்கள் சேவையை அணுகுவதிலிருந்து தவறுதலாகத் தடுக்கலாம்.
IP முகவரிகள், பல கணக்குகளுக்கு பல்வேறு இடங்களில் பொதுவாகப் பகிரப்படுகின்றன, அதாவது ஒரு IP-ஐத் தடுப்பது, இணைக்கப்படாத ஏராளமான கணக்குகளை Twitter-இல் உள்நுழைவதிலிருந்து தடுக்கலாம். கூடுதலாக, IP முகவரிகள் எளிதாக மாற்றக்கூடியவை, மேலும் அவற்றைத் தடைசெய்வது என்பது வேறு இடத்திலிருந்து, ஒரு மூன்றாம் தரப்பு சேவையிலிருந்து, அல்லது பல இலவச வலைத்தளங்கள் அல்லது பயன்பாடுகளில் ஒன்றிலிருந்து உள்நுழைவதன் மூலம் எளிதாக ஏமாற்றப்படலாம்.
Twitter எனக்கு மற்றொரு கணக்கின் தகவலைக் கொடுக்க முடியுமா?
எங்கள் தனியுரிமைக் கொள்கைக்கு ஏற்ப, சரியான சட்டச் செயல்முறைத் தேவைக்குத் தவிர Twitter ஆனது கணக்குத் தகவை வெளியிடாது. நீங்கள் காவல்துறை அல்லது உங்கள் வழக்கறிஞருடன் பணிபுரிந்தால், அத்தகையத் தகவலைப் பெறுவதற்கான பொருத்தமான மற்றும் சரியான சட்டச் செயல்முறைக்கு அவர்கள் உங்களுக்கு உதவ முடியும். Twitter, சட்ட அமலாக்கத்தால் நேரடியாகத் தொடர்பு கொள்ளப்பட்டால், நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றி அவர்களின் விசாரணைக்கு உதவிகளை வழங்க முடியும். எங்கள் சட்ட அமலாக்கத்திற்கான வழிகாட்டல்களுக்கு நீங்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளைச் சுட்டிக்காட்டலாம்.