நேரடிச்செய்தி உரையாடலைத் தொட்டு, நீங்கள் புகாரளிக்க விரும்பும் செய்தியைக் கண்டுபிடிக்கவும்.
செய்தியைத் தொட்டுப் பிடிக்கவும். பாப்-அப் மெனுவில் செய்தியைப் புகாரளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இது முறைகேடானது அல்லது தீங்கிழைப்பது என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், நீங்கள் புகாரளிக்கும் சிக்கலைப் பற்றிய கூடுதல் தகவலை வழங்குமாறு உங்களிடம் கேட்போம். உங்கள் புகாரை மதிப்பிடுவதற்கு அதைப் பற்றி நாங்கள் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக, நீங்கள் புகாரளிக்கும் கணக்கிலிருந்து கூடுதல் செய்திகளைத் தேர்ந்தெடுக்குமாறும் உங்களிடம் நாங்கள் கேட்கலாம்.
உங்கள் புகாரைச் சமர்ப்பித்ததும், உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த, நீங்கள் எடுக்கக் கூடிய கூடுதல் நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.
குறிப்பு: கூடுதலாக, ஒரு குழு உரையாடலில் உள்ள செய்தியைப் பற்றி புகாரளிக்கும் விருப்பத்தேர்வும் உங்களுக்கு உள்ளது.