எவ்வாறு உங்கள் கீச்சுகளைப் பாதுகாப்பது மற்றும் பாதுகாப்பு நீக்குவது

நீங்கள் Twitter -இல் பதிவு செய்யும் போது, உங்கள் கீச்சுகளைப் பொதுவில் வைக்க அல்லது உங்கள் கீச்சுகளைப் பாதுகாக்க நீங்கள் தேர்வு செய்யலாம். பொது மற்றும் பாதுகாக்கப்பட்ட கீச்சுகள் ஆகியவற்றின் வேறுபாட்டைப் பற்றி மேலும் படிக்கவும்.

எவ்வாறு உங்கள் கீச்சுகளைப் பாதுகாப்பது
படி 1

மேல் மெனுவில், உங்கள் சுயவிவரப் புகைப்படத்தைத் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.

படி 2

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.

படி 3

பார்வையாளர்கள் மற்றும் இணைத்தல் என்பதன் கீழ் உங்கள் கீச்சுகளைப் பாதுகாத்தல் என்பதற்கு அடுத்துள்ள ஸ்லைடரை இழுத்து ஆன் செய்யவும்.

படி 1

மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை  அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானை பார்ப்பீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் எந்த ஐகானையும் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 2

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொடவும்.

படி 3

பார்வையாளர்கள் மற்றும் இணைத்தல் என்பதன் கீழ், உங்கள் கீச்சுகளைப் பாதுகாத்தல் என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.

படி 1

மேலும்  என்ற ஐகானை கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.

படி 3

பார்வையாளர்கள் மற்றும் இணைத்தல் என்பதற்குச் சென்று, உங்கள் கீச்சுகளைப் பாதுகாத்தல் என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.


உங்கள் கீச்சுகளுக்குப் பாதுகாப்பு நீக்குவது எப்படி
 

  • உங்கள் கீச்சுகளுக்குப் பாதுகாப்பு நீக்க, மேலே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்: இணையத்தைப் பொறுத்தவரை, எனது கீச்சுகளைப் பாதுகாத்தல் என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுநீக்கவும். iOS -க்கான Twitter மற்றும் Android -க்கான Twitter பயன்பாடுகளைப் பொறுத்தவரை, ஸ்லைடரை இழுக்கவும் அல்லது உங்கள் கீச்சுகளைப் பாதுகாத்தல் என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுநீக்கவும்.
  • உங்கள் கீச்சுகளைப் பொதுவில் வைக்கும் முன், நிலுவையிலுள்ள பின்தொடர்பவர் கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்யவும். நிலுவையிலுள்ள கோரிக்கைகள் எதுவும் தானாக ஏற்கப்படாது. அவ்வாறு நிலுவையில் இருந்தால், அந்தக் கணக்குகள் மீண்டும் உங்களைப் பின்தொடர வேண்டும்.
  • உங்கள் கீச்சுகளுக்குப் பாதுகாப்பு நீக்கினால், முன்னர் பாதுகாக்கப்பட்ட கீச்சுகள் பொதுவில் வைக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க