கணக்குப் பாதுகாப்பைப் பற்றி ஓர் அறிமுகம்

உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவ, பின்வரும் சிறந்த நடைமுறைகளைப் பரிந்துரைக்கிறோம்:

 • பிற இணையதளங்களில் நீங்கள் மீண்டும் பயன்படுத்தாத வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்.
 • இரு காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும்.
 • கடவுச்சொலை மீட்டமைப்பதற்காக, அதன் இணைப்பையோ குறியீட்டையோ கோருவதற்கு உங்களின் மின்னஞ்சல் மற்றும் ஃபோன் எண் தேவை.
 • சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், மேலும் உங்கள் உள்நுழைவு தகவலை உள்ளிடுவதற்கு முன்பு நீங்கள் twitter.com -இல் இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை மூன்றாம் தரப்பினருக்கு ஒருபோதும் வழங்க வேண்டாம், குறிப்பாக உங்களுக்குப் பின்தொடர்பவர்களைப் பெற்றுத் தருவதாக, பணம் ஈட்டுத் தருவதாக உறுதியளிப்பவர்களிடம் அல்லது உங்களைச் சரிபார்ப்பதாகக் கூறுபவர்களிடம் வழங்க வேண்டாம்.
 • உங்கள் உலாவி உட்பட உங்கள் கணினி மென்பொருள் மிகச்சமீபத்திய மேம்படுத்தல்களுடனும், வைரஸ் தடுப்பு மென்பொருளுடனும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருப்பதை உறுதிசெய்க.
 • உங்கள் கணக்குத் திருடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.

கடவுச்சொல் வலிமை

உங்கள் Twitter கணக்கிற்கு வலுவான மற்றும் தனித்துவமான கடவுச்சொல்லை உருவாக்கவும். உங்கள் Twitter கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிக்குச் சம அளவு வலுவான மற்றும் தனித்துவமான கடவுச்சொல்லையும் நீங்கள் உருவாக்க வேண்டும்.

செய்ய வேண்டியவை:

 • குறைந்தது 10 எழுத்துக்கள் நீளமுள்ள கடவுச்சொல்லை உருவாக்கவும் . நீண்ட கடவுச்சொல் சிறந்தது.
 • பெரிய எழுத்து, சிற்றெழுத்து, எண்கள் மற்றும் சின்னங்களின் கலவையைப் பயன்படுத்தவும் .
 • நீங்கள் பார்வையிடும் ஒவ்வொரு இணையதளத்திற்கும் வெவ்வேறு கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும் .
 • உங்கள் கடவுச்சொல்லைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும் . உங்கள் உள்நுழைவு தகவல் அனைத்தையும் பாதுகாப்பாகச் சேமிக்க, கடவுச்சொல் மேலாண்மை மென்பொருளைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும்.

செய்யக்கூடாதவை:

 • ஃபோன் எண்கள், பிறந்த தேதிகள் போன்ற தனிப்பட்ட தகவலை உங்கள் கடவுச்சொல்லில் பயன்படுத்த வேண்டாம் .
 • “password”, “iloveyou” போன்ற பொதுவான அகராதி சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் .
 • ”abcd1234”, அல்லது “qwerty” போன்ற விசைப்பலகை தொடர் வரிசைகளைப் பயன்படுத்த வேண்டாம் .
 • இணையதளங்கள் முழுவதிலும் ஒரே கடவுச்சொற்களை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். உங்கள் Twitter கணக்குக் கடவுச்சொலானது Twitter -க்குத் தனித்துவமானதாக இருக்க வேண்டும்.

கூடுதலாக, உங்கள் கணக்கு அமைப்புகளில் கடவுச்சொல் மீட்டமைப்புப் பாதுகாப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்தப் பெட்டியை நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரியை அல்லது ஃபோன் எண்ணை, அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் ஃபோன் எண் ஆகிய இரண்டும் உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் அவற்றை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள், எப்போதாவது நீங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால் அதை மீட்டமைக்க, கடவுச்சொல் இணைப்பை அல்லது உறுதிப்படுத்தல் குறியீட்டை அனுப்ப இவை உதவுகின்றன. 

உங்கள் கடவுச்சொல் மீட்டமைப்பு அமைப்புகளை எவ்வாறு கண்டுபிடிப்பது
 1. உங்கள் பிரதான மெனுவுக்குச் செல்லவும்
 2. அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்
 3. கணக்கு என்பதைத் தொடவும்
 4. பாதுகாப்பு என்பதைத் தொடவும்
 5. கடவுச்சொல் மீட்டமைப்புப் பாதுகாப்பு என்பதை நிலைமாற்று
 1. உங்கள் பயன்பாடு அமைப்புகளுக்குச் செல்லவும்
 2. கணக்கு என்பதைத் தொடவும்
 3. பாதுகாப்பு என்பதைத் தொடவும்
 4. கடவுச்சொல் மீட்டமைப்புப் பாதுகாப்பு என்பதை நிலைமாற்று
இரு காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்தவும்.இரு காரணி அங்கீகாரம் என்பது உங்கள் கணக்கிற்கான கூடுதல் பாதுகாப்பு அடுக்கு ஆகும். கடவுச்சொல்லை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, இரு காரணி அங்கீகாரமானது இரண்டாவது சரிபார்ப்பை அறிமுகப்படுத்துகிறது, இது நீங்கள் மட்டுமே உங்கள் Twitter கணக்கை அணுக முடியும் என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. உங்கள் கடவுச்சொல் மற்றும் உங்கள் மொபைல் ஃபோன் (அல்லது ஒரு பாதுகாப்பு விசை) ஆகிய இரண்டையும் அணுகக்கூடிய நபர்கள் மட்டுமே உங்கள் கணக்கில் உள்நுழைய முடியும்.

மேலும் அறிய, இரு காரணி அங்கீகாரம் குறித்த எங்கள் கட்டுரையைப் படிக்கவும்.நீங்கள் twitter.com -இல் இருக்கிறீர்களா என்று சரிபார்க்கவும்


உங்கள் Twitter பயனர்பெயர், மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண் மற்றும் கடவுச்சொல்லைக் கொடுக்குமாறு யாராவது உங்களை ஏமாற்ற முயலும்போது மோசடி நிகழ்கிறது, இதன்மூலம் பொதுவாக அவர்கள் உங்கள் கணக்கிலிருந்து ஸ்பேமை அனுப்பலாம். பெரும்பாலும், போலி உள்நுழைவு பக்கத்திற்குச் செல்லும் இணைப்பைக் கொண்டு அவர்கள் உங்களை ஏமாற்ற முயற்சி செய்வார்கள். உங்கள் Twitter கடவுச்சொல்லை உள்ளிடும்படி கேட்கப்படும் போதெல்லாம், நீங்கள் twitter.com -இல் இருப்பதை உறுதிப்படுத்த உங்கள் உலாவியின் முகவரி பட்டியில் உள்ள URL -ஐ விரைவாகப் பாருங்கள். கூடுதலாக, வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றும் URL உடன் நீங்கள் ஒரு நேரடிச்செய்தியை (நண்பரிடமிருந்து கூட) பெற்றால், இணைப்பைத் திறக்க வேண்டாம் எனப் பரிந்துரைக்கிறோம்.

மோசடி இணையதளங்கள் பெரும்பாலும் Twitter -இன் உள்நுழைவு பக்கத்தைப் போலவே இருக்கும், ஆனால் உண்மையில் Twitter இல்லாத இணையதளமாக இருக்கும். Twitter டொமைன்களில் எப்போதும் அடிப்படை டொமைனாக https://twitter.com/ இருக்கும். Twitter உள்நுழைவு பக்கங்களின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே:


உள்நுழைவு பக்கத்தைப் பற்றி உங்களுக்கு எப்போதாவது உறுதியற்ற தன்மை இருந்தால், நேரடியாக twitter.com -க்குச் சென்று உங்கள் சான்றுகளை அங்கு உள்ளிடவும். நீங்கள் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் கடவுச்சொல்லை விரைவாக மாற்றவும், கூடுதல் வழிமுறைகளுக்கு எங்களின் திருடப்பட்ட கணக்குக் கட்டுரையைப் பார்வையிடவும். 

மின்னஞ்சல் மூலமான மோசடி பற்றிய கூடுதல் தகவலுக்கு போலி Twitter மின்னஞ்சல்கள் என்பதைப் படிக்கவும்.  உங்கள் கடவுச்சொல்லைக் கேட்டு நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ள மாட்டோம்மின்னஞ்சல், நேரடிச்செய்தி அல்லது பதில் வழியாக உங்கள் கடவுச்சொல்லை வழங்க Twitter ஒருபோதும் கேட்காது.

Twitter அல்லாத இணையதளத்திற்கு எதையாவது பதிவிறக்கவோ அல்லது உள்நுழையவோ நாங்கள் ஒருபோதும் கேட்க மாட்டோம். எங்களிடமிருந்து வந்ததாகக் கூறும் மின்னஞ்சலிலிருந்து ஒருபோதும் ஒரு இணைப்பைத் திறக்கவோ அல்லது எந்த மென்பொருளையும் நிறுவவோ வேண்டாம்; அது எங்களிடமிருந்து வந்ததல்ல.


உங்கள் கணக்கு மோசடி செய்யப்பட்டதாக அல்லது ஹேக் செய்யப்பட்டதாக நாங்கள் சந்தேகித்தால், உங்கள் கணக்கை ஹேக்கர் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க உங்கள் கடவுச்சொல்லை நாங்கள் மீட்டமைக்கக்கூடும். இந்தச் சந்தர்ப்பங்களில், உங்களுக்கு ஒரு twitter.com கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பை மின்னஞ்சல் அனுப்புவோம்.


உங்கள் கடவுச்சொல்லை நீங்கள் மறந்துவிட்டால், இந்த இணைப்பு வழியாக அதை மீட்டமைக்கலாம்.

 

புதிய மற்றும் சந்தேகத்திற்கிடமான உள்நுழைவு எச்சரிக்கைகள்

சந்தேகத்திற்கிடமான உள்நுழைவை நாங்கள் கண்டறிந்தால் அல்லது நீங்கள் முதல் முறையாக ஒரு புதிய சாதனத்திலிருந்து உங்கள் Twitter கணக்கில் உள்நுழையும்போது, உங்கள் கணக்கிற்கான கூடுதல் பாதுகாப்பாக ஒரு புஷ் அறிவிப்பை Twitter பயன்பாட்டிற்குள் அல்லது மின்னஞ்சல் வழியாக உங்கள் அனுப்புவோம். iOS மற்றும் Android, twitter.com மற்றும் மொபைல் இணையம் ஆகியவற்றிற்கான Twitter மூலம் மேற்கொள்ளப்படும் புதிய உள்நுழைவுகளைத் தொடர்ந்து மட்டுமே உள்நுழைவு எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன.

இந்த எச்சரிக்கைகள் மூலம், சாதனத்திலிருந்து உள்நுழைந்தவர் நீங்கள்தான் என்பதை நீங்கள் சரிபார்க்கலாம். சாதனத்திலிருந்து நீங்கள் உள்நுழையவில்லை என்றால், உங்கள் Twitter கடவுச்சொல்லை உடனடியாக மாற்றுவது தொடங்கி, உங்கள் கணக்கைப் பாதுகாக்க அறிவிப்பில் உள்ள படிகளைப் பின்பற்ற வேண்டும். அறிவிப்பில் பட்டியலிடப்பட்ட இருப்பிடம் என்பது நீங்கள் Twitter-ஐ அணுகப் பயன்படுத்திய IP முகவரியிலிருந்து பெறப்பட்ட தோராயமான இருப்பிடமாகும் என்பதை நினைவில் கொள்க, அது உங்கள் உண்மையான இருப்பிடத்திலிருந்து வேறுபட்டிருக்கலாம்.

குறிப்பு: மறைமுக உலாவிகள் அல்லது குக்கீகள் முடக்கப்பட்ட உலாவிகளிலிருந்து உங்கள் Twitter கணக்கில் நீங்கள் உள்நுழைந்தால், ஒவ்வொரு முறையும் நீங்கள் ஓர் எச்சரிக்கையைப் பெறுவீர்கள்.

மின்னஞ்சல் முகவரி புதுப்பிப்பு எச்சரிக்கைகள்

உங்கள் Twitter கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரி எந்த நேரத்திலும் மாற்றப்பட்டால், உங்கள் கணக்கில் முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அறிவிப்பை அனுப்புவோம். உங்கள் கணக்கு திருடப்பட்டால், உங்கள் கணக்கின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற நடவடிக்கை எடுக்க இந்த எச்சரிக்கைகள் உங்களுக்கு உதவும்.
 

Twitter -இல் இணைப்புகளை மதிப்பீடு செய்தல்

பல Twitter பயனர்கள் தங்கள் கீச்சுகளை எளிதாகப் பகிரும் வகையில், bit.ly அல்லது TinyURL போன்ற URL சுருக்கிகளைப் பயன்படுத்தி, தனித்துவமான, சுருக்கப்பட்ட இணைப்புகளை உருவாக்கி, அந்த இணைப்புகளை இடுகையிடுகிறார்கள். இருப்பினும், URL சுருக்கிகள் இறுதி டொமைனை மறைக்கக்கூடும், இதனால் இணைப்பு எங்கு செல்கிறது என்பதைக் கூறுவது கடினம்.

Chrome மற்றும் Firefox போன்ற சில உலாவிகளில் இலவச செருகுநிரல்கள் உள்ளன, அவை விரிவாக்கப்பட்ட URLகளை அவற்றைக் கிளிக் செய்யாமலேயே காண்பிக்கும்:

பொதுவாக, இணைப்புகளைக் கிளிக் செய்யும் போது எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும். நீங்கள் ஒரு இணைப்பைக் கிளிக் செய்து, Twitter உள்நுழைவு பக்கத்தை ஒத்த ஒரு பக்கத்திற்கு எதிர்பாராத விதமாக நீங்கள் சென்றால், உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டாம். அதற்குப் பதிலாக, twitter.com -க்கு சென்று Twitter முகப்புப்பக்கத்திலிருந்து நேரடியாக உள்நுழைக.
 

உங்கள் கணினி மற்றும் உலாவியை புதுப்பித்த நிலையிலும், வைரஸ் இல்லாததாகவும் வைத்திருங்கள்

உங்கள் உலாவியையும் இயக்கு தளத்தையும் மிகவும் சமீபத்திய பதிப்புகள் மற்றும் பேட்சுகளுடன் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்—குறிப்பிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பேட்சுகள் பெரும்பாலும் வெளியிடப்படுகின்றன. வைரஸ்கள், ஸ்பைவேர் மற்றும் ஆட்வேர் ஆகியவற்றிற்காக உங்கள் கணினியைத் தவறாமல் ஸ்கேன் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு பொது கணினியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் முடிந்ததும் Twitter -இலிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் Twitter கணக்கு(களுடன்) நீங்கள் பயன்படுத்தக்கூடிய, வெளிப்புற நிரலாளர்களால் Twitter இயங்குதளத்தில் உருவாக்கப்பட்ட பல மூன்றாம் தரப்புப் பயன்பாடுகள் உள்ளன. இருப்பினும், உங்கள் கணக்கிற்கு மூன்றாம் தரப்புப் பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குவதற்கு முன் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உங்கள் கணக்கிற்கு மூன்றாம் தரப்புப் பயன்பாட்டு அணுகலை நீங்கள் வழங்க விரும்பினால், Twitter -இன் OAuth முறையைப் பயன்படுத்தி மட்டுமே அவ்வாறு செய்யப் பரிந்துரைக்கிறோம். OAuth ஒரு பாதுகாப்பான இணைப்பு முறையாகும், மேலும் உங்கள் Twitter பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் மூன்றாம் தரப்பினருக்கு வழங்க தேவையில்லை. மூன்றாம் தரப்புப் பயன்பாடுகள் OAuth வழியாக உங்கள் கணக்கை அணுக அவற்றிற்கு உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் தேவையில்லை என்பதால், ஒரு பயன்பாடு அல்லது இணையதளம் உங்களின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை வழங்கும்படி கேட்கும்போது நீங்கள் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை வேறொருவருக்கு நீங்கள் வழங்கும்போது, அவர்கள் உங்கள் கணக்கின் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர், மேலும் உங்களைக் கணக்கிற்குள் நுழைய முடியாதபடி செய்யலாம் அல்லது உங்கள் கணக்கு இடைநீக்கப்படுவதற்குக் காரணமான நடவடிக்கைகளை எடுக்கலாம். மூன்றாம் தரப்புப் பயன்பாடுகளை இணைப்பது அல்லது அவற்றிற்கான அணுகலைத் திரும்பப் பெறுவது பற்றி அறிக.

உங்கள் கணக்கை அணுகக்கூடிய மூன்றாம் தரப்புப் பயன்பாடுகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யுமாறு பரிந்துரைக்கிறோம். உங்கள் கணக்கு அமைப்புகளில் உள்ள பயன்பாடுகள் தாவலைப் பார்வையிடுவதன் மூலம், நீங்கள் அடையாளம் காணாத அல்லது உங்கள் சார்பாக ட்விட் செய்யும் பயன்பாடுகளுக்கான அணுகலை நீங்கள் திரும்பப் பெறலாம்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க