விதிமீறல்களைப் புகாரளிக்கவும்

இந்தக் கட்டுரையில் Twitter விதிகள் மற்றும் சேவை விதிமுறைகளின் சாத்தியமான விதிமீறல்களைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது என்பது குறித்த ஒரு மேலோட்டப் பார்வை வழங்கப்படுகிறது.

கீச்சு, பட்டியல் அல்லது சுயவிவரத்தில் இருந்து எவ்வாறு நேரடியாகப் புகாரளிப்பது

பின்வருவன உள்ளிட்ட குறிப்பிட்ட சில விதிமீறல்களுக்காக தனிப்பட்ட கீச்சு, பட்டியல் அல்லது சுயவிவரத்தில் இருந்து நீங்கள் நேரடியாகப் புகாரளிக்கலாம்: ஸ்பேம், வசைமொழியான அல்லது தீங்கிழைக்கும் உள்ளடக்கம், பொருத்தமற்ற விளம்பரங்கள், சுயதீங்கு மற்றும் ஆள் மாறாட்டம். பிற வகையான விதிமீறல்களைப் பற்றி புகாரளிப்பது பற்றிய தகவலுக்கு, கீழுள்ள குறிப்பிட்ட வகையான விதிமீறல்களைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது என்ற பிரிவைப் பார்க்கவும்.


விதிமீறல்களுக்காக தனிப்பட்ட கீச்சுகளைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது:

விதிமீறல்களுக்காக கீச்சுகள், பட்டியல்கள், அல்லது நேரடிச்செய்திகளைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது என்று அறியவும்.


விதிமீறல்களுக்காக ஊடகத்தைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது:

ஊடகத்திற்காக கீச்சுகளைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது என்று அறியவும், மேலும் Twitter ஊடகக் கொள்கையைப் படிக்கவும்.

 

விதிமீறல்களுக்காக சுயவிவரங்களைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது:

 1. நீங்கள் புகாரளிக்க விரும்பும் சுயவிவரத்தைத் திறக்கவும்.
 2. ஓவர்ஃப்ளோ ஐகானை  தேர்ந்தெடுக்கவும்
 3. புகாரளி என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் புகாரளிக்க விரும்பும் சிக்கலின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
 4. அவை வசைமொழியாக அல்லது தீங்கிழைப்பவையாக உள்ளன என்பதைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் புகாரளிக்கும் சிக்கலைப் பற்றிய கூடுதல் தகவலை வழங்குமாறு உங்களிடம் கேட்போம். உங்கள் புகாரை மதிப்பிடுவதற்கு அதைப் பற்றி நாங்கள் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக, நீங்கள் புகாரளிக்கும் கணக்கிலிருந்து கூடுதல் கீச்சுகளைத் தேர்ந்தெடுக்குமாறும் உங்களிடம் நாங்கள் கேட்கலாம்.
 5. நீங்கள் புகாரளித்த கீச்சுகளின் உரையை எங்களது பதில் தொடர் மின்னஞ்சல்களிலும் உங்களுக்கு அனுப்பும் அறிவிப்புகளிலும் சேர்ப்போம். இந்தத் தகவலைப் பெறுவதை நிறுத்த, இந்தப் புகாரைப் பற்றிய புதுப்பிப்புகள் இந்தக் கீச்சுகளைக் காண்பிக்கலாம் என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுநீக்கவும்.
 6. உங்கள் புகாரைச் சமர்ப்பித்ததும், உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த, நீங்கள் எடுக்கக் கூடிய கூடுதல் நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.

ஒரு தருணத்தில் உள்ள குறிப்பிட்ட உள்ளடக்கத்தைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது

விதிமீறல்களுக்காக, தருணத்தில் உள்ள கீச்சைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது:

 1. நீங்கள் புகாரளிக்க விரும்பும் தருணத்தில் உள்ள கீச்சுக்குச் செல்லவும். 
 2.   ஐகானை கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
 3. கீச்சைப் புகாரளி என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
 4. நீங்கள் எங்களிடம் புகாரளிக்க விரும்பும் சிக்கலின் வகையைத் தேர்வுசெய்யவும்.
 5. உங்கள் புகாரைச் சமர்ப்பித்ததும், உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.

விதிமீறல்களுக்காக, ஒரு தருணத்திலுள்ள பல கூறுகளைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது:

 1. தருணங்களைப் பற்றி புகாரளிக்கும் படிவத்தைப் பார்க்கவும். 
 2. நீங்கள் புகாரளிக்க விரும்பும் தருணத்தின் URL -ஐ உள்ளிடவும்.
 3. நீங்கள் எங்களிடம் புகாரளிக்க விரும்பும் சிக்கலின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
 4. விதிமீறல் நிகழ்ந்திருக்கக்கூடிய தருணத்தில் உள்ள 5 கீச்சுகளை எங்களுக்கு வழங்கவும்.
 5. உங்கள் புகாரைச் சமர்ப்பித்ததும், உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.


விதிமீறல்களின் குறிப்பிட்ட வகைகளைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது

எங்கள் உதவி மையம் வழியாக எங்களிடம் புகாரளிக்கக் கூடிய விதிமீறல்களின் வகைகளை கீழுள்ள தகவல் விளக்குகிறது.

 

குறிப்புகள்

உதவி மையம் வழியாக Twitter விதிகள் மற்றும் சேவை விதிமுறைகள் ஆகியவற்றின் சாத்தியமான விதிமீறல்களைப் புகாரளிக்கும்போது, பாதிக்கப்பட்ட கணக்கு போன்ற மூன்றாம் தரப்பினருடன் உங்கள் புகாரின் பகுதிகளைப் பகிர்வதற்கு எங்களை அனுமதிக்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.

 

வேறொருவரின் சார்பில் எவ்வாறு புகாரளிப்பது

நீங்கள் வேறொருவர் சார்பாகப் விதிமீறல்களைப் புகாரளிக்கலாம். மேலே பட்டியலிட்டுள்ள வகைகளையும் அறிவுறுத்தல்களையும் படிக்கவும் அல்லது எங்களைத் தொடர்புகொண்டு உங்கள் புகாரைச் சமர்ப்பிக்கவும். கீச்சு அல்லது சுயவிவரத்தில் இருந்து நேரடியாகவும் புகாரளிக்கலாம் (மேலுள்ள கீச்சு, பட்டியல் அல்லது சுயவிவரத்தில் இருந்து நேரடியாக எவ்வாறு புகாரளிப்பது என்ற பிரிவைப் பார்க்கவும்).

Periscope பயனர்பெயரை எவ்வாறு கண்டுபிடிப்பது

Periscope -இல் உள்ள வெளிப்படையான உள்ளடக்கம் பற்றி புகாரளிக்கும்போது, Periscope பயனர்பெயரை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம். 

twitter.com வழியாக:

 1. twitter.com -இல் உள்ள கீச்சு வழியாகப் பகிரப்படும் Periscope அலைபரப்பைக் கண்டுபிடிக்கும்போது, அந்த Periscope அலைபரப்பு மீது கிளிக் செய்யவும்.
 2. Periscope அலைபரப்பு நேரலையில் இருந்தால், Periscope பயனரின் காட்சிப் பெயரை (கீழ் இடது மூலையில் இருக்கும்) கண்டுபிடிக்கவும். சுயவிவரக் காட்சியைப் பார்க்க, அதை கிளிக் செய்யவும். Periscope பயனர்பெயரை (இது @ என்ற சின்னத்துடன் தொடங்கும்) நகலெடுக்கவும்.
 3. Periscope அலைபரப்பு ஒரு மறு அலைபரப்பாக இருந்தால், பயனரின் காட்சிப் பெயருக்கு நேர் கீழே Periscope பயனர்பெயர் இருக்கும். அதை (இது @ என்ற சின்னத்துடன் தொடங்கும்) நகலெடுக்கவும்.

iOS சாதனத்தில் இருந்து:

 1. அலைபரப்புத் தகவல் பலகத்தைப் பார்க்க, Periscope அலைபரப்பில் இருந்து, மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும் அல்லது திரையின் கீழ் வலதுபுறத்தில் உள்ள மேலும் ஐகானை  தொடவும்.
 2. காட்சிப் பெயருக்குக் கீழே Periscope பயனர்பெயர் இருக்கும், அது @ என்ற சின்னத்துடன் தொடங்கும்.

Android சாதனத்தில் இருந்து:

 1. அலைபரப்புத் தகவல் பலகத்தைப் பார்க்க, Periscope அலைபரப்பில் இருந்து, திரையின் கீழ் வலதுபுறத்தில் உள்ள மேலும் ஐகானை  தொடவும்.
 2. காட்சிப் பெயருக்குக் கீழே Periscope பயனர்பெயர் இருக்கும், அது @ என்ற சின்னத்துடன் தொடங்கும்.
Periscope அலைபரப்புக்கான இணைப்பை எவ்வாறு கண்டுபிடிப்பது
Periscope -இல் உள்ள வெளிப்படையான உள்ளடக்கம் பற்றி புகாரளிக்கும்போது, Periscope அலைபரப்புக்கான இணைப்பை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம். செய்யும் முறை:<br/>
படி 1

அலைபரப்புத் தகவல் பலகத்தைப் பார்க்க, Periscope அலைபரப்பில் இருந்து, மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும் அல்லது திரையின் கீழ் வலதுபுறத்தில் உள்ள மேலும் ஐகானை  தொடவும்.

படி 2

அலைபரப்பைப் பகிர் என்பதைத் தொட்டு, இணைப்பைப் பகிர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Periscope -இல் உள்ள வெளிப்படையான உள்ளடக்கம் பற்றி புகாரளிக்கும்போது, Periscope அலைபரப்புக்கான இணைப்பை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம். செய்யும் முறை:<br/>
படி 1

அலைபரப்புத் தகவல் பலகத்தைப் பார்க்க, Periscope அலைபரப்பில் இருந்து, திரையின் கீழ் வலதுபுறத்தில் உள்ள மேலும் ஐகானை  தொடவும்.

படி 2

அலைபரப்பைப் பகிர் என்பதைத் தொட்டு, URL -ஐ நகலெடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Periscope -இல் உள்ள வெளிப்படையான உள்ளடக்கம் பற்றி புகாரளிக்கும்போது, Periscope அலைபரப்புக்கான இணைப்பை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம். செய்யும் முறை:<br/>
படி 1

Twitter.com -இல் உள்ள கீச்சு வழியாகப் பகிரப்படும் Periscope அலைபரப்பைக் கண்டுபிடிக்கும்போது, அந்த Periscope அலைபரப்பு மீது கிளிக் செய்யவும்.

படி 2

உங்கள் உலாவியின் முகவரிப் பட்டியில் காட்டப்படும் URL -ஐ நகலெடுக்கவும். இது இவ்வாறு தோன்ற வேண்டும்: https://www.pscp.tv/w/…

குழுவைத் எவ்வாறு தொடர்பு கொள்வது உள்ளிட்ட மேலும் தகவல்களுக்கு, Periscope உதவி மையத்தைப் பார்க்கவும்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க