விதிமீறல்களைப் பற்றி புகாரளிக்கவும்
இந்தக் கட்டுரையில் Twitter விதிகள் மற்றும் சேவை விதிமுறைகளின் சாத்தியமான விதிமீறல்களைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது என்பது குறித்த ஒரு மேலோட்டப் பார்வை வழங்கப்படுகிறது.
கீச்சு அல்லது சுயவிவரத்தில் இருந்து எவ்வாறு நேரடியாகப் புகாரளிப்பது
பின்வருவன உள்ளிட்ட குறிப்பிட்ட சில விதிமீறல்களுக்காக தனிப்பட்ட கீச்சு அல்லது சுயவிவரத்தில் இருந்து நீங்கள் நேரடியாகப் புகாரளிக்கலாம்: ஸ்பேம், வசைமொழியான அல்லது தீங்கிழைக்கும் உள்ளடக்கம், பொருத்தமற்ற விளம்பரங்கள், சுயதீங்கு மற்றும் ஆள் மாறாட்டம். பிற வகையான விதிமீறல்களைப் பற்றி புகாரளிப்பது பற்றிய தகவலுக்கு, கீழுள்ள குறிப்பிட்ட வகையான விதிமீறல்களைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது என்ற பிரிவைப் பார்க்கவும்.
விதிமீறல்களுக்காக தனிப்பட்ட கீச்சுகளைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது:
விதிமீறல்களுக்காக கீச்சை (அல்லது நேரடிச்செய்தியை) பற்றி எவ்வாறு புகாரளிப்பது என்று அறியவும்.
விதிமீறல்களுக்காக ஊடகத்தைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது:
ஊடகத்திற்காக கீச்சுகளைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது என்று அறியவும், மேலும் Twitter ஊடகக் கொள்கையைப் படிக்கவும்.
விதிமீறல்களுக்காக சுயவிவரங்களைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது:
- நீங்கள் புகாரளிக்க விரும்பும் சுயவிவரத்தைத் திறக்கவும்.
- ஓவர்ஃப்ளோ ஐகானை தேர்ந்தெடுக்கவும்
- புகாரளி என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் புகாரளிக்க விரும்பும் சிக்கலின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- அவை வசைமொழியாக அல்லது தீங்கிழைப்பவையாக உள்ளன என்பதைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் புகாரளிக்கும் சிக்கலைப் பற்றிய கூடுதல் தகவலை வழங்குமாறு உங்களிடம் கேட்போம். உங்கள் புகாரை மதிப்பிடுவதற்கு அதைப் பற்றி நாங்கள் மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக, நீங்கள் புகாரளிக்கும் கணக்கிலிருந்து கூடுதல் கீச்சுகளைத் தேர்ந்தெடுக்குமாறும் உங்களிடம் நாங்கள் கேட்கலாம்.
- நீங்கள் புகாரளித்த கீச்சுகளின் உரையை எங்களது பதில் தொடர் மின்னஞ்சல்களிலும் உங்களுக்கு அனுப்பும் அறிவிப்புகளிலும் சேர்ப்போம். இந்தத் தகவலைப் பெறுவதை நிறுத்த, இந்தப் புகாரைப் பற்றிய புதுப்பிப்புகள் இந்தக் கீச்சுகளைக் காண்பிக்கலாம் என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுநீக்கவும்.
- உங்கள் புகாரைச் சமர்ப்பித்ததும், உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த, நீங்கள் எடுக்கக் கூடிய கூடுதல் நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.
ஒரு தருணத்தில் உள்ள குறிப்பிட்ட உள்ளடக்கத்தைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது
விதிமீறல்களுக்காக, தருணத்தில் உள்ள கீச்சைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது:
- நீங்கள் புகாரளிக்க விரும்பும் தருணத்தில் உள்ள கீச்சுக்குச் செல்லவும்.
- ஐகானைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்
- கீச்சைப் பற்றி புகாரளி என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
- நீங்கள் எங்களிடம் புகாரளிக்க விரும்பும் சிக்கலின் வகையைத் தேர்வுசெய்யவும்.
- உங்கள் புகாரைச் சமர்ப்பித்ததும், உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.
விதிமீறல்களுக்காக, ஒரு தருணத்திலுள்ள பல கூறுகளைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது:
- தருணங்களைப் பற்றி புகாரளிக்கும் படிவத்தைப் பார்க்கவும்.
- நீங்கள் புகாரளிக்க விரும்பும் தருணத்தின் URL -ஐ உள்ளிடவும்.
- நீங்கள் எங்களிடம் புகாரளிக்க விரும்பும் சிக்கலின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- விதிமீறல் நிகழ்ந்திருக்கக்கூடிய தருணத்தில் உள்ள 5 கீச்சுகளை எங்களுக்கு வழங்கவும்.
- உங்கள் புகாரைச் சமர்ப்பித்ததும், உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவோம்.
விதிமீறல்களின் குறிப்பிட்ட வகைகளைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது
எங்கள் உதவி மையம் வழியாக எங்களிடம் புகாரளிக்கக் கூடிய விதிமீறல்களின் வகைகளை கீழுள்ள தகவல் விளக்குகிறது.
- அங்கீகரிக்கப்படாத டிரேட்மார்க் உபயோகம்: Twitter -இன் டிரேட்மார்க் கொள்கை பற்றி மேலும் அறியவும், அத்துடன் இங்கு ஒரு புகாரைப் பதிவுசெய்யவும்.
- பதிப்புரிமை பெற்ற தகவல்களின் அங்கீகரிக்கப்படாத உபயோகம்: Twitter -இன் பதிப்புரிமைக் கொள்கை பற்றி மேலும் அறியவும், அத்துடன் இங்கு ஒரு புகாரைப் பதிவுசெய்யவும்.
- போலியான பொருட்களை விற்பனை செய்தல் அல்லது விளம்பரப்படுத்துதல்: Twitter -இன் போலியான பொருட்கள் கொள்கை பற்றி மேலும் அறியவும், அத்துடன் இங்கு ஒரு புகாரைப் பதிவுசெய்யவும்.
- குழந்தைகள் குறித்த தனியுரிமைக் கொள்கை: எங்கள் சேவைகள், 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படாது. உங்கள் ஒப்புதல் இல்லாமல் உங்கள் குழந்தை எங்களிடம் தனிப்பட்ட தகவலை அளித்துள்ளார் என்று நீங்கள் அறிந்தால், எங்கள் தனியுரிமைப் படிவம் வழியாக எங்களைத் தொடர்பு கொள்ளவும். குழந்தைகள் குறித்த எங்கள் கொள்கையைப் பற்றி எங்கள் தனியுரிமைக் கொள்கையில் மேலும் அறியவும்.
- குழந்தைசார் பாலியல் துஷ்பிரயோகம்: எங்கள் குழந்தைசார் பாலியல் துஷ்பிரயோகக் கொள்கை பற்றி மேலும் அறியவும், அத்துடன் இங்கு ஒரு புகாரைப் பதிவுசெய்யவும்.
- ஆபாசப் படங்கள்: Twitter -இல் சுயவிவரப் புகைப்படங்கள் மற்றும்/அல்லது தலைப்புப் புகைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய கீழ்த்தரமான அல்லது ஆபாசப் படங்களைப் பற்றி புகாரளிக்க, உணர்ச்சிகரமான ஊடகம் பற்றி புகாரளித்தல் என்பதில் உள்ள எங்கள் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- தனிநபர் அல்லது பிராண்டின் ஆள் மாறாட்டம்: எங்கள் ஆள் மாறாட்டக் கொள்கை பற்றி மேலும் அறியவும், அத்துடன் இங்கு ஒரு புகாரைப் பதிவுசெய்யவும்.
- Twitter -இல் பதிவிடப்படும் தனிப்பட்ட தகவல்: எங்கள் தனிப்பட்ட தகவல் கொள்கை பற்றி மேலும் அறியவும், அத்துடன் இங்கு ஒரு புகாரைப் பதிவுசெய்யவும்.
- வசைமொழி நடத்தை மற்றும் வன்முறை அச்சுறுத்தல்கள்: எங்கள் வசைமொழி நடத்தைக் கொள்கை பற்றி மேலும் அறியவும், அத்துடன் இங்கு ஒரு புகாரைப் பதிவுசெய்யவும்.
- ஸ்பேம் மற்றும் அமைப்பு முறைகேடு: உங்கள் Twitter பயன்பாட்டைப் பாதிக்கின்ற ஸ்பேம் அல்லது மால்வேர் சிக்கல் உங்களுக்கு ஏற்பட்டால், இங்கு ஒரு புகாரைப் பதிவுசெய்யவும்.
- Twitter -இன் விளம்பரக் கொள்கையை மீறுதல்: Twitter விளம்பரங்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதையும் புகாரைத் தாக்கல் செய்யாமல் சிக்கல்களைத் தீர்க்க எடுக்கக் கூடிய நடவடிக்கைகளையும் பற்றி அறியவும். எங்கள் கொள்கைகளை மீறக்கூடிய ஒரு Twitter விளம்பரத்தைப் பற்றி புகாரளிக்கவும்.
குறிப்பு: உதவி மையம் வழியாக Twitter விதிகள் மற்றும் சேவை விதிமுறைகள் ஆகியவற்றின் சாத்தியமான விதிமீறல்களைப் புகாரளிக்கும்போது, பாதிக்கப்பட்ட கணக்கு போன்ற மூன்றாம் தரப்பினருடன் உங்கள் புகாரின் பகுதிகளைப் பகிர்வதற்கு எங்களை அனுமதிக்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.
வேறொருவரின் சார்பில் எவ்வாறு புகாரளிப்பது
நீங்கள் வேறொருவர் சார்பாகப் விதிமீறல்களைப் பற்றி புகாரளிக்கலாம். மேலே பட்டியலிட்டுள்ள வகைகளையும் அறிவுறுத்தல்களையும் படிக்கவும் அல்லது எங்களைத் தொடர்புகொண்டு உங்கள் புகாரைச் சமர்ப்பிக்கவும். கீச்சு அல்லது சுயவிவரத்தில் இருந்து நேரடியாகவும் புகாரளிக்கலாம் (மேலுள்ள கீச்சு அல்லது சுயவிவரத்தில் இருந்து நேரடியாகப் புகாரளிப்பது எவ்வாறு என்ற பிரிவைப் பார்க்கவும்).
Periscope பயனர்பெயரை எவ்வாறு கண்டுபிடிப்பது
Periscope -இல் உள்ள வெளிப்படையான உள்ளடக்கம் பற்றி புகாரளிக்கும்போது, Periscope பயனர்பெயரை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.
twitter.com வழியாக:
- twitter.com -இல் உள்ள கீச்சு வழியாகப் பகிரப்படும் Periscope அலைபரப்பைக் கண்டுபிடிக்கும்போது, அந்த Periscope அலைபரப்பு மீது கிளிக் செய்யவும்.
- Periscope அலைபரப்பு நேரலையில் இருந்தால், Periscope பயனரின் காட்சிப் பெயரை (கீழ் இடது மூலையில் இருக்கும்) கண்டுபிடிக்கவும். சுயவிவரக் காட்சியைப் பார்க்க, அதை கிளிக் செய்யவும். Periscope பயனர்பெயரை (இது @ என்ற சின்னத்துடன் தொடங்கும்) நகலெடுக்கவும்.
- Periscope அலைபரப்பு ஒரு மறு அலைபரப்பாக இருந்தால், பயனரின் காட்சிப் பெயருக்கு நேர் கீழே Periscope பயனர்பெயர் இருக்கும். அதை (இது @ என்ற சின்னத்துடன் தொடங்கும்) நகலெடுக்கவும்.
iOS சாதனத்தில் இருந்து:
- அலைபரப்புத் தகவல் பலகத்தைப் பார்க்க, Periscope அலைபரப்பில் இருந்து, மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும் அல்லது திரையின் கீழ் வலதுபுறத்தில் உள்ள மேலும் ஐகானை தொடவும்.
- காட்சிப் பெயருக்குக் கீழே Periscope பயனர்பெயர் இருக்கும், அது @ என்ற சின்னத்துடன் தொடங்கும்.
Android சாதனத்தில் இருந்து:
- அலைபரப்புத் தகவல் பலகத்தைப் பார்க்க, Periscope அலைபரப்பில் இருந்து, திரையின் கீழ் வலதுபுறத்தில் உள்ள மேலும் ஐகானை தொடவும்.
- காட்சிப் பெயருக்குக் கீழே Periscope பயனர்பெயர் இருக்கும், அது @ என்ற சின்னத்துடன் தொடங்கும்.
குழுவைத் எவ்வாறு தொடர்பு கொள்வது உள்ளிட்ட மேலும் தகவல்களுக்கு, Periscope உதவி மையத்தைப் பார்க்கவும்.