Twitter தருணங்கள் குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் கோட்பாடுகள்

தருணங்களை Twitter எவ்வாறு தொகுக்கிறது?
 

ஒவ்வொரு நாளும் பதிவிடப்படும் கோடிக்கணக்கான கீச்சுகளிலிருந்து, Twitter -இல் நிகழ்பவற்றில் சிறந்தவற்றை தருணங்கள் காண்பிக்கும். தருணங்கள் மூலம், Twitter -இன் சக்தியை பல லட்சக்கணக்கானவர்கள் அறிந்துகொள்கின்றனர்—போராட்டங்களில் நிகழ்பவற்றை, ஆஸ்கார் விருதுகளின் முன்வரிசையிலிருந்து, உலகக் கோப்பைப் போட்டியின் மைதானத்திலிருந்து, விண்வெளியிலிருந்து கூட. Twitter -இல் நீங்கள் பார்ப்பவைதான் உலகத்திலும் நிகழ்கின்றன.

தருணங்கள் பல வழிகளில் உருவாக்கப்படுகின்றன. விளையாட்டு நிகழ்வுகள் அல்லது TV நிகழ்ச்சிகள் போன்ற சில தருணங்கள், நிகழ்வு நிகழும்போது வெளிவரும் உரையாடலைப் பிரதிபலிக்கும் வகையில் அல்காரிதம் ரீதியாக உருவாக்கப்பட்டன. மற்றவை எங்கள் தொகுத்தல் குழுவால் கைமுறையாகத் தயாரிக்கப்பட்டன, தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கீழே விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
 

தொகுத்தல் குழு
 

தொகுத்தல் குழுவின் குறிக்கோள் என்பது Twitter -இல் தற்போது நடக்கும் உரையாடல்களுக்கு நுண்ணறிவையும் சூழலையும் வழங்கும் உரை, வீடியோ, GIFகள் மற்றும் நேரலை ஸ்ட்ரீம்கள் உள்ளிட்ட சிறந்த கீச்சுகளைக் கண்டுபிடித்து முன்னிலைப்படுத்துவதாகும். தொகுப்பாளர்கள் நிருபர்களாகவோ அல்லது அசல் படைப்பை உருவாக்கியவர்களாகவோ செயல்படுவதில்லை, அவர்கள் ஏற்கனவே Twitter -இல் இருக்கும் ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தை ஒழுங்கமைத்து வழங்குகிறார்கள். இந்த உள்ளடக்கமானது தருணங்களில், போக்குகள் பற்றிய விளக்கமான உள்ளடக்கம், பட்டியல்கள் மற்றும் பலவற்றில் தோன்றும். 

எங்கள் தொகுப்பாளர்கள் செய்தி, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை ஆகியவை முழுவதும் Twitter -இல் நடக்கும் சிறந்த விஷயங்களைத் தேடும் உலகளாவிய, பன்மொழி குழு ஆகும். நாங்கள் தற்போது ஐந்து மொழிகளில் (ஆங்கிலம், ஜப்பனீஸ், அரபு, ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகீஸ்) 16 சந்தைகளில் சேவை செய்கிறோம். துல்லியம், பாரபட்சமின்மை மற்றும் உயர்தர உள்ளடக்கத்தை அடையாளம் காண்பது குறித்து வழக்கமான பயிற்சியை தொகுப்பாளர்கள் பெறுகிறார்கள்.
 

தொகுத்தல் கொள்கை
 

பாரபட்சமின்மை, துல்லியம் மற்றும் தரநிலைகள்

எங்களின் தொகுத்தலில் துல்லியம், பாரபட்சமின்மை மற்றும் நேர்மை ஆகியவற்றின் உயர் தரநிலைகளை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். 

ஈர்க்கக்கூடிய, அசலான, பலதரப்பட்ட உள்ளடக்கங்களைக் காண்பிப்பதற்காக தருணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு தருணத்திற்கான கீச்சுகள் மற்றும் வீடியோவைத் தேர்ந்தெடுக்கும்போது, உள்ளடக்கம் மற்றும் மீடியா அத்துடன் போஸ்டரின் அவதார் மற்றும் பயனர்பெயர் ஆகியவற்றை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். 

  • பாரபட்சமின்மை: சர்ச்சைக்குரிய தலைப்புகளில் உள்ள கீச்சுகளைத் தேர்ந்தெடுக்கும்போது, Twitter -இல் ஏற்கனவே குறிப்பிடத்தக்க ஈடுபாடுகளைப் பெறும் கீச்சுகளைத் தேர்ந்தெடுக்கும்போது நாங்கள் தரவு சார்ந்த முடிவுகளை எடுக்கிறோம். பொது விவாதத் தலைப்புகளில், சாத்தியமான போதெல்லாம் நாங்கள் பல்வேறு கண்ணோட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முற்படுகிறோம். தொகுப்பாளர்கள் பாரபட்சமின்மை குறித்த தொடர்ச்சியான பயிற்சியைப் பெறுகிறார்கள், மேலும் தளத்தில் தோன்றும் உரையாடலைப் புறநிலையாகப் பிரதிபலிக்க முயற்சி செய்கின்றனர். 

  • துல்லியம்: துல்லியமான தகவலைக் குறிக்கும் தரமான கீச்சுகளை முன்னிலைப்படுத்துவதே எங்கள் இலக்காகும். எங்கள் குழு சமூக ஊடக சரிபார்ப்பு நடைமுறைகளில் வழக்கமான பயிற்சியைப் பெறுகிறது, மேலும் பெரும்பாலான தருணங்கள் அவை இடம்பெறுவதற்கு முன்பு மதிப்பாய்வு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. 

  • திருத்தங்கள்: துல்லியமற்ற தகவலை முன்னிலைப்படுத்தியுள்ளோம் என்பதை நாங்கள் அறிந்தால், காணக்கூடிய திருத்தத்துடன் தருணத்தைப் புதுப்பித்து, புதுப்பிக்கப்பட்ட கீச்சை வெளியிடுவோம். அரிதான சந்தர்ப்பங்களில், தொடர்புடைய நாட்டின் Twitter கணக்கைப் பயன்படுத்தி நாங்கள் தருணத்தை நீக்கி, அதைத் திரும்பப் பெறும் அறிவிப்பை இடுகையிடலாம்.

  • தரநிலைகள்: அவதூறு, வன்முறை, நிர்வாணம் மற்றும் பிற வகையான சாத்தியமான உணர்ச்சிப்பூர்வ உள்ளடக்கங்கள் ஒரு முக்கியச்செய்தி தொடர்பான உரையாடலை முன்னிலைப்படுத்த வேண்டியிருக்கும் போது தவிர அவை தவிர்க்கப்படுகின்றன. சட்டவிரோத நடத்தையை ஊக்குவிக்கும் அல்லது சித்தரிக்கும் உள்ளடக்கத்தைச் சேர்க்க மாட்டோம். சாத்தியமான உணர்ச்சிப்பூர்வ உள்ளடக்கத்தைக் கொண்டிருக்குக்கூடிய எந்தத் தருணமும் ஒரு எச்சரிக்கையை உள்ளடக்கும்.
     

கருத்து வேற்றுமைகளைத் தவிர்த்தல்
 

வருமானத்தை அதிகரித்தல், பயனர் எண்ணிக்கையை அதிகரித்தல் அல்லது Twitter -இன் கூட்டாளர் உறவுகளை நிர்வகித்தல் போன்றவற்றுக்கு எங்களின் தொகுத்தல் குழு பொறுப்பாகாது. நாங்கள் கீச்சுகள் மற்றும் வீடியோக்களைக் காட்டுகிறோம், மேலும் எங்கள் பார்வையாளர்களுக்கு எது சிறந்தது என்பதை அடிப்படையாகக் கொண்ட தருணங்களின் தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறோம். இந்த முடிவுகள் விளம்பரதாரர்கள், கூட்டாளர்கள் அல்லது Twitter -இன் வணிக ஆர்வங்களால் செல்வாக்குச் செலுத்தப்பட்டதல்ல. 

தொகுத்தல் குழு பொதுவாக எங்கள் துறை, எங்கள் நிறுவனம் அல்லது எங்கள் போட்டியாளர்கள் இடம்பெறும் தருணங்களை உருவாக்குவதைத் தவிர்க்கும். Twitter அல்லது அதன் போட்டியாளர்கள் ஓர் உரையாடலில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தால் (எடுத்துக்காட்டாக ஒரு சிக்கல், நடப்புத் தலைப்பாக மாறினால்), பொருத்தமான இடங்களில் எங்கள் தொகுத்தல் குழு அந்நிறுவனத்திலிருந்து பெறப்படும் பதில் உள்ளிட்ட அந்த உரையாடலின் உண்மையான சுருக்கவிவரத்தைத் தொகுக்கலாம்.
 

தருணங்கள் தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தல்
 

ஈர்க்கக்கூடிய, தகவல் தெரிவிக்கக்கூடிய அல்லது தனித்துவமான குறிப்பிடத்தக்கக் கீச்சுகளைத் தருணங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. அவை பரவலான பார்வையாளர்களுக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும், அதிலுள்ள உள்ளடக்கம் Twitter சமூகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். 

சில தருணங்கள் உலகம் மற்றும் ஊடக நிகழ்வுகளை பிரதிபலிக்கும், மற்றவை தனித்துவமான “Twitter -இல் மட்டுமே” என்ற உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். Twitter -இல் பயனர்கள் என்ன விவாதிக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்ட தருணங்களின் தலைப்புகளை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம். சர்ச்சைக்குரிய தலைப்புகளைப் பற்றிப் பார்க்கும்போது, Twitter -இல் பெரிய உரையாடல்களையும், பிராந்தியத்தின் முக்கியச்செய்தி ஊடகங்களில் பெரிய செய்திகளையும் தேடுகிறோம்.  

தனியுரிமையை மீறும், சட்டவிரோத செயல்பாடுகளை ஊக்குவிக்கும் அல்லது சிறு வயதினரைத் தவறாகப் பயன்படுத்தும் அல்லது அவர்களுக்குத் தீங்கிழைக்கும் தருணங்களை உருவாக்குவதை நாங்கள் தவிர்க்கிறோம். Twitter விதிகளை மீறும் உள்ளடக்கம் ஒருபோதும் இடம்பெறாது. மூன்றாம் தரப்பு இணையதளங்களில் பதிவிடப்பட்டுள்ள தொகுக்கப்பட்ட தனித்தொகுப்புகள் அல்லது கீச்சுகளின் தொகுப்பை, அல்லது ஒற்றை Twitter கணக்கிலிருந்து மறுட்வீட் செய்யப்பட்டவற்றை நகலெடுக்க மாட்டோம்.
 

சிறந்த கீச்சுகளைத் தேர்ந்தெடுத்தல்
 

தருணங்கள் என்பது Twitter -இல் பயனர்களால் உருவாக்கப்பட்ட புத்திசாலித்தனமான, அறிவார்ந்த மற்றும் புதுமையான உள்ளடக்கத்தை முன்னிலைப்படுத்துவதாகும். தனிப்பட்ட குரல்களை நாங்கள் தருணங்களில் சேர்க்கும்போது அவற்றை நம்புகிறோம், தவறாக வழிநடத்தும், ஒரு கீச்சின் அசல் உள்ளர்த்தத்தைக் கணிசமாக மாற்றும் அல்லது பாதுகாக்கப்பட்ட கணக்குகளிலுள்ள உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் கீச்சுகளைச் சேர்க்க மாட்டோம். Twitter ஊழியர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைக் காண்பிப்பதைத் தவிர்க்கிறோம். 
 

சிறுகுறிப்புகள்
 

Twitter தொகுத்தல் குழுவால் உருவாக்கப்பட்ட சில தருணங்களில் தலைப்பின் கீழ் அல்லது கீச்சுகளுக்கு இடையில் கூடுதல் உரை இருக்கலாம், அவை சிறுகுறிப்புகள் எனப்படுகின்றன. இந்த உரை அந்தத் தருணத்தில் சூழலைச் சேர்க்கும், மேலும் அது வளரும் சூழ்நிலையின் சுருக்கமாக, வரலாற்று விவரங்களாக அல்லது தருணத்தில் ஒரு கீச்சின் மொழிபெயர்ப்பாக இருக்கலாம். தருணத்தில் உள்ள ஒரு கீச்சிலிருந்து சிறுகுறிப்புகள் பெறப்படவில்லை எனில், அவை எளிதில் சரிபார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும் அல்லது ஒரு ஆதாரத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும்.
 

தனிநபர்கள் மற்றும் Twitter -இன் கூட்டாளர்களால் உருவாக்கப்பட்ட தருணங்கள்
 

யார் வேண்டுமானாலும் ஒரு தருணத்தைத் தொகுக்கலாம், மேலும் Twitter அந்த தருணங்களை 'ஆராய்க' என்ற தாவலில் இடம்பெறச் செய்யலாம். எங்களின் ஒட்டுமொத்த தொகுத்தல் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய, தருணங்களை இடம்பெறச் செய்வதற்கு முன் அவற்றை மதிப்பாய்வு செய்கிறோம். 

Twitter -இன் கூட்டாளர்களால் உருவாக்கப்படும் சில தருணங்கள் ஒரு மூன்றாம் தரப்பால் விளம்பரப்படுத்தப்படுவதாக இருக்கக்கூடும். ஆராய்க என்ற தாவலில் சேர்ப்பதற்கான உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்த விளம்பர ஸ்பான்ஸர்ஷிப்களை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டோம். விளம்பரப்படுத்தப்படும் கூட்டாளர் தருணங்கள் உள்ளிட்ட அனைத்துத் தருணங்களும் எங்கள் ஒட்டுமொத்தத் தொகுப்புத் தரநிலைகளுக்கு இணங்க வேண்டும். 

ஒரு தருணத்தைத் தொகுத்தது யார் என்பதையும் எப்போதும் தெளிவாகக் குறிப்பிடுவோம்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க