சட்ட அமலாக்கத்திற்கான வழிகாட்டல்கள்

இந்த வழிகாட்டல்கள், Twitter கணக்குகள் பற்றிய தகவலைத் தேடும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கானவை. Twitter -இல் உள்ளடக்கத்தைத் தடுத்து வைப்பதற்கான கோரிக்கைகளைக் கருத்தில் கொள்ளும் தகவல் உள்ளது. மேலும் பொதுவான தகவல் எங்கள் தனியுரிமைக் கொள்கை, சேவை விதிமுறைகள் மற்றும் Twitter விதிகள் ஆகியவற்றில் காணலாம்.   

 

உள்ளடக்கப்பட்டுள்ள தலைப்புகள்:

 

Twitter என்றால் என்ன?


Twitter என்பது நிகழ் நேர உலகளாவிய தகவல் நெட்வொர்க் ஆகும், இது பொது உரையாடளுக்குச் சேவை செய்ய பயனர்கள் உடனடியாக யோசனைகளையும் தகவலையும் உருவாக்கிப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. Twitter கணக்கு என்பது உலகில் என்ன நிகழ்கிறது, மக்கள் தற்போது என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஒரு நிகழ்வு நிகழும்போது, அதை Twitter -இல் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் தகவலைப் பெற, about.twitter.com -ஐப் பார்க்கவும். Twitter -இன் அம்சங்கள் மற்றும் செயல்பாடு குறித்த சமீபத்திய தகவலைப் பார்க்க, எங்கள் உதவி மையதிற்குச் செல்லவும்.
 

 

கணக்குத் தகவல் கோரிக்கைகள்

 

Twitter -இல் உள்ள கணக்குத் தகவல் என்ன?


Twitter கணக்கின் சுயவிவரத்தில் அவ்வப்போது சுயவிவரப் புகைப்படம், தலைப்புப் புகைப்படம், பின்னணிப் படம் மற்றும் கீச்சுகள் எனப்படும் நிலை குறித்த புதுப்பிப்புகள் ஆகியவை உள்ளன. கூடுதலாக, கணக்கு வைத்திருப்பவர் அவரது பொதுச் சுயவிவரத்தில் காட்டுவதற்காக ஒரு இடம் (எ.கா., சான் பிரான்சிஸ்கோ), ஒரு URL (எ.கா., twitter.com) மற்றும் கணக்கு பற்றிய ஒரு சுருக்கமான "சுயகுறிப்புப்" பிரிவு ஆகியவற்றை நிரப்புவதற்கான விருப்பம் உள்ளது. அனைவருக்கும் வலுவான தனியுரிமை கட்டுப்பாடுகளை நாங்கள் வழங்குகிறோம். பயனர்களிடமிருந்தும் அவர்களைப் பற்றியும் நாங்கள் சேகரிக்கும் தரவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, எங்களது தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

 

பயனர் உருவாக்கிய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை Twitter -ஆல் அணுக முடியுமா?


Twitter சில படப் பதிவேற்றங்களுக்கும் (அதாவது, pic.twitter.com படங்கள்), அத்துடன் Twitter கணக்குச் சுயவிவரப் புகைப்படங்கள் மற்றும் தலைப்புப் புகைப்படங்களுக்கும் புகைப்பட ஹோஸ்டிங்கை வழங்குகிறது. எனினும், Twitter ஆனது Twitter தளத்தில் தோன்றக்கூடிய படங்களுக்கான ஒரே புகைப்பட வழங்குநர் அல்ல. Twitter -இல் புகைப்படங்களை இடுகையிடுவது பற்றிய கூடுதல் தகவல்கள்.

Twitter -இல் (அதாவது, pic.twitter.com வீடியோக்களில்) பதிவேற்றப்படும் சில வீடியோக்களுக்கும், அதேபோல் Periscope -இல் இடுகையிடப்படும் வீடியோக்களுக்கும் வீடியோ ஹோஸ்ட்டிங்கை Twitter வழங்குகிறது. Twitter ஆனது Twitter தளத்தில் தோன்றக்கூடிய வீடியோக்கான ஒரே வீடியோ வழங்குநர் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்க.

நேரடிச்செய்திகளில் பகிரப்படும் இணைப்புகள் உட்பட Twitter -இல் பகிரப்படும் இணைப்புகள் தானாகவே செயலாக்கப்பட்டு https://t.co இணைப்புக்குச் சுருக்கப்படும். நீங்கள் https://t.co இணைப்பைப் பார்க்கும்போது, இது வீடியோ அல்லது படமானது Twitter மூலம் வழங்கப்பட்டது என்பதற்கான அறிகுறி அல்ல.

 

Periscope என்றால் என்ன?

Periscope என்பது, பயனர்கள் நிகழ் நேர வீடியோ ஒளிபரப்புகளை உருவாக்கவும் பகிர்ந்து கொள்ளவும் உதவும் ஒரு தனித்துவமான மொபைல் சேவையாகும். Periscope பயனர்களிடம் இருந்தும் அவர்களைப் பற்றியும் நாங்கள் சேகரிக்கும் தரவைப் பற்றிய கூடுதல் தகவலை அறிய, Periscope தனியுரிமை அறிக்கையைப் பார்க்கவும், மேலும் Periscope பற்றிய கூடுதல் தகவலை அறிய, Periscope உதவி மையத்தைப் பார்க்கவும். குறிப்பிட்ட ஒரு Twitter கணக்கு இல்லாமல் அல்லது தொடர்புபடுத்தாமல் பயனர்கள் ஒரு Periscope கணக்கில் பதிவு செய்யலாம்.

Periscope பயனர்பெயரை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்த எங்கள் அறிவுறுத்தல்களைப் படிக்கவும்.

 

தரவு தக்கவைப்புத் தகவல்


Twitter

Twitter ஆனது வெவ்வேறு வகையான தகவலை வெவ்வேறு கால அளவுகளுக்கு, எங்கள் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றுக்கு இணங்கத் தக்கவைக்கிறது. குறித்த Twitter -இன் உண்மையான நிகழ் நேரத் தன்மை காரணமாக, சில தகவல் (எ.கா., IP பதிவுகள்) மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே சேமிக்கப்படும்.

நாங்கள் சேகரிக்கும் சில தகவல்கள் தானாகவே சேகரிக்கப்படுகின்றன, அதே சமயம் மற்ற தகவல்கள் பயனரின் விருப்பப்படி வழங்கப்படுகின்றன. இந்தத் தகவலை நாங்கள் சேமித்தாலும் கூட, அதன் துல்லியத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. எடுத்துக்காட்டாக, பயனர் ஒரு போலி அல்லது அநாமதேய சுயவிவரத்தை உருவாக்கியிருக்கலாம். Twitter -க்கு உண்மையான பெயர்ப் பயன்பாடு, மின்னஞ்சல் சரிபார்த்தல் அல்லது அடையாள அங்கீகாரம் போன்றவை தேவையில்லை. Twitter -இன் தக்கவைப்புக் கொள்கைகள் பற்றிய கூடுதல் தகவலை எங்கள் தனியுரிமைக் கொள்கையில் காணலாம்.

குறிப்பு: ஒரு கணக்கு செயலிழந்துவிட்டால், மிகக் குறுகிய காலத்திற்குள் மட்டுமே கீச்சுகள் உட்பட கணக்குத் தகவலை நாங்கள் அணுக முடியும். செயலிழக்கச்செய்யப்பட்ட கணக்குகள் பற்றிய கூடுதல் தகவல் இங்கு உள்ளன. கணக்கு வைத்திருப்பவர்கள் அகற்றிய உள்ளடக்கம் (எ.கா., கீச்சுகள்) பொதுவாகக் கிடைக்காது.
 

Periscope

Periscope ஆனது வெவ்வேறு வகையான தகவல்களை வெவ்வேறு காலங்களுக்குத் தக்கவைக்கிறது. ஒலிபரப்புகள் மற்றும் அலைபரப்புத் தகவல்கள் மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே சேமிக்கப்படும். ஒலிபரப்புகளின் கிடைக்கும்தன்மை பற்றிய தகவலை Periscope உதவி மையத்தில் காணலாம். எங்கள் தக்கவைப்புக் கொள்கைகள் பற்றிய கூடுதல் தகவலை Periscope -இன் தனியுரிமைக் கொள்கையில் காணலாம்.

 

தரவு கட்டுப்படுத்தி


அமெரிக்காவில் அல்லது ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய பொருளாதார பகுதிக்கு வெளியே வேறு எந்த நாட்டிலும் வாழும் பயனர்களுக்கான, தனிப்பட்ட தரவுகளுக்குப் பொறுப்பான தரவு கட்டுப்படுத்தி என்பது கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள Twitter, Inc. ஆகும். ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியில் வாழும் பயனர்களுக்கான, தரவு கட்டுப்படுத்தி என்பது அயர்லாந்து, டப்ளின்னில் அமைந்துள்ள Twitter International Unlimited Company ஆகும்.

 

பத்திரப்படுத்தல் கோரிக்கைகள்


சட்டப்படி பொருத்தமான இடத்தில், சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் தொடர்புடைய ஆதாரமாக இருக்கக்கூடிய பதிவுகளைப் பத்திரப்படுத்துவதற்காக சட்ட அமலாக்கத்திலிருந்து வரும் கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். செல்லுபடியாகும் சட்ட நடவடிக்கையின் நிலுவையில் உள்ள சேவைக்காக, தொடர்புடைய கணக்குப் பதிவுகளின் ஒரு தற்காலிக ஸ்னாப்ஷாட்டை 90 நாட்களுக்குப் பத்திரப்படுத்துவோம், ஆனால் வெளிப்படுத்த மாட்டோம். 

பொருந்தும் சட்டத்திற்கு இணங்க பாதுகாப்புக் கோரிக்கைகள்:

 • கோருகின்ற அதிகாரியால் கையொப்பமிடப்பட வேண்டும்;
 • செல்லுபடியாகும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியைக் கொண்டிருக்க வேண்டும்;
 • திருத்த முடியாத வடிவத்தில் சட்ட அமலாக்க லெட்டர்ஹெட்டில் அனுப்பப்பட வேண்டும்;
 • Twitter சுயவிவரத்தின் @username மற்றும் URL -ஐ சேர்க்கவும் (எ.கா.https://twitter.com/twittersafety (@twittersafety) மற்றும்/அல்லது Twitter கணக்கின் தனித்துவமான, பொதுப் பயனர் அடையாள எண் அல்லது UID அல்லது Periscope பயனர்பெயர் மற்றும் URL (எ.கா., @twittersafety மற்றும் https://periscope.tv/twittersafety). Twitter UID -ஐக் கண்டுபிடிக்க, இங்கே பார்க்கவும் அல்லது Periscope பயனர்பெயரைக் கண்டுபிடிக்க, இங்கே பார்க்கவும்.
   

பத்திரப்படுத்தலை நீட்டிப்பதற்கான கோரிக்கைகளுக்கு மதிப்பளிப்போம், ஆனால் கோரப்படும் தகவல் கிடைக்கும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதால், சட்டப்பூர்வ அமலாக்க முகவர் நிறுவனங்களை உரிய நேரத்தில் சரியான வழிகள் மூலம் பதிவுகளைக் கோருமாறு ஊக்குவிக்கிறோம்

நீங்கள் ஒரு பத்திரப்படுத்தல் நீட்டிப்பு கோரிக்கையை சமர்ப்பித்தால், போதுமான செயலாக்க நேரத்தை அனுமதிக்க, பத்திரப்படுத்தல் காலம் முடிவடைவதற்கு குறைந்தது ஒரு வாரம் (7 நாட்கள்) முன் சமர்ப்பிக்கப் பரிந்துரைக்கிறோம்.

பயனர் தகவலுக்கான சட்ட அமலாக்கம் மற்றும் அரசின் பத்திரப்படுத்தல் கோரிக்கைகளை எங்கள் சட்டக் கோரிக்கைச் சமர்ப்பிப்புகள் தளம் (t.co/lr அல்லது http://legalrequests.twitter.com) மூலம் சமர்ப்பிக்கலாம். பத்திரப்படுத்தல் நீட்டிப்புகளை ஒரு தனி கோரிக்கையாகச் சமர்ப்பிக்கவும். மேலும் அறிவுறுத்தல்களை, கீழே காணலாம்.

 

Twitter கணக்குத் தகவலுக்கான கோரிக்கைகள்


சட்ட அமலாக்கத்திலிருந்து பயனர் கணக்குத் தகவல்களுக்கான கோரிக்கைகளை, கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள Twitter, Inc. அல்லது அயர்லாந்து, டப்ளினில் உள்ள Twitter International Unlimited Company -க்கு அனுப்ப வேண்டும். பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க வழங்கப்பட்ட சரியான சட்ட நடைமுறைக்கு Twitter பதிலளிக்கிறது.

 

தனிப்பட்ட தகவலைப் பெற நீதிமன்ற அழைப்பாணை அல்லது நீதிமன்ற உத்தரவு தேவை

கீழே விவரித்தவாறு, நீதிமன்ற அழைப்பாணை, நீதிமன்ற உத்தரவு, பிற செல்லுபடியாகும் சட்ட நடைமுறை போன்ற பொருத்தமான சட்ட நடைமுறைக்கான பதிலாக அல்லது ஒரு செல்லுபடியாகும் அவசரநிலைக் கோரிக்கையின் பதிலாக அன்றி, Twitter பயனர்களைப் பற்றிய பொதுவற்ற தகவலானது சட்ட அமலாக்கத்திற்கு வெளியிடப்படாது.

 

தகவல்தொடர்பு உள்ளடக்கங்களைப் பெற, தேடல் கட்டளை தேவை

தகவல்தொடர்புகளின் உள்ளடக்கத்திற்கான (எ.கா., கீச்சுகள், நேரடிச்செய்திகள், புகைப்படங்கள்) கோரிக்கைகளுக்கு, Twitter மீது சரியான அதிகார வரம்பு கொண்ட ஓர் அமைப்பின் சரியான தேடல் உத்தரவுை அல்லது அதற்குச் சமமான ஒரு உத்தரவுை தேவை.

 

கணக்குத் தகவலுக்கான கோரிக்கைகள் பற்றி பயனர்களுக்கு Twitter தெரிவிக்குமா?

ஆம். வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய செயல்முறையின் நோக்கங்களுக்காக, Twitter -இன் கொள்கையானது, நாங்கள் அவ்வாறு செய்யத் தடை விதிக்கப்படாவிட்டால் (எ.கா., 18 U.S.C. § 2705(b) கீழ் ஒரு ஆர்டர்) பயனர்களுக்கு அவர்களின் Twitter அல்லது Periscope கணக்கு தகவலுக்கான கோரிக்கைகளை கோரிக்கையின் நகல் உட்பட அறிவிப்பதற்கானது (எ.கா. கணக்குத் தகவலை வெளிப்படுத்துவதற்கு முன்). எந்தவொரு வெளிப்படையான வழங்கல்களும் ஒரு குறிப்பிட்ட கால அளவை (எ.கா., 90 நாட்கள்) உள்ளடக்குகின்றன என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், இக்காலத்தில் பயனருக்கு அறிவிப்பதில் இருந்து Twitter தடைசெய்யப்படும். எங்கள் பயனர் அறிவிப்பு கொள்கைக்கான விதிவிலக்குகளில், உயிருக்கு உடனடி அச்சுறுத்தல், குழந்தைசார் பாலியல் துஷ்பிரயோகம் அல்லது பயங்கரவாதம் போன்றவை தொடர்பான அவசரநிலைகள் போன்ற வெளிப்படையான அல்லது எதிர்மறையான சூழ்நிலைகள் அடங்கலாம்.

 

கணக்குத் தகவல் கோரிக்கைகளில் என்னென்ன விவரங்களை உள்ளடக்க வேண்டும்?

பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க பயனர் கணக்குத் தகவலுக்கான கோரிக்கைகளில் கீழ்க்கண்ட தகவல் உள்ளடக்கப்பட வேண்டும்:

 • கோரப்படும் Twitter கணக்கின் @பயனர்பெயர் மற்றும் URL (எ.கா.https://twitter.com/twittersafety (@twittersafety) அல்லது Twitter கணக்கின் தனித்துவமான, பொதுப் பயனர் அடையாள எண் அல்லது UID ஆகியவற்றை உள்ளடக்க வேண்டும்.
 • மற்றும்/அல்லது செல்லுபடியாகும் Periscope பயனர்பெயர் மற்றும் URL (எ.கா., @twittersafety மற்றும் https://periscope.tv/twittersafety) -ஐ உள்ளடக்கவும். Periscope பயனர்பெயரைக் கண்டறிதல் பற்றிய அறிவுறுத்தல்களை இங்கே கண்டறியவும்;
 • என்ன குறிப்பிட்ட தகவல் கோரப்படுகிறது (எ.கா., அடிப்படை சந்தாதாரர் தகவல்) என்பதையும் உங்கள் விசாரணையுடன் அதற்கான தொடர்பையும் பற்றிய விவரங்களை வழங்கவும்;
  • குறிப்பு: நீங்கள் தேடும் தகவல் பொதுவில் கிடைக்காது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் (எ.கா. பாதுகாக்கப்படாத கீச்சுகள்). அதிகமான பரந்த அல்லது தெளிவற்ற கோரிக்கைகளை எங்களால் செயல்படுத்த முடியவில்லை.
 • ஒரு சரியான அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியை (எ.கா., name@agency.gov) வழங்குங்கள், அதனால் உங்கள் சட்டச் செயல்முறை கிடைத்ததும் உங்களை நாங்கள் தொடர்புகொள்ளக் கூடும்;
 • சட்ட அமலாக்க முகவரி அச்சிடப்பட்ட அஞ்சல் தாளில் வழங்கப்பட வேண்டும்.
   

பயனர் தகவலுக்கான சட்ட அமலாக்கம் மற்றும் அரசின் கோரிக்கைகளை எங்கள் சட்டக் கோரிக்கைச் சமர்ப்பிப்புகள் தளம் (https://t.co/lr அல்லது https://legalrequests.twitter.com) மூலம் சமர்ப்பிக்கலாம். மேலும் அறிவுறுத்தல்களை, கீழே காணலாம்.

 

பதிவுகளின் உருவாக்கம்

வேறுவிதமாக ஒப்புக் கொள்ளாவிட்டால், மின்னணு வடிவத்தில் பதில் பதிவுகளை (அதாவது, Word அல்லது TextEdit போன்ற ஏதேனும் சொல் செயலாக்க மென்பொருளிலும் திறக்கக்கூடிய உரைக் கோப்புகள்) வழங்குவோம்.

 

பதிவுகளுக்கான அங்கீகாரம்

நாங்கள் தயாரிக்கும் பதிவுகள், உற்பத்தி நேரத்தில் பதிவுகளின் நேர்மையை உறுதிப்படுத்தை மின்னணு முறையில் கையொப்பமிடப்படுகின்றன. உங்களுக்கு ஒரு பிரகடனம் தேவைப்பட்டால், அதை உங்கள் சமர்ப்பிப்பில் குறிப்பிடவும்.

 

செலவைத் திரும்பப் பெறுதல்

சட்ட நடைமுறைக்கு ஏற்பவும் சட்டத்தால் அனுமதிக்கப்பட்டவாறும் (எ.கா.18 U.S.C. §2706 -இன் கீழ்) உருவாக்கப்படும் தகவலுடன் தொடர்பான செலவுகளுக்காக Twitter பணத்தைத் திரும்பப் பெறக் கோரலாம்.

 

அவசரகால வெளிப்படுத்தல் கோரிக்கைகள்


எங்கள் தனியுரிமைக் கொள்கைக்கு இணங்க, செல்லுபடியாகும் அவசரகால வெளிப்படுத்தல் கோரிக்கைகளுக்கான பதிலாக, நாங்கள் சட்ட அமலாக்கத்திற்கு கணக்குத் தகவலை வெளிப்படுத்தலாம்.

அவசரநிலை வெளிப்படுத்தல் கோரிக்கைகளை பொருத்தமான சட்டத்திற்கு இணங்க, அந்தந்த வழக்கின் அடிப்படையில் Twitter மதிப்பிடுகிறது. ஒருவருக்கு இறக்கும் ஆபத்து அல்லது கடுமையான உடல் காயம் சம்பந்தப்பட்ட வெளிப்படையான அவசரநிலை உள்ளது என்பதை நம்பும் வகையில் எங்களுக்குத் தகவல் கிடைத்தால், அந்தத் தீங்கைத் தடுப்பதற்குத் தேவையான தகவல்கள் எங்களிடம் இருந்தால், நாங்கள் அதை வழங்கலாம்.

 

அவசரகால வெளிப்படுத்தல் கோரிக்கையை எவ்வாறு உருவாக்குவது

Twitter ஆனது தடுக்க வேண்டிய அவசியமுள்ள தகவலைக் கொண்டிருக்கக் கூடிய ஒருவருக்கு இறக்கும் ஆபத்து அல்லது கடுமையான உடல் காயம் சம்பந்தப்படுகின்ற வெளிப்படையான அவசரநிலை இருந்தால், சட்ட அமலாக்க அதிகாரிகள் எங்கள் சட்டக் கோரிக்கைச் சமர்ப்பிப்புகள் தளம் (மிகவும் விரைவான, மிகவும் திறன்மிக்க முறை) வழியாக அவசரகால வெளிப்படுத்தல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.
 

பின்வரும் தகவல் அனைத்தையும் சேர்க்கவும்:

 • நீங்கள் அவசரகால வெளிப்படுத்தல் கோரிக்கையைச் சமர்ப்பிக்கிறீர்கள் என, உங்கள் மேல் தாளில் உள்ள (இது சட்ட அமலாக்க முகவரி அச்சிடப்பட்ட அஞ்சல் தாளாக இருக்க வேண்டும்) குறிப்பீடு;
 • மரண ஆபத்து அல்லது கடுமையான உடல் காயம் உள்ள நபரின் அடையாளம்;
 • அவசரத்தின் தன்மை (எ.கா., தற்கொலை, பயங்கரவாதத் தாக்குதல், வெடிகுண்டு அச்சுறுத்தல் பகார்);
 • அவசரநிலையைத் தடுக்க அவசியமான பேசப்படும் கணக்கு(களின்) Twitter @பயனர்பெயர் மற்றும் URL (எ.கா., https://twitter.com/TwitterSafety (@twittersafety);
 • நாங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டுமென நீங்கள் விரும்பும் ஏதேனும் குறிப்பிட்ட கீச்சுகள்;
 • கோரப்படும் குறிப்பிட்ட தகவல் மற்றும் அவசரநிலையைத் தடுக்க அந்தத் தகவல் ஏன் தேவைப்படுகிறது;
 • சமர்ப்பிக்கும் சட்ட அமலாக்க அலுவலரின் கையொப்பம்; மற்றும்
 • குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பற்றி கிடைக்கின்ற பிற விவரங்கள் அல்லது சூழல்.
 

பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தங்கள்


செயல்முறையின் முறையான சேவை அடிப்படையில் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் ("MLAT") அல்லது வேண்டுகோள் கடிதங்கள் மூலம் முறையாக வழங்கப்படும் கோரிக்கைகளுக்கு உடனடியாகப் பதிலளிப்பதே Twitter -இன் கொள்கை. MLAT செயல்முறை மூலம் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும் போது, அந்தக் கோரிக்கையானது MLAT வழி மூலம் வருவதாகவும், தோன்றுகின்ற நாட்டின் பெயரைக் குறிப்பிடுவதையும் தெளிவுபடுத்தவும்.

 

உள்ளடக்கம் அகற்றல் கோரிக்கைகள்


சேவை விதிமுறைகள் மதிப்பாய்வை எவ்வாறு கோருவது

நீங்கள் ஒரு சட்ட அமலாக்க முகவர் அல்லது அரச அதிகாரியாக இருந்து, உள்ளூர் சட்டத்தை(களை) மீறுவதற்காக Twitter -இல் இருந்து சட்டவிரோதமாக இருக்கக்கூடிய உள்ளடக்கத்தை அகற்ற விரும்பினால், முதலில் Twitter விதிகளை மதிப்பாய்வு செய்யவும், பொருந்தினால், எங்கள் சேவை விதிமுறைகளை மீறும் சாத்தியத்திற்காக உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்யுமாறான ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். Twitter விதிகள் மற்றும் சேவை விதிமுறைகளின் சாத்தியமான விதிமீறல்களைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது என்பது குறித்த ஒரு மேலோட்டப் பார்வை இங்கே உள்ளது. எங்கள் சேவை விதிமுறைகளின் சாத்தியமான மீறல்களைப் புகாரளித்தல், உங்கள் கோரிக்கை சரியான குழுவுக்கு அனுப்பப்பட்டு, துரிதமாகச் செயலாக்கப்படுவதை உறுதிசெய்யும். Twitter வெளிப்படைத்தன்மை அறிக்கையில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இந்தத் தரவை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.
 

உள்ளடக்கத்தைத் தடுக்க சட்டப்பூர்வ கோரிக்கையை எவ்வாறு சமர்ப்பிப்பது

எங்கள் சேவை விதிமுறைகளின் சாத்தியமான விதிமீறல்களுக்காக உள்ளடக்கம் மதிப்பாய்வு செய்யப்படுவதற்கான கோரிக்கையை நீங்கள் ஏற்கனவே சமர்ப்பித்திருந்து, அந்தப் புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கம் தற்போது சேவை விதிமுறைகளை மீறவில்லை என்று குறிப்பிட்டு Twitter -இடமிருந்து பதில் கிடைத்திருந்தால், நீங்கள் எங்கள் சட்டக் கோரிக்கைச் சமர்ப்பிப்புகள் தளத்தின் வழியாக தடுக்கப்பட வேண்டிய உள்ளடக்கத்திற்காக சரியான மற்றும் முறையாக நோக்கிட்ட ஒரு சட்டக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். உள்ளூர் சட்டம்(கள்) அடிப்படையில் உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு இதுவே மிகவும் விரைவான மற்றும் மிகவும் திறமையான முறையாகும். எங்கள் சேவை விதிமுறைகளின் சாத்தியமான மீறல்களின் மதிப்பாய்வுக்காக நீங்கள் முதலில் புகாரளிக்கவில்லை என்றால், உள்ளடக்கத்தை நிறுத்துவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டாம்.

சிக்கலில் உள்ள குறிப்பிட்ட கீச்சு(கள்) அல்லது கணக்கு(களை) அடையாளம் காட்டுவதுடன், புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கத்தால் மீறப்பட்டதாகக் கருதப்படும் உள்ளூர் சட்டங்(களை) அடையாளப்படுத்தவும். உங்களிடம் நீதிமன்ற உத்தரவு அல்லது தொடர்புடைய பிற சட்ட ஆவணம் இருந்தால், உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் போது அதன் ஒரு நகலை இணைக்கவும் ("கோப்பு இணைப்புகள்" பிரிவைப் பார்க்கவும்). சட்ட ஆவணங்கள் ஆங்கிலத்தில் இல்லையென்றால், அவற்றின் மொழிபெயர்ப்புகள் உட்பட, வேறு ஏதாவது உதவிகரமான சூழலையும் வழங்கவும், இது உங்கள் கோரிக்கையை மதிப்பாய்வு செய்ய உதவும். தேவைப்பட்டால் பொருத்தமான குழு உங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில், எங்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க அல்லது சட்ட அமலாக்க மின்னஞ்சல் முகவரியும் (எ.கா. name@agency.gov) தேவை. உங்கள் கோரிக்கையை விரைவில் செயல்படுத்துவோம், ஆனால் நகல்களை அனுப்புவது உங்கள் கோரிக்கை(களை) திறம்படச் செயலாக்குவதற்கான எங்கள் திறனைத் தாமதப்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்க.

நாங்கள் அவ்வாறு செய்வதிலிருந்து சட்டப்படி தடை செய்யப்படாவிட்டால், அசல் கோரிக்கையின் நகல் உட்பட, உள்ளடக்கத்தைத் தடுப்பதற்கான சட்டப்பூர்வக் கோரிக்கைகளைப் பற்றி பாதிக்கக்கூடிய பயனர்களுக்குத் தெரிவிப்பது தடைசெய்யப்படாவிட்டால், Twitter உடனடியாக அறிவிக்கும். பயனருக்குத் தெரிவிப்பதில் இருந்து Twitter தடைசெய்யப்பட்டிருப்பதாக நீங்கள் நம்பினால், பொருந்தும் சட்டத்திற்கான மேற்கோள் (பொருந்தும் இடங்களில்) உட்பட உங்கள் கோரிக்கையில் ஒரு காரணத்தைக் கூறவும் மற்றும்/அல்லது "கோப்பு இணைப்புகள்" என்ற பிரிவில் இந்த தடைக்கு ஆதரவளிக்கும் ஏதேனும் ஆவணங்கள் இருந்தால் அவற்றையும் பதிவேற்றவும்.

அரசு மற்றும் சட்ட அமலாக்க அறிக்கையளிப்பவர்களும் கீழே பட்டியலிட்டுள்ள தொடர்புத் தகவலுக்கு உங்கள் கோரிக்கையின் காகித நகலை அஞ்சல் அனுப்புவதன் மூலமும், அவர்களது சட்ட அதிகாரத்தில் சட்டவிரோதமானதெனத் தீர்மானிக்கப்பட்ட உள்ளடக்கத்தின் தடையைக் கோரலாம். நீங்கள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியில் இருந்தால், அயர்லாந்தில் உள்ள Twitter International Unlimited Company -க்கு உங்கள் கோரிக்கையை அனுப்பவும் (கீழே உள்ள "தொடர்புத் தகவல்" என்ற பிரிவைப் பார்க்கவும்). அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் நீண்ட பதில் நேரங்களை எதிர்பார்க்க வேண்டும். 

எங்களின் 'நாடு மூலம் நிறுத்தி வைக்கப்பட்ட உள்ளடக்கம்' கொள்கையைப் பற்றிய கூடுதல் தகவலை இங்கே கண்டறியவும்.

 

Twitter பயனருக்கு உதவுதல்


பதிவுசெய்யப்பட்ட Twitter பயனர்கள் தங்கள் Twitter கணக்கில் இடுகையிடப்பட்ட கீச்சுகள் உட்பட அவர்களின் சொந்த கணக்கு தகவலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு பயனர் அந்தத் தகவலைக் கோருவது எவ்வாறு என்பதற்கான வழிமுறைகள் எங்கள் உதவி மையத்தில் உள்ளன.

எங்கள் உதவி மையத்தில் விளக்கப்பட்டவாறு, IP பதிவுகளையும் பிற தரவுகளையும் பயனர்கள் நேரடியாக அவர்களது Twitter கணக்கு மூலம் பெறலாம். ஒரு Twitter பயனர் அவர் தேடும் தரவை சுயமாகப் பதிவிறக்குவதில் தோல்வியுற்றால், எங்களின் தனியுரிமை படிவம் வழியாக Twitter -க்கு ஒரு கோரிக்கையை அனுப்புமாறு பயனரை வழிநடத்துங்கள்.
 

பிற சிக்கல்கள்

பெரும்பாலான சிக்கல்களை, Twitter கணக்கு வைத்திருப்பவர்கள் எங்களின் உதவி மையம் மூலம் நேரடியாக எங்களுக்கு விசாரணைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் தீர்க்க முடியும். விதிமீறல்களை எவ்வாறு புகாரளிப்பது என்பது பற்றிய கூடுதல் தகவல் இங்கே உள்ளது.
 

பொதுவான விசாரணைகள்

சட்ட அமலாக்கம் அல்லது அரச அதிகாரிகளிடமிருந்து பொதுவான விசாரணைகளை (பயனர் தரவை அல்லது உள்ளடக்கத்தை அகற்றக் கோருதல் அல்ல) இணையப் படிவம் வழியாகச் சமர்ப்பிக்கலாம்.

 

கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும் இடம்


பத்திரப்படுத்தல்கள் உட்பட அனைத்துச் சட்டக் கோரிக்கைகள், கணக்குத் தகவலுக்கான கோரிக்கைகள் (வழக்கமான மற்றும் அவசரநிலை) மற்றும் உள்ளடக்கம் அகற்றல் கோரிக்கைகள் ஆகியவற்றைப் பின்வரும் Twitter -இன் சட்டரீதியான கோரிக்கை சமர்ப்பிப்புகள் தளம் மூலம் சமர்ப்பிக்கலாம்: t.co/lr அல்லது legalrequests.twitter.com.

எங்கள் சட்டக் கோரிக்கை சமர்ப்பிப்புகள் தளத்தில் உங்களுக்குச் சிக்கல்கள் இருந்தால், கோரிக்கை வகைக்கு “பிற விசாரணைகள்” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எங்கள் இணையப் படிவம் வழியாக உதவியை நீங்கள் கேட்கலாம்.  

இந்த வழிமுறை மூலம் தொடர்பைப் பெறுதல் என்பது வசதிக்காக மட்டுமே, அதிகார வரம்பு அல்லது முறையான சேவை இல்லாமை உட்பட எந்த ஆட்சேபனையையும் தள்ளுபடி செய்யாது.

சட்ட அமலாக்கம் அல்லாத கோரிக்கைகளை எங்கள் உதவி மையம் வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

 

தொடர்புத் தகவல்


எங்கள் முகவரி விவரங்கள்:

Twitter, Inc.
c/o Trust & Safety - Legal Policy
1355 Market Street, Suite 900
San Francisco, CA 94103

Twitter International Unlimited Company
c/o Trust & Safety - Legal Policy
One Cumberland Place
Fenian Street
Dublin 2
D02 AX07
Ireland

எந்தவொரு வகையிலும் கடிதத்தைப் பெறுதல் என்பது வசதிக்காக மட்டுமே, அதிகார வரம்பு அல்லது முறையான சேவை இல்லாமை உள்ளிட்ட எந்த ஆட்சேபனையும் தள்ளுபடி செய்யாது. சட்டக் கோரிக்கை சமர்ப்பிப்புகள் தளத்தின் மூலம் சட்டக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்காத அரசு நிறுவனங்கள் நீண்ட பதில் நேரங்களை எதிர்பார்க்க வேண்டும்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க