நையாண்டி, செய்திஊட்டம், வர்ணனை மற்றும் ரசிகர் கணக்குக் கொள்கை

எங்கள் கோட்பாடுகள்
 

Twitter தனது பயனர்கள் பலவிதமான ஐடியாக்கள் மற்றும் உள்ளடக்கங்களை பகிரவும் பெறவும் ஒரு தளத்தை வழங்குகிறது, எங்கள் பயனர்களின் கருத்துச் சுதந்திரத்தை பெரிதும் மதிக்கிறோம், அதற்கு மதிப்பளிக்கிறோம். எங்கள் பயனர்கள் பதிவிடும் உள்ளடக்கத்திற்கு அவர்களே முழுப் பொறுப்பு, அவர்களுக்குள் ஏற்படும் சச்சரவுகளை அவர்களே தீர்ப்பதுதான் எளிதானது. இந்தக் கொள்கைகளால், உள்ளடக்கங்களை நாங்கள் தொடர்ச்சியாக கண்காணிப்பதில்லை, சேவை விதிமுறைகள் விதிமீறல் அல்லது செல்லுபடியாகும் சட்டப்பூர்வச் செயலாக்கத்திற்கு பதிலளிப்பதற்கு தவிர வேறெந்தச் சந்தர்ப்பத்திலும் பயனர் உள்ளடக்கத்தைத் திருத்தவோ அகற்றவோ மாட்டோம்.

பயனர்கள் Twitter -இல் நையாண்டி, செய்திஊட்டம், வர்ணனை மற்றும் ரசிகர் கணக்குகளை உருவாக்க அனுமதிக்கப்படுவார்கள், அதற்கு அந்தக் கணக்குகள் கீழ்வரும் தேவைகளைப் பின்பற்ற வேண்டும்.
 

நையாண்டி, செய்திஊட்டம், வர்ணனை மற்றும் ரசிகர் கணக்குகளுக்கான தேவைகள்
 

இவை உங்கள் கணக்குகளைக் குறிப்பதற்கான தேவைகள். கொள்கையுடன் இணங்கும் வகையில் அனைத்துத் தேவைகளும் பூர்த்திசெய்யப்பட வேண்டும்.

  • சுயகுறிப்பு: கணக்கின் பொருளுடன் பயனர் தொடர்புடையவர் இல்லை என்பதைச் சுயகுறிப்பு தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தொடர்பில்லை என்பதை “நையாண்டி”, “போலி”, “ரசிகர்” அல்லது “வர்ணனை” போன்ற (இவற்றுடன் மட்டும் வரம்பிடப்படாத) வார்த்தைகள் மூலம் சுட்டிக்காட்டலாம். தொடர்பில்லை என்பதை இலக்குப் பார்வையாளர்களால் புரிந்துகொள்ளும் வகையில் குறிப்பிட வேண்டும்.
  • கணக்குப் பெயர்: கணக்கின் பொருளுடன் பயனர் தொடர்புடையவர் இல்லை என்பதை கணக்குப் பெயர் (குறிப்பு: இது பயனர்பெயர் அல்லது @ஹேண்டில் -இலிருந்து மாறுபட்டது) தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தொடர்பில்லை என்பதை “நையாண்டி”, “போலி”, “ரசிகர்” அல்லது “வர்ணனை” போன்ற (இவற்றுடன் மட்டும் வரம்பிடப்படாத) வார்த்தைகள் மூலம் சுட்டிக்காட்டலாம். தொடர்பில்லை என்பதை இலக்குப் பார்வையாளர்களால் புரிந்துகொள்ளும் வகையில் குறிப்பிட வேண்டும்.

உங்கள் கணக்கு இந்தத் தேவைகளுடன் கூடுதலாக Twitter விதிகள் மற்றும் சேவை விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்க வேண்டும் என்பதைக் குறித்துக்கொள்ளவும்.
 

இந்தக் கொள்கையின் கீழ் கணக்குகளை Twitter எப்போது மதிப்பாய்வு செய்யும்?
 

ஆள் மாறாட்டம் அல்லது வணிகமுத்திரை புகாருக்கு பதிலளிப்பதற்காக எங்கள் கொள்கையின் கீழ் ஒரு கணக்கை மதிப்பாய்வு செய்வோம்.
 

வணிகமுத்திரை அல்லது ஆள் மாறாட்டம் பற்றிய புகாரை எவ்வாறு பதிவுசெய்வது?
 

வணிகமுத்திரை கொள்கை விதிமீறலைப் பற்றிய புகார்களை இங்கே சமர்ப்பிக்கலாம், ஒரு கணக்கு ஆள் மாறாட்டம் செய்வதைப் பற்றிய புகாரை இங்கே சமர்ப்பிக்கலாம். ஆள் மாறாட்டம் குறித்த புகாரைப் பதிவுசெய்வதைப் பற்றிய மேலும் தகவல்களைப் படிக்க, இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

இந்தப் படிவத்தில் கோரப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் வழங்கவும். முழுமையற்ற தகவல்களுடன் புகாரைச் சமர்ப்பித்தால், அந்தத் தகவலைக் கோருவதற்காக உங்களுக்குச் செய்தி அனுப்புவோம். இது உங்கள் புகாரைச் செயலாக்குவதில் தாமதத்தை ஏற்படுத்தும் என்பதைக் குறித்துகொள்ளவும்.

இந்தப் படிவத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருந்தால், உங்கள் உலாவியைப் புதுப்பிக்கவும் அல்லது வேறொரு உலாவிக்கு மாறவும்.

Twitter -இல் முறைகேடான நடத்தை குறித்து நீங்கள் புகாரளித்தால், அதைப் பற்றி எப்படிப் புகாரளிப்பது என்பதை அறிய இந்தக் கட்டுரையைப் பார்க்கவும்.
 

நையாண்டி, செய்திஊட்டம், வர்ணனை மற்றும் ரசிகர் கணக்குகள் தொடர்பான புகார்களுக்கு Twitter எப்படி பதிலளிக்கும்?
 

எங்கள் கொள்கையுடன் இணங்காத ஒரு கணக்கைப் பற்றி எங்களுக்கு ஒரு செல்லுபடியாகும் ஆள் மாறாட்டம் அல்லது வணிகமுத்திரை தொடர்புடைய புகார் வந்தால், கணக்கின் உரிமையாளர் அவரது கணக்கை எங்கள் கொள்கைக்கு இணக்கமாக்குவதற்கான வாய்ப்பை வழங்கி, அந்தக் கணக்கை நாங்கள் இடைநீக்கம் செய்யக்கூடும். தொடர்ச்சியான விதிமீறல்களைச் செய்யும் கணக்குகள் நிரந்தரமாக இடைநீக்கம் செய்யப்படக்கூடும்.

எங்கள் கொள்கைக்கு இணக்கமான கணக்கு, எங்கள் வணிகமுத்திரை அல்லது ஆள் மாறாட்டம் பற்றிய கொள்கைகளை மீறக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ளவும்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க