வெறுக்கத்தக்க நடத்தைக் கொள்கை

வெறுக்கத்தக்க நடத்தை: இனம், குலம், தேசிய பூர்வீகம், சாதி, பாலியல் நோக்குநிலை, பாலினம், பாலின அடையாளம், மத இணைப்பு, வயது, இயலாமை அல்லது தீவிர நோய் ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் மற்றவர்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கவோ அல்லது நேரடியாகத் தாக்கவோ அல்லது அச்சுறுத்தவோ கூடாது. இந்த வகைகளின் அடிப்படையில் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்ட கணக்குகளையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

வெறுக்கத்தக்கப் படங்கள் மற்றும் காட்சிப் பெயர்கள்: உங்கள் சுயவிவரப் படத்தில் அல்லது சுயவிவரத் தலைப்பில் வெறுக்கத்தக்க படங்கள் அல்லது அடையாளங்களை நீங்கள் பயன்படுத்த முடியாது. ஒரு நபர், குழு அல்லது பாதுகாக்கப்பட்ட பிரிவை நோக்கிய இலக்கிடப்பட்ட துன்புறுத்தல் அல்லது வெறுப்பை வெளிப்படுத்துதல் போன்ற முறைகேடான நடத்தையில் ஈடுபடுத்த உங்கள் பயனர்பெயர், காட்சிப் பெயர் அல்லது சுயவிவரச் சுயகுறிப்பையும் நீங்கள் பயன்படுத்தக்கூடாது. 
 

நோக்கம்
 

யோசனைகளையும் தகவலையும் உருவாக்க மற்றும் பகிர்ந்து கொள்ள, மேலும் தடையின்றி தங்களின் கருத்துகளையும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்த அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதே Twitter-இன் நோக்கமாகும். சுதந்திரமாக வெளிப்படுத்துதல் என்பது மனித உரிமையாகும் – அனைவருக்கும் கருத்து உள்ளது, மேலும் அதைப் வெளிப்படுத்துவதற்கான உரிமை உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். எங்களது பங்கு பொது உரையாடலுக்குச் சேவை செய்வதாகும், இதற்கு மாறுபட்ட கண்ணோட்டங்களின் பிரதிநிதித்துவம் தேவைப்படுகிறது. 

Twitter -இல் பயனர்கள் துஷ்பிரயோகத்தை அனுபவித்தால், அது தங்களை வெளிப்படுத்தும் திறனைப் பாதிக்கலாம் என்பதை நாங்கள் அறிகிறோம். ஆன்லைனில் துஷ்பிரயோகம் செய்வதில் சில குழுக்கள் விகிதாச்சாரமாக இலக்காக்கப்படுகின்றனர் என்று ஆராய்ச்சியானது காட்டுகிறது. இதில் அடங்குபவை; பெண்கள், கருப்பின மக்கள், லெஸ்பியன், ஓரினச் சேர்க்கையாளர், இருபாலினத்தவர், திருநங்கைகள், வினோதமானவர்கள், இடைப்பட்ட பாலினத்தவர், பால்வேறுபாடற்ற தனிநபர்கள், ஒதுக்கப்பட்ட மற்றும் வரலாற்று ரீதியாகக் குறைவாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட சமூகங்கள். பல குறைவான பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட குழுக்களுடன் அடையாளம் காண்பவர்களுக்கு, துஷ்பிரயோகம் என்பது மிகவும் பொதுவானதாக, இயற்கையில் மிகவும் கடுமையானதாக மற்றும் அதிகத் தீங்கு விளைவிப்பதாக இருக்கலாம்.

வெறுப்பு, பாரபட்சம் அல்லது சகிப்பின்மை ஆகியவற்றால் தூண்டப்படுகின்ற துஷ்பிரயோகத்தை, குறிப்பாக வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களின் குரல்களை அடக்க முற்படும் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தக் காரணத்திற்காக, தனிநபர்களை அல்லது குழுக்களை ஒரு பாதுகாக்கப்பட்ட பிரிவில் அவர்களின் உணரப்பட்ட உறுப்புரிமையின் அடிப்படையில் துஷ்பிரயோகத்திற்கு இலக்காக்கும் நடத்தையை நாங்கள் தடைசெய்கிறோம்.  

எங்களின் வெறுக்கத்தக்க நடத்தை கொள்கையை மீறுவதாக நீங்கள் நம்பும் ஏதாவது ஒன்றை Twitter -இல் பார்த்தால், அதை எங்களுக்குப் புகாரளியுங்கள்.

 

இது பொருந்தும் சமயங்கள் 
 

கீச்சுகள் அல்லது நேரடிச்செய்திகளில் பின்வரும் எந்தவொரு நடத்தையையும் கொண்டு ஒரு தனிநபரை அல்லது குழுவை இலக்காக்கும் கணக்குகளுக்கு எதிரான புகார்களை மதிப்பாய்வு செய்து நடவடிக்கை எடுப்போம். 
 

வன்முறை அச்சுறுத்தல்கள்

அடையாளம் காணக்கூடிய இலக்குக்கு எதிராக வன்முறை அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் உள்ளடக்கத்தை நாங்கள் தடைசெய்கிறோம். வன்முறை அச்சுறுத்தல்கள் என்பவை கடுமையான மற்றும் நீடித்த உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் காயங்களை ஏற்படுத்தும் நோக்கத்தின் அறிவிப்பு அறிக்கைகளாகும், அதில் ஒரு நபர் இறக்கலாம் அல்லது கணிசமாகக் காயமடையக்கூடும், எ.கா., “நான் உன்னைக் கொன்றுவிடுவேன்.”

குறிப்பு: வன்முறை அச்சுறுத்தல்களுக்கு எதிராக முழுமையான சகிப்புத்தன்மையற்ற கொள்கை எங்களிடம் உள்ளது. வன்முறை அச்சுறுத்தல்களைப் பகிர்வதாகக் கருதப்படுபவர்கள் தங்கள் கணக்கின் உடனடியான மற்றும் நிரந்தரமான இடைநீக்கத்தை எதிர்கொள்வார்கள். 
 

ஒரு நபருக்கு அல்லது குழுவிற்கு கடுமையான தீங்கை விளைவிக்க விரும்புவது, நம்புவது அல்லது அழைப்பது

ஓர் ஒட்டுமொத்த பாதுகாக்கப்பட்ட பிரிவுக்கு மற்றும்/அல்லது அந்தப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்களாக இருக்கக்கூடிய தனிநபர்களுக்கு எதிராக மரணத்திற்கான, கடுமையான உடல் ரீதியான தீங்குக்கான, கடுமையான நோயிக்கான ஆசையை விரும்புகின்ற, நம்புகின்ற, ஊக்குவிக்கின்ற, தூண்டுகின்ற அல்லது வெளிப்படுத்துகின்ற உள்ளடக்கத்தை நாங்கள் தடைசெய்கிறோம். இதில் பின்வருபவை அடங்கும், ஆனால் இவை மட்டுமல்ல: 

 • ஓர் ஒட்டுமொத்த பாதுகாக்கப்பட்ட பிரிவும் மற்றும்/அல்லது அந்தப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்களாக இருக்கக்கூடிய தனிநபர்களும் கடுமையான நோயின் காரணமாக இறந்துவிடுவார்கள் என நம்புவது, எ.கா., “அனைத்து [தேசியத்தை] சேர்ந்தவர்களும் COVID வந்து இறந்துவிடுவார்கள் என நம்புகிறேன்.”
 • யாரோ ஒருவர் கடுமையான விபத்தில் பாதிக்கப்பட வேண்டும் என விரும்புவது எ.கா., “அடுத்த முறை நீங்கள் பேசும்போது உங்கள் மீது ஒரு கார் ஏற வேண்டும் என விரும்புகிறேன்.”
 • தனிநபர்களின் குழு ஒன்று கடுமையான உடல் ரீதியான காயத்திற்குத் தகுதியானது எனக் கூறுவது எ.கா., “இந்த [குழப்பவாதி] குழு வாயை மூடிக்கொள்ளாவிட்டால், இவர்கள் சுடப்படுவதற்குத் தகுதியானவர்கள்.”
 • ஒரு தனிநபர் அல்லது குழு ஒரு பாதுகாக்கப்பட்ட பிரிவில் உணரப்பட்ட உறுப்புரினராக இருப்பதன் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக வன்முறையைச் செய்ய மற்றவர்களை ஊக்குவித்தல், எ.கா., “நான்’ [இனக் குழப்பவாதியை] குத்துவதற்கான மனநிலையில் இருக்கிறேன், என்னுடன் யார் வருகிறீர்கள்?
   

வெகுஜன கொலை, வன்முறை நிகழ்வுகள் அல்லது பாதுகாக்கப்பட்ட குழுக்கள் ஆனவை முதன்மை இலக்குகளாக அல்லது பாதிக்கப்பட்டவர்களாக இருந்த குறிப்பிட்ட வன்முறை வழிவகைகள் பற்றிய குறிப்புகள்

துன்புறுத்தலை நோக்கமாகக் கொண்டு, பாதுகாக்கப்பட்ட பிரிவை முதன்மை இலக்காக அல்லது பாதிக்கப்பட்டவர்களாகக் கொண்ட வன்முறை அல்லது வன்முறை நிகழ்வுகளைக் குறிப்பிடும் உள்ளடக்கத்துடன் தனிநபர்களை அல்லது குழுக்களை இலக்காக்குவதை நாங்கள் தடைசெய்கிறோம். பின்வருவனவற்றைக் குறிக்கும் அல்லது சித்தரிக்கும் மீடியா அல்லது உரை ஆகியவை இதில் அடங்கும் ஆனால் இவை மட்டுமல்ல:

 • இனப்படுகொலைகள் (எ.கா., பெரும் இன அழிப்பு);
 • ஒரு குழுவால் ஏற்பட்ட கொலைகள்.
   

பாதுகாக்கப்பட்ட பிரிவுக்கு எதிரான தூண்டுதல்
 

பாதுகாக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த தனிநபர்களை அல்லது குழுக்களைக் இலக்காக்கும் நடத்தையைத் தூண்டுவதை நாங்கள் தடைசெய்கிறோம். பின்வரும் நோக்கம் கொண்ட உள்ளடக்கம் இதில் அடங்கும்:

 • பாதுகாக்கப்பட்ட பிரிவைப் பற்றி அச்சத்தைத் தூண்டுவது அல்லது பயமுறுத்தும் ஒரே மாதிரியான விஷங்களைப் பரப்புவது, இதில், பாதுகாக்கப்பட்ட பிரிவில் உள்ள உறுப்பினர்கள் ஆபத்தான அல்லது சட்டவிரோத செயல்களில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறுவது உட்படவை அடங்கும், எ.கா., “அனைத்து [மதக் குழுவும்] பயங்கரவாதிகள்.”
 • தளத்தின் உள்ளே அல்லது வெளியே ஒரு பாதுகாக்கப்பட்ட பிரிவின் உறுப்பினர்களைத் துன்புறுத்துவதற்கு மற்றவர்களைத் தூண்டுவது, எ.கா., “இந்த [மதக் குழு] நம்மை விடச் சிறந்தவர்கள் என்று நினைத்து எனக்கு உடம்பு சரியில்லை, உங்களில் யாராவது [மதக் குழுவின் மதச் சின்னத்தை] அணிந்திருப்பவர்களைக் கண்டால், அவர்களிடமிருந்து அதைப் பிடுங்கி விட்டு அந்தப் படங்களை இடுகையிடுங்கள்!“
 • ஒரு தனிநபர் அல்லது குழு ஒரு பாதுகாக்கப்பட்ட பிரிவில் உணரப்பட்ட உறுப்பினராக இருப்பதால் அவர்களின் பொருளாதார நிறுவனத்திற்கு ஆதரவை மறுக்கும் வடிவத்தில் மற்றவர்களைப் பாகுபாடு காட்டத் தூண்டுவது, எ.கா., “நீங்கள் ஒரு [மதக் குழுவின்] கடைக்குச் சென்றால், நீங்கள் அந்த [குழப்பவாதி]க்கு ஆதரவளிக்கிறீர்கள், எனவே இந்த [மதக் குழப்பவாதி] -க்கு நமது பணத்தைக் கொடுப்பதை நிறுத்துவோம்.” அரசியல் வர்ணனை அல்லது, புறக்கணிப்புகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான உள்ளடக்கம் போன்ற அரசியல் இயல்புடைய நோக்கம் கொண்ட உள்ளடக்கம் இதில் அடங்காமல் போகலாம்.

ஒரு பாதுகாக்கப்பட்ட பிரிவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நோக்கம் கொண்ட உள்ளடக்கம், ஒரு நபர் அல்லது குழு மீது கடுமையான தீங்கு விளைவிக்க விரும்புவது, நம்புவது அல்லது அழைப்பது என்பதன் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க.

பாதுகாக்கப்பட்ட பிரிவைப் பற்றி அச்சத்தைத் தூண்டும் அல்லது பயமுறுத்தும் ஒரே மாதிரியான விஷங்களைப் பரப்பும் நோக்கத்துடன் கூடிய உள்ளடக்கத்தைக் கொண்ட தனிநபர்களையும் குழுக்களையும் இலக்காக்குவதை நாங்கள் தடைசெய்கிறோம், இதில், பாதுகாக்கப்பட்ட பிரிவில் உள்ள உறுப்பினர்கள் ஆபத்தான அல்லது சட்டவிரோத செயல்களில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறுவது உட்படவை அடங்கும், எ.கா., “அனைத்து [மதக் குழுவும்] பயங்கரவாதிகள்.” 
 

தொடர்ச்சியான மற்றும்/அல்லது சம்மதமில்லாத அவதூறுகள், அடைமொழிகள், இனவெறியர் மற்றும் பாலியல் உருவகங்கள் அல்லது யாரையேனும் தரம்குறைக்கும் பிற உள்ளடக்கம்

பாதுகாக்கப்பட்ட பிரிவைப் பற்றி எதிர்மறையான அல்லது தீங்கு விளைவிக்கும் ஒரே மாதிரியான விஷங்களை மனிதநேயமற்று செயல்பட, இழிவுபடுத்த அல்லது வலுப்படுத்த விரும்பும் தொடர்ச்சியான அவதூறுகள், வற்புறுத்தல்கள் அல்லது பிற உள்ளடக்கங்களைக் கொண்டு மற்றவர்களை இலக்காக்குவதை நாங்கள் தடைசெய்கிறோம். திருநங்கை தனிநபர்களை இலக்காக்கி, தவறான பாலினத்தைக் கூறுதல் அல்லது முந்தைய பெயரை இடுதல் ஆகியவை இதில் அடங்கும். ஒரு குழுவினரின் மீது அவர்களின் மதம், சாதி, வயது, இயலாமை, கடுமையான நோய், தேசிய பூர்வீகம், இனம், குலம், பாலினம், பாலின அடையாளம் அல்லது பாலியல் நோக்குநிலை ஆகியவற்றின் அடிப்படையில் மனிதநேயமற்ற செயலையும் நாங்கள் தடைசெய்கிறோம். சில சந்தர்ப்பங்களில், தூற்றல்கள், கெட்டவார்த்தைகள் அல்லது இனவெறி/பாலியல் துரோகங்கள் ஆகியவற்றின் கடுமையான, தொடர்ச்சியான பயன்பாடு போன்ற (ஆனால் இதுமட்டுமல்ல), மற்றவர்களைத் துன்புறுத்துவதை அல்லது அச்சுறுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்ட இடங்களில், எங்களுக்குக் கிச்சு நீக்கம் தேவைப்படலாம். மற்ற சந்தர்ப்பங்களில், மிதமான, தனிமையான பயன்பாடு போன்ற (ஆனால் இதுமட்டுமல்ல), மற்றவர்களைத் துன்புறுத்துவதை அல்லது அச்சுறுத்துவதை முதன்மையான நோக்கமாகக் கொண்ட இடங்களில், கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி கீச்சு தெரிவுநிலையை நாங்கள் மட்டுப்படுத்தலாம்.
 

வெறுக்கத்தக்கப் படங்கள்

இனம், மதம், இயலாமை, பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம் அல்லது குலம்/தேசிய பூர்வீகம் ஆகியவற்றின் அடிப்படையில் விரோதத்தையும் தீமையையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட லோகோக்கள், சின்னங்கள் அல்லது படங்களை வெறுக்கத்தக்கப் படங்கள் என்று நாங்கள் கருதுகிறோம். வெறுக்கத்தக்கப் படங்களின் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு, ஆனால் இவை மட்டுமல்ல:

 • வெறுக்கத்தக்கக் குழுக்களுடன் வரலாற்று ரீதியாகத் தொடர்புடைய சின்னங்கள், எ.கா., நாஜி ஸ்வஸ்திகா;
 • மற்றவர்களை மனிதனை விடக் குறைவாகச் சித்தரிக்கும் படங்கள், அல்லது வெறுக்கத்தக்கச் சின்னங்களை உள்ளடக்கியதாக மாற்றப்பட்ட படங்கள், எ.கா., விலங்குகளின் அம்சங்களைச் சேர்க்க தனிநபர்களின் படங்களை மாற்றுதல்; அல்லது
 • பாதுகாக்கப்பட்ட பிரிவை இலக்காக்கிய வெகுஜன கொலைக்கான வெறுக்கத்தக்கச் சின்னங்களை அல்லது குறிப்புகளை உள்ளடக்குவதற்கு மாற்றப்பட்ட படங்கள், எ.கா., பெரும் இன அழிப்பை குறிக்கும் வகையில், டேவிட் பேட்ஜ்களின் மஞ்சள் நட்சத்திரத்தைச் சேர்க்க தனிநபர்களின் படங்களைக் கையாளுதல்.

நேரலை வீடியோ, கணக்குச் சுயகுறிப்பு, சுயவிவரம் அல்லது தலைப்பு படங்களுக்குள் வெறுக்கத்தக்கப் படங்களைச் சித்தரிக்கும் மீடியா அனுமதிக்கப்படாது. மற்ற அனைத்து எடுத்துக்காட்டுகளும் உணர்ச்சிப்பூர்வ மீடியாவாகக் குறிக்கப்பட வேண்டும். கூடுதலாக, கோரப்படாத வெறுக்கத்தக்கப் படத்தை ஒரு தனிநபருக்கு அனுப்புவது எங்களின் முறைகேடான நடத்தை கொள்கையின் மீறலாகும். 
 

இந்த உள்ளடக்கம் Twitter விதிகளை மீறுவதாக இருக்க நான் அதன் இலக்காக இருக்க வேண்டுமா?
 

சில கீச்சுகளைத் தனிமைப்படுத்திப் பார்க்கும்போது அவை வெறுக்கத்தக்கதாகத் தோன்றலாம், ஆனால் ஒரு பெரிய உரையாடலின் சூழலில் பார்க்கப்பட்டால் அவ்வாறு இருக்காது. எடுத்துக்காட்டாக, பாதுகாக்கப்பட்ட பிரிவின் உறுப்பினர்கள் பொதுவாகக் குழப்பவாதிகள் என்று கருதப்படும் சொற்களைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் குறிப்பிடலாம். சம்மதத்துடன் பயன்படுத்தும்போது, இந்தச் சொற்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம் தவறானது அல்ல, ஆனால் வரலாற்று ரீதியாகத் தனிநபர்களை இழிவுபடுத்தப் பயன்படுத்தப்பட்ட சொற்களை மீட்டெடுப்பதற்கான ஒரு வழிமுறையாகும்.  

இவ்வகையான உள்ளடக்கத்தை நாங்கள் மதிப்பாய்வு செய்யும்போது, இது ஒரு நபரை அவர்களின் பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தின் அடிப்படையில் துஷ்பிரயோகம் செய்வதை நோக்கமாகக் கொண்டதா அல்லது இது ஒருமித்த உரையாடலின் ஒரு பகுதியாக இருக்கிறதா என்பது தெளிவாக இல்லாமலும் இருக்கலாம். சூழலைப் புரிந்துகொள்ள எங்கள் குழுக்களுக்கு உதவ, இலக்காக்கப்பட்ட நபரிடமிருந்து நாங்கள் நேரடியாகக் கேட்க வேண்டியிருக்கலாம், இது எந்தவொரு அமலாக்க நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன்னர், தேவையான தகவல் எங்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும்.

குறிப்பு: நாங்கள் நடவடிக்கை எடுக்க, தனிநபர்கள் ஒரு குறிப்பிட்ட பாதுகாக்கப்பட்ட பிரிவில் உறுப்பினராக இருக்கத் தேவையில்லை. எந்தவொரு பாதுகாக்கப்பட்ட பிரிவிலும் உள்ள உறுப்பினர்களை நிரூபிக்கவோ பொய்யாக்கவோ நாங்கள் ஒருபோதும் பயனர்களிடம் கேட்க மாட்டோம், மேலும் இந்தத் தகவலை விசாரிக்க மாட்டோம். 
 

பின்விளைவுகள்
 

இந்தக் கொள்கையின் கீழ், மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி, தனிநபர்களை அல்லது முழுப் பாதுகாக்கப்பட்ட பிரிவையும் வெறுக்கத்தக்க நடத்தையுடன் இலக்காக்கும் நடத்தைக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். இலக்கிடுதல் ஆனது பல வழிகளில் நிகழலாம், எடுத்துக்காட்டாக, குறிப்பீடுகள், ஒரு தனிநபரின் புகைப்படத்தை இணைத்தல், ஒருவரை அவர்களின் முழுப் பெயரால் குறிப்பிடுதல் முதலியன.

இந்தக் கொள்கையை மீறியதற்கான அபராதத்தை நிர்ணயிக்கும் போது, விதிமீறலின் தீவிரத்தன்மையையும் ஒரு தனிநபரின் முந்தைய விதிமீறல்களையும் உள்ளடக்கிய பல காரணிகளை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். இந்தக் கொள்கையை மீறும் உள்ளடக்கத்திற்கான சாத்தியமான அமலாக்க விருப்பங்களின் பட்டியல் பின்வருமாறு:

 • பயனர், கீச்சு ஆசிரியரைப் பின்தொடரும்போது தவிர, பதில்களில் கீச்சுகளைக் குறைத்து மதிப்பிடுதல்.
 • கீச்சு ஆசிரியரைப் பின்தொடராதப் பயனர்களுக்கான முன்னணி தேடல் முடிவுகள் மற்றும்/அல்லது காலவரிசைகளில் கீச்சுகளைப் பெருக்கத் தகுதியற்றதாக்குவது.
 • மின்னஞ்சலில் அல்லது தயாரிப்பில் உள்ள பரிந்துரைகளில் கீச்சுகள் மற்றும்/அல்லது கணக்குகளைத் தவிர்ப்பது. 
 • கீச்சு நீக்கம் தேவை.
  • எடுத்துக்காட்டாக, விதிமீறும் உள்ளடக்கத்தை அகற்றுமாறும், மேலும் அவர்கள் மீண்டும் ட்விட் செய்வதற்கு முன்பு, படிக்க மட்டுமே என்ற பயன்முறையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்குமாறும் ஒருவரிடம் நாங்கள் கேட்கலாம். தொடர் விதிமீறல்கள் ஆனவை நீண்ட காலத்திற்கு, படிக்க மட்டுமே என்ற பயன்முறைக்கு வழிவகுக்கும், மேலும் இறுதியில் நிரந்தர இடைநீக்கத்திற்கு வழிவகுக்கும்.
 • இந்தக் கொள்கையில் வரையறுத்துள்ளபடி வெறுக்கத்தக்க நடத்தையில் ஈடுபடுவதை அல்லது வன்முறை அச்சுறுத்தல்களைப் பகிர்ந்து கொள்வதை முதன்மைப் பயன்பாடாக இருப்பதாக நாங்கள் தீர்மானித்த கணக்குகளை இடைநீக்குவது.

எங்களின் பரந்துபட்ட அமலாக்க விருப்பங்களைப் பற்றி மேலும் அறிக. 

யாராவது தங்கள் கணக்கானது பிழையாக இடைநீக்கப்பட்டதாக நினைத்தால், அவர்கள் முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க