கொள்கை மேம்பாடு மற்றும் அமலாக்கத் தத்துவத்திற்கான எங்கள் அணுகுமுறை

Twitter என்பது உலகில் நிகழ்கின்ற உண்மையான உரையாடல்களின் பிரதிபலிப்பு, மேலும் இது சில நேரங்களில் மனதைப் புண்படுத்தும், சர்ச்சைக்குரிய, மற்றும்/அல்லது மற்றவர்களுக்கு நியாயமற்றதாக இருக்கக் கூடிய கண்ணோட்டங்களை உள்ளடக்கும். எங்கள் சேவையில் தங்களை வெளிப்படுத்துமாறு நாங்கள் அனைவரையும் வரவேற்கின்ற அதேவேளை, மற்றவர்களின் குரல்களை அமைதிப்படுத்துவதற்கு தொந்தரவு செய்யும், அச்சுறுத்தும் அல்லது அச்சத்தைப் பயன்படுத்தும் நடத்தையைச் சகித்துக் கொள்ள மாட்டோம்.

அனைவரும் தமது நம்பிக்கைகளைப் பாதுகாப்பாக வெளிப்படுத்துவதை உறுதிப்படுத்த உதவுவதற்கு Twitter விதிகளை நடைமுறையில் வைத்திருக்கிறோம் மற்றும் அவற்றைச் சீராகத் தொடர்ந்து அமலாக்குவதற்கு பாடுபடுகிறோம். வெவ்வேறு அமலாக்கச் செயல்கள் பற்றி மேலும் அறிக.

எங்கள் கொள்கை மேம்பாட்டுச் செயலாக்கம்

ஒரு புதிய கொள்கையை உருவாக்குதல் அல்லது கொள்கை மாற்றத்தைச் செய்தலுக்கு ஆன்லைன் நடத்தையிலுள்ள போக்குகள், அனுமதிக்கப்படுவது குறித்த எதிர்பார்ப்புகளை அமைக்கும் தெளிவான வெளிப்புற மொழியை உருவாக்குதல் மற்றும் மில்லியன் கணக்கான கீச்சுகளில் மதிப்பீடு செய்யக்கூடிய மதிப்பாய்வாளர்களுக்கான அமலாக்க வழிகாட்டலை உருவாக்குதல் ஆகியவை சார்ந்த ஆழ்ந்த ஆராய்ச்சி தேவை.

கொள்கை மொழியினை உருவாக்கும் போது, நாங்கள் பல்வேறு உள்ளக அணிகளிடமும் எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புச் சபையிடமிருந்தும் கருத்துகளைச் சேகரிக்கிறோம். வேறுபட்ட கலாச்சார மற்றும் சமூக சூழல்களில் எங்கள் விதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன மற்றும் விளக்கப்படுகின்றன என்பது உட்பட, ஆன்லைன் விவாதத்தின் மாறும் தன்மையைச் சூழ்ந்துள்ள உலகளாவிய தொலைநோக்குகளை நாங்கள் கருத்தில் கொள்ளுவதை உறுதிப்படுத்த இது முக்கியம். இறுதியாக, எங்கள் உலகளாவிய ஆய்வுக் குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம், Twitter விதிகளைப் புதுப்பிக்கிறோம் மற்றும் புதிய கொள்கையை அமலாக்கத் தொடங்குகிறோம்.

எமது அமலாக்கத் தத்துவம்

ஒரு பிரச்சினையின் வெவ்வேறு பக்கங்களை புரிந்துகொள்ள மக்களுக்கு நாம் அதிகாரம் அளிக்கிறோம் மற்றும் வெளிப்படையான விவாதங்களையும் கருத்துக் கூறுகளையும் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என்று ஊக்குவிக்கிறோம். இந்த அணுகுமுறையானது விவாதத்தின் பல வடிவங்கள் எங்கள் பணித்தளத்தில் இருப்பதை அனுமதிக்கும், எதிர்விவாதத்தை ஊக்குவிக்கிறது: தவறான கூற்றுகள் அல்லது தவறான செயல்களைச் சரிசெய்ய உண்மைகளை வழங்கும், போலித்தனம் அல்லது முரண்பாடுகளை சுட்டிக்காட்டும், ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் விளைவுகளை எச்சரிக்கும், வெறுக்கத்தக்க அல்லது ஆபத்தான பேச்சை விலக்குமாறு தெரிவிக்கும் அல்லது மனதை மாற்ற அல்லது எதிர்ப்பை அகற்ற உதவும் பேச்சு.

ஆகவே, சூழல் விஷயங்கள். அமலாக்க நடவடிக்கையை எடுக்கலாமா என்பதைத் தீர்மானிக்கும் போது, நாங்கள் பின்வருவன உள்ளிட்ட (ஆனால் அவை மட்டுமன்றி) பல காரணிகளைக் கருத்தில் கொள்ளலாம்:

  • நடத்தையானது ஒரு தனிநபர், குழு அல்லது பாதுகாக்கப்பட்ட பிரிவிலுள்ள மக்கள் மீது மேற்கொள்ளப்படுகிறது;
  • முறைகேட்டுக்கு இலக்கானவர் அல்லது பார்வையாளரின் மூலம் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது;
  • பயனர் எங்கள் கொள்கைகளை மீறியதாக ஒரு வரலாறு உள்ளது;
  • மீறலின் தீவிரம்;
  • உள்ளடக்கம் சட்டப்பூர்வமான பொது நலனின் ஒரு தலைப்பாக இருக்கலாம்.


நடத்தையானது ஒரு தனிநபர் அல்லது மக்கள் குழுவின் மீது நடத்தப்படுகிறதா??

பல்வேறுபட்ட கருத்துக்களைப் பணித்தளத்தில் வெளிப்படுத்த அனுமதிப்பதற்கும் எங்கள் பயனர்களைப் பாதுகாப்பதற்கும் இடையில் ஒரு சமநிலையைக் குறிப்பிடுவதற்கு, ஒரு குறிப்பிட்ட நபரை அல்லது மக்கள் குழுவை இலக்காகக் கொண்ட முறைகேடான நடத்தையை ஒருவர் புகாரளிக்கும்போது, நாங்கள் கொள்கைகளை அமலாக்குகிறோம். இந்த இலக்கிடுதல் ஆனது பல வழிகளில் நிகழலாம் (எடுத்துக்காட்டாக, @குறிப்பீடுகள், ஒரு புகைப்படத்தை இணைத்தல், பெயர் மூலம் அவற்றைக் குறிப்பிடுவது மற்றும் பல).


சாத்தியமான முறைகேட்டின் இலக்கு அல்லது ஒரு பார்வையாளர் மூலம் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?

சில கீச்சுகளைத் தனிமைப்படுத்திப் பார்க்கும்போது தவறானதாகத் தோன்றலாம், ஆனால் பணித்தளத்தில் மக்கள் இடையே ஒரு பெரிய உரையாடல் அல்லது வரலாற்று உறவின் சூழலில் பார்க்கப்படும்போது அவ்வாறு தோன்றாமல் போகலாம். எடுத்துக்காட்டாக, நண்பர்களிடையே நட்பு முறையான சீண்டலானது, பார்வையாளர்களுக்கு மனதைப் புண்படுத்துவதாகத் தோற்றமளிக்கலாம், ஒரு கலாச்சாரம் அல்லது நாட்டில் ஏற்கத்தக்க சில கருத்துகள் மற்றொன்றில் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கலாம். தவறை ஏற்படுத்துவதிலிருந்தும் இணக்கமான ஊடாடல்களை அகற்றுவதிலிருந்தும் எங்கள் அணிகளைத் தடுக்க உதவ, சில சூழ்நிலைகளில், எந்தவொரு அமலாக்க நடவடிக்கையையும் எடுக்கும் முன்னர், உண்மையான இலக்கு (அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக) அளிக்கும் ஒரு புகார் எங்களுக்குத் தேவை.


பயனர் எங்கள் கொள்கைகளை மீறுவதாக வரலாறு இருக்கிறதா?

எங்கள் விதிமுறைகள் மீறப்படுவதை மக்கள் விரும்பவில்லை என்ற எடுகோள் நிலையில் இருந்து தொடங்குகிறோம். ஒரு கணக்கை உடனடியாக இடைநிறுத்த வேண்டிய அளவுக்கு மீறல் மிகவும் மோசமானதாக இருந்தால் தவிர, நாங்கள் முதலில் எங்கள் விதிகள் பற்றி மக்களுக்குக் கல்வியூட்டி, அவர்களது நடத்தையைச் சரிசெய்யும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்க முயற்சிப்போம். மீறுபவருக்கு மனதைப் புண்படுத்தும் கீச்சை(களை) காண்பிப்போம், எந்த விதி மீறப்பட்டது என்று விளக்குவோம், அவர்கள் மீண்டும் ட்விட் செய்ய முன் அந்த உள்ளடக்கத்தை நீக்க வேண்டுமென்ற அவர்களிடம் கேட்போம். யாராவது எங்கள் விதிகளைத் தொடர்ந்து மீறினால், எங்கள் அமலாக்க நடவடிக்கைகள் வலுவாகும். இந்த நடவடிக்கைகளில், மீறுபவர் கீச்சை(களை) நீக்குவது மற்றும் கணக்கு உரிமையைச் சரிபார்ப்பது மற்றும்/அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ட்வீட் செய்யும் அவர்களது ஆற்றலைத் தற்காலிகமாகத் தடைசெய்வது போன்ற கூடுதல் நடவடிக்கைகள் உள்ளடங்கும். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு அப்பாலும் ஒருவர் தொடர்ந்து விதிகளை மீறினால், அவர்களின் கணக்கு நிரந்தரமாக நிறுத்தப்படலாம்.


மீறலின் தீவிரம் என்ன?

சில வகையான நடத்தைகள் தீவிரமான பாதுகாப்பு மற்றும் பத்திரப்படுத்தல் அபாயங்களைத் தோற்றுவிக்கலாம் மற்றும்/அல்லது சம்பந்தப்பட்ட நபர்களுக்கான உடல், உணர்ச்சி மற்றும் நிதிசார் இன்னல்களை விளைவிக்கலாம். Twitter விதிகளின் இந்த மிக மோசமான மீறல்கள், அதாவது வன்முறையான அச்சுறுத்தல்கள், இணக்கமற்ற நெருக்கமான ஊடகம் அல்லது குழந்தைகளைப் பாலியல் ரீதியாக சுரண்டும் உள்ளடக்கம் போன்றவை கணக்கின் உடனடி மற்றும் நிரந்தர நிறுத்தத்தை விளைவிக்கும். பிற மீறல்கள், வேறுபட்ட வழிமுறைகளுக்கு வழிவகுக்கலாம், அவற்றில் மனதைப் புண்படுத்தும் கீச்சை(களை) ஒருவர் நீக்க வேண்டிய அவசியம் ஏற்படுவது மற்றும்/அல்லது தற்காலிகமாக புதிய கீச்சு(கள்) பதிவிடும் அவரது ஆற்றலைக் குறைப்பது போன்றவை அடங்கும்.


நடத்தையானது போதிய சுவாரஸ்மானதா மற்றும் சட்டபூர்வமான பொது நலனுக்குரியதா?

பொது விழிப்புணர்வின் வேகத்தோடும் சேவைக்கு வரும் மக்கள் முக்கிய விஷயங்கள் பற்றி அறிந்து தொடர்ந்திருக்குமாறும் Twitter நகர்கிறது. வித்தியாசமான கருத்துக்களுக்கு வெளிப்படுவது ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்ள, கூடுதல் சகிப்புத்தன்மையை உருவாக்க மற்றும் நாம் வாழ விரும்பும் சமூக வகை பற்றிய முடிவுகளை எடுக்க மக்களுக்கு உதவலாம்.

ஒரு சிக்கலின் அனைத்துப் பக்கத்தையும் பார்க்க மக்களுக்கு ஒரு வாய்ப்பை உறுதிப்படுத்த உதவுவதற்கு, சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் அல்லது நடத்தையை நாங்கள் அனுமதிக்கையில், எங்கள் சேவைகளில் தொடர்ந்து இருப்பதற்காக எங்கள் விதிமுறைகளை அது மீறும் அரிதான சந்தர்ப்பமாக இருக்கலாம், ஏனென்றால் இதன் கிடைக்கும்தன்மையில் ஒரு சட்டபூர்வமான பொது நலன் இருப்பதாக நம்புகிறோம். ஒவ்வொரு சூழ்நிலையும் அந்தந்த வழக்கு அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு இறுதியில் ஒரு குறுக்கு செயல்பாட்டுக் குழுவின் முடிவுக்கு உள்ளாகும்.

உள்ளடக்கம் பற்றிய எங்களது முடிவெடுக்கும் தகவலைத் தெரிவிக்க உதவும் சில காரணிகளில், பொதுமக்கள் மீது அது கொண்டிருக்கக் கூடிய தாக்கம், உள்ளடக்கத்தின் மூலம், நிகழ்வின் மாற்று உள்ளடக்கம் கிடைக்கக்கூடிய தன்மை ஆகியவை அடங்கும்.

உள்ளடக்கத்தின் பொதுமக்கள் மீதான தாக்கம்: பொதுமக்கள் ஆர்வமாக இருக்கக் கூடிய ஒரு தலைப்பிலிருந்து சட்டப்படியான பொது ஆர்வத் தலைப்பு வித்தியாசமானது. இந்த உள்ளடக்கம் பற்றி பொதுமக்களுக்குத் தெரியாது என்றால், அவர்களுக்கு என்ன தாக்கம் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொள்வோம். கீச்சுக்கு அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கைகள், ஒரு நாட்டின் இயக்கத்தைப் பாதிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது மற்றும்/அல்லது அது ஒரு முக்கியமான சமூகப் பிரச்சனையுடன் பேசுகிறது என்றால், அந்த உள்ளடக்கமானது சேவையில் தொடர்ந்து இருக்க நாங்கள் அனுமதிக்கலாம். அதேபோல், பொதுமக்களின் மீதான தாக்கம் மிகக் குறைவாக இருந்தால், எங்களது கொள்கைகளை மீறுவதால் பெரும்பாலும் உள்ளடக்கத்தை அகற்றுவோம்.

உள்ளடக்கத்தின் மூலம்: சிலர், குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் அவர்கள் Twitter -இல் பதிவிடும் உள்ளடக்கம் ஆகியவை பொது மக்களிடையே பொது விழிப்புணர்வில் இருக்கும் அவற்றின் ஒழுக்கத்தைக் கருத்தில் கொண்டு சட்டபூர்வமான பொது நலனின் தலைப்பாகக் கருதப்படலாம். இது அவர்களின் கீச்சு எப்போதும் சேவையில் இருக்கும் என்று அர்த்தம் இல்லை. மாறாக, வெளிப்படையாக விவாதிக்கக் கூடியவாறு ஒரு குறிப்பிட்ட கீச்சு தொடர்ந்து இருப்பதற்கு சட்டப்படியான பொது நலன் இருக்கிறதா என்பதைக் கருத்தில் கொள்வோம்.

உள்ளடக்கத்தின் கிடைக்கும்தன்மை: உலகில் என்ன நடக்கிறது என்பது பற்றி குறுக்கீடின்றி கணக்குகள் வழங்குதல், நிறுவனப் பார்வைகளுக்கு எதிர்க்கருத்துகள், சில சந்தர்ப்பங்களில், அதிகாரப் பதவியில் உள்ள ஒருவரால் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அம்பலப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், தினசரி மக்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஒரு நிலைமை வெளிப்படும்போது, குறிப்பிட்ட தகவலுக்கான அணுகலை அகற்றுதல் ஆனது, கவனக்குறைவாகச் சூழலை மறைக்கலாம் மற்றும்/அல்லது சிக்கலின் ஒவ்வொரு பக்கத்தையும் மக்கள் பார்ப்பதைத் தடுக்கலாம் எனவே, ஒரு சாத்தியமாக மீறுகின்ற ஒரு கீச்சு மீது நடவடிக்கை எடுக்கும் முன், நீண்ட கதையைக் காட்டுவதில் அது ஆற்றும் பங்கையும், அந்த உள்ளடக்கத்தை வேறு இடத்தில் காணலாமா என்பதையும் கருத்தில் எடுப்போம்.

Bookmark or share this article

Was this article helpful?

Thank you for the feedback. We’re really glad we could help!

Thank you for the feedback. How could we improve this article?

Thank you for the feedback. Your comments will help us improve our articles in the future.