பதிப்புரிமைக் கொள்கை

என்னென்ன வகையான பதிப்புரிமைப் புகார்களுக்கு Twitter பதிலளிக்கிறது?

டிஜிட்டல் மில்லேனியம் பதிப்புரிமைச் சட்டத்தின் (“DMCA”) கீழ் சமர்ப்பிக்கப்படும் பதிப்புரிமைப் புகார்களுக்கு Twitter பதிலளிக்கிறது. DMCA -இன் பிரிவு 512 -இல், பாதிக்கப்பட்ட தரப்பு எவ்வாறு புகாருக்கு எதிரான அறிவிப்பைச் சமர்ப்பித்து ஒரு அகற்றலை மேல்முறையீடு செய்யலாம் என்பது குறித்த அறிவுறுத்தல்களை வழங்குதல் உட்பட, பதிப்புரிமை மீறலை முறையாகப் புகாரளிப்பதற்குத் தேவையான சட்டப்பூர்வத் தேவைகள் விவரிக்கப்படுகின்றன.

பதிப்புரிமை பெற்ற படத்தை ஒரு சுயவிவரம் அல்லது தலைப்புப் படமாக அங்கீகாரமின்றிப் பயன்படுத்தியதாகக் கருதும் குற்றச்சாட்டுகள், எங்கள் ஊடகம் வழங்கும் சேவைகள் வழியாகப் பதிவேற்றப்பட்ட பதிப்புரிமை பெற்ற வீடியோ அல்லது படத்தின் அங்கீகாரமற்ற பயன்பாட்டைக் கருதும் குற்றச்சாட்டுகள் அல்லது விதிமீறுபவையாகக் குற்றம் சாட்டப்படும் தகவலுக்கான இணைப்புகளைக் கொண்ட கீச்சுகள் போன்ற பதிப்புரிமை மீறலைக் குற்றம் சாட்டும் புகார்களுக்கு Twitter பதிலளிக்கும். பதிப்புரிமை பெற்ற பொருட்களின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடுகள் அனைத்தும், மீறல்கள் ஆகாது என்பதை நினைவில் கொள்ளவும் (மேலும் தகவலுக்கு, எங்கள் நியாயமான பயன்பாடு என்ற கட்டுரையைப் படிக்கவும்).

உங்கள் பிராண்ட் அல்லது நிறுவனத்தின் பெயரின் பயன்பாடு பற்றி நீங்கள் கவலைப்பட்டால், Twitter -இன் வணிகமுத்திரைக் கொள்கையை மதிப்பாய்வு செய்யவும். நீங்கள் ஒரு பகடி, செய்தி ஊட்டம், வர்ணனை அல்லது ரசிகர் கணக்கைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், இங்கே பொருத்தமான கொள்கையைப் பார்க்கவும். இவை பொதுவாக பதிப்புரிமைச் சிக்கல்கள் அல்ல.

நான் பதிப்புரிமை வைத்திருப்பவரா? நான் எவ்வாறு தெரிந்துகொள்வது?

ஒரு குறிப்பிட்ட வேலைக்கு உங்கள் உரிமைகள் உள்ளனவா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், சட்ட ஆலோசனையை Twitter வழங்க முடியாது என்பதால் ஒரு வழக்கறிஞர் அல்லது வேறு ஆலோசகரிடம் ஆலோசிக்கவும். பதிப்புரிமைச் சட்டம் பற்றி மேலும் அறிய, http://copyright.govhttps://lumendatabase.org/ மற்றும் http://www.eff.org/issues/bloggers/legal/liability/IP ஆகிய பெயர்குறிப்பிடத்தக்கவை போன்ற ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

பதிப்புரிமைப் புகாரைச் சமர்ப்பிப்பதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டியவை

எங்களிடம் பதிப்புரிமைப் புகாரைச் சமர்ப்பிப்பதற்கு முன்பு, பயன்பாட்டை நியாயமான பயன்பாடாகக் கருதலாமா என்று கருதவும். 

நீங்கள் நியாயமான பயன்பாட்டைக் கருதினாலும், பதிப்புரிமைப் புகாரைத் தொடர விரும்புகிறீர்கள் எனில், நீங்கள் விஷயத்தைப் பயனருடன் நேரடியாகத் தீர்க்க முடியுமா என்பதைப் பார்க்க, நீங்கள் முதலில் புகாரிலுள்ள பயனரைத் தொடர்புகொள்ள விரும்பலாம். நீங்கள் பயனரின் கீச்சுக்குப் பதிலளிக்கலாம் அல்லது பயனருக்கு நேரடிச்செய்தி அனுப்பலாம், மேலும் Twitter -ஐத் தொடர்பு கொள்ள வேண்டிய தேவையின்றி உங்கள் பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை அகற்றுமாறு அவர்களிடம் கேட்கலாம். 

Twitter -இடம் முறையான புகாரைச் சமர்ப்பிக்கும் முன், நீங்கள் பொருள் அல்லது செயல்பாடு விதிமீறுகிறது என்று வேண்டுமென்றே பொருள்படும் வகையில் தவறாகத் தெரிவித்தால், எங்களால் அல்லது எங்கள் பயனர்களால் ஏற்படும் செலவுகள் மற்றும் வழக்கறிஞர்கள் கட்டணம் உட்பட எந்த சேதத்திற்கும் 17 U.S.C. § 512(f) -இன் கீழ் நீங்கள் பொறுப்பாக இருக்கலாம். நீங்கள் புகாரளிக்கும் பொருள் உண்மையில் மீறுகிறதா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், எங்களுடன் புகாரைத் தாக்கல் செய்வதற்கு முன்னர் நீங்கள் ஒரு வழக்கறிஞரைத் தொடர்பு கொள்ளலாம்.

Note: பொதுவாக, எடுக்கப்படும் புகைப்படத்தின் உண்மையான உரிமையை வைத்திருப்பவர் புகைப்படக்கலைஞரே, புகைப்படம் எடுக்கப்பட்டவர் அல்ல. ஒரு வேலைக்கு பதிப்புரிமைகளை நீங்கள் சொந்தமாக வைத்திருக்கிறீர்களா இல்லையா என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால் அல்லது நீங்கள் வேறொருவரின் வேலையில் விதிமீறினால், ஒரு வழக்கறிஞர் அல்லது மற்றொறு ஆலோசகருடன் ஆலோசிக்கவும்.

பதிப்புரிமைப் புகாரைச் செயலாக்க உங்களுக்குத் தேவையான தகவல்கள் எவை?

உரிமைகோரப்பட்ட பதிப்புரிமை மீறல் பற்றிய புகாரைச் சமர்ப்பிக்க, நீங்கள் பின்வரும் தகவல்களை எங்களுக்கு வழங்க வேண்டும்:

  1. பதிப்புரிமை உரிமையாளர் அல்லது அவர் சார்பாகச் செயல்படுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒருவரின் உண்மையான அல்லது மின்னணு கையொப்பம் (உங்கள் முழுப் பெயரைத் தட்டச்சு செய்தால் போதும்);
  2. மீறப்பட்டதாகக் கூறப்படும் பதிப்புரிமை பெற்ற வேலையின் அடையாளம் (எ.கா., உங்கள் அசல் பணிக்கான இணைப்பு அல்லது மீறப்பட்டதாக கூறப்படும் விஷயங்களின் தெளிவான விளக்கம்);
  3. Twitter எங்கள் வலைத்தளத்தில் அல்லது சேவைகளில் தகவலைக் கண்டுபிடிப்பதற்கு அனுமதியளிக்க நியாயமாகப் போதுமான மீறும் விஷயத்தின் அடையாளம் மற்றும் தகவல்;
  4. உங்கள் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட உங்கள் தொடர்புத் தகவல்;
  5. உறுதியளிக்கப்பட்ட விதத்தில் பொருளைப் பயன்படுத்துவது பதிப்புரிமை உரிமையாளர், அதன் முகவர் அல்லது சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்று நீங்கள் நன்கு நம்புகிறீர்கள் என்ற ஓர் அறிக்கை; மற்றும்
  6. புகாரில் உள்ள தகவல் துல்லியமானது மற்றும், பொய்ச்சான்றின் தண்டனையின் கீழ் உள்ளது என்றும், பதிப்புரிமை உரிமையாளரின் சார்பாக செயல்பட உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஓர் அறிக்கை.

நீங்கள் கீச்சின் உள்ளடக்கம் பற்றி புகாரளிக்கிறீர்கள் என்றால், அந்தக் கீச்சுக்கான நேரடி இணைப்பை எங்களுக்கு வழங்கவும். அல்லது கூறப்படும் மீறல் தலைப்பு, அவதார் போன்றவற்றில் உள்ளதா எனக் குறிப்பிடவும் விதிமீறுகின்ற விஷயங்களை அடையாளங்காணுவதற்கு TWITTER -க்கு சுயவிவரப் பக்கத்திற்கான இணைப்பு மட்டும் போதாது.

பதிப்புரிமைப் புகாரை எவ்வாறு தாக்கல் செய்வது?

Twitter -இன் உதவி மையத்திற்குச் சென்று பதிப்புரிமைப் புகாரைத் தாக்கல் செய்வதன் மூலம். கூறப்படும் பதிப்புரிமை மீறலைப் புகாரளிக்கலாம். நீங்கள் twitter.com -இல் உள்நுழைந்தால், பக்கப்பட்டியில் அமைந்துள்ள 'உதவி' என்ற இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் Twitter கணக்கிலிருந்து நேரடியாக Twitter உதவி மையத்திற்குச் செல்லலாம்.

DMCA புகார் தாக்கல் செய்வது என்பது முன் வரையறுக்கப்பட்ட சட்ட செயல்முறையின் தொடக்கமாகும். உங்கள் புகாரானது துல்லியம், செல்லுபடியாகும் தன்மை மற்றும் முழுமை ஆகியவற்றைப் பார்க்க மதிப்பாய்வு செய்யப்படும். உங்கள் புகார் இந்தத் தேவைகளைத் திருப்தி செய்தால், உங்கள் கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுப்போம் - இதில், விதிமீறுவதாகக் குற்றம் சாட்டப்படும் கேள்விக்குரிய தகவலைப் பதிவிட்ட பயனருக்கு(களுக்கு) உங்கள் அறிவிப்பின் ஒரு முழு நகல் (உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி உட்பட) முன்னனுப்பப்படுவது உள்ளடங்கும்.

உங்களுடைய தொடர்புத் தகவலை அனுப்பப்படுவதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்காகப் புகாரளிக்க ஒரு முகவரை நீங்கள் பயன்படுத்த விரும்பலாம்.

17 U.S.C. § 512(f) -இன் கீழ், நீங்கள் தகவல் அல்லது செயல்பாடு மீறல் என்று அறிந்துகொண்டே தவறாகத் தெரிவித்தால், நாங்கள் அல்லது எங்கள் பயனர்கள் ஏற்கும் செலவுகள் மற்றும் வழக்கறிஞர்கள் கட்டணம் உட்பட அனைத்துச் சேதங்களுக்கும் நீங்கள் பொறுப்பாக இருக்கலாம். நீங்கள் புகாரளிக்கும் தகவல் உண்மையில் மீறுகிறதா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், பதிப்புரிமை புகாரைத் தாக்கல் செய்வதற்கு முன் ஒரு வழக்கறிஞரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

கோரிக்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன?

பதிப்புரிமைப் புகார்களை அவை பெறப்பட்ட வரிசையில் செயலாக்குகிறோம். நீங்கள் உங்கள் டிக்கெட்டைச் சமர்ப்பித்தவுடன், உங்களுக்கு ஒரு டிக்கெட் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை அனுப்புவோம். உங்கள் டிக்கெட் உறுதிப்படுத்தலைப் பெறவில்லை என்றால், நாகள் உங்கள் புகாரைப் பெறவில்லை, நீங்கள் உங்கள் புகாரை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அர்த்தம். இருப்பினும், இரட்டைப் பதிப்புரிமைப் புகாரைச் சமர்ப்பித்தல் செயலாக்கத்தில் தாமதத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.

நாங்கள் தகவலை அகற்ற அணுகலை முடக்க முடிவு செய்தால், பாதிக்கப்பட்ட பயனருக்கு(களுக்கு) அறிவித்து, எதிர் அறிக்கையை எவ்வாறு தாக்கல் செய்வது என்ற அறிவுறுத்தல்களுடன் (வழங்கப்பட்ட தொடர்புத் தகவலுடன் சேர்த்து) புகாரளித்தவரின் புகாரின் முழுமையான நகலை அவர்களுக்கு வழங்குவோம். உங்கள் தனிப்பட்ட தகவலை அகற்றி, புகாரின் திருத்தம் செய்த ஒரு நகலை Lumen -க்கும் அனுப்புவோம்.

புகாரளிக்கப்பட்ட பயனருக்கு(களுக்கு) என்ன தகவல் அனுப்பப்படுகிறது? 

பதிப்புரிமைப் புகாரில் புகாரளிக்கப்பட்ட தகவலை நாங்கள் அகற்றினால் அல்லது அதற்கான அணுகலை முடக்கினால், புகாரளித்தவரின் முழுப்பெயர், மின்னஞ்சல், தெரு முகவரி மற்றும் புகாரில் உள்ள வேறு ஏதேனும் தகவலும் உள்ளிட்ட புகாரின் நகலானது புகாரளிக்கப்பட்ட பயனருக்கு(களுக்கு) கிடைக்கும். 

புகாரளிக்கப்பட்ட பயனருக்கு(களுக்கு) உங்கள் தொடர்புத் தகவலைப் பகிர்வது உங்களைச் சங்கடப்படுத்தினால், உங்கள் சார்பாக உங்கள் DMCA அறிவிப்பைச் சமர்ப்பிக்க ஒரு முகவரை நியமிப்பது குறித்து நீங்கள் பரிசீலிக்க விரும்பலாம். உங்கள் முகவர், சரியான தொடர்புத் தகவலுடன் DMCA அறிவிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் உள்ளடக்க உரிமையாளராக உங்களை அடையாளப்படுத்த வேண்டும். 

அடுத்து என்ன நடக்கும்?

பதிப்புரிமைப் புகார்களுக்கு Twitter அளிக்கும் பதிலில் மீறுவதாகக் குற்றம் சுமத்தப்படும் தகவலை அகற்றுதல் அல்லது கட்டுப்படுத்துதல் உள்ளடங்கலாம். பதிப்புரிமைப் புகாருக்கான பதிலாக நாங்கள் பயனர் உள்ளடக்கத்தை அகற்றினால் அல்லது அதற்கான அணுகலைக் கட்டுப்படுத்தினால், பாதிக்கப்பட்ட பயனருக்கு(களுக்கு) அறிவித்து, எதிர் அறிக்கையை எவ்வாறு தாக்கல் செய்வது என்ற அறிவுறுத்தல்களுடன் புகாரின் முழுமையான நகல் உட்பட, அகற்றல் அல்லது அணுகல் கட்டுப்பாடு பற்றிய தகவலுடன், பாதிக்கப்பட்ட கணக்கைத் தொடர்புகொள்ள நல்லெண்ண முயற்சியை மேற்கொள்வோம்.

உங்கள் கணக்கிலிருந்து அகற்றப்பட்ட உள்ளடக்கத்தைப் பற்றி பதிப்புரிமைப் புகாரின் நகலை இன்னும் பெறவில்லை எனில், நாங்கள் உங்களுக்கு அனுப்பிய ஆதரவு டிக்கெட்டிற்கு பதிலளியுங்கள். Periscope -இலிருந்து உள்ளடக்கத்தை அகற்றுவதுடன் சம்பந்தப்படும் புகாரை நீங்கள் அளித்தால், உங்கள் புகாரின் நகலை எவ்வாறு கோருவது என்பது தொடர்பாக இந்த உதவி மையக் கட்டுரையைப் பார்க்கவும்.

பயனர் பதிவிட்ட உள்ளடக்கத்தை அகற்றுதல் அல்லது அதற்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக முடிந்த வரை வெளிப்படையாக இருக்கும் முயற்சியில், உள்ளடக்கம் தடை செய்யப்பட்டுள்ளதைப் பார்வையாளர்களுக்குத் தெரிவிப்பதற்காக, தடை செய்யப்பட்டுள்ள கீச்சுகளையும் ஊடகத்தையும் தெளிவாகக் குறியிடுகிறோம் (எடுத்துக்காட்டுகள் கீழே உள்ளன). நாங்கள் செயலாக்கும் ஒவ்வொரு பதிப்புரிமைப் புகார் மற்றும் எதிர் அறிவிப்புகளின் திருத்திய நகலை Lumen -க்கும் அனுப்புகிறோம், அங்கு அவை ஒரு பொதுமக்கள் பார்க்கும் வலைத்தளத்தில் பதிவிடப்படும் (உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அகற்றப்பட்டு).

Twitter -இல் இருந்து எனது உள்ளடக்கம் அகற்றப்பட்டது

எனக்கு ஏன் பதிப்புரிமைப் புகார் கிடைத்தது?

நீங்கள் பதிப்புரிமைப் புகாரைப் பெற்றால், புகாரில் விவரிக்கப்பட்டுள்ள உள்ளடக்கத்திற்கான அணுகல் தடைசெய்யப்பட்டுள்ளது என்று அர்த்தமாகும். உங்களுக்கு நாங்கள் அனுப்பும் கடிதத்தைப் படிப்பதற்கு நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், இதில் எங்களுக்குக் கிடைத்த புகாரைப் பற்றிய தகவல்களும் எதிர் அறிவிப்பை எவ்வாறு பதிவு செய்வது என்பதற்கான வழிமுறைகளும் இருக்கும். உங்கள் Twitter கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரியை நீங்கள் கண்காணிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.

உதவிக்குறிப்பு: பதிப்புரிமை புகாரில் புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கத்தை நீக்குவது, அந்தப் புகாரைத் தீர்க்காது.

நான் தரமிறக்குவதை எதிர்த்துப் போட்டியிட விரும்பினால் என்ன செய்வது?

நீங்கள் பதிப்புரிமைப் புகார்களில் புகாரளிக்கப்பட்ட தகவல்கள்
தவறாக அடையாளம் காணப்பட்டதாக அல்லது தவறுதலாக அகற்றப்பட்டதாக நம்பினால், எங்களுக்கு எதிர்ப்பு அறிவிப்பு(கள்) அனுப்பலாம். எதிர்ப்பு அறிவிப்பு என்பது அகற்றப்பட்ட உள்ளடக்கத்தை மீட்டெடுக்குமாறு Twitter -க்கான கோரிக்கையாகும், மேலும் அது சட்டப்படியான விளைவுகளைக் கொண்டுள்ளது. மாற்றாக, நீங்கள் புகாரளித்தவரிடமிருந்து பதிப்புரிமைப் புகாரைத் திருப்பப்பெறுமாறு கேட்கலாம்.

திருப்பப்பெறுமாறு எவ்வாறு கேட்பது?

நீங்கள் பெற்றுள்ள DMCA புகாரில் புகாரளித்தவரின் தொடர்புத் தகவல் உள்ளது. நீங்கள் அவரைத் தொடர்புகொண்டு, அவரின் அறிவிப்பைத் திருப்பப்பெறுமாறு கேட்க விரும்பலாம்.  புகாரளித்தவர், திருப்பப்பெறுதல்களை copyright@twitter.com என்ற முகவரிக்கு அனுப்பலாம், அவற்றில் பின்வருவன உள்ளடங்க வேண்டும்: (1) முடக்கப்பட்ட தகவலின் அடையாளம் மற்றும் (2) புகாரளித்தவர் அவரது DMCA அறிவிப்பைத் திருப்பப்பெற விரும்புகிறேன் என்று கூறும் ஒரு அறிக்கை. இது, தீர்க்கப்படாத பதிப்புரிமைப் புகாரைத் தீர்ப்பதற்கான மிக விரைவான மற்றும் மிகச் சிறந்த வழி. திருப்பப்பெறுதல் என்பது அசல் புகாரளித்தவரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் மட்டுமே நிகழ்வது.

நான் எப்போது எதிர் அறிவிப்பைத் தாக்கல் செய்ய வேண்டும்?

எதிர் அறிவிப்பு என்பது அகற்றப்பட்ட உள்ளடக்கத்தை மீட்டெடுப்பதற்கு Twitter -க்கு விடுக்கும் கோரிக்கையாகும், சட்டப்படியான விளைவுகளைக் கொண்ட சட்டச் செயல்முறையின் தொடக்கமாகும்.  எடுத்துக்காட்டாக, ஒரு எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிப்பது என்பது, நீங்கள் ஓர் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு ஒப்புதலளிக்கிறீர்கள் என்றும், புகாரளித்தவர் மற்றும் Lumen வலைத்தளத்திற்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள் என்றும் குறிக்கும்.

இந்த விஷயங்களை மனதில் கொண்டு, இந்தத் தகவல் தவறாக அடையாளம் காணப்பட்டது என நீங்கள் நம்பினால் அல்லது தகவலை அகற்றியிருக்கக் கூடாது என்று நீங்கள் நன்கு நம்பிக்கை கொண்டிருந்தால், நீங்கள் எதிர் அறிவிப்பைத் தாக்கல் செய்யலாம்.  எதிர் அறிவிப்பு ஒன்றை நீங்கள் தாக்கல் செய்யலாமா இல்லையா என்பது உங்களுக்குச் சரியாகத் தெரியாவிட்டால், ஒரு வழக்கறிஞருடன் கலந்தாலோசிக்கலாம்.

உதவிக்குறிப்பு: பதிப்புரிமைப் புகாருக்கான பதிலாக அகற்றப்பட்ட தகவலை மீண்டும் பதிவு செய்வது நிரந்தர கணக்கு இடைநீக்கத்தை விளைவிக்கலாம். உள்ளடக்கம் தவறுதலாக அகற்றப்பட்டுள்ளதாக நம்பினால், தகவலை மீண்டும் பதிவிடுவதற்குப் பதிலாக, ஓர் எதிர் அறிவிப்பைத் தாக்கல் செய்யவும். 

எதிர் அறிவிப்பை செயல்படுத்த உங்களுக்கு என்ன தகவல் தேவை?

எதிர்-அறிவிப்பைச் சமர்ப்பிக்க, நீங்கள் பின்வரும் தகவலை எங்களுக்கு வழங்க வேண்டும்:

  1. உண்மையான அல்லது மின்னணு கையொப்பம் (உங்கள் முழுப் பெயரைத் தட்டச்சு செய்தால் போதும்);
  2. அகற்றப்பட்ட அல்லது அணுகல் முடக்கப்பட்ட தகவலின் அடையாளம் மற்றும் அதை அகற்ற அல்லது அதற்கான அணுகலை முடக்க முன் அது காணப்பட்ட இருப்பிடம் (பதிப்புரிமை அறிவிப்பிலிருந்து விளக்கம் போதுமானது);
  3. தகவலானது தவறாக அல்லது அகற்றப்பட அல்லது முடக்கப்பட வேண்டிய தகவலின் தவறான அடையாளம் காரணமாக அகற்றப்பட்டது அல்லது முடக்கப்பட்டது என்று நீங்கள் நம்பும் பொய்ச்சான்றின் தண்டனையின் கீழ் ஓர் அறிக்கை; மற்றும்
  4. உங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண், மற்றும் அந்த முகவரியில் அமைந்துள்ள நீதித்துறை மாவட்டத்திலுள்ள ஃபெடரல் மாவட்ட நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு அல்லது உங்கள் முகவரி அமெரிக்காவிற்கு வெளியே இருந்தால், Twitter காணப்படக்கூடிய எந்த நீதித்துறை மாவட்டத்திற்கும் மேலும் உட்பிரிவு (c)(1)(C) -இன் கீழ் அறிவிப்பை வழங்கிய நபரிடமிருந்து அல்லது அத்தகைய நபரின் முகவரிடமிருந்து செயல்முறை சேவையை ஏற்றுக் கொள்வீர்கள் என்றும் நீங்கள் ஒப்புதல் அளிக்கும் மற்றும் ஓர் அறிக்கை.

எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்க, அகற்றல் குறித்த எங்கள் அசல் மின்னஞ்சல் அறிவிப்புக்கு பதிலளிக்கவும், பாதுகாப்புக் காரணங்களுக்காக நாங்கள் எல்லா இணைப்புகளையும் நிராகரிக்கிறோம் என்பதால், தேவையான தகவலை உங்கள் பதிலின் முக்கிய பகுதியில் சேர்க்கவும்.

நான் எதிர் அறிவிப்பைச் சமர்ப்பித்த பின் என்ன நடக்கிறது?

சரியான எதிர் அறிவிப்பைப் பெற்றதும், அசல் அறிவிப்பைத் தாக்கல் செய்த நபருக்கு உடனடியாக ஒரு நகலை அனுப்புவோம். அதாவது, இது உங்கள் எதிர் அறிவிப்பில் சமர்ப்பிக்கப்பட்ட தொடர்புத் தகவலானது அசல் அறிவிப்பைத் தாக்கல் செய்த நபருடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று பொருள்படும். 

உள்ளடக்கமானது தவறாக அல்லது தவறாக அடையாளம்கண்டு அகற்றப்பட்டது என்பதை, பதிப்புரிமை உரிமையாளர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் உங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.  சிக்கலில் உள்ள தகவலில் மேலும் மீறல் ஏற்படுவதைத் தடுப்பதற்காக அசல் புகாரளிப்பவர் ஒரு நீதிமன்ற உத்தரவை நாடுகிறார் என்று 10 வணிக நாட்களுக்குள் எங்களுக்கு அறிவிப்பு கிடைக்காவிட்டால், நாங்கள் அகற்றப்பட்ட உள்ளடக்கத்தை பதிலீடு செய்யக் கூடும் அல்லது அதற்கான அணுகல் முடக்கத்தை நிறுத்தக் கூடும்.

எந்த சட்ட ஆலோசனையையும் நாங்கள் வழங்க முடியாது. உங்களுக்குக் கேள்விகள் இருந்தால், ஒரு வழக்கறிஞருடன் கலந்தாலோசிக்கவும்.

பதிப்புரிமைப் புகார் அல்லது எதிர் அறிவிப்பைத் தாக்கல் செய்வது ஒரு முக்கிய விஷயமாகும்!

குறிப்பாக நீங்கள் தான் உண்மையான உரிமையாளர் என்று அல்லது உரிமையாளரின் சார்பாக செயல்படுவதற்கு அங்கீகாரம் பெற்றிருக்கிறீர்களா என்று சரியாகத் தெரியாவிட்டால், உரிமைகோரல் அல்லது எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கும் முன்பு, இருமுறை யோசிக்கவும். மோசடி மற்றும்/அல்லது மோசமான நம்பிக்கை சமர்ப்பிப்புகளுக்கு சட்ட மற்றும் நிதி விளைவுகள் உள்ளன. நீங்கள்தான் உண்மையான உரிமையாளர் என்பதை அல்லது தகவல் தவறுதலாக அகற்றப்பட்டது என்று தகுந்த நம்பிக்கை உள்ளது என்பதை மற்றும் தவறான உரிமைகோரலைச் சமர்ப்பிப்பதற்கான விளைவுகளை நீங்கள் புரிந்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

எனது கணக்கு பல பதிப்புரிமைப் புகாரைப் பெற்றால் என்னவாகும்?

பல பதிப்புரிமைப் புகார்கள் பெறப்பட்டால், Twitter கணக்குகளைப் பூட்டலாம் அல்லது மீண்டும் மீறுபவர்களை எச்சரிக்க பிற நடவடிக்கைகளை எடுக்கலாம். இந்த எச்சரிக்கைகள் Twitter -இன் சேவைகளில் வேறுபடுகின்றன.  பொருத்தமான சூழ்நிலைகளில், எங்கள் மீண்டும் மீறுபவர் கொள்கையின் கீழ் பயனர் கணக்குகளை நாங்கள் இடைநிறுத்தக் கூடும். எனினும், எங்கள் மீண்டும் மீறுபவர் கொள்கை பொருந்தும்போது, திருப்பிப்பெறுதல்கள் மற்றும் எதிர் அறிவிப்புகளை நாங்கள் கணக்கில் எடுக்கக் கூடும். 

Bookmark or share this article

Was this article helpful?

Thank you for the feedback. We’re really glad we could help!

Thank you for the feedback. How could we improve this article?

Thank you for the feedback. Your comments will help us improve our articles in the future.