முறைகேடான நடத்தை

Twitter விதிகள்: நீங்கள் யாரேனும் ஒருவரை இலக்காகக் கொண்ட துன்புறுத்தலில் ஈடுபடக் கூடாது அல்லது அவ்வாறு செய்யுமாறு பிறரைத் தூண்டக் கூடாது. துன்புறுத்தும், அச்சுறுத்தும், அல்லது யாரோ ஒருவரின் குரலை அடக்க மேற்கொள்ளும் முயற்சியைத் முறைகேடான நடத்தையாகக் கருதுகிறோம்.
 

நோக்கம்


Twitter-இல், உங்கள் தனித்துவமான பார்வையை வெளிப்படுத்துவதை நீங்கள் பாதுகாப்பானதாக உணர வேண்டும். நாங்கள் கருத்துச் சுதந்திரத்தையும் வெளிப்படையான உரையாடலையும் நம்புகிறோம், ஆனால் பயனர்கள் பேசுவதற்குப் பயப்படுவதால் குரல்கள் அடக்கப்பட்டால் இவற்றிற்கு அந்தளவு முக்கியத்துவம் கிடைப்பதில்லை. 

தளத்தில் ஆரோக்கியமான உரையாடலை எளிதாக்கி, மாறுபட்ட கருத்துகளையும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்தத் தனிநபர்களுக்கு உரிமை அளிக்கும் பொருட்டு, துன்புறுத்தும் அல்லது அச்சுறுத்தும் நடத்தையை அல்லது மற்றவர்களை அவமானப்படுத்தும் அல்லது இழிவுபடுத்தும் நோக்கம் கொண்ட நடத்தையை நாங்கள் தடைசெய்கிறோம். பயனர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்துகளை ஏற்படுத்துவதோடு கூடுதலாக, முறைகேடான நடத்தையானது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான கஷ்டங்களுக்கும் வழிவகுக்கக்கூடும். 

கொள்கை மேம்பாடு மற்றும் எங்கள் அமலாக்கத் தத்துவம் குறித்த எங்கள் அணுகுமுறைப் பற்றி மேலும் அறிக.

இது பொருந்தும் சமயங்கள் 


சில கீச்சுகளைத் தனிமைப்படுத்திப் பார்க்கும்போது அவை முறைகேடானதாகத் தோன்றலாம், ஆனால் ஒரு பெரிய உரையாடலின் சூழலில் பார்க்கப்பட்டால் அவ்வாறு இருக்காது. இந்த வகை உள்ளடக்கத்தை நாங்கள் மதிப்பாய்வு செய்யும் போது, இது ஒரு தனிநபரைத் துன்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டதா, அல்லது இது ஒருமித்த உரையாடலின் ஒரு பகுதியாக உள்ளதா என்பது தெளிவாக இல்லாமலும் இருக்கலாம். உரையாடலின் சூழலைப் புரிந்துகொள்ள எங்கள் குழுவிற்கு உதவ, இலக்காக்கப்பட்ட நபரிடமிருந்து நாங்கள் நேரடியாகக் கேட்க வேண்டியிருக்கலாம், இது எந்தவொரு அமலாக்க நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன்னர், தேவையான தகவல் எங்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும்.

கீச்சுகள் அல்லது நேரடிச்செய்திகளில் பின்வரும் எந்தவொரு நடத்தையையும் கொண்டு ஒரு தனிநபரை அல்லது குழுவை இலக்காக்கும் கணக்குகளுக்கு எதிரான புகார்களை மதிப்பாய்வு செய்து நடவடிக்கை எடுப்போம். தங்கள் சுயவிவரத்தில் முறைகேடான நடத்தையில் ஈடுபடும் கணக்குகளுக்கு, எங்களின் தவறான நடத்தை சுயவிவரக் கொள்கை என்பதைப் பாருங்கள். அவர்களின் இனம், குலம், தேசிய பூர்வீகம், பாலியல் நாட்டம், பாலினம், பாலின அடையாளம், மத இணைப்பு, வயது, இயலாமை அல்லது கடுமையான நோய் ஆகியவற்றின் அடிப்படையில் பயனர்களை இலக்காக்கும் நடத்தைக்கு, இது எங்களின் வெறுக்கத்தக்க நடத்தை கொள்கையை மீறுவதாக இருக்கலாம்.


வன்முறை அச்சுறுத்தல்கள்

அடையாளம் காணக்கூடிய இலக்குக்கு எதிராக வன்முறை அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் உள்ளடக்கத்தை நாங்கள் தடைசெய்கிறோம். வன்முறை அச்சுறுத்தல்கள் என்பவை கடுமையான மற்றும் நீடித்த உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் காயங்களை ஏற்படுத்தும் நோக்கத்தின் அறிவிப்பு அறிக்கைகளாகும், அதில் ஒரு நபர் இறக்கலாம் அல்லது கணிசமாகக் காயமடையக்கூடும், எ.கா., “நான் உன்னைக் கொன்றுவிடுவேன்.”

குறிப்பு: வன்முறை அச்சுறுத்தல்களுக்கு எதிராக முழுமையான சகிப்புத்தன்மையற்ற கொள்கை எங்களிடம் உள்ளது. வன்முறை அச்சுறுத்தல்களைப் பகிர்வதாகக் கருதப்படுபவர்கள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நீக்கப்படுவார்கள். ஒரு நபருக்கு அல்லது குழுவிற்குக் கடுமையான தீங்கை விளைவிக்க விரும்புவது, நம்புவது அல்லது அழைப்பது.

ஒரு நபருக்கு அல்லது குழுவிற்குக் கடுமையான தீங்கை விளைவிக்க விரும்புவது, நம்புவது அல்லது அழைப்பது

ஒரு தனிநபருக்கு அல்லது குழுவிற்கு எதிராக மரணத்திற்கான அல்லது கடுமையான உடல் ரீதியான தீங்கிற்கான அல்லது கடுமையான நோய்க்கான ஆசையை விரும்புதல், நம்புதல், ஊக்குவித்தல், தூண்டுதல் அல்லது வெளிப்படுத்துதலைக் கொண்ட உள்ளடக்கத்தை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இதில் பின்வருபவை அடங்கும், ஆனால் இவை மட்டுமல்ல: 

 • யாரோ ஒருவர் கடுமையான நோயின் காரணமாக இறந்துவிடுவார் என நம்புவது. எ.கா., “உங்களுக்குப் புற்றுநோய் வந்து இறந்துவிடுவீர்கள் என நம்புகிறேன்.”
 • யாரோ ஒருவர் கடுமையான விபத்தில் பாதிக்கப்பட வேண்டும் என விரும்புவது எ.கா., “அடுத்த முறை நீங்கள் பேசும்போது உங்கள் மீது ஒரு கார் ஏற வேண்டும் என விரும்புகிறேன்.”
 • தனிநபர்களின் குழு ஒன்று கடுமையான உடல் காயத்திற்குத் தகுதியானது எனக் கூறுவது எ.கா., “இந்த எதிர்ப்பாளர்கள் குழு வாயை மூடிக்கொள்ளாவிட்டால், இவர்கள் சுடப்படுவதற்குத் தகுதியானவர்கள்.”
   

Twitter-இல் தீங்கு விருப்பங்களுக்கான விதிவிலக்குகள் பற்றி 

கடுமையான வன்முறைக்கு நம்பத்தகுந்தவாறு குற்றம் சாட்டப்பட்ட சில தனிநபர்கள் தொடர்பான உரையாடல்கள் சீற்றத்தையும் அதனுடன் தொடர்புடைய தீங்கு விளைவிக்கும் விருப்பங்களையும் தூண்டக்கூடும் என்பதை நாங்கள் அடையாளம் காண்கிறோம். இந்த வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், கணக்கு அபராதம், செயல் நிறுத்தம் அல்லது இடைநீக்கம் ஆகியவற்றிற்கு அவசியம் ஏற்படுத்தாமல் கீச்சை நீக்குமாறு பயனரைக் கோருவோம். எடுத்துக்காட்டுகள், ஆனால் இவை மட்டுமல்ல:

 •  “அனைத்து கற்பழிப்பாளர்களும் இறக்க விரும்புகிறேன்” 
 • “சிறுவரைத் துஷ்பிரயோகம் செய்பவர்களைத் தூக்கிலிட வேண்டும்.”
   

தேவையற்ற பாலியல் முன்னெடுப்புகள்

Twitter -இல் சில ஒருமித்த நிர்வாணம் மற்றும் வயதுவந்தோர் உள்ளடக்கம் அனுமதிக்கப்பட்டாலும், தேவையற்ற பாலியல் முன்னெடுப்புகளையும், ஒரு நபரின் அனுமதியின்றி அவரை பாலியல் ரீதியாக புறநிலைப்படுத்தும் உள்ளடக்கத்தையும் தடைசெய்கிறோம். இதில் பின்வருபவை அடங்கும், ஆனால் இவை மட்டுமல்ல:

 • படங்கள், வீடியோக்கள் மற்றும் GIFகள் உட்பட கோரப்படாத மற்றும்/அல்லது தேவையற்ற வயதுவந்தோர் மீடியாவை யாரோ ஒருவருக்கு அனுப்புதல்; 
 • ஒருவரின் உடல் குறித்த தேவையற்ற பாலியல் விவாதம்; 
 • பாலியல் செயல்களைக் கோருதல்; மற்றும் 
 • ஒரு நபரின் அனுமதியின்றி அவரை பாலியல் ரீதியாக வெளிப்படுத்தும் வேறு எந்த உள்ளடக்கமும். 
   

மற்றவர்களைத் துன்புறுத்தும் அல்லது அச்சுறுத்தும் நோக்கத்துடன் அவமதிப்புகள், அவதூறு அல்லது தூற்றல்களைப் பயன்படுத்துதல்

மற்றவர்களைக் குறிவைக்கும் வகையில் அவமதிப்புகள், அவதூறு அல்லது தூற்றல்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். சில சந்தர்ப்பங்களில், அவமதிப்புகள் அல்லது துற்றல்கள் ஆகியவற்றின் கடுமையான, தொடர்ச்சியான பயன்பாடு போன்ற (ஆனால் இதுமட்டுமல்ல), மற்றவர்களைத் துன்புறுத்துவதை அல்லது அச்சுறுத்துவதை முதன்மையான நோக்கமாகக் கொண்ட இடங்களில், எங்களுக்குக் கீச்சு நீக்கம் தேவைப்படலாம். மற்ற சந்தர்ப்பங்களில், அவமதிப்புகள் மற்றும் அவதூறு ஆகியவற்றின் மிதமான, தனிமையான பயன்பாடு போன்ற (ஆனால் இதுமட்டுமல்ல), மற்றவர்களைத் துன்புறுத்துவதை அல்லது அச்சுறுத்துவதை முதன்மையான நோக்கமாகக் கொண்ட இடங்களில், கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி கீச்சு தெரிவுநிலையை நாங்கள் மட்டுப்படுத்தலாம். சில தனிநபர்கள் சில சொற்களைத் தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியும்போது, அவமதிக்கும் சொற்கள் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நிகழ்விற்கும் எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். 


ஒரு தனிநபரை அல்லது குழுவைத் துன்புறுத்த மற்றவர்களை ஊக்குவித்தல் அல்லது அழைத்தல்

முறைகேடான நடத்தையின் மூலம் குறிப்பிட்ட தனிநபர்கள் அல்லது குழுக்களைத் துன்புறுத்த அல்லது இலக்காக்க மற்றவர்களை ஊக்குவிக்கும் நடத்தையைத் தடைசெய்கிறோம். இதில் பின்வருபவை அடங்கும், ஆனால் இவை மட்டுமல்ல; ஆன்லைனில் துஷ்பிரயோகம் அல்லது துன்புறுத்தலுடன் பயனர்களை இலக்கு வைப்பதற்கான அழைப்புகள் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல் போன்ற ஆஃப்லைன் நடவடிக்கைகளைத் தூண்டும் நடத்தை. 

 

நிகழ்ந்த வெகுஜன விபத்து நிகழ்வுகளை மறுப்பது

நிகழ்வு நிகழ்ந்தது என்பதை நாங்கள் உறுதிசெய்ய முடியும் என்ற பட்சத்தில் நிகழ்ந்த வெகுஜன கொலை அல்லது பிற வெகுஜன விபத்து நிகழ்வுகளை மறுக்கும் உள்ளடக்கத்தை, அந்த உள்ளடக்கம் தவறான நோக்கத்துடன் பகிரப்படும்போது நாங்கள் தடைசெய்கிறோம். இதில், ஒரு நிகழ்வானது "புரளி" அல்லது பாதிக்கப்பட்டவர்களோ தப்பிப்பிழைத்தவர்களோ போலியானவர்கள் அல்லது "நடிகர்கள்" என்று கூறுவது போன்ற குறிப்புகள் உள்ளடங்கலாம். இது பெரும் இன அழிப்பு, பள்ளி துப்பாக்கிச் சூடு, பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் போன்ற நிகழ்வுகளை உள்ளடக்கியது, ஆனால் அவை மட்டுமல்ல.

 

Twitter விதிகளை மீறியதற்காக, இந்த உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்ய நான் இலக்காக இருக்க வேண்டுமா?

இல்லை, அத்தகைய உள்ளடக்கத்தின் முதல் நபர் மற்றும் பார்வையாளர் ஆகிய இருவரின் புகார்களையும் நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம்.


பின்விளைவுகள்

இந்தக் கொள்கையை மீறியதற்கான அபராதத்தை நிர்ணயிக்கும் போது, விதிமீறலின் தீவிரத்தன்மையையும் ஒரு தனிநபரின் முந்தைய விதிமீறல்களையும் உள்ளடக்கிய பல காரணிகளை நாங்கள் கருத்தில் கொள்கிறோம். இந்தக் கொள்கையை மீறும் உள்ளடக்கத்திற்கான சாத்தியமான அமலாக்க விருப்பங்களின் பட்டியல் பின்வருமாறு:

 • பயனர், கீச்சு ஆசிரியரைப் பின்தொடரும்போது தவிர, பதில்களில் கீச்சுகளைக் குறைத்து மதிப்பிடுதல்.
 • கீச்சு ஆசிரியரைப் பின்தொடராதப் பயனர்களுக்கான முன்னணி தேடல் முடிவுகள் மற்றும்/அல்லது காலவரிசைகளில் கீச்சுகளைப் பெருக்கத் தகுதியற்றதாக்குவது.
 • மின்னஞ்சலில் அல்லது தயாரிப்பில் உள்ள பரிந்துரைகளில் கீச்சுகள் மற்றும்/அல்லது கணக்குகளைத் தவிர்ப்பது. 
 • கீச்சு நீக்கம் தேவை.
  • எடுத்துக்காட்டாக, விதிமீறும் உள்ளடக்கத்தை அகற்றுமாறும், மேலும் அவர்கள் மீண்டும் ட்விட் செய்வதற்கு முன்பு, படிக்க மட்டுமே என்ற பயன்முறையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்குமாறும் ஒருவரிடம் நாங்கள் கேட்கலாம். தொடர் விதிமீறல்கள் ஆனவை நீண்ட காலத்திற்கு, படிக்க மட்டுமே என்ற பயன்முறைக்கு வழிவகுக்கும், மேலும் இறுதியில் நிரந்தர இடைநீக்கத்திற்கு வழிவகுக்கும்.
 • இந்தக் கொள்கையில் வரையறுத்துள்ளபடி முறைகேடான நடத்தையில் ஈடுபடுவதை அல்லது வன்முறை அச்சுறுத்தல்களைப் பகிர்ந்து கொள்வதை முதன்மைப் பயன்பாடாக இருப்பதாக நாங்கள் தீர்மானித்த கணக்குகளை இடைநீக்குவது.

எங்களின் பரந்துபட்ட அமலாக்க விருப்பங்களைப் பற்றி மேலும் அறிக.

யாராவது தங்கள் கணக்கானது பிழையாக இடைநீக்கப்பட்டதாக நினைத்தால், அவர்கள் முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க