மேல் மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.
கணக்கு என்பதைத் தொட்டு, பாதுகாப்பு என்பதைத் தொடவும்.
இரு காரணி அங்கீகாரத்தைத் தொடவும்.
தேர்வு செய்ய மூன்று முறைகள் உள்ளன: உரைச் செய்தி, அங்கீகாரப் பயன்பாடு, அல்லது பாதுகாப்பு விசை.
பதிவுசெய்தவுடன், உங்கள் கணக்கில் உள்நுழையும் போது, உங்கள் முந்தைய உள்நுழைவின் போது நீங்கள் பயன்படுத்திய இரு காரணி அங்கீகார முறையை உங்கள் கடவுச்சொல்லுடன் வழங்கும்படி கேட்கப்படுவீர்கள். வேறு இரு காரணி அங்கீகார முறையைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தையும் நீங்கள் காண்பீர்கள். நீங்கள் தொடர விரும்பினால், வேறு முறையைத் தேர்ந்தெடுக்க அதைத் தொடவும். உள்நுழைவை முடிக்க திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.