எவ்வாறு பல கணக்குகளை நிர்வகிப்பது

உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட Twitter கணக்கு இருந்தால், உங்கள் iOS அல்லது Android பயன்பாட்டிற்கான Twitter-இலிருந்து, டெஸ்க்டாப், mobile.twitter.com, Twitter Lite மற்றும் Windows-க்கான Twitter ஆகியவற்றில் அவற்றைச் சேர்ப்பதும் அணுகுவதும் எளிது.

கூடுதல் கணக்குகளை எவ்வாறு சேர்ப்பது
iOS-க்கு:
படி 1

வழிசெலுத்தல் மெனு  ஐகானை தொடவும்.

படி 2

மேலும் என்ற ஐகானை  தொடவும்

படி 3

இங்கிருந்து புதிய கணக்கை உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் கணக்கைச் சேர்க்கலாம்.

படி 4

உங்களின் கூடுதல் கணக்கு(களை) சேர்த்ததும், நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கின் சுயவிவரம் ஐகானை தொட்டு, பிறகு  ஐகானுக்கு அடுத்து உள்ள சிறிய, கூடுதல் சுயவிவரம் ஐகான்(களை) தொடுவதன் மூலம் கணக்குகளை அணுகலாம். திரும்பச் செல்ல மீண்டும் வழிசெலுத்தல் மெனுவை தொடவும்.

குறிப்பு: உங்கள் iOS பயன்பாட்டின் வழியாக ஒரு புதிய கணக்கிற்குப் பதிவு செய்வது குறித்த உதவியைப் பெறுக. அல்லது உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைப்பது எவ்வாறு என்று அறிக.

Android -க்கு:
படி 1

மேல் மெனுவில், ஒரு வழிசெலுத்தல் மெனு ஐகானை  அல்லது உங்கள் சுயவிவரம் ஐகானைப் பார்ப்பீர்கள். உங்களிடம் உள்ள எந்த ஐகானையும் தொடவும்.

படி 2

மேற்குறிப்பில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறி ஐகானை  தொடவும்.

படி 3

இங்கிருந்து புதிய கணக்கை உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் கணக்கைச் சேர்க்கலாம்.

படி 4

உங்களின் கூடுதல் கணக்குகளை நீங்கள் சேர்த்ததும், மேற்குறிப்பில் உள்ள கீழ்நோக்கிய அம்பைத் தொடுவதன் மூலம் கணக்குகளுக்கு இடையே மாறலாம்

குறிப்பு: உங்கள் Android பயன்பாடு வழியாக புதிய கணக்கிற்குப் பதிவுசெய்வது குறித்த உதவியைப் பெறுக. அல்லது உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைப்பது எவ்வாறு என்று அறிக.


டெஸ்க்டாப் வழியாக ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட Twitter கணக்குகளில் எவ்வாறு உள்நுழைவது?
 

 • பக்கவாட்டு மெனுவில், உங்கள் சுயவிவரம் ஐகானைக் கிளிக் செய்யவும்.
 • மேலும் என்ற ஐகானை  அல்லது பிளஸ் ஐகானை தேர்வு செய்யவும்
 • இங்கிருந்து, ஏற்கனவே இருக்கும் கணக்கைச் சேர்க்கலாம்.
 • உங்கள் கணக்கு(களை) சேர்த்ததும், உங்கள் சுயவிவரம் ஐகானை கிளிக் செய்து, பிறகு மேலும் ஐகானுக்கு  அடுத்து உள்ள சிறிய, கூடுதல் சுயவிவரம் ஐகான்(களை) தொடுவதன் மூலம் அந்தக் கணக்குகளுக்கு இடையில் மாறலாம்
   

mobile.twitter.com வழியாக ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட Twitter கணக்குகளில் எவ்வாறு உள்நுழைவது?
 

 • மேல் இடது புறத்தில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொடவும்.
 • மேலும் என்ற ஐகானை  தொடவும்
 • இங்கிருந்து, ஏற்கனவே இருக்கும் கணக்கைச் சேர்க்கலாம்.
 • உங்கள் கணக்கு(களை) சேர்த்ததும், உங்கள் சுயவிவரம் ஐகானை சில வினாடிகள் அழுத்தி, பிறகு மேலும் ஐகானுக்கு  அடுத்து உள்ள சிறிய கூடுதல் சுயவிவரம் ஐகான்(களை) தொடுவதன் மூலம் அந்தக் கணக்குகளுக்கு இடையில் மாறலாம்
   

Twitter Lite -இல் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட Twitter கணக்குகளில் எவ்வாறு உள்நுழைவது?
 

 • மேல் இடது புறத்தில், உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொடவும்.
 • மேலும் என்ற ஐகானை  தேர்வு செய்யவும்
 • இங்கிருந்து, ஏற்கனவே இருக்கும் கணக்கைச் சேர்க்கலாம்.
 • உங்கள் கணக்கு(களை) சேர்த்ததும், உங்கள்சுயவிவரம் ஐகானை சில வினாடிகள் அழுத்தி, பிறகு மேலும் ஐகானுக்கு  அடுத்து உள்ள சிறிய கூடுதல் சுயவிவரம் ஐகான்(களை) தொடுவதன் மூலம் அந்தக் கணக்குகளுக்கு இடையில் மாறலாம்
   

Microsoft-க்கான Twitter வழியாக ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட Twitter கணக்குகளில் எவ்வாறு உள்நுழைவது?
 

 • மேல் இடது புறத்தில், உங்கள் சுயவிவரம் ஐகானை கிளிக் செய்யவும்.
 • மேலும் என்ற ஐகானை  தேர்வு செய்யவும்
 • இங்கிருந்து, ஏற்கனவே இருக்கும் கணக்கைச் சேர்க்கலாம்.
 • உங்கள் கணக்கு(களை) சேர்த்ததும், உங்கள் சுயவிவரம் ஐகானை கிளிக் செய்து, பிறகு மேலும் ஐகானுக்கு  அடுத்து உள்ள சிறிய, கூடுதல் சுயவிவரம் ஐகான்(களை) தொடுவதன் மூலம் அந்தக் கணக்குகளுக்கு இடையில் மாறலாம்
   

இரண்டு அல்லது பல Twitter கணக்குகளை ஒன்றாக ஒன்றிணைக்கலாமா அல்லது ஒன்றுசேர்க்கலாமா?
 

தற்போது நாங்கள் பல கணக்குகளை ஒன்றாக இணைப்பதற்கு அல்லது ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்குத் தரவை (கீச்சுகள், நீங்கள் பின்தொடர்வோர் அல்லது பின்தொடர்பவர்கள்) இடமாற்றுவதற்கு வழி எதையும் வழங்கவில்லை.

இந்தக் கட்டுரையைப் பகிர்க